World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Britain’s general election: An historic political shift

பிரிட்டன் பொதுத் தேர்தல்: ஒரு வரலாற்றுத் தன்மை வாய்ந்த அரசியல் மாற்றம்

Chris Marsden
30 April 2010

Back to screen version

இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் மே 7 பொதுத் தேர்தல்களின் முடிவு எப்படி இருந்தாலும், பிரிட்டனின் அரசியல் வாழ்வு ஏற்கனவே ஒரு பெரும் அடிப்படை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

இத்தேர்தல் பிரச்சாரத்தின் மிக அசாதாரணமான தன்மை தொழிற் கட்சியில் இப்பொழுது ஏற்பட்டுவிட்ட கரைவுதான். எத்தகைய கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படும் என்பது பற்றிய கணிப்புக்கள் பலவிதமாக உள்ளன--தேர்தலை ஒட்டி அநேகமாக ஒரு கூட்டணி அரசாங்கம்தான் அமையும்போல் உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற் கட்சிக்கான ஆதரவுச் சரிவை ஒட்டித்தான் ஒரு கூட்டணி அரசாங்கத்தின் தேவை எழக்கூடும்.

2005ல் மொத்த வாக்குகளில் தொழிற் கட்சி 33 சதவிகிதத்தைத்தான் பெற்றது. ஆனால் சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் இது கன்சர்வேடிவ்கள், லிபரல் ஜனநாயகவாதிகளுக்கு பின்னர் மூன்றாவது இடத்திற்கு சரியக்கூடும் என்று எச்சரிக்கின்றன. மிக மோசமான நிலை பற்றிய கணிப்பு தொழிற் கட்சியின் பங்கு மொத்த வாக்குகளில் 18 சதவிகிதம்தான் இருக்கும் என்று கூறுகிறது. 1910ல் லிபரல்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இத்தகைய நிலை, தொழிற் கட்சி அவர்களுக்கு பின் வருவது முதல் தடவையாக இருக்கும்.

இதையொட்டி, தொழிற் கட்சி தான் இன்னும் பெரும்பான்மைக் கட்சியாக வெளிவர வாய்ப்பு உண்டு என்று கணக்கிட்டுள்ளது. ஏனெனில் தொகுதி வாக்குகளில் அதிகம் பெறுவோர் வெற்றி என்ற பிரிட்டனின் முறைப்படி அவ்வாறு நடந்து அது லிபரல் தாராளவாதிகளுடன் கூட்டு அமைக்கக்கூடும். பிந்தையவரின் ஆதரவுத் தளம் தொழிற் கட்சியைப் பற்றிய ஏமாற்றத்தை வாக்காளர்கள் கொண்டுள்ளதால் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது கன்சர்வேடிவ்-லிபரல் தாராளவாதிகள் கூட்டு என்பதுதான் பேச்சாக உள்ளது.

தேர்தலில் வரக்கூடிய முடிவு பற்றி அதிகம் கூறுவது கடினம் ஆகும். அரசியல் வெடிப்பின் தன்மை உள்ள நிலையில் எவரும் தம் விருப்பத்தைத் தெரிவித்துள்ளபடி உண்மையாக இருப்பர் என்று கூறுவதற்கில்லை. தொழிற் கட்சி வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுக்கக்கூடும் என்று கூறியிருப்பது பதிவாகி உள்ளது.

அதே போல் முழு அரசியல் செயல்பாடு பற்றியும் வெறுப்படைந்தவர்கள் எந்த அளவிற்கு மிகப் பெரிய வகையில் வாக்களிக்காமல் இருப்பர் என்பதை மதிப்பீடு செய்வதும் இயலாது.

ஆனால் இந்த தேர்தல் அவமதிப்பில் இருந்து மீள முடியாது என்பது உறுதி--அது மீளவும் கூடாது. பிரிட்டனில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களும் இது எப்படியும் "குறைந்த தீமையை" பிரதிபலிக்கிறது,எனவே தொழிற் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அழைப்புக்கள் அனைத்தையும் நிராகரித்துள்ளனர்--அத்தகைய நிலைப்பாடுதான் பல மத்தியதர வர்க்க போலி இடது குழுக்களின் பொதுத் தன்மை ஆகும். பெருவணிகத்தின் வலதுசாரிக் கட்சி என்றுதான் தொழிற் கட்சியை நாம் வகைப்படுத்தியுள்ளோம், டோரிக்களைப் போலவே, சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போரில் ஈடுபட்டிருப்பது என்ற கட்சியாக உள்ளது. இது பதவியில் 13 ஆண்டுகள் இருந்ததில் நிரூபணம் ஆகியுள்ளது.

இந்த மதிப்பீடு அரசியலளவில் சரியாக இருக்கிறது என்பது மட்டும் இல்லாமல், பெருகிய முறையில் தொழிலாளர்கள், இளைஞர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அவர்களும் இதே போன்ற முடிவுகளைத்தான் கொண்டு, டோனி பிளேயர் மற்றும் கோர்டன் பிரௌன் கட்சி பற்றி இழிவுணர்வைத்தான் கொண்டுள்ளனர்.

தொழிற் கட்சியின் சரிவானது பழைய அமைப்புகளுக்குமிடையிலான உருமாறிவிட்ட உறவைத்தான் வெளிப்படுத்துகிறது அதாவது ஒரு காலத்தில் தொழிலாளர் இயக்கமும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளும் இணைந்த உருவாக்கம் என்பது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, தொழிற் கட்சி ஒரு உலக நிதிய தன்னலக்குழுவின் கலப்படமற்ற பிரதிநிதியாகத்தான் செயல்பட்டு வருகிறது. மேலும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எந்த முக்கிய சவாலையும் எதிர்கொள்ளவில்லை என்ற நம்பிக்கையையும் கொண்டுள்ளது. ஈராக் போரில் தொழிற் கட்சி அரசாங்கம் பங்கு பெற்றது கசப்புணர்வையும் சீற்றத்தையும் தூண்டிவிட்டது. ஆனால் இதற்கு அரசியல் வெளிப்பாடு எதுவும் இருக்கவில்லை. ஏனெனில் தொழிற் கட்சியின் அரசியல் ஏகபோக உரிமையை கவனத்துடன் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி இடது வக்காலத்து வாங்குபவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இவை அனைத்தும் இப்பொழுது மாறிவிட்டன. 2008ல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதானது உத்தியோகபூர்வ அரசியலின் வடிவமைப்பிற்குள் இனியும் கட்டுப்படுத்திவிட முடியாத அளவிற்கு தீவிரப்பட்டுவிட்டது. கடந்த தசாப்தத்தில் பெரியளவு கடன் அளவுகளில் இருந்து தங்களை உயர்த்திக் கொள்ளும் விதத்தில் அடைமானங்களையும் (mortgages) தனிப்பட்ட கடன் வசதியையும் பெற்றிருந்தவர்கள் இப்பொழுது தங்கள் வாழ்க்கைத் தரங்களில் கொடூரமான சரிவை எதிர்கொள்ளுகின்றனர்.

மூன்று மில்லியன் மக்களுக்கும் மேலாக வேலையின்மை என்று பெருகியுள்ள நிலை, வேலை இழப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் மற்றும் வீடுகள் பறிபோதல் ஆகியவை பற்றிய அச்சுறுத்தல் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கிறது.

ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக, தொழிற் கட்சியும் அதனுடன் இணைந்திருந்த தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கம் நடத்திய போராட்டங்களின் முக்கிய கருவிகளாக இருந்தன. அவை குறைந்தபட்ச சீர்திருத்தங்களை அடையும் முன்னோக்கு உடன் மட்டுமே இருந்தன அதாவது முதலாளித்துவம் தப்பிப் பிழைப்பதற்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை.

ஆனால் புதிய தொழிற் கட்சி திட்டத்தின் இதயத்தானத்தில் இருந்த கணக்கீடு--நிதிய தன்னலக்குழுவின் ஆதரவை அடுத்து சீர்திருத்தங்கள் பற்றிய அதன் உறுதி மொழிகளைக் கைவிட்டாலும் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக தான் நீடிக்கலாம் என்று தொழிற் கட்சி நினைத்தது ஆனால் இப்பொழுது சிதைந்த தன்மையில் உள்ளது. இந்த மூலோபாயத்தின் விளைவு ஒரே அடியாக தொழிற் கட்சியை தீர்த்துக் கட்டிவிடுவது என்று உள்ளது.

இது பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் பாரிய அரசியல் நெருக்கடியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மூன்று முக்கிய கட்சிகளும் வாக்காளார்களிடம் வரவிருக்கும் வெட்டுக்களின் அளவு மற்றும் காட்டுமிராண்டித்தனம் பற்றி நேர்மையாக எடுத்துரைக்க வேண்டும் என்ற எச்சரிக்கைகளைக் கடந்த வாரம் கண்டுள்ளது. Institute of Fiscal Studies (IFS) என்ற கருவூல கல்வி பயிலகத்தில் இருந்து வந்துள்ள அறிக்கை ஒன்றில் இவை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. அது தொழிற் கட்சி மற்றும் லிபரல் ஜனநாயகவாதிகள்

திட்டமிட்டுள்ள வெட்டுக்கள் 1970 களில் தொழிற் கட்சி சுமத்தியவற்றுடன் ஒப்பிடத்தக்கவை என்று கூறியுள்ளது.

அந்த நடவடிக்கைகள் 1978-79 "அதிருப்தியான குளிர்காலத்திற்கு" வழிவகுத்தன. அது Callaghan அரசாங்கத்தை வீழ்த்தியது. IFS பொதுநலச் செலவுகளில் குறைப்புக்கள் என்னும் டோரித் திட்டங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகக் கடுமையானவை என்று அடையாளம் கண்டுள்ளது. இந்த வெட்டுக்களில் 70 முதல் 80 சதவிகிதம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, உண்மையில் இன்னும் அதிக வெட்டுக்கள் திட்டமிடப்படுகின்றன.

அத்தகைய எச்சரிக்கைகள் என்ன செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய உடன்பாடு இல்லாமல், எந்தக் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியும் சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தத் தேவையான மக்கள் விருப்பத்தைப் பெறாது என்ற கவலையினால் தூண்டுதல் பெற்றுள்ளன. மக்களுடைய இணக்கத்தை சுமத்துதலுக்குப் பெறுதல் என்பது இயலாதது என்பதுதான் பிரச்சினை. ஒரு நல்ல ஊதியம், ஒரு வேலை, ஒரு ஓய்வூதியம் ஏன் வீடு கூட இழக்கப்படும் என்பதற்கு எவரும் உடன்பட மாட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிற் கட்சி தொழிற்சங்கங்களுடன் இணைந்து அத்தகைய தாக்குதல்களைச் செயல்படுத்துவதற்கு பரந்த தொழிலாளர் பிரிவுகளை பயன்படுத்தும் நிலையில் இனியும் இல்லை.

இவ்விதத்தில் தொழிற் கட்சியின் சரிவு வரவிருக்கும் பெரியளவான வர்க்கப் போராட்டங்களை முன்கூட்டித் தெரிவிப்பதாக உள்ளது. அப்போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் பிரிட்டனுக்குள் அடிப்படை அரசியல் மறு ஒழுங்கமைவுக்கு இட்டுச்செல்லும்.

இதன் ஆரம்ப பாதிப்பு முழு முதலாளித்துவ அரசியலையும் உறுதி குலைக்கும் வகையில் உள்ளது. பாராளுமன்றத்தின் மூலம் தங்கள் நலன்களைப் பெற முடியும் என்று ஒரு காலத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கை இகழ்ச்சிபடுத்தப்பட்டுவிட்டது. இக்காரணத்தினால்,இது தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு புதிய, உண்மையான சோசலிச இயக்கம் நிறுவப்படுவதற்கான முதல் படியின் தேவையாகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதேபோல் இந்த இள நிலையில் உள்ள வளர்ச்சி பற்றிய முழு நனவு, சோசலிச சமத்துவக் கட்சியை விரைவில் கட்டமைக்க வேண்டும், அது தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் தலைமையை அளிக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது.