World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Political earthquake in German state elections

ஜேர்மன் மாநில தேர்தலில் அரசியல் பூகம்பம்

By Ulrich Rippert 
29 March 2011
Back to screen version

ஜேர்மனில் ஞாயிறன்று பாடன்வூட்டன்பேர்க் மற்றும் ரைன்லாந் பலரினேற்றில் ஆகிய மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் அங்கேலா மேர்ககலின் தலைமையிலான கூட்டணி அரசு மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது. மேர்கல்லின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU), ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் பெற்ற 44.2 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது 39 சதவிகித வாக்குகளை பெற்று, அதன் வாக்குகளில் 5.2 சதவிகிதத்தை இழந்துவிட்டது. பாடன்வூட்டன்பேர்க் மாநிலம் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பழைமைவாதிகளின் ஒரு பாரம்பரிய கோட்டையாகவே இருந்துவந்தது.

மேர்க்கலின் கூட்டணி கட்சியான தாராளவாத ஜனநாயக கட்சி (FDP), பாடன் வூட்டன்பேர்க்கில் அதன் வாக்குகளில் பாதிக்கும் மேல் இழந்துவிட்டது, இந்த மாகாணமும் FDPக்கு நீண்டகாலமாக அரசியல் தளமாக விளங்கியது. அக்கட்சி 5.3 சதவிகித மொத்த வாக்குகளுடன் மாகாண சட்டமன்றத்தில் மட்டுமே தொடர்ந்து இருக்கும் நிலையை அடைந்தது. ரைன்லாந்து பலட்டினேற்றின் CDU அதன் வாக்குகளை சற்று அதிகரித்துள்ள அதே சமயத்தில், FDP யின் வாக்குகள் 8.0 இருந்து 4.2 சதவிகிதமாக பாதி அளவு குறைந்துள்ளது. மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவத்திற்கு தேவையான குறைந்தபட்ச தேவையான 5 சதவிகிதத்தை பெற அந்த கட்சி தவறிவிட்டது என்பதே இதன் அர்த்தமாகும்.

பாடன்வூட்டன்பேர்க்கில் SPD யை முந்தி 24.2 சதவிகித வாக்குகளுடன் பசுமைக் கட்சி (Greens) இரண்டாம் இடத்தை பிடித்தது. பசுமைக் கட்சி கூடிய வெற்றி பெறும் என்று சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தாலும், அது கைப்பற்றிய வாக்குகளின் பங்கு ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இதுவரை நடந்த மாநில தேர்தலிலேயே ஒருபோதும் பெற்றிராத அதிக வாக்குகளை பெற்று பசுமைக்கட்சி கட்சி சாதித்துள்ளது. 2006 தேர்தலுடன் ஒப்பிடுகையில், அதன் வாக்கு விகிதம், 11.7 சதவிகிதத்திலிருந்து 24.2 சதவிகிதமாக இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

2006 உடன் ஒப்பிடுகையில், பாடன் வூட்டன்பேர்க்கில் SPD 2 சதவிகிதத்தை இழந்து, நாட்டின் தென்மேற்கில் இதுவரை பெற்ற வாக்குகளிலேயே மிக மோசமாக, வெறும் 21.3 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பசுமைக்கட்சிக்கான அதிகபட்ச மொத்த வாக்குகள் என்பதன் அர்த்தம், எந்த பசுமைக்கட்சி-சமூகஜனநாயக கட்சி கூட்டணி அமையலாம் என்று கூறப்படுகிறதோ அதில், வரலாற்றில் முதல் முறையாக, மாநில முதல்வராக அக்கட்சி வேட்பாளரை நிறுத்தக்கூடும்.

தேர்தல் நாளன்று இரவில் பல CDU அரசியல்வாதிகள் மற்றும் சில ஊடக விமர்சகர்கள் தேரத்ல் முடிவு குறித்து தங்களது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் பதிவு செய்தனர். பாடன்வூட்டன்பேர்க்கை தனது சொந்த வீட்டின் பகுதிபோல் கருதியது CDU அந்த மாகாணத்தில் 58 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தை வகித்த அது, தன்னைத்தானே ''பாடன்வூட்டன்பேர்க் கட்சி'' என்று ஆணவத்துடன் வரையறுத்துக்கொண்டது.

ஸ்ரெபான் மாப்புஸ், தமக்கு முன்னர் பிரதமராக பதவி வகித்த குந்தர் ஒட்டிங்கர் புருஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, 2009 இலையுதிர் காலத்தில் CDU பிரதமராக பதவியேற்று கொண்டார். அப்போதிருந்து, உள்ளூர் தொழில் புள்ளிகளின் நெருக்கமான ஆலோசனையில் தன் விருப்பப்படி அந்த மாகாணத்தை ஆட்சி செய்து வரும் மாப்புஸ், தனது கொள்கைகளை ஒருபோதும் வெகுஜன வாக்கெடுப்புக்கு விட்டதில்லை.

வாக்கு சீட்டில் தாம் நிராகரிக்கப்பட்டு, பசுமைக் கட்சியிடம் தோற்றதன் மூலம், தாம் மிகவும் அவமதிக்கப்பட்டதை தாம் உணர்ந்ததாக அவர் கூறினார். தேர்தல் நாளனறு இரவில், அவர் தனது அனைத்து அரசு பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்தார்.

தேர்தலிலிருந்தே, வாக்காளர்களின் போக்கு குறித்த ஏராளமான யூகங்கள் இருந்து வந்தன. CDU மற்றும் தனது கூட்டணி அரசுக்கு உள்ளேயே ஏற்பட்டுள்ள தீவிர மோதல்களிலிருந்து கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு முயற்சித்துக்கொண்டிருந்தது. புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை பேரழிவு, முற்றிலும் வழமைக்கு மாறான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி, அணு சக்தியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அறைகூவல் தேர்தலில் ஆக்கிரமித்தால், வாக்களிப்பில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் அது கவலையடைந்தது.

ஜப்பானில் நடந்த நிகழ்வுகள் மற்றும் அணு சக்தியை விரைந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஆகியவை உண்மையிலேயே ஒரு முக்கிய பங்காற்றியது, ஆனால் பாடன்வூட்டன்பேர்க்கில் பசுமைக்கட்சி-சமூகஜனநாயக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஜப்பானில் பேரழிவு ஏற்படுவதற்கு கொஞ்சம் முன்பாக இருந்தது.

"சுற்றுசூழல் புரட்சி" க்காக பொறுமையுடன் பத்தாண்டுகளாக ஆற்றிய பணிக்காக கிடைத்த பலன்தான் தங்களுக்கு கிடைத்த தேர்தல் வெற்றி என்று பசுமைக் கட்சி கூறுகிறது. தேர்தலன்று இரவில், பசுமைக் கட்சியின் தலைமை வேட்பாளரும், எதிர்கால மாநில முதல்வருமாகக்கூடியவருமான வின்பிரட் கிரெட்ஷ்மான் தமது கட்சி "போராடிப் போராடி" இறுதியில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

உண்மையில், தேர்தல் முடிவை விரிவான அரசியல் உள்ளடக்கத்தில் வைத்து ஆராய வேண்டும். பல மாதங்களாகவே மத்திய அரசு இரண்டு பக்கமிருந்தும் வரும் அழுத்தங்களின் கீழ் இருந்து கொண்டிருக்கிறது.

சமூக செலவினங்களை மேர்க்கல் போதுமான அளவில் குறைக்கவில்லை என்றும் தொழிற்துறைக்கு வரிகள் குறைப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று CDUவின் முதலாளிகளுக்கான ஆதரவாளர்கள் விமர்சித்தனர். மேலும் கட்சியில் உள்ள சில பிரிவினர் இராணுவத்திற்கு கட்டாய ஆள்சேர்ப்பு இல்லாதொழிப்பது ஜேர்மனை அதிக பணத்தை முதலீடு செய்ய வைக்கும், யூரோ மீட்பு நிதி ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும் என்று ஆட்சேபணை தெரிவித்தனர். முன்னாள் ஜனாதிபதியான ஹோஸ்ட் கோலர் மற்றும் மத்திய வங்கித்தலைவர் அக்செல் வேபர் உள்பட பல்வேறு முக்கிய உறுப்பினர்கள், இந்த பிரச்சனை காரணமாக தங்களது பதவிகளை அண்மையில் இராஜினாமா செய்தனர். மிக சமீபத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் கார்ல் தியோடர் சூ கூட்டன்பேர்க்கின் இராஜினாமாவை சுற்றி எழுந்த சர்ச்சை கட்சிக்குள் பிரிவுகளை மேலும் அதிகரித்தது.

மேலும், மத்திய அரசின் தொழிலதிபர்களுக்கு ஆதரவான கொள்கைகள், ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராக இருந்த ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களில் பெருமபாலானோரால் நிராகரிக்கப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு வரிக்குறைப்பை வலியுறுத்திய அதே நேரத்தில் சமூக செலவினங்களை குறைக்க வேண்டும் என்று FDP பிடிவாதம் பிடித்தபோது அக்கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்தது. சமூகத்தின் ஏழை மட்டத்திலுள்ளோருக்கு ஒரு சில யூரோக்களை அதிகமாக கொடுப்பது என்ற Hartz-IV வேலைவாய்ப்பற்றோருக்கான செலவினங்களின் சீர்திருத்தம் மற்றும் சட்டபூர்வமான குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்க அரசாங்கம் மறுத்தததை போன்று அரசாங்கத்திற்கான எதிர்ப்பை அதிகரித்தது.

பின்னர், கடந்த கோடையில், பில்லியன் கணக்கிலான செலவில் புதிய இரயில் நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஸ்ருட்கார்ட்டின் தலைநகரான பாடன்-வூட்டன்பேர்க்கில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆட்சியில் இருப்போர்களது பிடிவாதம், அரசியலுக்கு தொழில் மட்டத்திற்குமிடையேயான தகிடுதத்த பேரங்கள் மற்றும் ஆலோசனைகள் மற்றும் பொது பணத்தை வீண்டிக்கும் அதே நேரத்தில் கல்வி, சமூக செலவினங்கள் மற்றும் இதர அத்தியாவசிய துறைகளுக்கான செலவினங்களை குறைப்பது ஆகியவற்றிற்கு எதிரான பரவலான எதிர்ப்புகளை பிரதிபலித்தன. மேலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னேறிய நடுத்தர வர்க்க பிரிவினர்கள் மற்றும் பல CDU உறுப்பினர்களையும் ஒன்றுசேர்த்தது. அந்த நேரத்தில் பசுமைக்கட்சியினர் மற்றும் SPD ஆகியவை ஏற்கனவே தேர்தலில் முன்னணியில் இருந்தன.

கட்சிக்குள் ஏற்பட்ட பதற்றங்களை கட்டுப்படுத்த அதிபர் அங்கேலா மேர்க்கெல் முயற்சித்தாலும், மோதல்கள் அதிகரித்ததோடு, அணுக்கொள்கை மீதான அவரது பல்டி அதற்கு மேலும் எண்ணெய் வார்த்தது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட அணு உலைகளுக்கான ஆயுட்கால நீட்டிப்பை மூன்று மாத காலத்திற்கு நிறுத்திவைத்ததும், ஜேர்மனின் ஏழு பழைய அணு உலைகளை தற்காலிகமாக மூடுமாறு பணித்ததுமே புகுஷிமா பேரழிவுக்கான அவரது பதில் நடவடிக்கையாக இருந்தன. பழைமைவாத முகாமில் உள்ள அணுசக்தி ஆதரவாளர்கள் அவரது இந்த நிலையை நிராகரித்த அதே வேளையில், அணுசக்திக்கு எதிரானவர்களும் மேர்க்கெலின் இந்த திடீர் மனமாற்றத்தை மலிவான தேர்தல் தந்திரம் என்று நிராகரித்தனர்.

கூட்டணியிலும், அதன் அங்கத்துவகட்சிகளிலும் கடுமையான விரிசல்கள் ஏற்பட்ட சூழ்நிலைகளுக்கிடையேயும், லிபியாவில் இராணுவ தலையீட்டை அனுமதிக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் வாக்கெடுப்பின் மீது அரசு அப்போது கலந்துகொள்ளவில்லை. அதற்கு பின்னர், CDU வின் முன்னணி தலைவர்கள், இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கூட்டணியானரான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்ற்றின் எதிரான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு ஆதரவாக நின்றதன் மூலம் ஜேர்மனின் நீண்டகால அயலுறவுக் கொள்கையிலிருந்து அதிபர் கீழிறங்கி விட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்கள்.

மேர்க்கெல் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை அளித்தன் மூலம், ஆளும்வர்க்கத்தின் செல்வாக்கான பிரிவினர் மாற்றீடாக சமூகஜனநாயக-பசுமைக்கட்சி அரசை நோக்கி திரும்பினார்கள், அந்த அரசு பொருளாதார நெருக்கடிகளின் தாக்கத்தை சமாளிப்பதற்கு அதிக திறனுடையதாக இருக்கும் என்றும், பெருமளவில் சமூக தாக்குதல்களை அமுல்படுத்தும் என்றும் அவர்கள் நம்பினர். இதன் முடிவாக பாடன்-வூட்டம்பேர்க்கில் பசுமைக்கட்சிக்கு ஆதரவாக தீவிரமான ஊடக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்தாபனமயமான அரசியல் முகாம்களுக்கும், அரசாங்கம் மற்றும் உள்ளூர் CDU க்கு எதிரான எதிர்ப்பு வாக்குகளுக்கும் இடையேயான வாக்குகள் மாறிமாறி விழுந்ததை இறுதி வாக்களிப்பு பிரதிபலித்ததாகவே தேர்தல் முடிவு இருந்தது.

ஒரு பார்வையிலேயே வாக்குகள் எங்கே மாறி விழுந்தன என்பதை இது தெளிவாகிவிட்டது. CDU முன்னாள் வாக்காளர்களிடமிருந்து 87,000 வாக்குகளும், FDP வாக்காளர்களிடமிருந்து 61,000 வாக்குகளும், SPD ஆதரவாளர்களிடமிருந்து 140,000 என அனைத்து முகாம்களிலிருந்தும் பசுமைக்கட்சி வாக்குகளை பெற்றது. ARD கருத்து கணிப்பின்படி அதன் முக்கிய வாக்குகள் (266,000) முன்னர் வாக்குரிமையில்லாதவர்களிடமிருந்து (புதிதாக வாக்களித்தவர்கள்) வந்தது.

பசுமைக் கட்சியுடைய வாக்குளின் சமூகக்கூட்டு கூட வெளிப்பட்டுள்ளது. பசுமைக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளில் 17 சதவிகிதம் மட்டுமே தொழிலாளர்களிடமிருந்து வந்துள்ளது, அதே சமயம் பொதுச்சேவை ஊழியர்களிடமிருந்து 28 சதவிகிதமும், சுய தொழில் பார்ப்பவர்களிடமிருந்து 27 சதவிகிதமும் வந்துள்ளது. 30 முதல் 50 வயதுடையோரிடமிருந்து அதிக வாக்குகள் பெற்றதும், தொழில்சார் கல்வியாளர்களிடமிருந்து (36 சதவிகிதம்) அதிக வாக்குகள் பெற்றதும் இந்த கட்சிதான்.

சமூக ஜனநாயகக் கட்சியுடனான பசுமைக்கட்சியின் கூட்டணி ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று பல விமர்சகர்கள் மட்டுமல்லாது பசுமைக்கட்சியே கூட கட்டியம் கூறியது. உண்மையில், பசுமைக்கட்சி வேட்பாளர் கிரெட்ஸ்மான், பழைமைவாதகட்சியின் முதலாளித்துவ குணத்தை கொண்டிருந்தார். பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நலன்களை மேலும் அதிகரிப்பதில் அவர் தீவிர ஆர்வம் கொண்டவர். நாட்டின் கடன் உச்சவரம்பின் பாதுகாவலர்களில் அவரும் ஒருவராக உள்ளதோடு, கூட்டாட்சி ஆணையத்தின் (Federalism Commission) ஒரு உறுப்பினர் என்ற வகையில் அந்த பிற்போக்கான சட்டத்தை வரையறுத்ததிலும் நேரடி பங்கு கொண்டிருந்தார்.

பேட்டி ஒன்றில், 62 வயதான பள்ளி ஆசிரியர் ஒருவர், ''உண்மையான அர்த்தத்தில் தமது கட்சி மட்டுமே பழைமைவாத கட்சியாக உள்ளது" என்று கூறினார். பசுமையான யோசனைகளுடன் இலாபம் ஈட்டுவது சாத்தியமானது என்று பசுமைக்கட்சி காண்பித்துள்ளதால், தொழில்நிறுவனங்களுக்கு பசுமைக்கட்சிதான் சிறந்த கட்சி என்று அவர் புகழாராம் சூட்டினார். பசுமைக்கட்சியின் யோசனைகளால் மட்டுமே "உலக சந்தையில் ஒருவருக்கு சொந்தமானதை ஒருவர் கைப்பற்ற முடியும்."  

பல ஆண்டுகளாகவே, பசுமைக்கட்சிக்கும் CDU க்கும் இடையேயான கூட்டணியின் ஆதரவாளராக கிரெட்ஷ்மான் இருந்து வருகிறார். "தற்போதைய பிரச்சனைகளை சமாளிக்க" கூடிய கட்சிகள் CDU மற்றும் பசுமைக்கட்சி ஆகியவை மட்டுமே என்று கூறும் அவர், "உயர் மத்திய-தர வர்க்கத்தினரிடையே" பசுமைக்கட்சி மற்றும் பழைமைவாத கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட வேண்டும் என்கிற விருப்பம் அதிகரித்துவருகிறது என்பது தமது கருத்தாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

பசுமைக் கட்சியில் உள்ள முன்னாள் தீவிரவாதிகள் கொண்டிருந்த சரியான வளர்ச்சி பாதையின் குணத்தை அவர் கொண்டிருக்கிறார். எழுபதுகளில், மேற்கு ஜேர்மனி மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் லீக் (KBW) ன் உறுப்பினராக அவர் இருந்தார். எண்பதுகளில் ஹெஸ்ஸ மாகாண அரசாங்கத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜொஸ்கா பிஸ்ஸரின் கீழ் சுற்றுச்சூழல் துறைக்கு அவர் தலைமை வகித்தார். இன்று, முன்னணி நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்களுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கிறார். மேலும் ஜேர்மன் கத்தோலிக்க மத்திய குழுவின் உறுப்பினராகவும் இருக்கும் அவர், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது மத நம்பிக்கைகளை வலியுறுத்துகிறார்

.நா. பாதுகாப்பு சபையில் லிபியா மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததற்காக மேர்க்கெல் அரசாங்கத்தை மிக கடுமையாக விமர்சித்தது பசுமைக்கட்சிதான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். பசுமைக் கட்சியின் முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சர் ஜொஸ்கா பிஸ்ஸர், தற்போதைய அயலுறவுத் துறை அமைச்சரான வெஸ்டவெல்ல .நா. பாதுகாப்பு சபையில் முக்கியமான தருணத்தில் கோழைத்தனமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசாங்கத்தில் மட்டும் பசுமைக்கட்சி இருந்திருந்தால், லிபியாவுக்கு எதிராக தற்போது நடத்தப்படும் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலில் ஜேர்மன் இராணுவமும் பங்கேற்று இருந்திருக்கக்கூடும்.

கடந்த ஞாயிறன்று வெளியான தேர்தல் முடிவு, மேர்க்கெல் அரசாங்கத்த்தின் நெருக்கடிகளிலிருந்து ஆதாயம் ஈட்ட SPD முற்றிலும் தவறிவிட்டதை காட்டுவதாகவே உள்ளது. தேர்தல் நாளன்று இரவு, SPD வெற்றிபெற்றது போன்று காட்டிக்கொண்டதுடன், பாடன்-வூட்டம்பேர்க்கில் ஆளும் CDU வை ஏறக்குறைய அறுபதாண்டு காலத்திற்கு பின்னர் ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்ததாக கொண்டாடியது. குர்ட் பெக் தனது அறுதிப்பெரும்பான்மையை இழந்து, பசுமைக்கட்சியுடன் தற்போது கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும் கூட, ரைன்லாந்து-பலட்ரினேட் மாநிலத்தில் அவரால் பிரதமராக இருக்க முடியும் என்பது கூட ஒரு வெற்றிதான் என்று அக்கட்சி வாதிட்டது.

உண்மையில், இரு மாகாணங்களிலுமே SPD தோல்வியடைந்துவிட்டது. பாடன்- வூட்டம்பேர்க்கில் அது வெறும் 2 சதவிகிதத்தில் தோல்வியடைந்தாலும் கூட, தேர்தல் முடிவு அந்த மாகாணத்தில் அக்கட்சி முன் எப்போதும் பெற்றிராத மோசமான அளவுக்கு இருந்தது. ரைன்லாந்து-பலட்ரினேட்டில் 45.6 லிருந்து 35.7 சதவிகிதமாக சரிந்து, ஏறக்குறைய அதன் 10 சதவிகித வாக்குகளை SPD இழந்துள்ளது.

இரண்டில் எந்த ஒரு மாநிலத்திலுமே இடதுகட்சியால் குறிப்பிடத்தக்க எந்த ஒரு முன்னேற்றத்தையும் பெற முடியாமல், 5 சதவிகிதத்தை கூட தாண்ட முடியாமல் சிரமப்பட்டது. பாடன்- வூட்டம்பேர்க்கில் அந்த கட்சியின் வாக்கு விகிதம் 5.1 லிருந்து 2.8 ஆக வீழ்ச்சியடைந்த அதே சமயம், ரைன்லாந்து-பலட்ரினேட்டில் அதன் வாக்கு விகிதம் 2.6 லிருந்து 3.0 ஆக அதிகரித்துள்ளது. 2009 இலையுதிர் காலத்தில் நடந்த மத்திய தேர்தல்களில் இரண்டாவது வாக்கு முறை மூலம் அக்கட்சி ரைன்லாந்து-பலட்ரினேட்டில் 9.4 சதவிகிதமும், பாடன்- வூட்டம்பேர்க்கில் 7.2 சதவிகிதமும் இடதுகட்சி பெற்றிருந்தது. இடதுகட்சியின் வீழ்ச்சி அது SPD மற்றும் பசுமைக் கட்சிகளுக்காக ஒரு ஏவலாளின் ஏவலாளாக பணியாற்றியதை விட வேறொன்றும் அல்ல என்பதற்கு திருப்பிகிடைத்த பரிசாகும்.  

தேர்தல்களின் தாக்கம் படிப்படியாக இன்னும் தெளிவாகும் .திங்களன்று, CDU-முதலாளிகளின் பிரிவு அதிபரையும், CDU வின் தலைவரையும் மிகக்கடுமையாக தாக்கியது. மேர்க்கல் அரசாங்கத்தின் பயனற்ற கொள்கைதான் "முதலாளித்துவ கட்சிகளிடம் பெரும நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியது" என்று CDU-தொழிற்சங்கத்தின் தலைவர் கூறினார். மேலும் FDPக்கு உள்ளேயும், கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வியை தொடர்ந்து தலைமை மாற்றத்திற்கான குரல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

வாக்களர் ஏற்படுத்திய மாற்றம், அரசாங்கத்தின் சமூக விரோத கொள்கைகளுக்கு எதிராக அதிகரிக்கும் எதிர்ப்பின் வெளிப்பாடாக இருக்கும் அதே சமயம், இந்த தேர்தல் முடிவின் விளைவாக அனைத்து கட்சிகளும் மேலும் வலதுசாரிப்பக்கம் திரும்புவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுகிறது.