World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Notes on the US social crisis

அமெரிக்க சமூக நெருக்கடி பற்றிய குறிப்புக்கள்

By Naomi Spencer 
4 August 2011

Back to screen version

ஏற்கனவே மாநிலங்கள் அளவில் பெரும் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள முக்கியமான சமூகநலத் திட்டங்களை மத்திய அரசின்  வரவுசெலவுத் திட்ட உடன்பாடு இலக்கு வைக்கிறது.

மின்னசோட்டா வேலையில்லாதோருக்கான காப்பீட்டுத் திட்டம் முடிவிற்கு வருகிறது

வேலையில்லாதோருக்கு நிதியுதவியளித்தல் மற்றும் பிற நிதி உதவி, உணவு உதவித் திட்டங்கள் ஆகியவற்றிற்கான மத்திய அரசின்  நிதியம் பெறுவதில் மாநிலங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும். மின்னிசோட்டாவில் ஆயிரக்கணக்கான வேலை தேடுவோர் அடுத்த சில மாதங்களில் தாங்கள் பெறுவரும் நலன்களை இழப்பதைக் காண்பர்

வேலையில்லாதோருக்கு கொடுக்கப்படும் காப்பீட்டுத் தொகை முடிவிற்கு வந்துவிடும் என்பது இப்பொழுதுள்ள நிலையில், இது உறுதிஎன்று மின்னிசோட்டாவின் வேலை மற்றும் பொருளாதாரத் துறையின் வழக்கறிஞ்ஞர் லீக் நெல்சன் புதன் கிழமை அன்று ஸ்டார் ரிபியூனிடம் தெரிவித்தார். இன்று நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால், 26 வாரங்களுக்குப் பின் உதவிவிரிவாக்கம் ஏதும் கிடையாது. தற்பொழுது வேலையில்லாதோருக்கான காப்பீட்டை நம்பியிருக்கும் கிட்டத்தட்ட 125,000 மின்னிசோட்டா வசிப்போர் (பலரும் நீண்ட கால வேலையின்மை பட்டியலில் இருக்கின்றனர் என்பது உட்பட) இதை நம்பி இருப்பவர்கள் ஆவர்.

வெப்ப அலைக்கு நடுவே அரசாங்க வீட்டுப்பாவனை உதவித் திட்டங்கள் வெட்டப்படுகின்றன

வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ள நிலை ஒருமாதத்திற்கும் மேலாக அன்றாடம் உள்ள நிலையில், வீட்டுப்பாவனை உதவித்திட்டத்தில் முற்றிலும் பணம் இல்லாமற் போய்விட்டது. ஆயிரக்கணக்கான ஏழைகள் வீடுகளுக்கான குளிர்சாதனக் கருவி இல்லாமல் இடருக்கு உட்படுவர். இதில் பலரும் பொது குளிரூட்டப்பட்ட மையங்கள் இல்லாத இடத்தில் வசிப்பவர்கள் ஆவர்.

அதிக வெப்பத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் வயதானவர்களும், மருத்துவத் தேவை உடையவர்களும் பாதிப்பு அடையக்கூடியவர்கள். ஜூன் மாத இறுதியில் இருந்து வெப்ப அலையினால் பல டஜன் இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது; வெப்பத்தாக்குதல், வெப்பக் களைப்பு ஆகியவற்றால் மருத்துவமனைகளில் நெருக்கடி உதவி அறைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இல்லிநோந்ஸில் ஆளுனர் பாட் க்வின்னுடைய ஜனநாயகக் கட்சி நிர்வாகம் கோடை குளிரூட்டும் உதவித் திட்டத்தை அகற்றிவிட்டது; இது 70,000 இல்லங்களுக்குப் பாதிப்பைக் கொடுத்துள்ளது. (1995ல் இருந்து வெப்பம் தொடர்பாக கிட்டத்தட்ட 750 சிக்காகோ வாழ்மக்கள் உயிரிழந்துள்ளனர்). இந்தியானாவில் குடியரசுக் கட்சியின் அரசாங்கம் புதிதாக எவருக்கும் இவ்வசதிக்கான நிதியை அளிப்பதை நிறுத்திவிட்டது. விஸ்கோன்சின் மாநிலத்தின் எரிசக்தித்துறை கூட்டாட்சியின் குறைந்த ஊதியம் பெறுவோருக்கான வீட்டு எரிசக்தி உதவித் திட்டத்திற்கு (LIHEAP) விண்ணப்பித்திருந்தவர்களின் 80% மனுக்களை நிராகரித்துவிட்டது. இவ்வாறான மோசமான நிலையை தான் பார்த்த்தில்லை  என எரிசக்தி பணிகள் துறையின் நிர்வாக இயக்குனர் டிமோதி ப்ரூவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் இதைத் தெரிவித்தார்.

மாநிலங்கள் அடுத்த ஆண்டு வீட்டுபாவனை உதவிக்கான மத்திய நிதிகள் பெறுவதை இன்னும் குறைவான நிலையில்தான் முகங்கொடுக்க நேரிடும். ஒபாமா நிர்வாகம் குறைந்த ஊதியம் பெறுவோருக்கான வீட்டு எரிசக்தி உதவித் திட்டத்தினை $4.7 பில்லியனில் இருந்து $2.5 பில்லியன் எனக் குறைக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அத்திட்டத்திற்கான தேவையோ வெடித்து எழுந்துள்ளது. 2008 பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து, குறைந்த ஊதியம் பெறுவோருக்கான வீட்டு எரிசக்தி உதவித் திட்ட விண்ணப்பங்கள் மூன்று மில்லியனுக்கு மேல் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு 9 மில்லியன் இல்லங்கள் விண்ணப்பித்துள்ளன.

இல்லிநோய் வறிய மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்குச் சென்று கொடுக்கப்படும் உணவைக் குறைக்கிறது

புதிதாக இயற்றப்பட்டுள்ள இல்லிநோய்ஸ் வரவு செலவுத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்குச்சென்று வழங்கும் உணவு மற்றும் சில பணிகளுக்கான நிதிகளில் $2.2 மில்லியன் குறைப்பும் அடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 40,000 குடிமக்கள் சராசரியாக வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை உணவை அரசாங்க நிதியுதவித் திட்டத்தின்கீழ் பெறுகின்றனர். இந்நிதியக் குறைப்பு, வழங்கப்படும் உணவுகளுக்கான செலவுகளில் 14% குறைப்பு என்பது 2,400 பேருக்கு கொடுக்கப்படும் 400,000 உணவுகளுக்குச் சமம் ஆகும்.

குக் பகுதியில் வயதானவர்களுக்கு உணவை வழங்கும் இலாப நோக்கு இல்லாத அமைப்பான சிக்காகோத் தளம் உடைய Age Options தன் பணிகளை 700 பேருக்குக் குறைக்க நேரிடும் என்று மதிப்பிட்டுள்ளது. இத்தகைய உதவியில்லாவிடின், பல வசிப்போர் மருத்துவமனைகளில் சேர்க்கும்படி நேரலாம் என்று அவர்களுக்காக வாதிடுபவர்கள் எச்சரித்துள்ளனர்.

சுகாதார சேவை வழங்குபவர்கள் ஏற்கனவே அரசாங்கம் நிதியளிப்பதில் பல மாதங்கள் தாமதம் ஆகும் நிலையில் சமூகத் தேவைகளை நிறைவு செய்யப் போராடி வருகின்றனர். இல்லிநோய்ஸ் கொடுப்போருக்கு கிட்டத்தட்ட $4 பில்லியனை பாக்கி வைத்துள்ளது.

ஜோர்ஜியா மாணவர்கள் கல்வி உதவித் தொகைத்திட்டம் பின்வாங்கப்படுவதாலும், உயர்ந்த பயிற்சிக் கட்டணங்களாலும் பாதிக்கப்படுகின்றனர்

ஜோர்ஜிய வரவு செலவுத் திட்டத்தில் HOPE உதவித்திட்ட நிதிக் குறைப்பு ஏற்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் முக்கியமாக குறைந்த வருமானம் உடைய மாணவர்களுக்கு (சராசரி பி தரம்3.0 மதிப்புப் புள்ளிதான் சராசரி) முழுப் பயிற்சிக் கட்டணத்தையும் ஒரு குலுக்கல் நிதித் திட்டத்தின் மூலம் அளித்து வந்தது. இப்பொழுது மாணவர்கள் உயர்ந்த சராசரி (3.7தரம் சராசரிப் புள்ளியில்) அல்லது அதைவிட அதிகமாகப் பெற்றால்தான் இவ்வுதவியைப் பெற முடியும்.

வசந்த காலத்தில் கல்வி நிதியுதவி வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதைக் காண்கின்றனர். இன்னும் எனக்கு $2,000 முதல் $3,000 வரை நிதி தேவைப்படுகிறது என்று ஜோர்ஜியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அனுமதிபெற்ற கமலா ஜோன்சன் அட்லான்டா ஜேர்னல்-கான்ஸ்டிடியூஷனிடம் தெரிவித்தார். ஜோன்சன் 3.4 gpa சராசரி புள்ளி பெற்றிருந்தார். வசந்த காலத்தில் அவருக்கு HOPE உதவித்திட்டத்தால் முழுக் கல்விக் கட்டணம் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழகங்களுக்கு கொடுக்கப்பட்டுவந்த நிதியத்தையும் ஜோர்ஜியா குறைத்துவிட்டது. இது பல்கலைக்கழக முறையில் சராசரி 9% உயர்வை பயிற்சிக் கட்டணத்தில் ஏற்படுத்திவிட்டது. இதன் விளைவாக பல மாணவர்கள் பெருமளவிற்கு மாணவர் கடன்திட்டத்திற்குச் செல்ல நேரிடும். தங்கள் பிரயத்தனத்தை படிப்பிற்கும் வேலைக்கும் இடையே பங்கிடவேண்டி நேரிடும்.

அடைமான உதவித் திட்டத்தை பென்சில்வேனியா அகற்றுகிறது

HEMAP எனப்பட்ட பென்சில்வேனிய வீட்டு உரிமையாளர் அவசரக்கால அடைமான உதவித் திட்டம் கடும் நிதிப் பற்றாக்குறையினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய வரவு செலவுத் திட்டத்தில் $2 மில்லியன் மட்டுமே HEMAP க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளில் இருந்து 80 சதவிகிதக் குறைப்பு என்பதைப் பிரதிபலிக்கிறது.

இத்திட்டம் 1980களின் தொடக்கத்தில் மாநிலத்தில் எஃகுத் தொழில்துறையின் சரிவினால் தூண்டப்பட்ட சமூக இடர்களை எதிர்கொள்ளும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது. பல ஆண்டுகளில் இது 45,000 இல்லங்களுக்கு குறுகிய காலக் கடன்களாக $10,000 சராசரியாக அளித்துள்ளது. இதைப் பெற்ற ஐந்தில் நான்கு பேர் தங்கள் வீடுகளையும் தக்க வைத்துக் கொண்டு கடன்களையும் திருப்பிக் கொடுக்க முடிந்தது என்று  பிலடெல்பியா இன்கொயரர்  அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஒப்புதல் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களைவிட தேவை எப்பொழுதுமே அதிகமாத்தான் இருந்தது. ஜூலை 2008க்கும் ஜூன் 2010க்கும் இடையே இத்திட்டம் 27,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்ற போது, அது 6,000 கடன்களை மட்டுமே வழங்க முடிந்தது என்று பென்சில்வேனியா வீட்டு நிதிய நிறுவனத் தகவல்கள் கூறுகின்றன. நிதி ஆண்டுகள 2009, 2010ல் இதுவரை இல்லாத அளவிற்குத் தேவை இருந்தது என்று நிறுவன அறிக்கைகள் கூறுகின்றன.

இத்திட்டம் முடிவிற்கு வந்துவிட்டது பற்றி குடியரசுக் கட்சியின் ஆளுனர் ரொம் கோர்பெட்டின் செய்தித்தொடர்பாளர், கடினமாக முடிவுகள் எடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம்என்று வெறுமே கூறினார்.

மீண்டும் உரிமை பெறப்பட்ட வீடுகளை வங்கிகள்  தகர்க்கின்றன

பெருகிய முறையில் வங்கிகள் ஏலத்திற்கு வந்த வீடுகளைத் தகர்த்துக் கொண்டிருக்கின்றன; அதுவும் வீட்டு மதிப்புக்கள் குறைந்து விட்ட பகுதிகளில். ஆகஸ்ட்             1ம் திகதி டைம் ஏடு க்ளீவ்லாந்து, ஓகையோவில் ஏலத்திற்கு வந்துவிட்ட 100 வீடுகளைத் தகர்க்கும் திட்டத்தை பாங் ஆப் அமெரிக்கா கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதற்குக் காரணம் அவை அதிகம் விற்பனையாகாத சொத்துக்கள், பலவும் நிறுவனச் செய்தித் தொடர்பாளர் கருத்துப்படி $10,000 க்கும் குறைவான மதிப்பைத்தான் கொண்டவை.

வங்கி ஏற்கனவே டெட்ரோயிட்டில் 100 வீடுகளையும் சிக்காகோவில் 150 வீடுகளையும் இதே வகையில் இடித்து விட்டு, ஆண்டு இறுதிக்குள் இன்னும் 9 நகரங்கள் இம்முறைப்படி இடித்துத் தள்ளும் திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளது.

பாங்க் ஆப் அமெரிக்காவும் Fannie Mae, Wells Fargo, JP Morgan ஆகியவை உள்ளடங்கிய நிதிய நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான சொத்துக்களை உள்ளூராட்சி அரசாங்கங்கள் அழிப்பதற்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டது. இதற்குக்காரணம் அதையொட்டி வரிகள் கட்ட வேண்டிய தேவை இல்லை, வீட்டுப் பராமரிப்புச் செலவுகளும் இனி கிடையாது என்பதுதான். உள்ளூரதிகாரிகள் இத்திட்டத்தை வரவேற்றுள்ளதற்குக் காரணம் புதுப்பித்தலை விரைவுபடுத்த முடியும் மற்றும் பொருளாதார சிக்கலுள்ள பகுதிகளில் நடைபெற வேண்டிய வேலைத்திட்டங்களை  குறைக்கலாம் என்பதாகும்.

நீதிமன்ற முறைகள் நூற்றுக்கணக்கானவர்களைப் பணி நீக்கம் செய்கின்றன; வறியோருக்கான சேவைகளைக் குறைக்கின்றன

அலபாமா மாநில நீதிமன்ற எழுத்தர் அலுவலகங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆகஸ்ட் 31 முதல் பணி நீக்கம் பெறுவர். மாநிலத்தில் மிக அதிக மக்கள் உள்ள ஜேபர்சன் பகுதியில் 48 எழுத்தர்கள் மட்டுமே 75,000 கோப்புக்களைக் கையாள்வதற்கான பொறுப்பை கொள்வர். ஆகஸ்ட் 1 தொடங்கி, மாநிலம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் தங்கள் பொது மக்களுக்கான நேரத்தை வாரத்திற்கு 10 மணி நேரம் குறைத்துவிடும். அக்காலத்தில் குறைந்துவிட்ட ஊழியர்கள் ஆவணப் பரிசீலனையை நடத்துவர்.

நியூயோர்க் நகர நீதிமன்ற அமைப்பு கிட்டத்தட்ட 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதன் விளைவாக சிறையிலுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீண்டகாலம் சிறு குற்றங்களான குப்பைபோடுதல் போன்றவற்றிற்காக வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோக்வில் பகுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பொதுச்செலவில் பொறுப்பேற்கும் வக்கீல் அலுவலகம் 62,000 மக்களைக் கொண்ட லோடி நகரில் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையினால் 2010 முதல் புது வழங்குகளை எடுத்துக் கொள்வதில்லை. இத்தகைய கடுமையான குறைப்புக்கள் இருந்துபோதிலும், அலுவலகம் தொடர்ந்து பணிநீக்கங்களை செய்கிறது. இதில் எட்டு ஊழியர்கள் அகற்றப்பட்டதும் அடங்கும். மொத்த வக்கீல்கள், எழுத்தாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் எண்ணிக்கை 63. இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 100 என்ற எண்ணிக்கையை விடக் குறைவாகும்.என்று பீட்டர் பாக்சின் அலுவலக இயக்குனர் லோடி நியஸ் சென்டினெல் இடம் தெரிவித்தார்.

பகுதியில் வக்கீல் அலுவலகமும் வரவுசெலவுத் திட்டத்தை ஒட்டி அதன் பணியாட்களில் 41% 2009ல் இருந்து இழந்துவிட்டது. நீதிமன்ற அலுவல் நேரங்களும் குறைக்கப்பட்டு விட்டன. கடந்த மாதம் மாநிலம் முழுவதும் உள்ள நீதிபதிகள் ஜனநாயகக் கட்சியின் ஆளுனர் ஜேரி பிரௌனுக்கு ஏற்படக்கூடிய மதிப்பிழப்பு பற்றி ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினர்: சான் ஜோக்வின் பகுதி அது பொதுமக்களுக்கு வழங்கி வரும் பணியின் தரத்தைத் தொடர முடியாது. இன்னும் நிதியக் குறைப்புக்களால் ஏற்படக்கூடிய மாற்றங்களால் முழு ட்ரேஸி நீதிமன்றக் கிளைகள் உட்பட மூடப்படல், லோடியில் ஒரு நீதிமன்றம் மூடப்படல் என்பவைஇதையொட்டி எஞ்சியிருக்கும் நீதிமன்றம் மட்டும்தான் சிறையில் உள்ள கைதிகள் பற்றி விசாரணை நடத்த முடியும்; சில வகை வழக்குகள் விசாரிக்கப்பட முடியாது. அதில் சிறுகுற்றங்கள் பற்றிய விசாரணை, மீன்பிடி, வேட்டை விவகாரங்கள், சில நேரம் பொதுஉரிமையியல் வழக்குகள்கூடஎன்று கூறப்பட்டுள்ளது.

பிளோரிடாவின் விரைவான பாரிய சிறைகள் தனியார்மயமாக்கப்படும் ஒப்பந்தம்

மியாமி ஹெரால்ட் புளோரிடா மாநிலத்திலேயே எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தனியார்மயமாக்கல் விரைவாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்று விவரித்துள்ள வகையில் மாநிலம் ஜனவரி 1, 2012 இற்குள் 30 சிறைகள், சாலை முகாம்கள் மற்றும் தனி பிணையைடுப்பினை கவனிக்கும் அலுவலகங்களை ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியை மேற்கொள்ள தவணை விதித்துள்ளது. சீர்திருத்தத் துறை ஏலம் எடுக்கும் நிறுவனங்களுக்கு அனைத்து (30) இடங்கையும் பார்க்குமாறும் தங்கள் தொகையை ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் தெரிவிக்குமாறும் ஓர் ஆவணத்தில் கூறியுள்ளது; இதையொட்டி ஆண்டு ஒன்றிற்கு 7% செலவுகள் குறையும் என்ற திட்டம் உள்ளது.

தனியார் சிறைகளில் நிலைமைகள் இகழ்வான வகையில் மிருகத்தன, செலவுக் குறைப்புத் தன்மை உடையதாக இருந்து நெரிசல், வன்முறை, அதிக டைபாய்ட், எலும்புருக்கி நோய்க்கான வாய்ப்புக்கள், மட்டமான ஊட்டச் சத்து, மருத்து வசதி இன்னும் பிற நோய்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். கிட்டத்தட்ட 100,000 கைதிகளைக் கொண்டுள்ள புளோரிடா பல சிறைச் சுகாதார பராமரிப்பு பணியாளர்களை கடந்த சில மாதங்களில் பணிநீக்கம் செய்துள்ளது.

நாட்டின் இரு மிகப் பெரிய தனியார் சிறை நடத்தும் Corrections Corp. of America மற்றும் GED Group ஆகியவை இந்த ஏலத்தில் பங்கு பெற உள்ளன. Corrections Corp இன் செயலர் எட்வின் பஸ் ஹெரால்டிடம் மாநிலம் இறுதியில் அனைத்துச் சிறைகளும் ஒரு தனியார் அதிகாரத்தின்கீழ் இருக்க வேண்டும் என விரும்புகிறது என்று கூறினார். “இதனால் நல்ல விலை கிடைக்கும். அதிக எண்ணிக்கையானோர் இருந்தால், நல்ல விலை. நாட்டில் தனியார் சிறைகளைப் பொறுத்த வரை இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் போட்டித்தன்மை கொண்ட ஏலமாக இது இருக்கும் என்று அவர் சேர்த்துக் கொண்டார்.