World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

An important series of meetings in Berlin

American historian Alexander Rabinowitch to speak in Berlin

பேர்லினில் முக்கிய தொடர் கூட்டங்கள்

அமெரிக்க வரலாற்றாளர் அலெக்சாந்தர் ரபினோவிட்ச் பேர்லினில் உரையாற்றுகிறார்

By Ulrich Rippert
18 September 2010

Back to screen version

புகழ்பெற்ற அமெரிக்க வரலாற்றாளர் பேராசிரியர் அலெக்சாந்தர் ரபினோவிட்ச் அக்டோபர் மாத நடுப்பகுதியில் பேர்லினுல் உள்ள Humbolt பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகிறார். இந்த உரை ரபினோவிட்சின் சமீபத்திய நூல் The Bolsheviks in Power—The First Year of Soviet Rule in Petrograd என்பது பற்றி இருக்கும். இது ஜேர்மனியில் மெஹ்ரிங் பதிப்பகத்தால் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோகிராட் ஆவணக் காப்பகங்களில் தன்னுடைய மிகச் சமீபத்திய ஆய்வுகளின் முடிவுகளைப் பற்றியும் ரபினோவிட்ச் அறிக்கையை அளிக்கவுள்ளார்.

ரஷ்ய புரட்சியின் வரலாறு பற்றிய உலகின் முக்கிய வல்லுனர்களில் ரபினோவிட்ச்சும் ஒருவராவார். இதைத்தவிர அவர் விளக்க வரலாற்றியல் கல்விக்கூடம் பற்றித் தலைசிறந்த கருத்துரைப்பவரும் கூட. அவருடைய நூலைப் படிப்பது போலவே, பேர்லினில் அவருடைய உரை மற்றும் அதைத்தொடரும் விவாதங்களும் ஐயத்திற்கு இடமின்றி முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றி ஆழ்ந்த அறிதலுக்கும், அறிவார்ந்த விவாதத்திற்கும் வழிவகுக்கும்.

ரஷ்ய வரலாறு, குறிப்பாக 1917 புரட்சியைத் தொடர்ந்த இரு ஆண்டுகள் பற்றிக் குவிப்பு காட்டிய வரலாற்றாளர்களில் ரபினோவிட்ச் தலைசிறந்து நிற்பவர் ஆவார். ஒரு ரஷ்யாவில் இருந்து வெளியேறிய குடியேற்றக் குடும்பத்தின் குழந்தை என்ற முறையில் அவர் தன்னுடைய பெற்றோர்களின் வீட்டில் இருந்த முக்கிய வரலாற்றாளர்களான அலெக்சாந்தர் கெரென்ஸ்கி மற்றும் இரக்லி டெசெரெடிலு ஆகியோரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். இருவருமே போல்ஷிவிக் கட்சியின் எதிர்ப்பாளர்கள் ஆவர். கீழ்க்கண்ட பிரச்சினை பற்றி பின்னர் ரபினோவிட்ச் தன் பணியில் குவிப்பைக் காட்டியுள்ளார்: ரஷ்யப் புரட்சி ஒரு சிறிய, சதியில் ஈடுபட்டிருந்த ஒரு தீவிரப் புரட்சியாளரின் இராணுவ வகை ஆட்சி மாற்றமா அல்லது 1917ல் பெட்ரோகிராடில் வெகுஜனக் கட்சியாக வளர்ந்திருந்த போல்ஷிவிக் கட்சி உடைய முயற்சிகளின் விளைவா? இப்பிரச்சினை குறித்து மூன்று அறிவியல் சார்ந்த படைப்புக்களை அவர் இயற்றியுள்ளார். இவருடைய உன்னதமான The Bolshecviks Come to Power (1976) என்பது அவருடைய தொழிலில் உள்ள சக ஊழியர்களாலேயே ஒரு தரமான படைப்பு என்று அங்கீகாரத்தைக் கொண்டது ஆகும்.

ஆவணங்களின் சான்றுகளை நம்ப வேண்டும் என்ற வரலாற்றியல் கல்விக் கூடத்திற்கு ரபினோவிட்ச் உறுதியாக வாதிடுபவர் ஆவார். பல தசாப்தங்கள் அவர் ஆவணங்களில் முறையாக, சலிப்பின்றி உழைத்துள்ளார். அவருடைய படைப்பிலுள்ள ஒவ்வொரு விவரமும் ஆவணங்கள், கூட்டக் குறிப்புக்கள் மற்றும் உண்மை அறிக்கைகளின் ஆதாரத்தைக் கொண்டவை. வரலாற்றாளர் என்ற முறையில் அவர் கொண்டுள்ள தீவிர ஆர்வம் 1917-18ல் புரட்சிகர பெட்ரோகிராடில் நடந்த வியத்தகு நிகழ்வுகளை இயன்றளவு ஆர்வத்துடனும் உண்மையுடனும் மறுபடியும் தோற்றுவித்துக் காட்டுது ஆகும். அவருடைய நோக்கம்: “அது எப்படி உண்மையில் இருந்தது என்பதைக் கண்டறிதல்.”

எனவேதான் அவருடைய சமீபத்திய நூல் The Bolsheviks in Power – The First Year of Soviet Rule in Petrograd மிகவும் முக்கியத்தைக் கொண்டுள்ளது. இந்த நூலைத் தயாரிப்பதற்கு ரபினோவிட்ச் ஏற்கனவே பரந்த பணியைச் செய்துள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இதுவரை நாளும் கட்சி, அரசு, ஆகியவைகளால் மட்டுமே பெற்றிருந்த இரகசிய கோப்புகளைப் பரிசோதிக்கும் வாய்ப்பானது அவருக்கு திடீரென, எதிர்பாராமல் இவற்றை ஆராய கிடைத்தது. இதன் பின் அவர் பல ஆண்டுகள் அவரிடத்தில் உள்ள உண்மையை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுகளை எழுத்துவடிவில், விரிவாகக் கொண்டுவரும் செயலில் இறங்கினார்.

புதிதாகக் கிடைக்கும் ஆவணப் பொருட்கள் வாசகருக்கு அக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி, கூடுதலான, விரிவான மதிப்பீட்டை அளிக்கின்றன. இது ரஷ்யப் புரட்சி மற்றும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளின் வியத்தகு நிகழ்வுகளைப் பற்றிய ஆழ்ந்த வரலாற்று உணர்வைக் கொடுக்கிறது.

ஜேர்மனிக்கு இது குறிப்பிடத்தக்க வகையில் முக்கியத்தவம் கொண்டது. இந்நாட்டில் போருக்குப் பிந்தைய காலத்தில் ரஷ்யாவில் நடந்தது என்ன என்பது பற்றிய ஆய்வு பனிப் போர்க் காலத்து சிந்தனை வெடிப்புக்களால் தடைக்கு உட்பட்டிருந்தது. கிழக்கு ஜேர்மனியில் வரலாற்றாளர்கள் 1917 புரட்சி நிகழ்வுகளைச் சிதைத்துத் தவறாகக் கூறினார்கள். இதற்குக் காரணம் மாஸ்கோ மற்றும் கிழக்கு பேர்லினில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆட்சியை நியாயப்படுத்துவது ஆகும். ஆனால் மேற்கு ஜேர்மனியில் கம்யூனிச எதிர்ப்புணர்வினால் உந்துதல் பெற்ற வரலாற்றாளர்கள் போல்ஷிவிசத்தை ஸ்ராலினிசத்துடன் சமமாக வைத்துத்தான் எழுதினார்கள். இக்கருத்துக்களும் முடிவுரைகளும் இன்றும் தொடர்கின்றன. சில வரலாற்றாளர்கள் ரஷ்ய வரலாறு குறித்து பொதுநிலை, உண்மையான ஒருமித்த கருத்தை நிறுவுவதில் முற்றிலும் இயலாது என்று சொல்லும் அளவிற்குச் சென்றுள்ளனர்.

சோவியத் ஆவணங்கள் திறந்துவிடப்பட்டு, அதையொட்டி வெள்ளெமென புதிய ஆவணங்கள் வெளிவந்தது, ரஷ்ய வரலாற்று ஆராய்ச்சியில் புதிய தென்றலைக் கொண்டுவந்ததுடன், பல வரலாற்றாளர்களின் செயல்களைத் தீவிரப்படுத்தியது. இரு ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் ரபினோவிட்ச்சைப் பெருமைப்படுத்தும் வகையில் பிலடெல்பியாவில் நடைபெற்ற 40வது தேசிய AAASS (அமெரிக்க ஸ்லாவிக் ஆய்வுகளுக்கான முன்னேறுதலுக்கான சங்கம்) உடைய மாநாட்டில், ஸ்டீபன் எப்.கோஹன் அவருடைய தலைசிறந்த சாதனைகளுக்கு புகழாரம் சூட்டி, அவருடைய சமீபத்திய நூல் ரஷ்ய வரலாற்று ஆய்வில் ஒரு திருப்புமுனை என்று குறிப்பிட்டார். ரஷ்ய வரலாற்றில் ஒரு முன்னிலை வல்லுனரும் புக்காரினின் வாழ்கை சரித நூல் எழுதிய ஆசிரியர் என்று பரந்த பாராட்டுக்களைப் பெற்றவருமான கோஹன் குறிப்பிட்டார்: “நீண்டகாலம் மூடப்பட்டிருந்த ஆவணங்களில் இருந்து வியத்தகு அளவிற்குப் புதிய தகவல்களை ரபினோவிட்ச் சேகரித்துள்ளார்…. (அதைத்தவிர) சிறப்பு வல்லுனர்களும், பொது வாசகர்களும் எளிதே பெறக்கூடிய அருமையான படைப்பையும் தோற்றுவித்துள்ளார்.”

ரபினோவிச்சின் புத்தகம் நான்கு அடிப்படை கருத்தாய்வுகளைக் கொண்டுள்ளது:

-அனைத்து ரஷ்ய சோவியத்துக்களின் காங்கிரஸில் ஒரு புரட்சிகர அரசாங்கம் நிறுவப்பட்டதைச் சூழ்ந்திருந்த பிரச்சனைகள்,

- அரசியலமைப்பு நிர்ணய சபை கலைக்கப்பட்டதை ஒட்டிய சர்ச்சைகள்,

-பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் சமாதானத்திற்கு வகை செய்த இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், சோவியத் அரசாங்கத்தின் மீது ஜேர்மனியப் பக்கத்தினால் சுமத்தப்பட்ட இந்த அடக்குமுறை ஒப்பந்தத்தின் ஆதரவாளர்கள், எதிரப்பாளர்களிடைய நடந்த தீவிர ஆர்வம் நிறைந்த அரசியல் விவாதங்கள்.

-வெண்படையின் பயங்கரத்தின் ஆரம்பங்கள், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த சக்திகளால் உந்துதல் பெற்ற படுகொலைகள், புதிய அரசாங்கத்திற்கு எதிராக இயக்கப்பட்ட சதிகள், அவற்றையொட்டி எழுந்த செஞ்சேனையினை தூண்டிய பயங்கர நிகழ்வுகள்.

இப்புத்தகத்திலுள்ள ஏராளமான ஆவணச் சான்றுகள் மற்றும் முடிவுரைகள் அக்டோபர் புரட்சி ஒரு வெறும் இராணுவகை ஆட்சிமாற்றம், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ஒரு சிறிய புரட்சிகரக் குழு நடத்தியது என்று பரந்த அளவில் இருக்கும் திரிப்புக்களை மறுக்கின்றன. அவருடைய புத்தகத்தின் முன்னுரையில் ரபினோவிச் குறிப்பிடுக்றார்:

“பெட்ரோகிராடில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி ஒரு இராணுவ நடவடிக்கை என்பதற்குப் பதிலாக ஒரு படிப்படியான வழிமுறையில் மக்களை அரசியல் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூண்டச் செய்தது, காரணம் இதில் பெப்ருவரிப் புரட்சியின் விளைவுகளிளால் ஏற்படித்தியிருந்த பரந்த அதிருப்தி மற்றும் அந்தப் பின்னணியில் போல்ஷிவிக்குகளின் உடனடிச் சமாதானத்திற்கான காந்தமான கவர்ச்சி வாக்குறுதிகள், விவசாயிகளுக்கு நிலம், பல கட்சி சோவியத்துக்கள் செயல்படுத்திய அடிமட்ட ஜனநாயகம் ஆகியவை இருந்தன.

“ஆனால் இந்த விளக்கம் அது விடையிறுத்தவற்றைவிட அதிக வினாக்களைத்தான் எழுப்பியது. போல்ஷிவிக் கட்சி 1917ல் அதற்கு எனக்கூறப்படும் வெளிப்படையான, ஒப்புமையில் ஜனநாயகம் நிறைந்த, அதிகாரக் குவிப்பற்ற தன்மை, செயற்பாட்டு முறையைக் கொண்டிருந்தால் —அதுதான் தெளிவாகத் தெரிகிறது— பின் அது விரைவில் தற்கால வரலாற்றில் மிகுந்த மையப்படுத்தப்பட்ட, சர்வாதிகாரப் போக்குடைய அரசியல் அமைப்புக்களில் ஒன்றாக மாறியதை எப்படி விளக்குவது?’

இக்கருத்தாய்வுகளும் அவை எழுப்பும் வினாக்களும் ஜேர்மனியில் அத்தகைய கருத்துக்கள் பால் அக்கறை உடையவர்களுக்கு பேராசரியர் ரபினோவிட்ச்சின் படைப்பைப் பெறுவது கடினம் என்பதற்கு ஒரு காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய நூல்கள் எதுவும் ஒரு ஜேர்மனிய பதிப்பாளரால் மொழியாக்கம் செய்யப்படவில்லை; அவருடைய படைப்புக்கள் பற்றிய ஆய்வுரைகள் கூட வரலாற்று வட்டங்களில் காணப்படுவது அரிதாகும்.

இந்தத் சமூக தடையை உடைப்பதில் மெஹ்ரிங் பதிப்பகம் மகிழ்ச்சி அடைகிறது; ஜேர்மனிய மக்களுக்கு பேராசிரியர் அலெக்சாந்தர் ரபினோவிட்ச்சை நேரடியாகக் கேட்கவும் அவருடன் விவாதிக்கவும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. பேர்லினில் அவருடைய சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவுகளை அளிக்கவும், பொதுமக்கள் அவர் படைப்பு பற்றி எழுப்பும் வினாக்களுக்கு விடை அளிக்கவும் அவர் பல கூட்டங்களில் பேச உள்ளார்.

பேராசிரியர் அலெக்சாந்தர் ரபினோவிட்ச்சுடன் கூட்டங்கள்

கீழ்க்கண்ட கூட்டங்களில் பேராசிரியர் ரபினோவிட்ச் பேர்லினில் உரையாற்றுவார்:

14. October 2010, 19:00
Lecture at the Humboldt University in Berlin Lecture-room 7,
 Invalidenstraße 42

15. October 2010, 20:00
Book presentation Unibuch Mitte,
Spandauer Str. 2

16. October 2010, 14:00
Seminar at the Technical University in Berlin
(Registration necessary)
Straße des 17 Juni 135