World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Social democrats win Greek regional elections amid mass abstention

கிரேக்கப் பிராந்திய தேர்தல்களில் வாக்காளர்கள் அதிகம் பங்கு பெறாத நிலையில் சமூக ஜனநாயகவாதியினரின் வெற்றி

By Robert Stevens
17 November 2010

Back to screen version

பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் PASOK (The Panhellenic Socialist Movement) அரசாங்கம் கிரேக்க பிராந்தியத் தேர்தல்களில் ஞாயிறன்று இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்றில் வெற்றி அடைந்தது. ஒரு வாரம் முன்பு நடைபெற்ற முதல் சுற்று வாக்களிப்பு 13 பிராந்தியத் தொகுதிகளில் 2ல் தான் நேரடி வெற்றி என்ற முடிவைக் கொடுத்ததால், இரண்டாவது சுற்றுத் தேர்தல்கள் நடைபெற்றன.

இரண்டாம் சுற்றில், PASOK நாட்டின் 13 பிராந்தியங்களில் 8 ல் வெற்றி பெற்றது. கட்சி ஆதரவு கொடுத்திருந்த வேட்பாளர்கள் நாட்டின் 325 முனிசிபாலிட்டிகளில் 73 ஐக் கைப்பற்றினர். மற்ற ஐந்து பிராந்தியங்களில் கன்சர்வேட்டிவ் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகம் (ND) ஆதரவு கொடுத்திருந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

முதல் சுற்று வாக்குப் பதிவைப் போலவே வாக்காளர்கள் வாக்களிக்க வராமல் போனது புதிய உயர் நிலையை அடைந்தது. முதல் சுற்றில் வாக்களிக்க வராமற் போனவர்கள் சதவிகிதம் 39.01 என இருந்தது; மேலும் 5.49 சதவிகித வாக்குப் பதிவுகள் செல்லாமற் போயின. இது இரண்டாம் சுற்றில் குறிப்பிடத்தக்க வகையில் 53.23 சதவிகிதம் வாக்களிக்கவில்லை என்று போயிற்று. இன்னும் 11.67 சதவிகித மக்கள் வெற்று/வீண்டிக்கப்பட்ட வாக்குச் சீட்டை அளித்தனர்.

இதன் பொருள் கிரேக்க வாக்காளர்களில் மூன்றில் இருவர் இரண்டாம் சுற்றில் வேட்பாளருக்கு வாக்கு அளிக்கவில்லை என்பதாகும். இத்தகைய வெகுஜன வாக்களிக்காத நிலை “உத்தியோகபூர்வ” அரசியல் மீது காட்டும் பெருகிய அதிருப்தியின் தெளிவான அடையாளம் ஆகும்; ஏனெனில் கிரேக்கத்தில் வாக்களிக்காமல் இருப்பது சட்டவிரோதம் ஆகும். இத்தகைய வாக்களிக்காத் தரம் PASOK, ND இரண்டின்மீதும் காட்டும் வெறுப்புணர்வின் குறிப்பிடத்தக்க தரத்தை வெளிப்படுத்துகிறது; இவை இரண்டுமே சமமாகச் சாடப்பட்டு சிக்கன நடவடிக்கைகள், சமூக இழிவு இவற்றைக் கொண்டுவருபவையாகக் காணப்படுகின்றன.

எதிர்பாரா முடிவுகள் எனக் கருதக்கூடிய வகையில், பிராந்திய அரசாங்கம் கிரேக்கத்தின் மூன்று பெரிய நகரங்களான ஏதென்ஸ், தெசலோனிகி மற்றும் பைரீயஸ் ஆகியவற்றில் கைமாறின. ஆதென்ஸில் PASOK ஆதரவு பெற்ற வேட்பாளரும் முன்னாள் கிரேக்க ஓம்பட்ஸ்மன் ஆன ஜோர்ஜ் காமினிஸ் 51.94% வாக்குகள் பெற்று தற்பொழுது மேயராக உள்ள நிகிடாஸ் காக்லாமனிசிடம் இருந்து கைப்பற்றினார். தெசலோனிகியில் PASOK ஆதரவு பெற்ற Yiannis Boutaris 50.2% வாக்குகள் பெற்று கோஸ்டாஸ் க்ளோலேகாசைத் தோற்கடித்தார். பைரீயசில் ND ஆதரவு பெற்ற Vassils Michaloiakos PASOK ஆதரவு பெற்ற Yiannis Michas ஐ 51.76% வக்குளைப் பெற்றுத் தோற்கடித்து மேயர் பதவியை அடைந்தார்.

முக்கிய முதலாளித்துவக் கட்சிகளின் சிக்கன நடவடிக்கைகளுக்கு மில்லியன் கணக்கான மக்களின் விரோதப் போக்கை வெளிப்படுத்தியதுடன், தேர்தல் கிரேக்க மத்தியதர வர்க்கம், முன்னாள் இடது அமைப்புக்களின் திவால்தன்மையையும் வெளிப்படுத்தியது.

கடந்த ஆண்டு பாப்பாண்ட்ரூ முன்னோடியில்லாத வகையில் கடுமையான வெட்டுக் குறைப்புக்கள் திட்டத்தை தொழிலாள வர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் சில பிரிவுகள் ஆகியவற்றின்மீது கட்டவிழ்த்தார். சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றின் ஆணையின் பேரில் இது பில்லியன் கணக்கான யூரோக்கள் செலவுகளைக் குறைத்தது. தகவல்கள்படி, கிரேக்கத் தொழிலாளர்கள் சராசரியாக 30 சதவிகித ஊதியக் குறைப்பை அடைந்துள்ளனர்.

வேலைகள் தகர்ப்பு, ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை நிலைச் சரிவுகள் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டி நாடு முழுவதும் ஏராளமான எதிர்ப்புக்களும் வேலைநிறுத்தங்களும் நடந்தன.

பொதுவாக இந்த நிலைமை “இடது” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்புக்களுக்கு ஆதாயங்களைத் தேடித்தரும். ஆனால் இத்தேர்தல் முடிவுகள் ஸ்ராலனிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி KKE, சிரிசா (தீவிர இடது கூட்டணி) மற்றும் ANTARSYA (தூக்கியெறிவதற்கான முதலாளித்துவ எதிர்ப்பு இடது ஒத்துழைப்பு) ஆகிய சக்திகளும் அதிகப்பட்சமாக தங்கள் ஆதரவுத்தளங்களை மிகச்சிறிய அளவுதான் உயர்த்திக் கொள்ள முடிந்தது.

KKE தன் வாக்குத்தளத்தை 592,977 என 2009 மொத்தத்தைவிட 80,000 வாக்குகள் அதிகம் உயர்த்திக் கொண்டது. KKE தன்னிடம் 41 பிராந்திய நகரவை உறுப்பினர்களும் 500 முனிசிபல் உறுப்பினர்களும் இருப்பதாகக் கூறியுள்ளது. இது 2009 வாக்குகளைவிட10 சதவிகிதம்தான் அதிகம். சட்டப்படி வாக்களிக்க வேண்டிய மொத்த வாக்காளர் விகிதக் கணக்குப்படி, இது 1 சதவிகிதத்திற்கும் குறைந்த அதிகரிப்பைத்தான் காட்டுகிறது.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பெற்ற வாக்குகள் அவர்கள் தங்கள் தொழிற்சங்க அமைப்பான PAME சக்திகளின் மூலம்தான் ஆதரவைப் பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

இறுதியில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள், சிரிசா, அன்டர்ஸ்யா ஆகியவை கொண்ட பங்கை அடுத்து ஒரு மாற்றீட்டு “இடது” அமைப்பு என்றுதான் காணப்பட முடியும்.

2004ல் Synaspismos என்னும் அதன் மிகப் பெரிய கூறுபாடு, முக்கியமாக KKE ல் இருந்து வந்த “யூரோ கம்யூனிஸ்ட்” ஸ்ராலினிஸ்ட்டுக்கள் சில சிரிய குழுக்களுடன் ஒன்றுபட்டபோதுதான் சிரிசா அமைக்கப்பட்டது. இது இத்தேர்தலில் 4.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது; ஆனால் அதன் எண்ணிக்கை வாக்குக் கணக்கு மொத்தத்தில் 73,000 குறைந்துவிட்டது.

இத்தேர்தல்கள் சிரிசா பல வலது சாரிக் கூறுபாடுகளில் உடைந்து, சிதைந்து நிற்கும் பண்புரீதியான மாற்றத்தைத்தான் குறிக்கிறது. ஜூலை மாதம் SYRIZA ஒரு பிளவைச் சந்தித்தது; அப்பொழுது அது தனது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த குழுவில் 4 பேரை இழந்தது. இந்த நால்வரும் –Fotis Kouvels, Nikos Tsoukalis, Thanasis Leventis, Erigoris Psarianos—Renewal Wing (RW) கூட்டணியின் ஒரு பகுதியினராக இருந்தனர்; தாங்கள் பாராளுமன்றத்தில் சுதந்திர உறுப்பினர்களாக அமர்வோம் என்று அறிவித்தனர். லெவென்டிஸ் பாராளுமன்றத் துணைச் சபாநாயகர் என்ற பதவியில் இருந்தும் இராஜிநாமா செய்தார்.

PASOK அரசாங்கத்தின் அரசியல் தன்மை, முதலாளித்துவத்தின் கருவி என்பனது தெளிவானவுடன், RW பெருகிய முறையில் SYRIZA இன்னும் வெளிப்படையாக சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்னும் தன் கோரிக்கையை உரத்துக் கூறியது. RW தலைவர் Kouveils கூறினார்: “தொழிலாளர்களின் அனைத்து ஏற்கப்பட்ட உரிமைகளையும் காப்பது முறை என்று கருதாத ஒரு இடதை நாங்கள் விரும்புகிறோம்.”

இப்பிரிவு பின்னர் ஜனநாயக இடதை அமைத்தது, அதன் பின்னர் வெளிப்படையாக PASOK க்கு ஆதரவாக அதன் தொழிலாள வர்க்க விரோத செயற்பட்டியலுக்கு ஆதரவு கொடுத்தது; பார வண்டி சாரதிகள் ஜூலையில் தங்கள் வேலைநிறுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் அடங்கியிருந்தது.

செப்டம்பர் மாதம் முன்னாள் சிரிசாவின் தலைவர் Alekos Alavanos ஒரு போட்டிப் பிரச்சாரத்தை நடத்தும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். தேர்தலில் அவர் தேசிய வாத, வெளிநாட்டு எதிர்ப்பு “Free Attica” அமைப்பின் பட்டியலில் தலைமை வகித்து நின்றார். மொத்த வாக்குகளில் 2.2 சதவிகிதத்தைத்தான் அவர் பெற்றார். ஆட்டிக்காவில் அவர் PASOK இன் நிறுவன உறுப்பினரில் ஒருவரான அலெக்சிஸ் மிட்ரோபௌலோஸினால் எதிர்க்கப்பட்டார்; பிந்தையவருக்கு Synaspismos ன் ஆதரவு கிடைத்தது; அதுவும் வெளிப்படையான தேசிய அரங்கில். மிட்ரோபௌலோஸும் சிறிய அளவில் 6.2 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றார்.

ANTARSYA வில் பல குழுக்கள் உள்ளன; இதில் KKE மற்றும் பல போலி இடது பிளவுகள், சுற்றுச்சூழல் போக்குகளில் இருந்து பிரிந்து வந்தவையும் அடங்கும்; அவை சிரிசாவிற்கு ஒரு புரட்சிகர மாற்றீடு தருவதாகக் கூறுகின்றன. கிரேக்க-ஸ்பார்ட்டகோஸ் கம்யூனிஸ்ட் சர்வதேசியவாதிகள் அமைப்பு (பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் கிரேக்கப் பிரிவு) ANTARSYA வின் ஒரு பகுதியாகும்; அதே போல் SEK எனப்படும் சோசலிச தொழிலாளர் கட்சியும் ஒரு பகுதிதான், இது பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு பரிவுணர்வு காட்டுவது ஆகும். 2009ல் ANTARSYA 25,000 வாக்குகளைப் பெற்றது; இத்தேர்தலில் அதை 95,000 என்று உயர்த்தியுள்ளது—இது மொத்தத் தேசிய வாக்குகளில் 2 சதவிகிதம் ஆகும்.

உண்மையில் PASOK, KKE இரண்டுமே சிரிசா மற்றும் அன்டர்ஸ்யாவின் பல கூறுபாடுகளையும் தங்களை இடதின் குறைகூறலில் இருந்து காப்பதற்கு நம்பியுள்ளன. தனி அமைப்புக்களாக சிரிசாவும் அன்டர்ஸ்யாவும் இருந்தாலும், கொள்கை அளவில் இவற்றிற்கு இடையே வேறுபாடு ஏதும் இல்லை. அடிப்படையில் இவை அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் போராட்டத்தை நடத்த மறுப்பதில் ஒன்றுபட்டுள்ளன; அதேபோல் தொழிற்சங்க அதிகாரத்துவம்தான் சிக்கன நடவடிக்கை, வெட்டுக்களுக்கு எதிர்ப்புக்களுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. ஆனால் இவை தொழிலாளர்களை பல ஒருநாள் எதிர்ப்புக்களை நடத்தி ஒரு முட்டுச் சந்தில்தான் நிறுத்தியுள்ளன.

முதலாளித்துவ ஆட்சியின் தூண்கள் என்னும் முறையில் இவற்றின் பங்கு தேர்தல்களை இவை எதிர்கொண்ட முறையில் வெளியாயிற்று. Xekinima குழுவின் Andreas Payiatsos, சிரிசாவின் ஒரு பகுதி, நவம்பர் 12 வெளிவந்த பேட்டி ஒன்றில் அக்கட்சி முகம் கொடுக்கும் நெருக்கடி பற்றியைப்பற்றி விவரித்தார். Xekinima, என்பது Committee for a Workers International இன் கிரேக்க அமைப்பாகும். இது அரசியலில் பிரிட்டனின் சோசலிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்படுகிறது.

கிரேக்க “இடது” பற்றி ஒரு பேரழிவுச் சித்திரத்தைத்தான் Payiatsos தீட்டினார். இதில் அவருடைய போக்கும் குறிக்கப்பட்டிருந்தது. “இடது கட்சிகள் வளர்ச்சி அடையவில்லை, திகைப்பிலும் சீற்றத்திலும் உள்ள கிரேக்க வெகுஜனங்களுக்கு ஒரு வெளியேறும் வழியை அளிக்கவில்லை. இடது சக்திகள் அடிப்படையில் தேக்க நிலையில்தான் இருந்தன.

“சிரிசாவிற்குள் இருக்கும் நெருக்கடி ஆழ்ந்தது, தொடரும்” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். சிரிசா “பிளவுற்றுள்ளது” என்று Payiastos கூறவில்லை; ஏனெனில் வலதிற்குப் பாயும் கட்சிகள் என்ற முறையில் இதன் கூறுபாடுகள் PASOK இற்கு சிறந்தவகையில் எப்படி மறைப்பு கொடுக்கலாம் என்பதில் போட்டியிடுகின்றன.

மாறாக அவர் பெருமிதத்துடன் கூறினார்: “சிரிசாவின் மத்திய செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், கிட்டத்தட்ட 10 பேர், சிரிசா எம்.பிக்கள் இருவரும் இதில் அடங்குவர், தங்களை பிளவுற்றிருக்கும் பிரிவுகளில் இருந்து ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளனர்; சிரிசாவிற்குள் ஒரு “மூன்றாம் பிரிவை” வளர்க்கும் விதத்தில். இது “கொள்கை அடிப்படையில் உள்ளது, குறுங்குழுவாத விழைவுகளினால் அல்ல, வேலைத்திட்டத்தை பொறுத்தவரை சிரிசா திட்டத்திற்கு இடது புறத்தில் இது உள்ளது.” என்று Payiatsos கூறினார்.

Xekinima வின் இடர்மிகுந்த சொல்லாட்சியில் “குறுங்குழுவாத” அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கோரிக்கை நடைமுறையில் பல சிரிசா பிரிவுகள் கொள்கையற்ற கூட்டுக்களைக் கொள்ள வேண்டும், KKE உடன்கூடச் சேரலாம் என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுதான். மார்ச் மாதம் Payiatsos வலியுறுத்தினார்: “கிரேக்கத்தில் சோசலிஸ்ட்டுக்களுடைய முக்கிய பணிகளில் ஒன்று இடது பிரிவுகளின் பிளவு ஏற்படுத்தும் தந்திரங்களை எதிர்த்துப் போராடுதல், மற்றும் “ஒரு ஒற்றுமையான முன்னணிக்கு” பிரச்சாரம் செய்தல், குறிப்பாக KKE, SYRIZA உடன்.” Payiatsos மற்றும் பிரிட்டிஷ் CWI உறுப்பினர் இருவரும் எழுதிய கட்டுரை ஒன்று செப்டம்பரில் வெளிவந்தது. இதில் அவர்கள் வெளிப்படையாக வரவிருக்கும் பிராந்தியத் தேர்தல்களில் சிரிசா பட்டியல் பற்றிக் கூறினர்; பெரும்பாலானவை “பிளவுத் தன்மையை உடையவை அல்லது மாவோயிஸ்ட்டுக்கள் மற்றும் SYN தலைமக்கு இடையே ஏற்பட்ட அழுகிய உடன்பாடுகளின் விளைவுகள்” என்றனர். இந்த “அழுகிய” உடன்பாடுகள் இருந்தபோதிலும்கூட, அவை “சிரிசாவிற்கு ஆதரவை கொடுப்பதோடு, KKE க்கும் கொடுக்கும்; சிலவற்றில் தீவிர இடது வேட்பாளர்களுக்கும் கொடுக்கும்.”

Xekinima, ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் எந்த ஆபத்தையும் கொடுக்ககூடிய விமர்சனங்களை முன்வைப்பதில்லை என்பதுதான் உண்மை; இவை PASOK அரசாங்கம் அதிகாரத்தில் தொடர அனுமதிக்கும் அடிப்படைச் சக்திகளாக உள்ளன. Payiatsos, தன்னுடைய சமீபத்திய கருத்துக்களில், “கிரேக்கத்தின் தொழிற்சங்க இயக்கத்தின் மையத் தலைமை PASOK அரசாங்கத்தின் ஆழ்ந்த சிக்கன வெட்டுக்களுக்கு எதிரான இயக்கத்தை நிறுத்திவிடுவது என்ற முடிவெடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இதை ஒரு “வெளிப்படையான காட்டிக்கொடுப்பு” என்றும் GSEE பொதுச் செயலாளரை இது “ஒரு வெறுக்கத்தக்க நபராக” மாற்றிவிட்டது என்று விவரித்த பின், அவர் தொடர்கிறார்: “ஆனால், அவர்கூட கீழிருந்து வரும் அழுத்தத்தினால் டிசம்பர் 15 அன்று மற்றொரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளார்.”

இத்தகைய கூற்றுக்கள் அடிப்படையில் GSEE, PASOK அதிகாரிகளினால் கட்டுப்படுத்தப்படும் தலைமையக் கொண்டது, PASOK யின் சமூகநலக் குறைப்புக்களை எதிர்ப்பதற்கு இதற்கூடாக அழுத்தம் கொடுக்கப்பட முடியும் என்ற போலித்தோற்றங்களை வளர்ப்பது ஆகும்.

சில நேரம் “இடது” ஒலிக்குறிப்பு காட்டும் சொற்றொடர்களைக் கூறினாலும், Xekinima மற்றும் முன்னாள் இடது சகோதரத்துவக் கூட்டம் தொழிற்சங்க அதிகாரத்துவம், KKE மற்றும் அவற்றின்மூலம் PASOK க்கு ஒரு அரசியல் மறைப்பைத்தான் கொடுக்கின்றன. இத்தகைய குழுக்களுள், “ஐக்கியம்”, “குறுங்குழுவாத எதிர்ப்பு” ஆகியவை மிகக் குறிப்பான பொருளைக் கொண்டுள்ளது. இதன் பொருள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீன வளர்ச்சியை எதிர்ப்பதில் ஐக்கியம்; அதே போல் PASOK ஆட்சியை வீழ்த்தி அதை ஒரு தொழிலாளர் அரசாங்கத்தால் பதிலீடு செய்ய உறுதி கொண்ட புரட்சிகர சோசலிச இயக்கம் கட்டப்பட்டுதல் ஆகியவற்றை எதிர்த்தல் என்பதாகும்.