World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

EU summit prepares new attacks on the working class

ஐரோப்பிய உச்சிமாநாடு தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய தாக்குதல்களுக்கு தயாரிப்புச் செய்கின்றது

Peter Schwarz
9 December 2011
Back to screen version

வியாழன் அன்று மாலையில் பிரஸ்ஸல்ஸில் தொடங்கிய சமீபத்திய ஐரோப்பிய உச்சிமாநாட்டின்மீது மீண்டும் பெரும் எதிர்பார்ப்புக்கள் இருந்தன. ஜேர்மனிய ஏடான Die Zeit கருத்துப்படி இக்கூட்டம்ஐரோப்பிய விதியை நிர்ணயிக்கும் நாள் எனக் கருதப்பட்டது. இந்த வார ஏடுஐரோப்பாவின் வருங்காலம் என்னும் மிகப் பெரிய பிரச்சினை பணயத்தில் உள்ளது என்று கூறியது.

ஓராண்டு காலமாக யூரோவை ஸ்திரப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையும் நிதியச் சந்தகளின் புதிய தாக்குதலை சந்தித்தது என்ற நிலையில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. ஸ்பெயின், இத்தாலி போன்ற பெரிய நாடுகள் கூட இப்பொழுது தங்கள் கடன்களுக்கு உரிய வட்டிகளைச் செலுத்த முடியவில்லை. இந்த வாரம் தரம் நிர்ணயிக்கும் Standard & Poor's உச்சிமாநாட்டில் பங்கு பெறும் நாடுகள் அச்சுறுத்தும் வகையில் யூரோப்பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் கடன் தர மதிப்புக்களைக் குறைத்துவிடப் போவதாக அச்சுறுத்தியது. பல பொருளாதார வல்லுனர்களும் அரசியல்வாதிகளும் யூரோ சரிவு என்பது நடக்காதது என்று இப்பொழுது கூறவில்லை; அதன் சரிவு பேரழிவுதரும் பொருளாதார, அரசியல் விளைவுகளைக் கொடுக்கும்.

சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி இருவரும் நிதியச் சந்தைகளைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த உச்சிமாநாட்டில் ஏற்பதாக உறுதிமொழி கொடுத்துள்ளனர். மேர்க்கெலின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் சந்தைகளின் உயர்ந்த எதிர்பார்ப்புக்கள்அழுகிய சமரசங்கள்” “அல்லது வாடிக்கையான பிரஸ்ஸல்ஸ் தந்திரமுறையினால் உச்சிமாநாட்டில் சிதைக்கப்பட்டுவிடாது என்று கூறினார்.

பிரெஞ்சு நிதி மந்திரி Francois Baroin மேர்க்கெலோ, சார்க்கோசியோஒரு சக்திவாய்ந்த முடிவைத் தராமல் உச்சிமாநாட்டு பேச்சுக்கள் மேசையை விட்டு அகல மாட்டார்கள் என்று அறிவித்தார். தேவையானால், பேச்சுக்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடரும் அல்லது கிறிஸ்துமஸிற்கு முன் மற்றொரு உச்சிமாநாடு கூட்டப்படும்.

மேர்க்கெல் மற்றும் சார்க்கோசி இருவரும் ஐரோப்பிய உடன்பாடுகளில் ஒரு மாற்றத்தின் மூலம் யூரோப் பகுதியின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளை எடுக்கமாறு கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அந்நாடுகள் ஒப்பந்த முறைப்படி ஜேர்மனிய மாதிரியை போன்ற சமப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட திருத்தத்தை அரசியலமைப்பில் ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்பட வேண்டும். இதில் கடன் வாங்கும் அளவு கடுமையான வரம்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர, பற்றாக்குறை வரம்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதத்தைவிட அதிகமாகக் கொண்டுள்ள நாடுகள் தானியக்க முறையில் தண்டனைக்கு உட்படுத்தப்படும். இந்த விதிகள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பத உறுதி செய்யும் பணி ஐரோப்பிய நீதிமன்றத்திடம் ஒப்படைக்க்பட உள்ளது.

இந்த பிரெஞ்சு-ஜேர்மனிய திட்டம் குறித்து கடுமையான மோதல்கள் உள்ளன. இவை  உச்சமாநாட்டின் தோல்விக்கு எளிதில் வழிவகுக்கும். பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் ஐரோப்பிய உடன்பாடுகளில் இங்கிலாந்து நிதியத்துறையின் நலன்களைப் பாதிக்கும் வகையிலான மாற்றங்கள் எதையும் ஒப்புக் கொள்ள மறுக்க இருப்பதைத் தெளிவுபடுத்திவிட்டார். “இந்த விவாதங்கள் அனைத்திலும், என் பணி பிரிட்டிஷ் தேசிய நலன்களை பாதுகாப்பது என்று அவர் டைம்ஸிடம் கூறிவிட்டார்.

சில சிறிய நாடுகள், குழுத்தலைவர் ஹெர்மான் வான் ரொம்பை மற்றும் ஆணையத் தலைவர் ஜோஸே மானுவல் பரோசோவுடன் இணைந்து ஐரோப்பிய உடன்பாடுகளை மாற்றுவதற்கு எதிராக எச்சரிக்கை கொடுத்துள்ளன. ஏனெனில் இந்த மாற்றங்கள் தேசிய பாராளுமன்றங்கள் அல்லது வாக்கெடுப்புக்களால் நிராகரிக்கப்பட்டுவிடக்கூடும். தனிப்பட்ட விதிகள், கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் கொண்டுவருவதை அவை ஆதரிக்கின்றன. இத்திட்டத்தை ஜேர்மனிய அரசாங்கம்சில பங்கு பெறும் நாடுகள் இன்னமும் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளவில்லை என்ற உணர்வுதான் நாங்கள் கொண்டுள்ளோம் என்று அறிவித்து நிராகரித்தது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் பங்கு குறித்தும் தீவிர வேறுபடுகள் உள்ளன. பெரும்பாலான நாடுகள் ஐரோப்பிய மத்திய வங்கி பிரச்சனைக்குள்ளான நாடுகளுக்கு கடன்கள் கொடுத்து உதவ வேண்டும் என்று கோருகையில், ஜேர்மனி அத்தகைய விருப்பத்தேர்வைத் தொடர்ந்து எதிர்க்கிறது.

இத்தகைய மோதல்கள் இருந்தும்கூட, அனைத்து உச்சிமாநாட்டுப் பங்கேற்பு நாடுகளும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கு மாற்றீடு ஏதும் இல்லை என்பதை ஒப்புக் கொள்கின்றன. கடன் பிரச்சினையில் கடுமையான நிலைப்பாடு சர்வதேச பொருளாதார வளர்ச்சியை ஆபத்திற்கு உட்படுத்துகிறது என்ற குறைகூறலுக்கு, ஜேர்மனிய அரசாங்கம் உறுதியான பொது நிதிகள் என்பதுஜேர்மனி தேவையில்லாமல் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு அல்ல”, மாறாக யூரோப்பகுதியின் நம்பகத்தன்மை குறித்த பிரச்சினைகளைக் கடப்பதற்கான முன்னிபந்தனை என்று விடையிறுத்தது.

இந்த வாரத் தொடக்கத்தில் பிரெஞ்சு-ஜேர்மனிய திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கும் இத்தாலிய பிரதம மந்திரி மரியோ மொன்டி ஒரு கடுமையான சிக்கனப் பொதியை முன்வைத்தார். அது மில்லியன் கணக்கான முதியவர்களை வறுமையில் தள்ளிவிடும்.

ஐரோப்பிய மத்திய வங்கி சந்தைகளில் வெள்ளமெனப் புதிய பணத்தை உட்செலுத்த வேண்டும் என்று கோரும் அமெரிக்க, பிரிட்டஷ் மற்றும் சில தென் ஐரோப்பிய அரசாங்கங்கள்கூட அக்கோரிக்கையுடன் வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களையும் இணைக்கின்றன. இவ்வகையில், பிரிட்டிஷ் பிரதம மந்திரி காமரோன் தன்னுடைய டைம்ஸ் கட்டுரையில்ஜேர்மனி வாதிட்டுள்ளபடி, இன்னும் இறுக்கமான நிதியக் கட்டுப்பாடு தேவை என்று கோரியுள்ளார்.

ஐரோப்பாவில் நிலைமை அதிகளவில் 1930களில் ஜேர்மனி இருந்த நிலையைத்தான் நினைவிற்குக் கொண்டு வருகிறது. அந்த நேரத்தில் குடியரசின் சான்ஸ்லர் ஹென்ரிக் புரூனிங் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். அவை மந்த நிலைக்கு வகை செய்து, மில்லியன் கணக்கான வேலைகள், ஊதியங்கள், சேமிப்புக்கள் தகர்க்கப்பட்டு, ஹிட்லரை அதிகாரத்திற்குக் கொண்டுவரவும் உதவின. மீண்டும் இன்று ஐரோப்பிய அரசாங்கங்கள் இன்னும் சிக்கனம், மந்தநிலை மற்றும் சரிவைத் தவிர வேறு எதையும் முன்வைப்பதற்கு இல்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க வங்கி லெஹ்மன் பிரதர்ஸ் திவாலானவுடன், அத்துடன் சர்வதேச நிதிய முறை சரிவின் விளிம்பிற்கு வந்த நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதிய வல்லுனர்களும் 1930களில் இருந்து படிப்பினைகளை அறிந்துள்ளதாகக் கூறினர். அந்த அடிப்படையில் அவர்கள் டிரில்லியன் கணக்கான பொது நிதி வங்கிகளின் கருவூலங்களுக்கு மாற்றப்படுவதை நியாயப்படுத்த முற்பட்டனர். இப்பொழுது இதே வங்கிகள் அவற்றைக் காப்பாற்ற பெரும் கடன்களை எடுத்துக கொண்ட நாடுகளுக்கு எதிராக ஊக வணிகம் நடத்தும் நிலையில், அவை புரூனிங் செயல்படுத்தியது போன்ற கொள்கைகளையே செயல்படுத்துகின்றன.

இந்தக் கொள்கை வர்க்க நலன்களின் உந்துதப்படுகின்றது சமீபத்திய தசாப்தங்களில் மிகப் பரந்த செல்வத்தை குவித்துள்ள பெரும் செல்வக் கொழிப்பு உடைய நிதியத் தன்னலக்குழு இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கம் வெற்றி பெற்று அடைந்துள்ள சமூக நலன்களை அனைத்தும் அழிக்கப்படும் வரை அமைதியாக இருக்கப்போவதில்லை. அவர்களுடைய பார்வையில் கல்வி, சுகாதாரம், ஓய்வூதியங்கள், பொதுப்பணிகள், உள்கட்டுமானங்கள் ஆகியவற்றிகான பொதுச் செலவுகள் அனைத்தும் கௌரவமான ஊதியங்கள் மற்றும் தொழிலார்களின் உரிமைகள் போன்று அவர்களின் செல்வச் சேகரிப்பிற்கு ஏற்கவியலாத தடைகள் ஆகும்.

மேர்க்கெல் மற்றும் சார்க்கோசியின் திட்டங்கள் இச்சாதனைகளை அழிக்க விரும்புகின்றன. சமப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட திருத்தங்களும் தானியக்கத் தடைகளும் சமூக எதிர்ப்புக்களை எதிர்கொள்ள அரசாங்கங்கள் நிதி மீது கொண்டிருக்கும் செயற்பாட்டு முறையைக் கெடுத்து விடுகின்றன. அரசாங்கங்கள் தாங்கள் தயக்கமின்றி ஆதரிக்கும்  நிதியச் சந்தைகளின் ஆணையங்களின் முழுத்தயவில் வாழவேண்டும்.

தங்கள் சிக்கனக் கொள்கைகளை நியாயப்படுத்த அவை பயன்படுத்தும் வாதங்கள் பாசாங்குத்தனமும், தவறும் நிறைந்தவை. எந்த நாடும் அதன் சக்திக்கு மீறி வாழமுடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். தான் உழைப்பதைவிட எந்தவொரு தனி நாடும் அதிகம் செலவழிக்க முடியாது என வாதிடுகின்றனர்.

எவரேனும் வசதிக்கு மீறி வாழ்கின்றனர் என்றால், அவர்கள் கிரேக்கம், அயர்லாந்து, இத்தாலி அல்லது ஜேர்மனியில் உள்ள தொழிலாளர்களோ அல்லது ஓய்வூதியம் பெறுபவரோ அல்ல. மாறாக நிதியத் தன்னலக்குழுவின் உறுப்பினர்கள்தாம். எல்லா ஐரோப்பிய மில்லியனர்களின் மொத்தச் சொத்துக்களும் (இப்பொழுது கிட்டத்தட்ட அத்தகைய 3 மில்லியன் நபர்கள் உள்ளனர்), எல்லா ஐரோப்பிய நாடுகளின் தேசியக் கடன்களின் மொத்தத்தைவிட அதிக வேகத்துடன் பெருகிக் கொண்டிருக்கிறது. மில்லியனர்களின் தனிச்சொத்துக்கள் இந்தக்கடைசி 13 ஆண்டுகளில் இருமடங்காகி விட்டன. பொதுக் கடன் 15 ஆண்டுகளில் இருமடங்காகி உள்ளது. கிட்டத்தட்ட $10 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள ஐரோப்பிய மில்லியனர்களின் சொத்துக்கள் அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளின் கடன்களையும் ஒரே நேரத்தில் தீர்த்துவிடக்கூடியவை.

ஜேர்மனியில் மட்டும் 830,000 மில்லியனர்கள் 2.2 டிரில்லியன் யூரோக்கள் நிதியச் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். இது அனைத்துக் மத்திய, மாநில, உள்ளூராட்சிகளின் மொத்தக் கடன்களைவிட அதிகம் ஆகும். இந்தத் தனியார் சொத்துக்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் வணிகத்திற்கும் பெரும் வருமானம் ஈட்டுபவர்களுக்கும் கொடுக்கப்படும் வரிக்குறைப்புக்கள் ஆகும். இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க நுகர்வு பத்து ஆண்டுகளில் 5% சரிந்துவிட்டது. இந்த வெட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டால், அரசாங்கக் கருவூலம் 100 பில்லியன் யூரோக்களை பெற்றுக்கொள்ளும்.

ஆனால் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு நிதியத் தன்னலக்குழுவின் நிதியங்கள் முற்றிலும் தொடப்பட முடியாதவை. எந்த அரசாங்கமானாலும் அது சமூக ஜனநாயகமோ, தாராளவாதமோ, பழைமைவாதமானாலும் நிதியச் சந்தைகளை சீற்றத்திற்கு உட்படுத்திவிடும் இந்தச் செல்வத்தை தொட துணிவற்றுள்ளனர். 1930 களில் நடந்தது போல் ஐரோப்பா மாபெரும் வர்க்கப் போராட்டங்களை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த வர்க்கப் போராட்டங்களுக்கான தயாரிப்புக்கள் தேவை. சமூக ஜனநாயகவாதிகள், முன்னாள் ஸ்ராலினிஸ்டுக்கள், தொழிற்சங்கங்களாகிய பழைய சீர்திருத்த அமைப்புக்கள் தங்களை முற்றிலும் நிதியத் தன்னலக்குழுவிற்குப் சேவைசெய்ய இருத்திக் கொண்டன, அவற்றின் சிக்கன நடவடிக்கைகளை விசுவாசத்துடன் செயல்படுத்துகின்றன. மக்களின் அழுத்தங்கள் இவற்றிற்கு ஒரு பொருட்டு அல்ல; ஏனெனில் ஏராளமான போலி இடது அமைப்புக்களின் ஆதரவு இவற்றிற்கு உண்டு. அவை பழைய, இழிவிற்குட்பட்ட அதிகாரத்துவங்களுடன் முறித்துக்கொள்வதை தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யும்.

இப்பொழுது மிக அவசரமான பணி எல்லா நாடுகளிலும் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்தி ஒரு புதிய கட்சியை சோசலிச வேலைத்திட்டத்த்தின் கீழ் கட்டமைப்பதாகும். இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலகெங்கிலும் இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சிகள் முன்வைக்கும் முன்னோக்கு ஆகும்.