World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The bankers’ budget

வங்கிகளின் வரவு-செலவு திட்டம்

Jerry White
5 August 2011

Back to screen version

அமெரிக்கா அதன் அரசியல் தோற்றுவாயை, ஒரு பலம் பொருந்திய பிரபுத்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தில் கொண்டுள்ளது. இன்று, தொழிலாள வர்க்கமும் அத்தகைய ஒரு எதிரிக்கு குறைவில்லாத ஒன்றை, அதாவது தானே தோற்றுவித்த ஒரு நெருக்கடிக்கு அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பான்மை மக்களின் சமூக நிலைமைகளில் முன்னில்லாத அளவிற்கும் அதிகமாக காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை விடையிறுப்பாக காட்டும் ஓர் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் மேற்தட்டிற்கு முகங்கொடுக்கின்றது.

இந்த ஆளும் வர்க்கத்தின் தலைமையாக ஒபாமா நிர்வாகம் உள்ளது. சமீபத்திய வரவு-செலவு திட்ட உடன்படிக்கையின் வெட்டுக்களில் உள்ளடங்கி இருக்கும் $2.4 ட்ரில்லியன் ஒரு "முதல் படி" மட்டும் தான்; அது சுகாதாரதுறையிலிருந்து கல்வித்துறை வரையில் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான ஒரு வரலாற்றுரீதியிலான தாக்குதலின் ஒரு "முதல்கட்ட முற்பணம்" மட்டும் தான் என்று அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் அமைப்புமுறை ஆகியவற்றுடன் இணைந்து ஒட்டுமொத்தமாக ஒபாமா நிர்வாகம் வலியுறுத்துகிறது.

இந்த வரவு-செலவு வெட்டுக்களானது, அந்த கொள்கைக்கு இறுதியான முடிவு வழங்கிய விரல்விட்டு எண்ணக்கூடிய வங்கி செயலாளர்களின் நெருங்கிய மற்றும் தொடர்ச்சியான நெருக்கமான தொடர்பிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் காங்கிரஸ் வாக்கெடுப்பிற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் தலைமை இராணுவ தளபதி வில்லியம் டேலியும் (இவரே ஜேபிமோர்கன் சேஸில் ஒரு முன்னாள் நிர்வாக அதிகாரியாவர்) மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹனிவெல் போன்ற பிரதான நிறுவனங்களின் பெருநிறுவன செயலதிகாரிகள் மற்றும் வங்கிகளோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

அமெரிக்க செனட்டில் வாக்கெடுப்பு நடந்தபோது, அரசு கருவூலத்துறை செயலாளர் திமோதி கெய்த்னர், “இறுதி உடன்படிக்கை பற்றி  அவருக்கு கூறுமாறு" ஜேபிமோர்கன் சேஸிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜேமி டிமோனுக்கு அழைப்பு விடுத்ததாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது. டிமோனின் எதிர்ப்பு உடன்படிக்கையை உடைத்துவிடும் என்பதை கெய்த்னருக்கு நன்றாக தெரியும்.

ஒபாமாவின் தாராளவாத மற்றும் "இடது" அனுதாபிகள் இந்த வாரங்களின் நிகழ்வுகளின் போது அவருடைய நடவடிக்கைகளை விவரித்திருந்த வகையில், அவர் குடியரசு கட்சியினரின் "நிர்பந்தங்களுக்கு" விட்டுக்கொடுப்பதற்கு வெகுதூரத்தில் நின்று கொண்டு, தாம் வடிவமைத்த வரவு-செலவு திட்ட வெட்டு உடன்படிக்கையின் போது வங்கிகளின் ஒரு நேரடி பிரதிநிதியைப் போல செயல்பட்டார்.

எந்தவொரு விஷயத்தின் முடிவும் நிதியியல் பிரபுத்துவத்தால் முதலில் உறுதி செய்யப்பட்டால் ஒழிய அமெரிக்காவிலுள்ள இரண்டு அரசியல் கட்சிகளுமே எந்த முடிவும் எடுக்க முடியாது. 2008 பொறிவிலிருந்து தொடங்கி வோல்ஸ்ட்ரீட்டின் சூதாட்ட கடன்களை மூடிமறைக்க கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்க கருவூலத்தைக் காலி செய்த பின்னர், அதற்கு தொழிலாள வர்க்கத்தை விலைகொடுக்க செய்யும் அவருடைய திட்டத்திற்காக வங்கியாளர்களின் ஒப்புதலை ஒபாமா கோருகிறார்.

காங்கிரஸ் ஓர் உடன்படிக்கையை எட்ட தவறுமேயானால் பெரும் பிரச்சினை ஏற்படும் என ஒரு பகிரங்க கடிதத்தைப் பிரசுரித்த நிதியியல் துறையிலிருந்து வரும் அழுத்தங்கள், கடைசி நிமிட உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்த பல குடியரசு கட்சியினரையும் கூட வெளிப்படையாகவே உடன்பட செய்தது. எவ்வாறிருந்த போதினும், இதை செய்து முடித்த பின்னர், நிதியியல் மேற்தட்டு உடனடியாக தொழிலாள வர்க்கத்தின் மீது மிகவும் ஆழமான தாக்குதல்களுக்கு அழுத்தம் கொடுக்கத்தொடங்கியது.

கடன்-குறைப்பு முறைமைகளை காங்கிரஸ் விரைவாக கொண்டு வர தவறுமேயானால், கடன்கள் தரபட்டியலில் அமெரிக்க குறைந்த மதிப்பைப் பெறும் என்று கடன் தரப்படுத்தும் நிறுவனங்களான Moody’s மற்றும் Fitch எச்சரித்தன. இதற்கடுத்து கடந்த வாரம் Standard & Poor’s இன் எச்சரிக்கைகள் தொடர்ந்தன. நான்கு ட்ரில்லியன் டாலருக்கும் குறைவான வெட்டுக்களைக் கொண்டிருக்கும் எந்த உடன்படிக்கையும் அமெரிக்காவை அதன் கடன் பட்டியலில் சிக்கலுக்குள்ளாக்கும் என அது எச்சரித்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கடன் நெருக்கடியில் இரண்டுகட்ட பின்னடைவு குறித்த கவலைகள் இருந்தமையால், வியாழனன்று டோவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின் விற்பனை 512 புள்ளி குறைந்தது உட்பட, அது உலகளாவிய சந்தைகளை மூழ்கச் செய்யும் அபாயத்தை அளித்தது. நிதியியல் பகுப்பாய்வாளர்களும், ஊடக பண்டிதர்களும் ஒரு புதிய பிரசங்கத்தை உருவாக்கினர். நீண்டகாலமாக இருக்கும் உரிமை வழங்கும் திட்டங்களை வெட்ட வாஷிங்டனுக்கு "அரசியல் விருப்பம்" இல்லை என்ற கவலைகளானது, “சந்தை ஸ்திரமின்மையை" அதிகப்படுத்தியது என்பதே அது..

சந்தை புள்ளிகள் குறைந்தமை குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் தொடர்பு செயலாளர் ஜே கார்னே வியாழனன்று குறிப்பிடுகையில், அமெரிக்க அரசு வரவு-செலவு திட்டத்தை சமப்படுத்துவதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்ற ஓர் "உத்திரவாதமளிக்கும் செய்தியை உலகிற்கு" வரவு-செலவு திட்ட உடன்படிக்கை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

உண்மையில், புதிய வெட்டுக்கள் இன்னும் பொருளாதார நெருக்கடியை ஆழமடையவே செய்யும். அதேவேளை உணவுப்பொருள் முத்திரைவில்லைகள், வேலைவாய்ப்பின்மைக்கான உதவித்தொகை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை ஆகியவற்றில் செலவுகளைக் குறைப்பதென்பது முன்னிருந்ததையும் விட அதிகமாக வாழ்வாதாரத்திற்கு மிகவும் முக்கியமாக இருக்கும் திட்டங்களைக் கைகழுவிவிடும்.

உயர்ந்திருக்கும் அரசின் கடனில் இருக்கும் ஒவ்வொரு டாலரும் செலவினங்களில் ஒவ்வொரு டாலராக வெட்டுவதன் மூலம் ஈடுகட்டப்படும் என்ற முன்மாதிரியை ஒபாமா நிர்வாகம் இப்போது ஏற்படுத்தி உள்ளது. 2021 வரையில் இராணுவம் அல்லாத விருப்ப செலவுகளில் மூன்றில் ஒரு பங்கை வெட்டினாலும் கூட இதற்கு மாணவர் நல உதவிகள், உணவுப்பொருள் முத்திரைகள் மற்றும் ஏனைய திட்டங்களில் வெட்டுக்கள் செய்ய வேண்டியதிருக்கும், கடன் உச்சவரம்பை 6 ட்ரில்லியன் டாலராக உயர்த்த வேண்டியதிருக்கும் என Center on Budget and Policy Priorities அனுமானிக்கிறது.

கடன் உயர்வுகளையும், செலவின வெட்டுக்களையும் ஒவ்வொரு டாலராக ஈடுகட்டவதற்கு, “இறுதியில் இந்த பெரும் சமூகத்தின் (Great Society)பெரும்பகுதியையும், ஏன் புதிய உடன்பாட்டினையைம் (New Deal) இல்லாதொழிக்க வேண்டியதிருக்கும். மேலும் இந்த உடன்படிக்கை அதன்மூலம் வறுமை மற்றும் இழப்புகளில் பெரும் அதிகரிப்புக்கு வழிவகுக்கப்படும்என அது குறிப்பிட்டது.

மில்லியன் கணக்கானர்கள் வேலைவாய்ப்பின்றியும், வேலை கிடைப்பதற்கான ஒரு சாத்தியக்கூறும் கூட இல்லாமல் இருக்கையில், மத்திய மற்றும் மாநில அளவிலான அரசாங்கங்கள் வேலைவாய்ப்பற்றோர் நலன்களை வெட்ட நகர்கின்றன. மூன்று மில்லியன்களுக்கும் அதிகமான நீண்டகாலமாக வேலையின்றி இருக்கும் தொழிலாளர்களுக்கான மத்திய அரசு உதவிகளை நீடிப்பது, திட்டமிட்டு ஒபாமாவின் வரவு-செலவு திட்ட உடன்படிக்கையில் கைவிடப்பட்டுள்ளது. இவர்களின் ஒரே வருவாய் ஆதாரமும் 2012க்கு முன்னதாக காணாமல் போவதை இவர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்க விவசாயத்துறையால் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையின்படி, சமூக நெருக்கடியின் ஓர் அறிகுறியாக, உணவுமுத்திரைகளை வைத்திருக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு மே மாதம் அண்ணளவாக 45.8 மில்லியனாக அல்லது அமெரிக்க மக்கள்தொகையில் 15 சதவீதமாக உயர்ந்திருப்பதாக தெரிவித்தது. வேலைவாய்ப்பின்மை, கூலி வெட்டுக்கள் மற்றும் ஏனைய பொருளாதார காரணிகள் ஓர் ஆண்டிற்கு முன்னர் இருந்ததையும் விட 12 சதவீதம் அதிகமானோர் உணவுப்பொருள் அடையாளசீட்டுக்களைப் பயன்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 2009 மே மாதத்திலிருந்து இது 34 சதவீத உயர்வை எட்டியுள்ளது.

நுகர்பொருள் செலவுகள் மற்றும் சம்பளங்கள் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், செல்வந்தர்களுக்கான ஆடம்பர பொருட்களின் விற்பனையோ மந்தநிலைக்கு முந்தைய கட்டங்களை எட்டியுள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் வியாழனன்று அறிவித்தது. $1,650 பெறுமதியான Crème de la Mer முகப்பூச்சுகள், $2,495 பெறுமதியான Louboutin suede காலணிகள், $11,950 பெறுமதியான Gucci மேலணிகள், $200,000 பெறுமதியான Mercedes Benz வாகனங்கள் உட்பட ஆடம்பர பொருட்களின் விற்பனை ஜூலையில் 11.6 சதவீதம் உயர்ந்தததாகவும், இது ஓர் ஆண்டிற்கு முன்னர் இருந்ததை விட அதிகபட்ச மாத இலாபமாகும் என்றும் டைம்ஸ் அறிவித்தது.

இதுபோன்ற விசேஷ பொருட்கள் விற்பனை உயர்வு, முக்கியமாக, ஒபாமா நிர்வாகத்தின் பிணையெடுப்பு வங்கியாளர்களை முழுமை அடைய செய்து, தோற்றப்பாட்டளவில் செல்வந்தர்களுக்கு வட்டியில்லா கடன்களை அளித்த பின்னரும் ஏற்பட்ட பங்குச்சந்தை உயர்வின் விளைபொருளாக உள்ளது. இந்த வாரத்தில் சந்தையின் வீழ்ச்சிக்குப் பின்னரும் கூட, டோவ் ஜோன்ஸ் 2009இல் வீழ்ந்திருந்ததிலிருந்து 80 சதவீதம் உயர்வு பெற்றது.

நிதியியல் மேற்தட்டு முதலாளித்துவம் எனும் ஒரு பொருளாதார அமைப்புமுறைக்குத் தலைமை தாங்கியுள்ளது. அந்த அமைப்புமுறை ஒரேயொரு கோட்பாட்டிற்காகவே அர்பணிக்கப்பட்டுள்ளது: அதாவது, ஆளும் வர்க்கத்தின் செல்வவளத்தையும், வங்கிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாப்பது என்பதாகும்.

இந்த வாரத்தின் சம்பவங்கள், சர்வதேச தொழிலாள வர்க்கம் தாழ்ந்துசெல்வதற்கான சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறது என்பதையும், அதன் அடிப்படை சமூக உரிமைகளின் மீது தொடர்ந்து தாக்குதல்களை முகங்கொடுக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்துகிறது. வரவு-செலவு திட்ட வெட்டுக்களின் விளைவுகள் உணர தொடங்கியுள்ள நிலையிலும், முடிவில்லா பொருளாதார நெருக்கடியின் சுமையின் கீழ், தொழிலாள வர்க்கம் மீண்டும் போராட தொடங்கும்.

சோசலிச சமத்துவ கட்சி, பற்றாக்குறை-குறைப்பு மீதான உத்தியோகபூர்வ விவாதத்தின் ஒட்டுமொத்த கட்டுமானத்தையும் நிராகரிக்கிறது. சமூக திட்டங்களுக்கு நிதியளிக்க "பணமில்லை" என்ற முறையீடு, ஒரு பொய்யாகும். அமெரிக்காவிலுள்ள ஒரு சதவீத பணக்காரர்கள், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு, தேசிய செல்வவளத்தின் ஒரு பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறது.

பெருநிறுவன இலாபங்களும், தலைமை உயரதிகாரியின் சம்பளமும் ஏற்கனவே பொறிவுக்கு முந்தைய அளவுகளையும் தாண்டிவிட்டது. பணமின்மை என்பது பிரச்சினையல்ல, மாறாக ஓர் ஒட்டுண்ணித்தனமான மேற்தட்டிடம் பரந்த தனிப்பட்ட செல்வவளங்கள் திரள்வதற்கு, மனித தேவைகள் பகுத்தறிவற்ற மற்றும் சமூகரீதியிலான பேரழிவுமிக்க அடிபணிவு தான் பிரச்சினையாகும்.

இந்த நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பொறுப்பல்ல. “தியாகம்" செய்வதற்கான அனைத்து முறையீடுகளையும் நிராகரிக்கவும், வரவுசெலவுத்திட்ட வெட்டுக்கள் நிறுத்தவும் மற்றும் தங்களின் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும் தங்களின் பாரிய சமூகசக்தியை ஒன்று திரட்டவும் தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவ கட்சி அழைப்புவிடுக்கிறது.

இந்த நெருக்கடிக்கான எந்த தீர்மானமும், நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளங்களைக் கைப்பற்றுவதையும், பொருளாதார வாழ்வில் அதற்கிருக்கும் பிடியை உடைப்பதையும் தொடக்கப்புள்ளியாக கொண்டதிலிருந்து தான் எடுக்கப்பட வேண்டும்.

சமூக தேவையைப் பூர்த்தி செய்ய சமூகத்தை மறுக்கட்டுமானம் செய்வதென்பது பிரதான பொருளாதார சக்திகளின் மீது தொழிலாள வர்க்கம் கட்டுப்பாட்டை எடுக்காமல் சாத்தியமில்லை. வங்கிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களை, ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ், பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக மறுகட்டுமானம் செய்வதன் பாகமாக, அரசுக்கு சொந்தமான தொழில்துறைகளாக மாற்றுவதையே இது குறிக்கிறது.

இத்தகைய ஒரு திட்டத்தை ஓர் அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே எட்ட முடியும். ஜனநாயக கட்சியினர் மற்றும் அவர்களைப் போலவே குடியரசு கட்சியினரால் பாதுகாக்கப்படும் வங்கிகளின் அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசாங்கத்தால் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தயாரிக்கப்பட்டு வரும் கொடூரமான வெட்டுக்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த, தொழிலாள வர்க்கம் தீர்க்கமாக ஒபாமாவுடனும், இரண்டு பெருநிறுவன ஆதரவிலான கட்சிகளுடன் உடைத்துக் கொண்டு, சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தொழிலாளர்களும், இளைஞர்களும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து, அதை தொழிலாள வர்க்கத்திற்கான புதிய புரட்சிகர தலைமையாக கட்டியெழுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம்.