World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

“A Third World in our own backyard”

US child homelessness soars

“நம் சொந்த வீட்டின் பின்புறத்திலேய ஒரு மூன்றாம் உலகம்

அமெரிக்காவில் வீடற்ற குழந்தைகள் எண்ணிக்கை பெரிதும் உயர்கிறது

By Barry Grey
15 December 2011
Back to screen version

செவ்வாயன்று வீடற்ற குடும்பங்கள் பற்றிய தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி, அமெரிக்காவில் 1.6 மில்லியன் அல்லது 45 இற்கு 1 குழந்தை வீடற்று உள்ளன எனத் தெரிகிறது.

மாசச்சுஸட்ஸ் தளத்தைக் கொண்ட ஆதரவான குழு ஒன்று நடத்திய மதிப்பீடு, 2007ல் இருந்து 2010க்குள் வீடுகளற்ற குழந்தைகளின் சதவிகிதம் 38% உயர்ந்துள்ளது. தெருக்களில், வீடற்றவர்களுக்கான  பாதுகாப்பிடங்கள் அல்லது தெருவிடுதிகளில் வசிக்கும் குழந்தைகள் அல்லது மற்ற குடும்பங்களுடன் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்காகிவிட்டது என்றும் அவை முடிவுரையாக கூறுகிறது.

குடும்ப வீடின்மைக்கான தேசிய நிலையத்தின் (National Center on Family Homelessness) ன் தலைவர், நிறுவனரும் ஹார்வர்ட் மருத்துவ உயர்கல்விக்கூடத்தில் உளவியல் இணைப் பேராசிரியருமான எலென் சூக் உலக சோசலிச வலைத் தளத்திடம் இந்த எண்ணிக்கைநம் சொந்த வீட்டின் பின்புறத்திலேய ஒரு மூன்றாம் உலகம் என்பதைக் காட்டுகிறது எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மிக இளவயதில் ஒதுக்கப்பட்டவர்கள் —2010” என்னும் தலைப்பில் உள்ள 124 பக்க அறிக்கையின் ஏனைய முக்கிய கண்டுபிடிப்புக்கள் பின்வருமாறு உள்ளன:

* ஓராண்டில் 1.6 மில்லியன் வீடுகளற்ற குழந்தைகள் என்பது ஒவ்வொரு வாரமும் 30,000 குழந்தைகள் வீடுகளற்ற நிலையில், நாளொன்றுக்கு 4,400 குழந்தைகள் வீடிழந்த நிலையில் உள்ளன என்பற்கு சமமாகும்.

* வீடுகளற்ற நிலையை அனுபவிக்கும் குழந்தைகள் பசி, வறிய உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியம், இழக்கப்பட்டுவிட்ட கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றால் வாடுகின்றன.

* இக்குழந்தைகளில் பெரும்பாலானவை கணக்கிலும், வாசிப்பதிலும் மிகக் குறைந்த திறமையைத்தான் கொண்டுள்ளன.

* 2007 முதல் 2010 வரையிலான காலத்தில் ஐந்து மாநிலங்கள்தான் வீடிழந்த குழந்தைகள் எண்ணிக்கையில் குறைவு குறித்துத் தெரிவித்துள்ளன. 25 மாநிலங்கள் இந்த எண்ணிக்கை இருமடங்கு ஆகிவிட்டது என்று தகவல் கொடுத்துள்ளன.

ஒபாமா நிர்வாகம் மற்றும் இரு பெருவணிகக் கட்சிகளின் பெருநிறுவனக் கொள்கைகள் மற்றும் பரந்த வேலையின்மையில் இருந்து அமெரிக்காவில் விளைந்துள்ள சமூகப் பேரழிவை ஆவணப்படுத்தும் தொடர்ச்சியான ஆய்வுகளில் இந்த அறிக்கை மிகச் சமீபத்தியது ஆகும். இந்த மாதம் முன்னதாக ரட்ஜேர்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்று ஆகஸ்ட் 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரை வேலை இழந்தவர்களில் 22சதவிகிதத்தினர்தான் ஆகஸ்ட் 2011ல் முழு நேர வேலைபார்த்தனர் என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வின் ஆரம்பத்தில் தொடர்பு கொள்ளப்பட்டவர்களில் 7% பேர்தான் தங்கள் முந்தைய வருமானத் தரத்தை மீட்க முடிந்தது.

கடந்த மாதம் புள்ளிவிவர அலுவலகம் அமெரிக்காவில் வறுமையைப் புதிய முறையில் அளந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது அது வறிய மக்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீட்டை 49 மில்லியன் என்று கூட்டியுள்ளது.

ஒரு புறத்தில் வறுமையின் வளர்ச்சியுடன், மறுபுறமோ இன்னும் கூடுதலான செல்வக்குவிப்பு நிதியப் பிரபுத்துவத்தான் அடையப்பட்டுள்ளதுடன் இணைந்து வந்துள்ளது. அக்டோபர் மாதம் காங்கிரசின் வரவு-செலவுத்திட்ட அலுவலகம் அமெரிக்க இலாபங்களில் மிகச் செல்வக்கொழிப்பு உடைய 1 சதவிகிதத்தினர் தங்கள் வருமானஙக்களை 1979ல் இருந்து 2007க்குள் கிட்டத்தட்ட மும்மடங்காக்கியுள்ளனர் என்றும் தேசிய வருமானத்தில் தங்கள் பங்கை இருமடங்காக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

2012 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் முறையாகத் தொடங்கிவிட்ட நிலையில், போட்டியாளர்களின் அறிக்கைகள் எதில் இருந்தும் நாடு ஆழ்ந்த மந்தநிலையில் தள்ளப்பட்டுள்ளது, மந்தநிலை வறியவர்கள், வீடற்றவர்களின் எண்ணிக்கையை மிக அதிகமாக அதிகரித்துள்ளது என்பதைப் பற்றி எந்தக் குறிப்பையும் காண்பதற்கில்லை.

வீடுகள் இல்லாதவர்கள் பற்றி அளவையை நடத்திய ஆய்வாளர்கள் வீடற்ற குழந்தைகள் குறித்துக் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை குறைவானதாகக் கூ இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஏனெனில் தகவல் சேகரிப்பு முறைகள் கலிபோர்னியாவில் மாற்றப்பட்டுவிட்டனஅந்த மாநிலத்தின் மொத்தத்தை இது ஓராண்டில், 2009ல் இருந்து 2010க்குள், கிட்டத்தட்ட 163,000 ஐக் குறைத்துள்ளது. முந்தைய மூன்று ஆண்டுகளில் கலிபோர்னியா நாட்டின் மொத்த வீடற்ற குழந்தைகளில் எண்ணிக்கையில் 25%க்கும் மேல் கொண்டிருந்தது.

மனிதனாலே செய்யப்பட்ட பேரழிவே வீடுகள் மற்றும் 2007-08 நிதியச் சரிவுகள் ஆகியவற்றின் பாதிப்பு என்று அறிக்கை அழைத்துள்ளதை, அது காத்ரினா மற்றும் ரீடாவில் 2005ல் நிகழ்ந்த இயற்கைப் பேரழிவுடன் ஒப்பிட்டுள்ளது. சூறாவளிகளை தொடர்ந்து வீடிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2006ல் 1.5 மில்லியன் அல்லது 50ல் ஒருவர் என்று உயர்ந்தது. 2007ல் புயலால் பேரழிவிற்கு உட்பட்ட வளைகுடாப்பகுதியில் இருந்து மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் குடியபெயர்ந்து மறுவாழ்வு பெற்ற நிலையில், வீடிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 385,000 அல்லது 25% எனக் குறைந்துவிட்டது. அந்த ஆண்டில் வீடிழந்த குழந்தைகளின் விகிதம் 63-1 எனக் குறைந்தது.

ஆனால் 2007ம் ஆண்டில் இருந்து வீடிழந்த குழந்தைகள் மொத்தத்தொகை இன்னும் அதிகமாக 60,000 என உயர்ந்து 2005 சூறாவளிகளின்போது அடையப்பட்ட தரத்தையும்விட உயர்ந்தது.

அமெரிக்காவின் மிக இளமையான ஒதுக்கப்பட்டவர்கள் 2010” என்னும் ஆய்வு மாநில வாரியான அடிப்படையில் புள்ளிவிவரங்களைத் தொகுத்துள்ளது; பள்ளி மாவட்டங்கள் சேகரித்த தகவல்களை இது பயன்படுத்தியுள்ளது. வீடிழந்த குழந்தைகள் மிக அதிகமாக உள்ள நிலை என்பதைக் கொண்ட மாநிலங்களில் அதிக மக்கட்தொகை உள்ள நியூயோர்க், கலிபோர்னியா ஆகியவை இருப்பதுடன், சிறிய மாநிலங்களான உத்தா, நியூ மெக்சிகோ, அரிசோனா, அலாஸ்கா, லூயிசியானா, கென்டக்கி மற்றும் ஒரேகானும் உள்ளன. வீடிழந்த குழந்தைகள் அபாயம் மிகஅதிகமாக உள்ளவை எனப் பட்டியல் இடப்பட்டுள்ள நாடுகள் முக்கியமாக தெற்கிலும் தென்மேற்கிலும் உள்ளன. இவற்றில் டெக்சாஸ், அர்கன்சாஸ், புளோரிடா, அலபாமா, லூயிசியான, மிசிசிபி, தென் கரோலினா, ஜோர்ஜியா மற்றும் அரிசோனா ஆகியவை அடங்கும்.

செவ்வாயன்று ஒரு தொலைபேசிவழிப் பேட்டியில், நிறுவனத்தின் தலைவரான எலென் சூக் கூறினார்: “நாம் காண்பது வீடற்ற  குழந்தைகளின் எண்ணிக்கை பெருகியிருப்பது ஆகும். இது 2007ல் தொடங்கி இப்பொழுது வரை எனக் கணக்கிடலாம். இது குறிப்பாக செல்வ ளம் உடைய நமது நாடு போன்றதில் உளைச்சல் கொடுக்கும் சித்திரத்தைத்தான் கொடுக்கிறது,.

இவர்கள் மிக வறிய குடும்பங்களில் இருந்து அதிக வாய்ப்புக்கள் இல்லாத தன்மையில் உள்ளனர். குழந்தைகள் பெரும் மன அதிரச்சிக்கு உட்பட்டுள்ளன. இவற்றின் விளைவுகள் மோசமாக இருக்கும். பலரும் உயர்நிலைப்பள்ளிக் கல்வியைக்கூட முடிப்பது இல்லை. இது வருந்தத்தக்க நிலை ஆகும்.

இக்குடும்பங்களின் பெரும்பாலனவை மகளிர் தலைமையில்தான் உள்ளன. பல குழந்தைகளும் ஆறு வயதிற்கு உட்பட்டவை. வாழவும், வளரவும் உரிய வாய்ப்புக்கள் இல்லாத ஒரு முழுத் தலைமுறைக் குழந்தைகளைப் பற்றி நாம் கூறிக்கொண்டிருக்கிறோம்.”

வீடுகள் இழப்பின் பாதிப்பு குழந்தைகள் மேல் இருப்பது குறித்து விவரித்த சூக் கூறினார்: “இது குழந்தைகளுக்குப் பெரும் மன அதிர்ச்சி, உளைச்சலைத் தரும் அனுபவம் ஆகும். அவர்கள் தங்கள் நண்பர்கள், வளர்ப்புப் பிராணிகள், உடைமைகள், அவர்களுடைய வாடிக்கையான அன்றாட வாழ்க்கை ஆகியவற்றை இழக்கின்றன. அதிக குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடிய பாதுகாப்பு இடங்களில் வாழ நேரிடுகிறது. முழுக் குடும்பங்கள் ஓர் அறையில் வசிக்கின்றன.

இந்த மக்கட்தொகுப்பில் ஏராளமான சிறுவர்கள் பட்டினி கிடக்கின்றனர். இவ்வாறான நிலையில் பள்ளிக்குச் செல்லுவது, கவனம் செலுத்துவது என்பது மிகக் கடினம்.”

வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களின் தாக்கம் குறித்துக் கேட்கப்பட்டபோது, கூட்டாட்சி வீடு, நகர்ப்புற வளர்ச்சித் துறை (HUD) என்பதுதர அடிப்படையில் நிதி கொடுப்பது என்று அவர் குறிப்பிட்டார்; அதாவது அதன் நிதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகப்படுத்தப்படவில்லை. “எனவே வீடிழந்த குடும்பங்கள் பெருகியுள்ளதை அது எதிர்கொள்ள முடியாது.” குறைந்த வருவாய்க் குடும்ப குழந்தைகளுக்கு மிக முக்கியமான SNAP எனப்படும் கூட்டாட்சி உணவு வழங்கும் திட்டம் மற்றும் Head Start ஆகியவற்றிற்கும் அச்சுறுத்தல்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இக்குடும்பங்களுக்கு உதவும் திட்டங்களில் வெட்டுக்கள் கூடாது என்பதை நாம் அறிவோம். ஆனால் நாங்கள் இப்பொழுதுள்ள பல திட்டங்களை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளோம், இந்த முக்கிய திட்டங்கள் இன்னும் வெட்டுக்களை சந்திக்காது என்ற நம்பிக்கையில்.” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

மற்றொரு உதாரணம் குழந்தைகள் பாதுகாப்பு உரிமச் சீட்டுக்கள். இக்குடும்பங்களுக்கு உதவுவதற்கு போதிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமச் சாட்டுக்கள் இல்லை. பல இளம் குழந்தைகளைக் கொண்ட தாயார் எப்படி வேலைக்குப் போக முடியும், அல்லது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும், அல்லது வாழக்கூடிய ஊதியத்தைச் சம்பாதிப்பதற்குத் தேவையான திறைமைகளை அவர் பயில முடியும்? அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள், வேலைப் பயிற்சிகள் தேவை; அப்பொழுதுதான் வாழக்கூடிய வகையில் ஊதியத்தை ஈட்டமுடியும்.”

இப்பொழுது அனைத்துமே வெட்டு மேடையில்தான் உள்ளன. மிகப் பெரிய வீடுகள் தொடர்புடைய வெட்டுக்கள் வரவுள்ளன. இத்துறையில் வேலை செய்யும் நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.”

ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை குறித்து அவர் ஏமாற்றம் கொண்டுள்ளாரா என வினவப்பட்டதற்கு, அவர் 2009ம் ஆண்டுகதவுகள் திறக்கப்படல்” (“Opening Doors”) என்னும் அறிக்கையை சுட்டிக்காட்டினார்; இது நிர்வாகத்தின் வீடிழந்த நிலை பற்றிய இடைத்தொடர்புக் குழுவினால் வெளியிடப்பட்டது. “பத்து ஆண்டுகளுக்குள் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் வீடற்ற நிலையில் இருப்பது முடிவிற்குக் கொண்டவரப்படும், மற்ற வீடற்ற தன்மை நிலைமை ஐந்து ஆண்டுகளுக்குள் முடிவிற்கு வரும் என்ற உறுதிப்பாட்டை அறிக்கை கூறியது. ஏதேனும் நாம் காண்கிறோம் என்றால், அது எண்ணிக்கையில் மிகப் பெரிய அதிகரிப்பைத்தான். மாறான திசையில் பலதும் நடக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஆனால் இவை மிக நீண்ட, கடினமான நான்கு ஆண்டுகள்.”