World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

This week in history: January 10-January 16

வரலாற்றில் இந்த வாரம்: ஜனவரி 10 – ஜனவரி 16

10 January 2011

Back to screen version

வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது.

25  ஆண்டுகளுக்கு முன்னர்:  மத்திய கிழக்கில் நெருக்கடி உக்கிரமடைந்தது

1986 ல் இந்த வாரம், பெருமளவில் அமெரிக்கா மேலும் மேலும் ஆக்கிரமிப்பு நிலையெடுத்ததனால் மத்திய கிழக்கின் பல முனைகளிலும் பதட்டங்கள் குவிந்தன.

1986 ஜனவரி 10 அன்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் உள்ள பயங்கரவாத-எதிர்ப்பு அலுவலகத்தின் செயலாளர் ரொபட் ஒக்லே, சிரியாவில் ஹஃபெஸ் அல்-அஸாட்டின் பாதிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை திணிப்பதாக அச்சுறுத்தினார். இந்தத் தடைகள், பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்பு வைத்திருந்ததாக சாட்டப்ட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒரு வாரத்துக்கு முன்னதாக லிபியா மீது திணிக்கப்பட்டவற்றை போன்றவையாகும். லெபனானில் அமெரிக்க பணையக் கைதிகளை விடுவிக்க அமெரிக்காவுடன் சிரியா ஒத்துழைத்துக்கொண்டிருந்த நிலையில், இந்த அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக அது அதிர்ச்சியை வெளியிட்டது. ஒக்லே, சதாம் ஹுசைனின் ஈராக் அரசாங்கம் அபு நிடால் அமைப்பை வெளியேற்றியதை உதாரணமாகக் காட்டி அதைப் பாராட்டினார்.

லெபனானிலான மோதல்கள், நாட்டின் புகைவிட்டுக்கொண்டிருந்த உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் பற்றியெரியவைக்க அச்சுறுத்தியது. ஜனாதிபதி அமின் ஜெமயெல்லுக்கு விசுவாசமான பாசிச கிறிஸ்தவ பலங்கிஸ்ட் இராணுவம், லெபனீஸ் படைகள் என்ற ஒரு சிதறுண்டு போன படையை நசுக்கினார். லெபனீஸ் படைகளின் தலைவர், சியாட் மற்றும் சுணி முஸ்லீம்களின் தேசங்களுக்கு மேலும் நியாயமான பிரதிநிதித்துவத்தை வழங்கக் கூடிய, சிரியாவின் ஆதரவைக் கொண்ட சமாதான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஒரு கூட்டாளியான ஜெமயெல், மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது டமாஸ்கஸ்ஸில் அசாட்டை சந்தித்துப் பேசினார். இந்த மோதல்களில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். ஜெமயெல்லின் நடவடிக்கைகளுக்கு பதிலிறுப்பாக, 11 முஸ்லிம்களின் கூட்டுக்கள், துருஸ் மற்றும் இடது குழுக்கள் பலங்கிஸ்டுகள் மீது புதிய தாக்குதலைத் தொடங்கின.

ஞாயிற்றுக் கிழமை, ஜனவரி 12 அன்று, ஒரு அமெரிக்க வர்த்தக கப்பல் பாரசீக குடாவை நெருங்கிய போது அதில் ஈரானிய கடற்படையினர் ஏறினர். அது இரத்தக்களரி யுத்தம் நடந்த காலமென்பதால், ஈராக்குக்கு செல்லும் இராணுவ விநியோகங்கள் இருக்கின்றதா என ஈரானியர்கள் தேடிப்பார்த்தனர். அமெரிக்காவும் இஸ்ரேல் ஊடாக ஈரானுக்கு ஆயுதங்களை இரகசியமாக விநியோகித்ததோடு அந்தப் பணத்தை நிகரகுவாவில் கொன்றா கொலைப் படைகளுக்கு சட்டவிரோதமாக நிதியளிக்கப் பயன்படுத்தியது.

25 ஆண்டுகளுக்கு முன்னர்:  எய்ஸென்ஹொவர் "இராணுவத் தொழிற்துறை கட்டுமானம் பற்றி எச்சரித்தார்.

1961 ஜனவரி 17 அன்று தனது பிரியாவிடை உரையில், ஜனாதிபதி ட்வைட் எய்ஸென்ஹொவர், இராணுவ தொழிற்துறை கட்டுமானம் என அவரே வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதன் மூலமாக ஜனநாயகத்துக்கு ஏற்படும் பெரும் சிக்கலைப் பற்றி அமெரிக்க பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நீண்டகாலமாக இராணுவத்தில் இருந்தவரும் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஐரோப்பாவில் பிரதம இணைத் தளபதியாக இருந்தவருமான எய்ஸென்ஹொவரிடம் இருந்து வருவதையே இந்த எச்சரிக்கை சொல்கின்றது. அவரை வெற்றிகொண்ட ஜனநாயகக் கட்சிக்காரரான ஜோன் எஃப். கென்னடி, இராணுவச் செலவை பெருமளவில் அதிகரிப்பதாக வாக்குறுதியளித்தே பிரச்சாரம் செய்தார்.

அமெரிக்க இராணுவம் வலிமை மிக்க,  உடனடி நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பது அவசரமான தேவையாகும், எனவே தமது சொந்த அழிவை பரீட்சிக்க முயற்சிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் என வலியுறுத்தும் அதே வேளை, சமாதான காலத்தில் எனது முன்னோடிகள், அல்லது, உண்மையில் இரண்டாம் உலக யுத்தத்தில்  அல்லது கொரிய யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்துக்கும் இன்றைய இராணுவ அமைப்புக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.

 “எமது உலக மோதல்களில் கடைசியாக நடந்த மோதல் வரையும் கூட, ஐக்கிய அமெரிக்காவிடம் போர்த்தளவாட தொழிற்துறை இருந்ததில்லை, எனவும் அவர் மேலும் கூறினார். ஏர்க்கலப்பை செய்த அமெரிக்கர்களுக்கு, காலத்துக்கும் தேவைக்கும் ஏற்றவாறு, வாள்களையும் செய்ய முடிந்தது. [ஆனால்] பெருந்தொகையில் நிரந்தர போர்த்தளவாட தொழிற்துறையை உருவாக்க நாம் நெருக்கப்பட்டுள்ளோம். இதற்கும் மேலாக, முப்பத்தைந்து இலட்சம் ஆண்களும் பெண்களும் பாதுகாப்பு ஸ்தாபனத்தில் நேரடியாக ஈடுபட்டனர். சகல அமெரிக்க கூட்டுத்தாபனங்களதும் தூய வருமானத்துக்கும் மேலாகவே நாம் இராணுவப் பாதுகாப்புக்கு மட்டும் செலவிட்டோம்.

 பொருளாதார, அரசியல், ஊக்கத்திலுமாக, ஒவ்வொரு மாநில அவையிலும், சமஷ்டி அரசாங்கத்தின் ஒவ்வொரு அலுவலகத்திலும் உணரப்பட்டது.... எமது உழைப்பு, வளங்கள் மற்றும் ஜீவனோபாயம் சகலதும் ஈடுபடுத்தப்பட்டது. அதாவது எமது சமுதாயத்தின் சகல அமைப்பு முறையும். அரசாங்கத்தின் சபைகளில், சட்டப்படி உரிமையில்லாத செல்வாக்கை கைப்பற்றுவதற்கு எதிராக இராணுவ தொழிற்துறையில் இருந்து பெற்றோ அல்லது பெறாமலோ நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான அதிகாரத்தின் அழிவுகரமான எழுச்சி நிகழக்கூடும் அல்லது தோன்றக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த ஒருங்கிணைவின் அழுத்தம் எமது விடுதலை அல்லது ஜனநாயக முன்னெடுப்புகளை ஆபத்துக்குள்ளாக்குவதற்கு இடமளிக்கக் கூடாது.

75 ஆண்டுகளுக்கு முன்னர்:  சோவியத் ஒன்றியம் இராணுவத்தை கட்டியெழுப்பத் தயாராகியது

சோவியத் பிரதமர் வியாசெஸ்லவ் மொலொடொவ், 1936 ஜனவரி 10 அன்று, நாஸி ஜேர்மனி மற்றும் ஏகாதிபத்திய ஜப்பானாலும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு தயார் செய்வதற்காக இராணுவச்செலவை பிரமாண்டமாக அதிகரிப்பதற்கு அழைப்பு விடுத்தார்.

மொலொடொவ், ஸ்ராலினையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, கிரேம்ளினில் மத்திய நிர்வாகக் குழுவின் காங்கிரஸில் உரையாற்றினார். பேர்லினும் டோக்கியோவும் யுத்தத்தை நோக்கி நகர்ந்தால் அவர்கள் தமது சொந்தக் கழுத்தை உடைத்துக்கொள்வர் என எச்சரித்த பிரதமர், ஹிட்லர் எனது போராட்டம் (Mein Kampf) என்ற ஒரு ஜேர்மனிய மிலேனியத்துக்கான தனது வரைபில் சோவியத் யூனியனை தாக்கும் தனது பிரசுரிக்கப்பட்ட குறிக்கோளை இன்னமும் மறுக்கவில்லை என முறைப்பாடு செய்தார். அதே சமயம், ஜேர்மனுடன் சோவியத் யூனியன் சிறந்த உறவை ஏற்படுத்த முயற்சிக்கின்றது என மொலொடொவ் வலியுறுத்தியதோடு, படையெடுக்காமை உடன்படிக்கையொன்றுக்காக மீண்டும் மீண்டும் ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தது. வெளியுறவு அமைச்சு பேச்சாளர் கார்ல் ரடெக் மற்றும் பாதுகாப்புக்கான உதவி ஆணையாளர் மார்ஷல் டுக்காஷெவ்ஸ்கியும் அதே வராத்தில் மொலொடொவ்வின் கருத்துக்களை எதிரொலித்தனர்.

உண்மையில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கொள்கைகள், சோவியத் யூனியன் சுற்றிவளைக்கப்படுவதற்கு வழிவகுத்தன. ஸ்ராலினின் கட்டுப்பாட்டிலான மூன்றாவது அகிலம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும் சீனாவின் போராளிக் குணம்மிக்க தொழிலாளர்களையும், தேசியவாதி சியாங் காய்-ஷெக் உடன் ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக அர்ப்பணித்ததன் மூலம், கிழக்கில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு இருந்த பிரதான தடைச் சுவரை பலவீனப்படுத்தியது. 1930களின் முற்பகுதியில், சமூகப் பாசிச கொள்கை உட்பட ஜேர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வழித்தடம், ஹிட்லருன் வெற்றிக்கான பாதையை வகுத்தது.

ரஷ்யப் புரட்சியின் துணைத் தலைவரான நாடுகடத்தப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி தொடர்ந்தும் வலியுறுத்தியது போல், உண்மையில் 1917 புரட்சிகர இலக்குகளை ஸ்ராலினிஸ்டுகள் காட்டிக்கொடுத்தமையே சோவியத் ஒன்றியத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மொலொடொவ் உரையாற்றிய அதே வாரம் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், போல்ஷவிக்-லெனினிஸ்டுகளுக்கும் ஏனைய புரட்சியாளர்களுக்கும் எதிரான ஸ்ராலினின் அழித்தொழிக்கும் தாக்குதல்களில் இருந்து, சோவியத் அரசாங்கத்தை இயல்புநிலைபடுத்தும் சிறந்த வாக்குறுதியை ஏகாதிபத்தியம் காண்கின்றது, என ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர்:  அமெரிக்க மத்திய வங்கி பிரேரணை

1911 ஜனவரி 17 அன்று, செனட்டர் நெல்சன் அல்ட்ரிஷ், தேசிய நாணய ஆணையத்தின் தலைவர் என்ற தனது பதவியில் இருந்து, அமெரிக்க ஒதுக்கீட்டுச் சங்கத்தை (Reserve Association of America) ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை உத்தியோகபூர்வமாக முன்வைத்தார். இந்த ஒதுக்கீட்டுச் சங்கம், 1913 அளவில் சில நவீன மாற்றங்களுடன் பெடரல் ஒதுக்கீட்டு முறைமை (Federal Reserve System) ஆக மாறவிருந்தது. ஐரோப்பாவில் ஏற்கனவே நன்கு பிரசித்திபெற்ற வங்கிளைப் போல், ஒட்டு மொத்த நிதி மூலதனத்தின் இலாபத்துக்காக நாணய விநியோகம் மற்றும் வட்டி வீதங்கள் மீதான விளைபயன்கொண்ட கட்டுப்பாடு மத்திய வங்கியிடம் கொடுக்கப்படும்.

இந்த மத்தியவங்கி பிரேரணை, 1907 பீதி உட்பட ஒரு தொடர்ச்சியான நிதி நெருக்கடிக்கு பதிலிறுக்கும் வகையிலேயே முன்வைக்கப்பட்டது. 1907 பீதியின் போது, அமெரிக்காவில் உள்ள நிதிய வட்டாரங்களின் மூர்க்கமான மோசடியினால் தூண்டப்பட்டு வெளித்தோன்றிவந்த சர்வதேச நிதி நெருக்கடிக்கு, சிறிய வங்கிகளுக்கு கடன்கொடுப்பதை நிறுத்துவதன் மூலமே பெரும் வங்கிகள் பதிலிறுத்தன. இது ஒரு நிதி பற்றாக்குறையை உருவாக்கிவிட்டதோடு வங்கிகள் மற்றும் நிதியங்கள் மீது பெருக்கெடுத்த வங்குரோத்துக்களையும் உருவாக்கிவிட்டது.

அமெரிக்காவில் எல்லாவற்றையும் விட மேலான வங்கியாளரான ஜே.பி. மோர்கன், 1907ல் பீதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்காக அடிக்கடி பாராட்டப்பட்டார். கடன் கொடுப்பதை மீண்டும் தொடருமாறு முன்னணி வங்கியாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்ததோடு, இந்த திட்டத்தின் மூலம் நிதிய தொழிற்துறை பீதியை கட்டுப்படுத்தியதோடு தன்னையே காத்துக்கொண்டது- பெடரல் வங்கிக்கும் ஊக்கம் கொடுத்தது. திறைசேரி செயலாளர் ஜோர்ஜ் கோர்டெல்யூவும் வோல் ஸ்றீட் வங்கிகளில் திறைசேரி பணத்தை வைப்பிலிடும் மோர்கனின் வேண்டுகோளுக்கு தலைவணங்கினார். உண்மையில் மோர்கன், தனது எதிரிகளை ஒழித்து பெருமளவில் இலாபம் சம்பாதித்ததோடு மற்றும் வங்குரோத்தை நெருங்கிக்கொண்டிருந்த டென்னெசி நிலக்கரி, இரும்பு மற்றும் ரயில்பாதை கம்பனியை தனது அமெரிக்க ஸ்டீலை தூக்கி நிறுத்த, ஜனாதிபதி தியடோர் ரூஸ்வெல்ட்டின் உடன்பாட்டுடன் உறிஞ்சிக்கொண்டார்.

உண்மையில், ஜோர்ஜியாவின் ஜெக்கில் தீவு கிளப்பில், பெடரல் வங்கியின் முதல் தலைவராக வரவிருந்த தனது துணை பொருளாளர் பெஞ்சமின் ஸ்றோங் உட்பட, பல வங்கியாளர்கள் மற்றும் மோர்கன் பிரதிநிதிகளுடன் நடந்த இரகசிய கலந்துரையாடலிலேயே பல மாதங்களுக்கு முன்னதாகவே ஒரு மத்திய வங்கிக்கான ஆல்ரிச்சின் திட்டம் தீட்டப்பட்டது.