World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Signs of a new strike wave in China

சீனாவில் ஒரு புது வேலைநிறுத்த அலைக்கான அடையாளங்கள்

John Chan
10 December 2011
Back to screen version

கடந்த மாதத்தில் சீனாவில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இம்மோதல்கள் இன்னும் சிறியனவாயும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் இவை ஓர் ஆழ்ந்த மாற்றத்தை அடையாளம் காட்டுகின்றன. துனிசிய, எகிப்திய எழுச்சிகளில் ஆரம்பித்து ஐரோப்பாவிற்கு படர்ந்தும் பின்னர் அமெரிக்க மாநிலமான விஸ்கோன்சினிலும் எதிர்ப்பு இயக்கத்தின் மூலமாக 2011ல் சர்வதேச தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் நுழைந்துள்ளது. அது தன் பிரதிபலிப்பை சீனாவிலும் காணத்தொடங்கியுள்ளது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் உயரும் வேலையின்மைக்கு முகம் கொடுக்கையில், அவர்களுடைய வாழ்க்கதைத்தர சரிவு சீனாவிற்கு அதிக ஏற்றுமதி தேவைகளின் இழப்பு என்ற மாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதனால், சீனாவில் உள்ள குறைந்த ஊதிய ஆலை உரிமையாளர்கள், சுருங்கும் இலாப இலக்குகளை எதிர்கொள்கையில், அச்சுமையை தொழிலாளர்கள்மீது சுமத்துகின்றனர். இவை சமீபத்திய தொழில்துறை அமைதியின்மையைத் தூண்டிவிட்டுள்ளன.

வேலைநிறுத்தங்கள் குவாங்டோங் மாநிலத்தில் பேர்ல் ஆற்றுப்படுகை பகுதியில் உள்ள ஏற்றுமதியில் ஈடுபடும் அலைகளை அதிர்விற்கு உட்படுத்தியுள்ளன. நவம்பர் 17 அன்று நிர்வாகத்தின் திட்டமான தொழிலாளர் ஊதியம் குறைவாக இருக்கும் நாட்டின் உட்பகுதிக்கு மாறும் நிறுவனத்தின் திட்டத்தை எதிர்த்துத் தங்கள் வேலைகளைக் பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 7,000 தொழிலாளர்கள் யூ செங் காலணிகள் ஆலையில் வேலை நிறுத்தம் செய்தனர். இவர்களுடன் முக்கிய உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான டாப் பார்மின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், ஒரு தைவானுக்கு உடைமையான கணினி உதிரிப்பாக நிறுவன ஆலையில் 1,000 தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர். இரு ஆலைகளிலும் எதிர்ப்புக்கள் கூடுதல் பணி நேரங்கள், குறைவூதியங்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்பட்டன.

இன்னும் சமீபத்தில், ஷென்ஜென் ஹைலியங் ஸ்டோரேஜ் தயாரிப்புக்கள் நிறுவனத்தில் 4,500 தொழிலாளர்கள் ஞாயிறு முதல் தங்கள் வேலைகள் பணிநிலைகளைக் காப்பதற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலை அமெரிக்கருக்கு சொந்தமான வன்பொருள் (Hard-drive) உற்பத்தியாளர்கள் வெஸ்டர்ன் டிஜிட்டலுக்கு விற்கப்பட உள்ளது என்பதை அடுத்து இந்த வேலைநிறுத்தம் நடந்துள்ளது. பிற வேலைநிறுத்தங்களைப் போலவே இதையும் சீன அதிகாரிகள் எதிர்கொள்ளும் வகையில் பொலிஸ்-அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்; ஆலையை ஆக்கிரமித்த 2,000 தொழிலாளர்களை அடக்குவதற்கு கலகப் பிரிவுப் பொலிசாரை அனுப்பி வைத்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) ஆட்சி கடந்த ஆண்டு ஒரு ஹோண்டா கார்த்தயாரிப்பு ஆலையில் ஊதியங்கள் குறித்து தொடங்கிய வேலைநிறுத்தத்தை தொடர்ந்த அலைபோன்ற வேலைநிறுத்தங்களில் இருந்து இந்த தொழில்துறை அமைதியின்மை வேறுபட்டது என்பதை நன்கு அறியும். சமீபத்திய வேலைநிறுத்தங்கள் அதிக ஊதியத்திற்காக அல்ல, இருக்கும் வேலைகளையும் பணிநிலைமைகளையும் பாதுகாப்பதற்கு என்று உள்ளன; ஏனெனில் முதலாளிகள் ஒவ்வொரு பிரிவிலும் செலவுகளைக் குறைக்க முற்பட்டு, கூடுதல் பணிநேரத்தையும், ஊதியம் இல்லாத அதிக நேர வேலையையும் சுமத்த முற்படுகின்றனர்.

2008ம் ஆண்டு இருந்தது போல் வேலை இழப்புக்கள் கடுமையாக இருக்கக் கூடும் என்ற கவலைகள் ஏற்கனவே வந்துள்ளன. அப்பொழுது 23 மில்லியன் சீனத் தொழிலாளர்கள் வேலைகளை இழந்திருந்தனர். அமெரிக்கத் தளமுடைய China Labour Watch என்னும் அமைப்பின் இயக்குனரான லி க்வியங் சமீபத்தில்பெரும் ஆலைப் பணிநீக்கங்கள் பெருகிய எதிர்ப்புக்களையும் சமூகக் கொந்தளிப்பையும் சீனாவின் நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் ஏற்படுத்தும். குறிப்பாக வேலைநீக்கம் செய்யப்பட்ட ஆலைத்தொழிலாளர்களால் ஊக்குவிக்கப்படும், மேலும் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள குடியேறியுள்ள தொழிலாளர்களால் குறிப்பாக ஊக்குவிக்கப்படும்.” என எச்சரித்தார்:

பெய்ஜிங் மிகவும் அச்சப்படுவது தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை பற்றியது ஆகும். அத்தகைய நிகழ்வு கடந்த மாதம் ஆயிரக்கணக்கான பெப்சிகோ தொழிலாளர்களால் இணைய தளத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒரு கூட்டு எதிர்ப்பு என்று திட்டமிடப்பட்டுள்ள ஒன்றிணைப்பு மற்றும் வேலை இழப்புக்களுக்கு எதிராக நடந்துள்ளது. எதிர்பாராமல் இதை எதிர்கொள்ள நேர்ந்த பெய்ஜிங் பின்னர் அதன் இணைய தள பொலிஸைபெப்சிகோ வேலைநிறுத்தம் என்னும் சொற்றொடரை சிறு வலைப் பதிப்பு பணிகளில் இருந்து தடுக்கும்படி உத்தரவிட்டது.

பரந்த அமைதியின்மை வரக்கூடும் என்னும் நிலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நாட்டுப் பாதுகாப்பு அதிகாரி ஜௌ யோங்காங்கை இந்த வாரம் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் அவசரமாகஒரு சமூக நிர்வாக அமைப்புமுறையை நிறுவ வேண்டும் என்று தூண்டியுள்ளது. இதுகுறிப்பாக சந்தைப் பொருளாதாரத்தின் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ளும்போது ஒரு பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கான சங்கேதச் சொல் ஆகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவம் சீனாவில் நடந்த கடந்த புரட்சி நெருக்கடியினால் அச்சமுற்றுள்ளது. அதாவது 1989ல் பெய்ஜிங்கின் டியானன்மென் சதுக்கத்திலும் பிற சீன நகரங்களிலும் தொழிலாளர்களும் மாணவர்களும் நடத்திய வெகுஜன எதிர்ப்புக்களைக் குறித்து. ஆட்சி டாங்குகளையும் பல்லாயிரக்கணக்கான படையினரையும் முதலாளித்துவ மறுபுனருத்தாரனம் வாழ்க்கைத் தரங்களில் கொடுத்த பேரழிவுப் பாதிப்பிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி எதிர்ப்பை நசுக்குவதற்குப் பயன்படுத்தியது.

கடந்த இரு தசாப்தங்களில் சீன முதலாளித்துவத்தின் பாரிய விரிவாக்கம் சமூக அழுத்தங்களை உயர்த்தியுள்ளது. உலக முதலாளித்துவத்தின் குறைவூதிய உழைப்பு  நிலையமாக சீனா மாறியுள்ளபோது தொழிலாள வர்க்கம் மிகப் பாரிய முறையில் 400 மில்லியனை கொண்டுள்ள வகையில் விரிவாக்கம் அடைந்துள்ளது. 1989 எதிர்ப்புக்களில் ஈடுபாடு கொண்டிராத விவசாயிகள் இப்பொழுது மில்லியன்கணக்கான கிராமப்புறத்தில் இருந்து நகரங்களில் குடியேறிய தொழிலாளர்கள் என்ற விதத்தில் நகரங்களுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளனர்.

ஸ்ராலினிச ஆட்சி அமைதியற்று உள்ள தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடத்தும் தொழிற்சங்கங்களை நம்ப இயலாது. ACFTU எனப்படும் அனைத்துச் சீனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேரடியாக அரசாங்கம் மற்றும் நிறுவனங்களின் சார்பில் ஊழியர்களைக் கண்காணிக்கின்றன. எந்தத் தொழிலாளியும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு இந்த அமைப்பை ஆதரவிற்காக நாடுவதில்லை.

உதாரணமாக, சமீபத்திய பெப்சிகோ வேலைநிறுத்தங்களில், தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்துவதற்கு தங்கள் சொந்தப் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுத்து, தங்கள் பொதுக் கூட்டங்களை நடத்தினர். நவம்பர் 30ம் திகதி உடன்பாடு அவர்களைத் திருப்தி செய்ய முடியாமல் போனபின், லான்ஜௌ புட்டிகளில் அடைக்கும் ஆலைத் தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடர்வது என்று முடிவெடுத்தனர்

ஆனால் பல தொழிலாளர்கள் ஹாங்காங் தளமுடைய China Labour Bulletin இயக்குனர் ஹான் டோங்பாங் ஆதரிக்கும் சுயாதீன தொழிற்சங்கங்கள் தங்கள் நலன்களுக்கு போராடும் வழிவகை என்னும் நப்பாசைகளை வளர்த்துள்ளனர். 1989 எதிர்ப்புக்களின்போது தொழிலாளர்களின் தலைவராக இருந்த ஹானின் நோக்கம் எந்த அரசியல் இயக்கத்தையும்அரசியலற்றதாகக்க வேண்டும் என்ற வெளிப்படைக் கருத்தைக் கொண்டுள்ளது. அதாவது ஸ்ராலினிச ஆட்சிக்கு எத்தகைய அரசியல் சவாலையும் தடுத்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளை குறைந்த, சிறுசிறு சீர்திருத்தங்களுக்குள் கட்டுப்படுத்துவது என்பதாகும்.

உலகெங்கிலும் உள்ள சக தொழிலாளர்களை போலவே, சீனத் தொழிலாளர்களும் தங்கள் வேலைகள் மற்றும் வாழ்க்கைத்தரங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். சீனாவில் அத்தகைய தாக்குதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் இயக்கப்படுகிறது. அவ்வப்பொழுது சோசலிச சொற்றொடர்களை அது கூறிவந்தாலும்கூட, பெருநிறுவன உயரடுக்கின் நலன்களுக்குத்தான் செயல்படுகிறது.

இந்த ஆண்டு மத்திய கிழக்கு, ஐரோப்பா, மற்றும் அமெரிக்காவின் போர்க்குணமிக்க  எதிர்ப்புக்களின் அரசியல் படிப்பினை தொழிலாள வர்க்கம் சமூகத்தில் ஒரு சோசலிச மாற்றத்தைக் கொண்டுவருவதின்மூலம்தான் அதன் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதாகும். நவீன உற்பத்தி முறையில் நாடுகடந்த தன்மையினால் சீனத் தொழிலாளர்களுக்கு இதே உலகளாவிய பெருநிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதற்கு சர்வதேச அளவில் தங்கள் வர்க்க சகோதர, சகோரிகளுடன் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய புறநிலைத் தேவை ஏற்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிச காட்டிக் கொடுப்புக்களுக்கு எதிராக சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்தும் நீடித்த அரசியல் போராட்டத்தின் படிப்பினைகளை அடிதளமாகக் கொண்ட ஓர் உண்மையான மார்க்சிச கட்சி தேவைப்படுகிறது. அதன் பொருள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சீனப்பிரிவு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.