World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Democrats routed in Wisconsin recall elections

ஜனநாயகக் கட்சியினர் விஸ்கான்சின் மீள் அழைத்தல் தேர்தல்களில் படுதோல்வி

By Jerry White
11 August 2011

Back to screen version

அமெரிக்க மத்தியமேற்குப் பகுதியான விஸ்கான்சனில் செவ்வான்று வெளிவந்த மீள் அழைத்தல் தேர்தல் முடிவுகளில், ஆறில் நான்கை ஜனநாயகக் கட்சியினர் இழந்தனர்; இதையொட்டி மாநிலச் சட்டமன்றத்தின் மீதான கட்டுப்பாடு குடியரசுக் கட்சியை அடைந்தது. அடுத்த வாரம் வரவிருக்கும் மற்றொரு மீள் அழைத்தல் தேர்தல் இதுவும் ஜனநாயகக் கட்சியனரை இலக்கு கொள்கிறது இப்பொழுது 17-16 என்று உள்ள குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையை விரிவாக்கும்.

இந்த விளைவுகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி இடது அமைப்புக்கள் மீது இழிந்த உணர்வை வெளிப்படுத்துகின்றன; குடியரசுக் கட்சியின் கவர்னர் ஸ்காட் வாக்கருக்கு எதிராகக் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த எதிர்ப்புக்களை நிறுத்தின. பணியிட உரிமைகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் மீதான தாக்குதலை மீள் அழைக்கும் வாக்குகள் மூலம் நிறுத்திவிடலாம் என்று அவை கூறின.

வாக்கர் மற்றும் குடியரசுக் கட்சியனர் மீதான மக்கள் எதிர்ப்பு பரந்து இருக்கையில், ஜனநாயகக் கட்சியினரைதொழிலாளர்-சார்பு உடைய கட்சி என அளிக்க முயன்ற முயற்சி பயனற்றுப் போயிற்று; அதிலும் குறிப்பாக ஜனாதிபதி ஒபாமாவும் காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் கூட்டாட்சி மட்டத்தில் செலவுகளை ட்ரில்லியன் கணக்கில் குறைப்பதற்கு வாக்களித்த நிலையில். தொழிற்சங்கங்கள் பல மில்லியன் டாலர்களைச் செலவழித்தும், தாராளவாத வெளியீடுகளான நேஷன் இன்னும் பிற செய்தி ஊடகங்கள் தேர்தலக்கு முன்பு சில பகுதிகளில்ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புத் தரம் இருக்கும் என்று கணித்தும்கூட, ஜனநாயகக் கட்சியினர் மக்கள் ஆதரவைத் திரட்டுவதில் தோல்வியுற்றனர். 2008 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த 69 சதவிகிதத்துடனும், அதேபோல் கடந்த இலையுதிர்காலத்தில் கவர்னர் பதவிக்கான தேர்தல்களில் வாக்களித்த 50% உடனும் ஒப்பிடுகையில் வாக்குரிமை இருப்போரில் கிட்டத்தட்ட 43% தான் வாக்களிக்க வந்தனர்.

மத்திய விஸ்கான்சின் மற்றும் க்ரீன் பே பகுதியில் ஊதர் ஓல்சென் மற்றும் ரோபர்ட் கௌல்ஸும் தங்கள் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்ட இரு மாவட்டங்களில் வாக்குப் பதிவு இன்னும் குறைவாக வாக்களிக்கும் உரிமை பெற்றோரில் 39, 34 என்று முறையே இருந்தது.

இறுதியில், மீள் அழைத்தல் பிரச்சாரம் விஸ்கான்சினிலும், தேசிய அளவிலும் குடியரசுக் கட்சியினரின் உயர் செல்வாக்கிற்கு ஏற்றம் கொடுத்தது; இத்துடன் கூட அவர்களுடைய வலதுசாரி பெருநிறுவன ஆதரவாகளர்களுக்கும் ஏற்றம்தான்; ஏனெனில் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் மில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவழித்தனர். அடுத்த செவ்வாயன்று மற்றொரு மீள் அழைத்தல் வாக்குப் பதிவு நடைபெற இருக்கையில்இம்முறை மூன்று ஜனநாயகக் கட்சியனருக்குகுடியரசுக் கட்சியினர் மாநிலச் செட்ட மன்றத்தின் மீது கொள்ளும் கட்டுப்பாடு அவர்களுடைய விரிவாக்கம் அடையும் பெரும்பான்மையால் உறுதியாகும்.

ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும். மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் அடிப்படை மாற்றம் எதையும் காண்பதற்கு இல்லை. குடியரசுக் கட்சியனரைப் போலவே, அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் பொருளாதார நெருக்கடிக்குத் தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதுடன்,செல்வந்தர்களுக்கும் பிற பெருவணிகத்தின்வேலை தோற்றுவிக்கும் ஊக்கங்களுக்கும் வரி வெட்டுக்கள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

விஸ்கான்சினில் ஜனநாயகக் கட்சியினர் மாநில வரலாற்றில் மிக அதிகக் குறைப்புக்களைச் செய்துள்ளதாக பெருமை பேசினர்; இதில் பொது ஊழியர் நலன்கள் இன்னும் பல சலுகைகள், வாக்கரின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னோடி கவர்னர் ஜிம் டோயில் காலத்தில் செய்யப்பட்டவை.

மீள் அழைத்தல் தேர்தலுக்கு சற்று முன்னதாக Third Coast Digest  ல் கொடுத்த பேட்டி ஒன்றில் பின்னர் குடியரசுக் கட்சி பதவியில் இருக்கும் புறநகர் பில்வௌக்கி தொகுதியில் 54-46 % இடைவெளியில் தோற்ற ஜனநாயகக் கட்சியின் போட்டியாளர் சாண்டி பாஷ் “2009-2011 மாநில வரவு-செலவு திட்டத்தில் தன் பங்கினை சுட்டிக்காட்டினார். இதில் K-12 கல்விச் செலவு வெட்டுக்கள் உள்ளடங்கியிருந்தன. ஆனால் இரு ஆண்டுகளாக இருக்கும் $800 மில்லியன் அல்ல, $300 மில்லியன்தான் என்று அதன் வலைத் தளம் குறிப்பிட்டுள்ளது.

நாங்கள் வெட்டுக்கள் தேவை என்று அறிந்த உடனேயே, 5 முதல் 10 சதவிகிதத்திற்குச் செய்யப்பட வேண்டும் என்று கேட்டோம் என்று அவர் விளக்கினார். “ஆனால் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து 3% தான் குறைத்தோம்.”

பொதுத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை எதிர்ப்பதற்கு முற்றிலும் மாறாக, ஜனநாயகக் கட்சியினர் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய நலன்களில் தீவிரக் குறைப்பு வேண்டும் என்ற வாக்கரின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தனர்; இந்த நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களுக்கு ஆயிரக்கண்கான டாலர்கள் இழப்பைக் கொடுத்துள்ளது.

குடியரசுக் கட்சிக் கவர்னருடன் அவர்கள் கருத்து வேறுபாடு இக்குறைப்புக்களை எவ்வளவு சிறந்த முறையில் அடையலாம் என்பதுதான். தொழிற்சங்கக் கட்டணங்களை இயல்பாகக் கழித்தலுக்கு முற்றுப் புள்ளி வைத்து ஒவ்வொரு ஆண்டும் வாக்குகள் மீண்டும் சரிபார்த்தல் தேவை என்று வாக்கர் கருதியநிலையில், தொழிற்சங்கங்களை நிரந்தரமாக முடக்குவதற்குப் பதிலாக, ஜனநாயகக் கட்சியினர் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை செலவை வெட்டுவதற்கும் வரவு-செலவுத் திட்ட நெருக்கடியின் விலையை பொதுத் தொழிலாளர்களின் முதுகுகளில் சுமத்தவும் ஒரு முக்கியச் சொத்தாகக் கண்டனர்.

தொழிற்சங்கங்கள் வெகுஜன எதிர்ப்புக்களை நெரித்த வகையில் இதுதான் உண்மையாக நடந்தது. வாக்கரின் சட்டவரைவு செயல்படத் தொடங்குமுன், தொழிற்சங்கங்கள் டஜன் கணக்கில் ஒப்பந்த விரிவாக்கங்களில் கையெழுத்திட்டனர்; இவை ஆசிரியர்கள், செவிலியர்கள் இன்னும் பிற பொதுத்துறை ஊழியர்களின் வாழ்க்கைத் தரங்களையும் பணியிட உரிமைகளையும் அழித்துவிட்டன; அதே நேரத்தில் தொழிற்சங்க உறுப்பினர் கட்டணம் தொடர்ந்து கழிக்கப்படும் என்பது உத்தரவாதம் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே தொழிற்சங்கங்கள் வாக்கருக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கத்தை எதிர்த்து, தங்கள் உறுப்பினர்கள்மீது சுமத்தப்படும் வெட்டுகளுக்கு குடியரசுக் கட்சிக் கவர்னருக்கு ஒத்துழைப்புக் கொடுக்கத்தான் முற்பட்டனர்.

வாக்கரின்வரவு-செலவு திட்ட பழுது நீக்குதல் சட்டவரைவு கடந்த பெப்ருவரி மாதம் அறிவிக்கப்பட்டபின் அவை பெயரளவு எதிர்ப்புக்களுக்குத்தான் அழைப்பு விடுத்தனர். ஆனால் வெகுஜன எதிர்ப்பு பெரிதும் தோற்றிவிக்கப்பட்டதால், WEAC எனப்படும் விஸ்கான்சின் கல்விச் சங்கம் மற்றும் AFSCME எனப்படும்  மாநிலம், வட்டாரம் மற்றும் முனிசிபல் ஊழியர்களின் அமெரிக்கக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தும்  அது மீறத் தலைப்பட்டது. பள்ளி மாணவர்கள் வெளிநடப்புச் செய்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆசிரியர்களின் பணிப் போராட்டம் நடைபெற்றது மாடிசனில் காபிடோல் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 100,000 பேர் பங்கு பெற்ற வெகுஜன எதிர்ப்புக்கள் பெப்ருவரி நடுப்பகுதியில் இருந்து மார்ச் நடுப்பகுதி வரை நடத்தன.

கூட்டாகப் பேரம் பேசும் உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்த நேரத்தில்தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்களைக் காக்கும் உரிமை என்று அவர்கள் பொருள் கொள்ளவில்லை, மாறாக கட்டணப் பாக்கியைப் பெறுதல், இன்னும் பல தொழிற்சங்க அமைப்புக்களின் குறுகிய நிறுவனக் கருவிகளின் நலன்களைக் காத்தல் என்று கருதினர்--

குடியரசுக் கட்சியினர் ஒருதலைப்பட்சமாக மார்ச் 9ல் தொழிலாளர் விரோதச் சட்டத்தை சுமத்தியபின் ஒரு பொது வேலைநிறுத்தம் தேவை என்னும் மக்கள் உணர்வு வெடித்தபின், ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து உழைத்த தொழிற்சங்கங்கள் விரைவில் செயல்பட்டு எதிர்ப்புக்களைத் திசை திருப்பி அவற்றை பயனற்ற திருப்பி அழைக்கும் பிரச்சாரமாக மாற்றின.

சட்ட மன்றம் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சில மணி நேரங்களுக்குப் பின் விஸ்கான்சின் AFL-CIO மற்றும் ஜனநாயகக் கட்சியினரும் காபிடோக்கு வெளியே அணிவகுப்பை ஏற்பாடு செய்தனர். வாக்கருக்கு எதிரான தீவிர நடவடிக்கையை தொழிலாளர்கள் எடுப்பதில் இருந்து தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் ஜனநாயக கட்சியின் மாநிலப் பிரதிநிதியான பீட்டர் பர்க்கா அவர்கள்உயர்ந்த அற நிலைப்பாடு கொள்ள வேண்டும்”, “வாக்குப் பெட்டிகள் மூலம் சாதிக்க வேண்டும் என்று திசைதிருப்பினார். தொழிலாளர்களின்கண்களிலுள்ள தீப்பொறி ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிக்க மக்களைத் திரட்டுவதில் காட்டப்பட வேண்டும் என்றார்.

தாங்கள் ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சியனரின் அவமானகரமான தோல்வியையும் தைரியமாக முகங்கொடுக்கும் முயற்சியில் WEAC தலைவர் மேரி பெல் குடிசரசுக் கட்சியனருக்கு இரு செனட் தொகுதிகள்ஆதரவு மாறிவிட்டதை பாராட்டும் வகையில் கூறினார்: “வரலாற்றுத்தன்மை உடைய மீள் அழைத்தல் தேர்தல்கள் விஸ்கான்சினின் மதிப்புக்களை பிரதிபலிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் இயக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்றும்ஸ்காட் வாக்கரின் தலைமை மற்றும் தீவிர செயற்பட்டியலின்கீழ் மாநிலம் எங்கு செல்கிறது என்பது பற்றிய பெரும் திகைப்பையும் வெளிப்படுத்துகின்றன என்றார்.

அடுத்த ஆண்டு குடியரசுக் கவர்னர் பற்றியும் மீள் அழைக்கும் தேர்தல் விரிவாக்கப்படுவதற்கான பிரச்சினை தேவை என்று அழைப்புக் கொடுத்த நேஷனின் கட்டுரையாளர் ஜோன் நிக்கோல்ஸ் தன் வாசகர்களுக்கு குடியரசுக் கட்சியினரின் ஒரு வாக்குப் பெரும்பான்மை மாநிலச் சட்டமன்றத்தில் 17-16 தொழிலாளர் சார்பாக மாறக்கூடும் என்று தன் வாசகர்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முயன்றுள்ளார்.

இதற்குக் காரணம் ஒரு குடியரசு செனட்டர், டேல் ஷ்லட்ஸ் கூட்டுப் பேரத்திற்கு கவர்னரின் தாக்குதலுக்கு எதிராக வாக்களித்தார் என்று நிக்கோல்ஸ் கூறினார்; ஜனநாயகக் கட்சியினருடன் உழைத்து அவர் தொழிலாள்ர்கள், கல்வி, பொதுப் பணிப் பிரச்சினைகளில் சமச்சீர் தன்மையைக் கொண்டுவர முடியும் என்றும் இவ்விஷயத்தில் ஷ்லட்ஸ் தன் சக குடியரசுக் கட்சியினரிடம் இருந்து வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளார் என்றார்.

ஷ்லட்ஸ், “ஒரு எதிர்ப்பாளர், பொதுப் பள்ளிகள் தனியார்மயமாவதைத் தடுக்கும் திறனுடையவர், தன் கட்சியை அடக்கக் கூடியவர் என்று Democracy Now என்பதில் நிக்கோல்ஸ் எழுதியுள்ளார்.

நிக்கோல்ஸ், தொழிற்சங்கங்கள், அவற்றின் போலி இடது ஆதரவாளர்கள் ஆகியோர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மாபெரும் மோசடியில்தான் தொடர்ந்து உள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் திறமையுடன் அடக்கப் பாடுபட்டபின், இப்பொழுது அவர்கள் மீள் அழைத்தல் பிரச்சாரத்தை 2012ல் ஜனாநாயகக்  கட்சிக்கு வாக்களிக்கும் பிரச்சாரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அமைப்புக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்துள்ள காரணம் அவை வேலைகள் தகர்ப்பு, வாழ்க்கைத் தர அழிப்பு என்று தொழிலாள வர்க்கம் முகங்கொடுப்பவற்றால் நேரடி இலாபங்களைப் பெறும் சலுகை பெற்றுள்ள மத்தியதர வர்க்கத்தின் உயரடுக்கின் சார்பில் பேசுகின்றன.

இந்த முழு அனுபவமும் தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படைச் சமூக உரிமைகளை தொழிற்சங்கங்கள் மற்றும் பெறுநிறுவன ஆதரவு கொண்ட ஜனநாயக வாதிகளிடம் இருந்து முறித்துக் கொண்டு சமூகத்தை சோசலிச மறு கட்டமைப்பிற்காக போராடக்கூடிய பரந்த அரசியல் கட்சியை நிறுவுவதின் மூலம்தான் காக்கமுடியும் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.