World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The two Americas

இரண்டு அமெரிக்காக்கள்

Tom Eley
6 April 2011
Back to screen version

காலகட்டங்களிலேயே அதுவொரு அருமையான காலகட்டமாகும். அதுவே மிக மோசமான காலகட்டமும் ஆகும்.” சார்லஸ் டெக்கன்ஸ் பிரெஞ்சு புரட்சியை குறித்து எழுதிய அவருடைய திகில் படைப்பான இரண்டு நகரங்களை பற்றிய ஒரு கதையில் (A Tale of Two Cities) எழுதிய பிரபலமான அந்த முதல்வரி தற்கால அமெரிக்காவிற்கு ஒரேமாதிரி மிக பொருத்தமாக பொருந்தி நிற்கிறது. அமெரிக்க மக்கள் தொகையின் ஒரு சிறிய அடுக்கு, வேர்சையின் மன்னர் பரிவாரத்தினர்  வெட்கப்படுமளவிற்கு எவ்வாறு சமூகத்தின் செல்வவளத்தை ஏகபோகமாக்கியது என்பது குறித்து சமீபத்திய பல அறிக்கைகள் ஆவணப்படுத்துகின்றன.

பொருளாதார கொள்கை ஆய்வகத்தால் மார்ச் 23இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, பொருளாதார "மீட்சி" "இரண்டு தடங்களில் நிகழ்ந்துள்ளது: ஒன்று, உயர் வேலைவாய்ப்பின்மை விகிதத்திற்கும், தொடர்ச்சியான வீட்டு ஏலங்களுக்கும் எதிராக தொடர்ந்து போராடி வரும் சராசரி குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியிலும், மற்றொன்று முதலீட்டாளர் வர்க்கம் மற்றும் செல்வந்தர்களின் தடத்திலும் நிகழ்ந்துள்ளது.“

டிசம்பர் 2007இல் இருந்து ஜூன் 2009 வரையில் உத்தியோகபூர்வமாக நீண்டிருந்த மந்தநிலை, மக்கள்தொகையில் அடிமட்டத்திலிருந்த 80 சதவீத மக்களுக்கு போகும் மொத்த குடும்ப செல்வவளம் (household wealth) 2.2 சதவீத புள்ளிகள் குறைந்து, 12.8 சதவீதத்தை எட்டியது. செல்வவளம்மிக்க 1 சதவீதம், இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச விகிதமாக, சராசரி குடும்பத்தின் மொத்த மதிப்பில் 225 மடங்கு உயர்வைக் கண்டது.

குடும்பங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு பூஜ்ஜிய அல்லது எதிர்மறை செல்வவளத்தை கொண்டுள்ளது. வீட்டுஉரிமையாளர்களின் பங்கு 2007இல் இருந்து 35 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் சேர்ந்து, வங்கியியல் துறை தற்போது நாட்டின் வீட்டுத்துறை பங்கின் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொருளியல்வாதி இமானுவேல் சாய்ஜால் சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2008இல் குடும்பங்களின் ஒரு சதவீதத்தில் நூறில் ஒரு பங்கில்-10,000இல் 1 பங்கு-முதலிடத்தில் இருப்பவர் ஒரு வீட்டுடைமைக்கு சுமார் $27 மில்லியனை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அடிமட்டத்திலிருக்கும் 90 சதவீதத்திற்கான சராசரி $31,244 ஆக இருந்த நிலையில், ஒரு சாதாரண தலைமை செயலதிகாரி பெறும் அளவில் 185இல் 1 பாகத்தைத் தான் ஒரு சராசரி தொழிலாளி சம்பாதிப்பதாக பெர்க்லே வெளிப்படுத்துகிறது.

காங்கிரஸ் வரவு-செலவு கணக்கு அறிக்கை அலுவலகத்தின் செய்திப்படி, 2007இல் சுமார் $2 மில்லியன் ஈட்டியிருந்த வருமானவரி செலுத்தும் முதல் 1 சதவீதத்தினர், வரிக்குப்பிந்தைய தேசிய வருமானத்தில் அவர்களின் பாகமாக, 1979ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால், சுமார் 130 சதவீத உயர்வைக் கண்டனர். அடிமட்டதிலிருக்கும் நான்கு கால்பகுதியினரும் 10 முதல் 30 சதவீதத்திற்கு இடையில் அவர்களின் பங்கு சரிந்திருப்பதைக் கண்டனர்.

பெரும்பாலான குடும்பங்களுக்கு செல்வவளம் தரும் முக்கிய மூலஆதாரமாக விளங்கும் வீட்டு சொத்துமதிப்புகளில் ஏற்பட்ட பேரழிவுமிக்க வீழ்ச்சிக்கு முன்னர், 2007ஆம் ஆண்டிலும், நாட்டின் குடும்பங்களின் செல்வவளத்தில் 34.6 சதவீதத்தை 1 சதவீதத்தினரே கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர். அதேவேளை அடிமட்டத்திலிருந்த 90 சதவீதத்தினர் 26.9 சதவீதத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

மூலதனத்தில் கார்ல் மார்க் குறிப்பிட்டதைப் போல, “ஒரு துருவத்தில் செல்வவளத்தின் திரட்சியும் அதேநேரத்தில் அதன் எதிர்துருவத்தில் ஏழ்மை, துன்பத்தின் மரண வேதனை, அடிமைத்தனம், அறியாமை, காட்டுமிராண்டித்தனம், உளவியல்ரீதியான சீரழிவும் உள்ளது,” என்றார். 21ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் அமெரிக்கா இவ்வாறு தான் உள்ளது.    

Food Research and Action Centerஆல் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, அமெரிக்காவிலுள்ள 44.2 மில்லியன் மக்கள், ஏழு நபர்களில் ஒருவர், ஜனவரியில் உணவுப்பொருள் உத்திரவாத திட்டத்தைச் சார்ந்திருந்தனர். இது ஓர் ஆண்டில் 4.7 மில்லியனைவிட அதிகமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி, 2010இல் அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் போதிய உணவைப் பெற போராட வேண்டியிருந்தது.

நான்கில் ஒரு அமெரிக்க குழுந்தை உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கிறது. மொத்தமாக இது 16 மில்லியனாகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் குழந்தைகள் வீடற்ற நிலைமை அனுபவிக்கின்றன. வெளியில் தெரியாமல் எத்தனையோ மில்லியன் கணக்கான குடிமக்கள் போதிய வெப்பம், வெளிச்சம் அல்லது சுகாதாரமான தண்ணீர் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒருபுறம் தொழிலாள வர்க்கத்தின் வறுமை பிரிவுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள்தொகையின் ஒரு சிறிய பகுதியினரால் சேர்க்கப்படும் செல்வவளத்தின் இந்த அளப்பரிய திரட்சியானது பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் என வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் வியாபித்துள்ளது. அரசியல் வட்டாரத்தில், அது நிதியியல் பிரபுத்துவத்தின் கரங்களில் செல்வவளத்தைக் கொண்டு திணிக்க, ஒட்டுமொத்த அரசியலமைப்புயாலும், அதாவது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி மற்றும் அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் அது அதன் உந்துதலில் அதனை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

ஆறு மாதங்களாக அல்லது அதற்கு மேலாக வேலையில்லாமல் இருக்கும் ஆறு மில்லியன் கணக்கான வேலைவாய்ப்பற்றோருக்கு எவ்வித அரசு வேலைவாய்ப்பு திட்டங்களையோ அல்லது அவசியமான நிவாரணங்களையோ அளிக்க ஜனாதிபதி ஒபாமா கைவிட்டுவிட்டார். டிசம்பரில், புஷ்-சகாப்தத்தின் செல்வந்தர்களுக்கான வருமானவரி வெட்டுக்கள் மற்றும் கோடீஸ்வரர்களுக்கான நிலச்சொத்துகளுக்கு வரிக்குறைப்புகளை நீடிக்கும் ஒரு சட்டத்தில் அவர் கையெழுத்திட்டார்.

அதேநேரத்தில், அவசியமான சமூக செலவினங்களை உறையச்செய்ய அவர் வலியுறுத்தி உள்ளதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு அரசுத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வுமுடக்கத்தை அறிவிக்கும் ஓர் உத்தரவிலும் நவம்பர் இறுதியில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து பெருநிறுவனங்களின் நெறிமுறைகளை இன்னும் தளர்த்தும் ஒரு திட்டமிட்ட முனைவும் அறிவிக்கப்பட்டது. இந்த முக்கிய நிகழ்வுபோக்கு, 2008 நிதியியல் பொறிவு மற்றும் 2010இல் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் எண்ணெய் கசிவு ஆகியவற்றிற்கு களம் அமைத்தது

இராணுவ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செலவுகள் மட்டுமே வரவு-செலவு திட்ட வெட்டிலிருந்து தப்பிக்கொண்டன. பெருநிறுவனங்களின் இலாபங்கள் மற்றும் ஏற்றுமதிகளை உயர்த்த கூலி வெட்டுக்களோடு சேர்ந்து, நிதியியல் சிக்கன நடவடிக்கைகள் "வேலை உருவாக்கத்திற்காக" என்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சி மற்றும் நெருக்கடி நிலைமைகளின்கீழ் "தனியார் துறைக்கும்" மற்றும் "கட்டுப்பாடற்ற சுதந்திர சந்தைக்கும்" ஒபாமாவின் அடிக்கடி வெளிப்படும் அறிவிப்புடன் கூடிய அர்பணிப்பு, 1930களின் பாரிய போராட்டங்களுக்கு முன்னர் மேலோங்கியிருந்த நிலைமைகளை நோக்கி தொழிலாளர்களின் கூலிகளையும், வாழ்க்கைத் தரங்களையும் ஒரு வரலாற்றுரீதியிலான திருப்பத்திற்குள் இழுத்துச் செல்கிறது. அந்த பாரிய போராட்டங்கள் தான், ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்காவை இன்று மலிவுக்கூலி தொழிலாளர்களின் சொர்க்கமாக மேலோங்க செய்திருக்கும் CIO தொழிற்துறை தொழிற்சங்கங்களை தோற்றுவித்தன.

தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதிலும், கூலிகள், நலன்கள் மற்றும் வேலைகளில் கொடூரமான வெட்டுக்களை இன்னும் அதிகமாக திணிப்பதிலும், இலாப அமைப்புமுறையை பாதுகாக்கும் இந்த தொழிற்சங்கங்கள், பெருநிறுவனங்களின் மற்றும் அரசாங்கத்தின் எடுபிடிகளாக மாறியுள்ளன.

இவை அனைத்தும் உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறையில் ஒரு புதிய அரங்கை அமைப்பதற்கான அஸ்திவாரத்தை தான் ஏற்படுத்தியுள்ளன. பற்றாக்குறையில்-சிக்கியுள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு நிதியியல் உதவிகளை வழங்குவதற்கு மறுத்ததன் மூலமாக, கல்வி, மருத்துவநலன் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளில் மாநில அரசாங்கங்கள் முன்னொருபோதும் இல்லாத வெட்டுக்களை செய்யவும், கூட்டு பேரம்பேசல் மற்றும் வேலைநிறுத்த உரிமை உட்பட தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒரு தாக்குதல் நடத்தவும் தந்திராபயத்தோடு ஒத்துழைத்து வருகிறது.

வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பில் ஒபாமாவின் கொள்கைகளை எடுத்துக்காட்டும் வகையில், பணக்காரர்களுக்கு வாய்ப்புகளை விரிவாக்குவதும், அவற்றைப் பாதுகாப்பதுமே அவருடைய ஜனநாயக கொள்கையின் ஒருமுகப்பட்ட கவனமாக உள்ளதுபெருமந்த நிலைமைக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான சமூக நெருக்கடிக்கு மத்தியில், பெருநிறுவன இலாபங்கள் 2010இல் சாதனைகளை எல்லாம் தூள்தூளாக்கின. அது ஓர் ஆண்டில் 36.8 சதவீத உயர்வுடன், $1.68 ட்ரில்லியனுக்கு எகிறியது. 2010இல் பங்குச்சந்தை அதன் மதிப்பில் $1 ட்ரில்லியனைக் கூட்டியது. மேலும் தலைமை செயலதிகாரிகளின் சம்பளங்களும், கொடுப்பனவுகளும் பொறிவுக்கு-முந்தைய ஆண்டுகளின் உயர்வுகளை எல்லாம் விட வெறுப்பேற்றும் விதத்தில் மிஞ்சியுள்ளது. ஹெட்ஜ் நிதியியல் நிர்வாகி ஜோன் போல்சனின் கடந்த ஆண்டு ஊக்கப்படி $5 பில்லியனாகும்.  

அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மையின் தடுமாறும் அளவைக் குறித்த புள்ளிவிபரங்களை பகுத்தாராய்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளியல்வாதி ஜோசப் ஸ்டிக்லிட்ஜ், ஒரு சமூக வெடிப்பு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்த ஆளும் வர்க்கத்திற்கு சமீபத்தில் எச்சரித்தார். Vanity Fair இதழில் ஒரு சதவீதத்தினரின், ஒரு சதவீதத்தினரால், ஒரு சதவீதத்தினருக்காக" (Of the 1%, by the 1%, for the 1%) என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் அவர் எழுதியது, “மக்கள் தாங்கள் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ள அரசியல், பொருளாதாரம், மற்றும் சமூக நிலைமைகளுக்கு எதிராக போராட மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் பேசிக்கொண்டிருப்பதை சமீபத்திய வாரங்கள் நாம் பார்த்து வருகிறோம். வீதிகளில் பேசப்படும் மக்களின் ஆழ்ந்த கருத்துக்களை நாம் மதிப்பிட்டுப் பார்த்தால், அமெரிக்காவில் எப்போதும் வரும்? என்ற ஒரேயொரு கேள்வியைத் தான் ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்வார்.”

விஸ்கான்சனின் சமீபத்திய நிகழ்வுகள் அமெரிக்காவில் பாரிய தொழிலாள வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய காலக்கட்டத்திற்கு முன்னறிவிப்பைக் காட்டுகிறது. ஆனால் விஸ்கான்சன் போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் மற்றும் அவர்களின் "இடது" கூட்டாளிகளின் சரணடைவானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்விக்கு தொழிலாள வர்க்கம் விலைகொடுக்க வேண்டுமென்ற ஆளும் வர்க்கத்தின் கோரிக்கையை நிராகரிப்பது மட்டுமின்றி, நல்ல சம்பளம், மருத்துவநலன்கள், கல்வி மற்றும் வீட்டுவசதி என தொழிலாளர்களின் சமூக உரிமைகளையும் கட்டியமைக்கும் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக அரசியல்ரீதியாக போராடும் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதும், ஜனநாயக கட்சியுடன் உடைத்துக் கொள்வதும் முற்றிலும் அவசியமாக மாற்றியுள்ளதேயே எடுத்துக்காட்டுகிறது.

இத்தகையதொரு முன்னோக்கை விவாதிக்க சோசலிச சமத்துவக் கட்சி, “சோசலிசத்திற்கான போராட்டம் இன்று" என்ற தலைப்பில் இந்த மாதம் ஒரு தொடர்ச்சியான கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. இது இவ்வாரம் மிச்சிகனில் அன் ஆர்பரில் இருந்து தொடங்குகிறது. உலக சோசலிச வலைத் தளம் அதன் வாசகர்களையும், ஆளும் வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக திருப்பிப் போராட வழிமுறையை எதிர்பார்த்திருக்கும் அனைவரையும் இதில் கலந்து கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறது.