World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Midterm elections to usher in further shift by Obama to the right

இடைக்காலத் தேர்தல்கள் ஒபாமா இன்னும் வலதிற்கு நகர்வதை முன்ன்றிவிப்பதாக இருக்கும்

By Barry Grey
27 October 2010

Back to screen version

அமெரிக்க தேர்தல்களில் திரித்தலுக்கான ஆதாரங்கள் மிகப்பெரிதாக உள்ளன. இரு வலது சாரிப் பெருவணிகக் கட்சிகளின் அரசியல் ஏகபோக உரிமை என்று இருக்கும் நிலையில், அதுவும் மூன்றாம் கட்சிப் பிரச்சாரகர்கள் வாக்குச்சீட்டில் பதிவு பெறுவதற்கு சட்டபூர்வமாக உள்ள தடைகளும் இன்னம் பல தடுப்புக்களும் உள்ள நிலையில், பெருநிறுவன நிதி வெள்ளமென தேர்தல்களுக்கு பாயும் நிலையில், பெருநிறுனத்திற்கு சொந்தமான செய்தி ஊடகங்களில் முதலாளித்துவ எதிர்ப்புக் கருத்துக்கள் முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலைமையில், அமெரிக்காவில் தேர்தல்கள் மக்களின் ஜனநாயக விருப்புரிமை என்பதை விட ஆளும் வர்க்கம் கொள்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளுதல், ஆள்பவர்கள் மாற்றுதல் என்ற விதத்தில்தான் அதிகம் உள்ளது. மக்களுடைய உணர்வுகளும் விருப்பங்களும் தற்போதுள்ள அரசியல் வடிவமைப்பினுள் உண்மையான வெளிப்பாட்டைக் காணமுடியாது.

அடுத்த செவ்வாயன்று நடக்க இருக்கும் தேர்தல்கள் இதற்கு விதிவிலக்கு அல்ல. இன்னும் ஒரு வாரத்திற்குள் தேர்தல் தினம் வரவிருக்கையில், புதிய காங்கிரசிலும் நாடெங்கிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் எப்படி வாக்குகளை துல்லியமாக பெற்றிருந்தாலும், வாக்கெடுப்பின் விளைவு ஒபாமா நிர்வாகம் இன்னும் வலதிற்கு நகர்வதாகத்தான் இருக்கும்.

இந்த இயக்கமையம், மிகவும் வெளிப்படையான விதத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகள் என்ற விதத்தில் இடது புறம் நகரும் மக்கள் உணர்விற்கு எதிராகத்தான் உள்ளது. ஆனால் செய்தி ஊடகத்தில் இடைவிடாமல் முழங்கப்படும் தேர்தலைப் பற்றி பகுதி உத்தியோகபூர்வ விளக்கம், பெருமந்த நிலைக்குப்பின் ஆழ்ந்த பொருளாதார, சமூக நெருக்கடிக்கு இடையே நிற்கும் அமெரிக்க மக்கள் மிகக் குறைந்த வகையிலான சமூக நலன்களைக்கூட எதிர்க்கின்றனர், வங்கிகளும் பெருநிறுவனங்க்ளும் இன்னும் குறைந்த கட்டுப்பாடுகளைக் கொள்ள வேண்டும் மற்றும் செல்வந்தர்களுக்கு இன்னும் வரிச்சலுகைகள் வேண்டும் என விழைகின்றனர் என்பதாகும்.

இந்த “அடித்தள வெகுஜனத் திருப்திப்படுத்துதல்தான்” தேநீர் விருந்து இயக்கத்தில் (Tea Party movement) உருவகமாக கொள்ளப்படுகிறது. உண்மையில், இது பெரும்பாலும் செய்தி ஊடகத்தின் தோற்றுவித்தல்தான். இதற்கு மக்களிடையே மிகச் சிறிய ஆதரவுத்தளம்தான் உள்ளது. ஆனால் இப்பிரச்சாரத்திற்கான நிதியோ பில்லியனர் குடியரசுக் கட்சிப் பிற்போக்குவாதிகளிடம் இருந்து வருகிறது.

வாஷிங்டன் போஸ்ட் ஞாயிறன்று தேநீர் விருந்து பற்றி தன்னுடைய மதிப்பீட்டின் முடிவுகளைச் சுருக்கி ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது “தெளிவற்ற முறையில் தொடர்புடைய கூட்டத் தொகுப்பு ஆகும். வியப்பைத் தரும் விதத்தில் அரசியல் நிகழ்போக்கில் அதிக ஈடுபாடு கொண்டதில்லை” என்று கூறியுள்ளது. செய்தித்தாள் தேநீர் விருந்துடன் பிணைந்துள்ள 647 குழுக்களுடன்தான் தொடர்பு கொண்டது; இவற்றுள் சிலவற்றில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் உறுப்பினர்கள் இருந்தனர். “தேநீர் விருந்தின் பரப்பு மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது என்பதுதான் கண்டறியப்பட்டுள்ளது எனலாம்” என்று போஸ்ட் சாமர்த்தியமான முடிவுரை கூறிவிட்டது.

தேநீர் விருந்தின் அடிப்படைச் செயல் அமெரிக்காவில் உள்ள உத்தியோகபூர்வ அரசியலின் முழு பிரிவையும் வலதிற்கு திருப்புவதற்கு உதவுவதாகும்.

ஆனால் இந்தப் போலி வெகுஜனத் திருப்தியளிக்கும் அமைப்புமுறை ஓரளவிற்கு மக்கள் அதிருப்தியை ஈர்த்துள்ளது என்பதுடன் இன்னும் பரந்த முறையில் வெகுஜன வேலையின்மை மற்றும் சமூக இடர்களால் எரியூட்டப்பட்ட சீற்றம் இப்பொழுது அரசியலில் வலது என்ற வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது எனப்படுவது, ஒபாமா நிர்வாகத்தின் சீரான பிற்போக்குத்தன கொள்கைகளின் விளைவு, மற்றும் அரசியல் அமைப்புமுறையில் உண்மையான இடதுசாரி மாற்றீடு ஒதுக்கப்பட்டுள்ளதின் விளைவுதான்.

வாக்காளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உறுதியாக புஷ் மற்றும் குடியரசுக் கட்சியினரின் போரை வலியுறுத்தும், பெருநிறுவனக் கொள்கைகளை நிராகரித்துள்ளபோதிலும், செவ்வாய் தேர்தலில் பெரும் ஆதாயங்களை பெற உள்ள குடியரசுக் கட்சியினர் அரசியல் முன்னெடுப்பை எடுத்துள்ளதுடன், ஒருவேளை பிரதிநிதிகள் மன்றத்தைக் கூடக் கைப்பற்றக்கூடும் என்பது ஜனநாயகக் கட்சி, அமெரிக்கத் தாராளவாதம் ஆகியவற்றின்மீது அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பாகும். இது ஒன்றும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு எழுந்துவிட்டது என்பதால் ஏற்படவில்லை. பெரும்பாலான கருத்துக் கணிப்புக்கள் அக்கட்சியினர் ஜனநாயகக் கட்சிக்காரர்களைவிடக் குறைந்த செல்வாக்கு உடையவர்கள் என்றுதான் காட்டுகின்றன.

தேர்தல் தினத்தன்று குடியரசுக் கட்சியினர் கணிசமான ஆதாயங்களைப் பெற்றால், அது ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு ஆதரவில் சரிவு என்பதின் விளைவாகத்தான் இருக்கும்; அதுவும் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய முன்னேற்றம் கொடுக்கும் மாறுதல்களை பற்றிய உறுதிமொழிகள் உண்மையானவை என்ற தவறான நம்பிக்கையால் ஒபாமாவிற்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கத்தினரும் இளைஞர்களும் வாக்களிக்க வராததால் விளைந்தது என்று இருக்கும். இப்போலித்தோற்றங்கள் வேலைகளைத் தோற்றுவிக்க அல்லது மில்லியன் கணக்கான வேலையற்றோருக்கு எந்தத் தீவிர நிவாரணமும் அளிக்க மறுக்கும் நிர்வாகத்தினால் சிதைந்துவிட்டன; பலரும் தங்கள் வீடுகள், சேமிப்புக்கள் ஆகியவற்றை இழந்து வறுமையில் தள்ளப்படுகின்றனர்.

மாறாக, ஒபாமா முந்தைய நிர்வாகத்தின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வலதுசாரிக் கொள்கைகளை ஆழப்படுத்தியதுடன் தொடர்ந்து செயல்படுத்துகிறார். தேர்தலுக்கு சற்றே முந்தைய பிரச்சாரத்தில் கூட அவர் தன்னை நிதிய-பெருநிறுவன உயரடுக்கில் இருந்து ஒதுக்கி வைத்துக் கொள்ள முடியவில்லை; சமீப காலத்தில் வளைகுடாப் பகுதியில் தடைசெய்யப்பட்டிருந்த எண்ணெய் தோண்டுதலுக்கான தடையை அகற்றியதுடன், வீடுகள் ஏலத்திற்கு வருவது சிலகாலம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்து, சமூகப் பாதுகாப்பின்கீழ் இருக்கும் ஓய்வு பெற்றவர்கள், வாழ்க்கைச் செலவு உயர்வதற்கேற்ற அதிகரிப்பை பெறமாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

சமீப நாட்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஒபாமா, ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் வாக்காளர்கள் அணிவகுத்துவரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வரவேண்டும் என்று கோரியுள்ளார். இவருடைய உரைகள் முற்றிலும் ஜனரஞ்சகத்தைக் கொடுப்பவை, வெற்றுத்தன, மக்களைத் திருப்தி செய்யும் ஆனால் பொருளற்ற சொற்றொடர்களைக் கொண்டவை. வெள்ளியன்று தென் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தில் ஒரு பெரும் மாணவர் கூட்டத்தில், “நீங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். நீங்கள் நம்பிக்கையைக் கைவிடக்கூடாது. அமெரிக்க கனவை நாங்கள் மீட்போம், ஒரு சிலருடையதை அல்ல, இப்பெரும் நாட்டில் வாழும் அனைவருடைய கனவுகளையும்.” என்று அறிவித்தார்.

எளிதான அவநம்பிக்கை தன்மையுடன் அவர் குடியரசுக் கட்சியனரை வோல் ஸ்ட்ரீட்டின் கருவிகள் என்று தாக்கி, புஷ் சகாப்த செல்வந்தர்களுக்கான வரிக்குறைப்புக்களை விரிவாக்க வேண்டும் என்னும் அவர்கள் கோரிக்கைமீது குவிப்புக்காட்டினார்; ஆனால் அதே நேரத்தில் அவருடைய நிர்வாகத்தின் அதிகாரிகள் ஒரு சமரசத்திற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்; இது செல்வந்தர்கள் தங்கள் வரிச் சலுகை ஆதாயங்களை அதிகம், இல்லாவிட்டால் முழுவதும்கூடத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கும்; வெள்ளை மாளிகை உதவியாளர்கள் தேர்தல் முடிந்த பின்னர் குடியரசுக் கட்சியினர் நிர்வாகத்துடன் இணைந்து சமூகநலச் செலவுகளைக் குறைக்கவும் நுகர்வுமீது வரிகளை அதிகரிக்கவும் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்புவிட்டு பேட்டிகள் கொடுத்துள்ளனர்.

சனிக்கிழமையன்று மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தில் ஒபாமா, “பெரும்பாலும் மில்லியனர்களுக்கும், பில்லியனர்களுக்கும் வரிகளை குறைத்ததற்காக” குடியரசுக் கட்சியினரை கண்டித்தார்; அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஜோசப் பிடனோ ப்ளூம்பேர்க் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஆண்டு ஒன்றிற்கு 200,000 டாலர் என்பதில் இருந்து தொடக்கநிலை வரிக்குறைப்புக்கள் குறிப்பிடப்படாத எண்ணிக்கைக்கு உயர்த்தப்படக்கூடும் என்றார். சில ஜனநாயகக் கட்சியினர் ஆண்டு வருமானத்தில் 1 மில்லியன் டாலர் வரை இத்தகைய சலுகைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டிற்குள் வருவதையும், செனட்டில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை எண்ணிக்கை குறைவதையும் கூட ஒபாமா ஏற்பார் என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. மிக இறுக்கமான செனட் மற்றும் கவர்னர் பதவிக்கான போட்டி இருக்கும் இடங்களில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் மோதலில் குடியரசுக் கட்சியினருடன் இருக்கும் இடங்களில் அவர் வாக்கெடுப்பிற்கு முன் குறிப்பிடத்தக்க வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். ஆனால் எங்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் பிரதிநிதி மன்றத்திற்கு வருவது அச்சம் தருவதாக உள்ளதோ, அங்கு இல்லை. ஒரு பிளவிற்கு உட்பட்டிருக்கும் காங்கிரஸ், கூடுதலான குடியரசுக் கட்சி வலிமையைக் கொண்டிருப்பது அவருக்கு இன்னும் கூடுதலான போலிக்காரணத்தை ஏற்கனவே கொடுப்பதாக கூறும் சிறியஅளவு ஊக்கப் பொதி நடவடிக்கைகளையும் நிறுத்த உதவுவதுடன், நீண்ட காலமாக வேலையற்று இருப்பவர்களுக்கு நலன்களைக் கூடுதலான வழங்குவதை நிறுத்த நிர்வாகத்திற்கு அரசியல் முகமூடியையும் கொடுக்கும்.

இம்மாதம் முன்னதாக நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிறு ஏட்டில் வெளிவந்துள்ள பீட்டர் பேக்கருடனான நீண்ட பேட்டி ஒன்றில் ஒபாமா பிரதிநிதிகள் மன்ற இழப்பை தவிர்க்க முடியாதது என ஒப்புக் கொண்டது போல் தோன்றியது. ஒரு குடியரசுக் கட்சி வெற்றி என்பது அக்கட்சியினரை தன்னுடைய செயற்பட்டியலுக்கு இன்னும் அதிக ஒத்துழைப்புக் கொடுக்க வைக்கலாம் என்று அவர் கருத்துக் கூறினார். இக்கட்டுரை “ஒரு மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி” தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகம் வலதுபுறப் போக்கு கொள்ளும் என்பதற்கு சந்தேகத்திற்கு இடமில்லாத அடையாளங்களை கொடுத்தார் என்று மேற்கோளிட்டுள்ளது.

“நீங்கள் பொதுச் செலவுகளைப் பற்றிக் குறைவாகவும் ஏற்றுமதிகளைப் பற்றி அதிகமாகவும் கேட்பீர்கள். முன்னைடுப்பு, தனியார் துறையைப் பற்றி அதிகமாகவும் எரிசக்தி துறையை பற்றிக் குறைவாகவும் கேட்பீர்கள். அரசாங்கம் வேலை கொடுப்பவர் என்பது பற்றிக் குறைவாகவும் நிதி வழங்குனர் என்று செயல்படுவது பற்றி அதிகமாகவும் கேட்பீர்கள்” என்று அந்த அதிகாரி கூறியிருந்தார்.

திங்களன்று டைம்ஸ் நிர்வாகம் தேர்தலுக்குப் பின் கொண்டுள்ள திட்டங்கள் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டது; இதே தகவலை நிர்வாகத்தின் அதிகாரிகள் கொண்டிருப்பதை அது மேற்கோளிட்டுள்ளது; “இரண்டு ஆண்டுகள் குடியரசுக் கட்சியினருடன் மோதிச் செயல்பட்டபின், திரு.ஒபாமாவும் அவருடைய உதவியாளர்களும் ஒரு தேர்தலுக்குப் பிந்தைய செயற்பட்டியலை திட்டமிட்டுள்ளனர். அது முற்றிலும் மாறான அரசியல் சூழலைக் கொண்டுள்ளது. அவர்கள் வரவு-செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தடையற்ற வணிக உடன்பாடுகள் இயற்றுவதற்கு, எந்த குழந்தைகளும் விட்டுவிடப்படவில்லை (No Child Left Behind.) என்று அறியப்பட்டுள்ள கல்வித்திட்டம் சீரமைக்க ஆகியவற்றிற்கு இருகட்சி ஒற்றுமைக்கான திறன் உள்ளது எனக் கருதுகின்றனர்” என்று செய்தித்தாள் கூறியுள்ளது

ஒபாமாவின் கல்வி மந்திரி Arne Duncan நிர்வாகத்தின் பள்ளி “சீர்திருத்த” செயற்பட்டியலுக்கு இருகட்சி உடன்பாடு “தற்போதைய சீற்றம், விரோதப் போக்கு என்னும் நிலையை” சீரமைக்க உதவும் என்று கூறியதாக கட்டுரை மேற்கோளிட்டுள்ளது. ஒபாமா மந்திரிசபையிலுள்ள தீவிர வலதுசார்புடைய உறுப்பினர்களில் டங்கனும் ஒருவராவார். பொதுக் கல்விமுறையில் இவர் முன்னோடியில்லாத தாக்குதலுக்கு தலைமை தாங்கி, இலாபம் கொடுக்கும் பட்டயப்பள்ளிகள் வளரப் பாடுபட்டுள்ளார்; பொதுப்பள்ளிகளை மூட முயன்றுள்ளார்; அவற்றை ஒட்டி ஏராளமான பணிநீக்கங்களும் ஆசிரியர்கள் மீதான பிற தாக்குதல்களும் வந்துள்ளன.

ஒபாமாவின் புதிய வெள்ளைமாளிகை உயர் அதிகாரியான பீட்டர் ரௌஸ் “காபிடோல் ஹில்லில் பணிபுரிந்தபோது குடியரசுக் கட்சியினருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்தார்” என்றும் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

ஒபாமா இதுவரை குடியரசுக் கட்சியினருடன் “உடன்பட்டிருக்கவில்லை” என்று ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் ஆதரவு கொடுக்கும் இக்கட்டுரையின் முன்கருத்து கேலிக்கூத்தாகும். தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே ஒபாமா குடியரசுக் கட்சியை மறுகட்டமைக்க, அதன் நம்பகத் தன்மையை மீட்கத்தான் அதிகம் உழைத்துள்ளார். புஷ்ஷின் பாதுகாப்பு மந்திரியும் ஈராக்கில் இராணுவப் படையடெப்பின் எழுச்சிக்கு வரைபடம் அளித்தவருமான ரோபர்ட் கேட்ஸை அப்பதவியிலேயே தக்கவைக்கும் முன்னோடியில்லாத நிகழ்வைச் செய்தார். வலதுசாரி செனட்டர் ஜட் கிரெக்கை, ஒரு பற்றாக்குறை “பருந்து” வோல்ஸ்ட்ரீட்டால் விரும்பப்டுபவரை தன்னுடைய வணிக மந்திரியாக்க வேண்டும் என்று தோல்வியடைந்த முயற்சியையும் மேற்கொண்டார்.

குடியரசுக் கட்சியினர் ஆப்கானிஸ்தான போர் விரிவாக்கம் என்னும் ஒபாமாவின் முனைப்பை தவிர மற்றவை அனைத்தையும் தடுத்து, எதிர்க்க முடிவெடுத்திருந்தனர் என்பதுதான் உண்மை. ஏனெனில் ஒபாமாவின் பெருநிறுவனச்சார்பு, போர் ஆதரவு செயற்பட்டியல் விரைவில் அவரை அவருக்கு வாக்களித்தவர்களிடம் இருந்து விரோதப்படுத்திவிடும் என்று அவர்கள் சரியாகக் கணித்திருந்தனர்.

கடந்த பெப்ருவரியில் இரு கட்சியினரும் அடங்கிய நிதியப் பொறுப்பு, சீர்திருத்தத்திற்கான தேசியக் குழுவை அவர் நிறுவியபோதே, ஒபாமா சிக்கன நடவடிக்கைகளுக்கான அரங்கிற்கு வழிவகுத்து விட்டார். அந்த அமைப்பு, 2015 க்குள் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை அகற்றத் திட்டம் அளிக்க வேண்டும் என்ற பொறுப்பைப் பெற்றிருந்தது, அதன் பரிந்துரைகளை டிசம்பர் 1ம் தேதி வெளியிட உள்ளது. சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்புப் பிரிவுகளை படிப்படியாக பெரும் குறைப்புக்களைக் கொள்ள வேண்டும், மற்றும் நுகர்வின்மீதான பிற்போக்குத்தன வரி வேண்டும் என்று அது கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிக்கை ஒபாமா வரைகாலத்தின் இரண்டாம் பகுதியில் இன்னும் தீவிரமான முறையில் தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரங்களை தாக்கும் விதத்தில் விவாதங்களுக்கு குரல்கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

ஒபாமா நிர்வாகத்தின் போக்கு ஜனநாயகக் கட்சியினர் முன்னேற்றமான சீர்திருத்தங்களை செயல்படுத்த அழுத்தம் கொடுக்கப்படலாம், வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி ஜனநாயகக் கட்சிக்கு முறையீடு செய்வதின் மூலம் நிறுத்தப்படலாம் என்று கூறுபவர்களின் கருத்துக்களை அனைத்தையும் பயனற்றதாக்கிவிட்டது. நேஷன் போன்ற இடது-தாராளவாத வெளியீடு, மற்றும் போலி சோசலிசக் குழுக்களான International Socialist Organization போன்றவை வளர்க்கும் இத்தகைய முன்னோக்கு திவால் தன்மை உடையது ஆகும்.

ஜனநாயகக் கட்சி மற்றும் இரு கட்சி முறை ஆகியவற்றில் இருந்து உறுதியான முறிவும், தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன சோசலிச இயக்கத்தின் வளர்ச்சி தேவை. எதிர்வரவிருக்கும் வாரங்களும் மாதங்களும் தொழிலாள வர்க்கத்திடையே பெரும் போராட்டங்களுக்கான எழுச்சியைக்காணும். இது அத்தகைய இயக்கத்தைக் கட்டமைக்கும் சூழ்நிலையை அளிக்கும். தேவையான வேலைத்திட்டம் மற்றும் தலைமையை வழங்குவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பதுதான் முக்கியமான பிரச்சினை ஆகும்.