World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US policy of assassination

படுகொலை செய்தல் என்னும் அமெரிக்க கொள்கை

Joseph Kishore
1 July 2011
Back to screen version

லிபியப் போர் 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க-நேட்டோ மூலோபாயம் இன்னும் பெருகிய அப்பட்டமான முறையில் அரசியல் படுகொலை செய்தல் என்பதை எடுத்துள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய போர் விமானங்கள் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியின் வளாகங்களை பலமுறை குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தி அவருடைய உறவினர்களையும் கொன்றுள்ளன. ஒரு உண்மையான தேக்க நிலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் செயற்பாட்டின் கால அளவினால் திகைப்பு அடைந்த இராணுவ மூலோபாயம் இயற்றுபவர்கள் பெருகிய முறையில் லிபிய நாட்டு அரசாங்கத் தலைவரை அகற்றும் முயற்சிகளில் குவிப்புக் காட்டுவதுடன், ஆட்சிக்குள் இருக்கும் மற்ற சக்திகளுக்கு அதிகாரத்தை மாற்ற முயல்கின்றனர். இது கடாபியின் உள்வட்டத்திற்குள் ஒரு எழுச்சி மூலம் சாதிக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் படுகொலை மூலம் சாதிக்கப்பட வேண்டும்.

இந்த வாரம் முன்னதாக குடியரசுக் காங்கிரஸ் உறுப்பினரும் மன்ற ஆயுதப்படைகள் குழுவின் உறுப்பினருமான மைஃ டர்னர் அட்மைரல் சாமுவெல் லோக்லியருடன் நடத்திய விவாதம் பற்றிக் கூறினார்; இதில் நேட்டோப் படைகளின் தளபதி இத்தாலியில் வெளிப்படையாக படுகொலைக் கொள்கையை ஒப்புக் கொண்டுள்ளார். டேலர் கூற்றுப்படி, “குடிமக்கள் பாதுகாப்பின் வரம்பு கடாபியின் இராணுவக்கட்டுப்பாட்டு சங்கிலியை அகற்ற அனுமதிக்கும் என்று விளக்கப்படுகிறது, இதில் கடாபியும் அடங்குவார்என்று லோக்லியர் கூறியதாக டேலர் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று அமெரிக்க அரசாங்கக் அமைப்புகளுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்ட Stratfor என்னும் சிந்தனைக்குழு கடாபிக்கு எதிரான போர்க்குற்றங்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வெளிப்பட்டுள்ளவை, “நேட்டோவின் தற்போதைய மூலோபாயமான விமான சக்தியை பயன்படுத்தி லிபியத் தலைவரை படுகொலை செய்யும் முயற்சிக்கு கூடுதல் உந்துதல் கொடுக்கிறது, இது ஆட்சி மாற்றம் என்னும் பணியைச் சாதிக்க ஒரு வழிவகையாகும்என்ற கருத்தைத் தெரவித்துள்ளது.

இதன் பின் புதன்கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்காவில் சமூகநலத்திட்டங்களில் பெரும் வெட்டுக்களுக்கான திட்டங்களைப் பற்றி முக்கியத்துவம் காட்டிய கூட்டத்தில், பேசினார். அமெரிக்க நடவடிக்கையின் விளைவாகஅமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு அரசாங்க ஆதரவு கொடுத்தவர் இப்பொழுது நசுக்கப்படுகிறார், தூக்குக்கயிறு அவர் கழுத்தை இறுகச் சுற்றுகிறதுஎன்றார். கடாபியைப் பற்றிக் குறிப்பிடும்போது அடித்து உதைத்தல் என்னும் சொல்லாட்சியை ஒபாமா பயன்படுத்துவது இது முதல் தடவையல்ல.

லிபியப் போர் முழுவதைப் போலவே, அமெரிக்க-நேட்டோ படுகொலைக் கொள்கை தேசிய, சர்வதேச சட்டங்களின்கீழ் தெளிவாக சட்டபூர்வமற்றதாகும். இராணுவ நடவடிக்கைக்கு காங்கிரசின் ஒப்புதல் தேவை எனக்கூறும் போர் அதிகாரங்கள் சட்டத்தை மீறுதல் என்பதின் கீழ் இது ஏன் இல்லை என்பதை விளக்க முற்படுகையில், ஒபாமா நிர்வாகம் அபத்தமாக குண்டுவீசுதல்மோதல்கள்என்ற தரத்திற்கு உயர்த்தப்பட முடியாது என்று கூறியது. ஆனால் இதன் தன்மை இவ்வாறு என்றால், படுகொலைக் கொள்கை என்பது ஒரு வெளிநாட்டு அரசாங்க தலைவரைக் ஒரு முக்கிய ஏகாதிபத்திய சக்தி படுகொலை செய்யும் முயற்சி என்பது அப்பட்டமானது என்று அம்பலமாகி நிற்கிறது.

செய்தியாளர் கூட்டத்தின்போது ஒபாமா லிபியாவைப் பொறுத்தவரை தொடர்ந்து அசாதாரண அறிக்கைகளைக் கொடுத்தார். போர் அதிகாரங்கள் சட்டம் எழுப்பும் அரசியல் அமைப்பு வினாக்களை அவர் உதறித்தள்ளினார்அச்சட்டம் வியட்நாமில் அமெரிக்கப் போரின் போது பெரும் பொய்கள் மற்றும் குற்றங்கள் ஆகியவை வெளிப்பட்டதைத் தொடர்ந்து இயற்றப்பட்டது; இதுவழிவகை, காங்கிரசுடன் ஆலோசனை போன்றவற்றை பற்றிய கூக்குரல்என்றார். அரசியலமைப்பு சட்டத்தைப் பயின்றவர் என்னும் முறையில் ஜனாதிபதி லிபியப் போரின் சட்டவிரோதத் தன்மை பற்றித் தாக்கிப் பேசியவர்களைதேவையற்ற குழப்பக்காரர்கள்என்று ஏளனமாகத் தாக்கிப் பேசினார்.

தன்னுடைய கொள்கைக்கு ஆதரவாக போலித்தனச் சட்டப்பூர்வ விவாதம் கூட இல்லாத நிலையில், இதற்குப்பின் ஒபாமாஒசாமா பில் லேடனுக்கு முன்பு கடாபிதான் உலகில் வேறு எவரையும் விடக் கூடுதலான அமெரிக்க இறப்புக்களுக்கு பொறுப்பவானவர்என்ற வாதத்தில் ஊன்றி நின்றார்.

செய்தியாளர் கூட்டத்தில் எவரும் இந்த அறிக்கை பற்றி விவரிக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை. மார்ச் மாதம் லிபியா மீது குண்டுவீச முடிவெடுக்கப்படும் முன் கடாபி, அமெரிக்கா உட்பட எல்லா பிரதான சக்திகளுடனும் நட்புறவைத்தான் கொண்டிருந்தார். 2003ம் ஆண்டு லிபியா அதன் அணுசக்தி மற்றும் உயிரியல் ஆயுதங்கள் பற்றிய திட்டத்தை அகற்றியது; அந்நடவடிக்கை புஷ் நிர்வாகத்தால் ஈரான் மற்றும் வடக்கு கொரியா பின்பற்ற வேண்டிய முன்மாதிரி எனப் பாராட்டப்பட்டது.

ஏப்ரல் 2009ல் அப்பொழுது லிபியாவின் பாதுகாப்பு மந்திரியாக இருந்த கடாபியின் மகன், ஹில்லாரி கிளின்டனால் வெளிவிவகாரத்துறையில் வரவேற்கப்பட்டார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து இரு மாதங்களில் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட கடாபிக்கும் ஒபாமாவிற்கும் இடையேயான கைகுலுக்கல் நடந்தது.

இந்தக் காலக்கட்டத்தில் கடாபி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பெருநிறுவனங்கள் பலவற்றுடனும் உடன்பாடுகளில் கையெழுத்திட்டிருந்தார். இதற்குப் பின் தெளிவாக விளக்கப்படாத காரணங்களை ஒட்டி, ஆனால் ஐரோப்பிய சக்திகள், அமெரிக்காவின் பூகோள மூலோபாய நலன்களுடன் தெளிவாக இணைந்த வகையில், கடாபி ஆட்சியை அகற்றி, ஏகாதிபத்தியத்திற்கு இன்னும் கட்டுப்பட்டிருக்கும் அரசாங்கத்தை இருத்துவது என்னும் முடிவு எடுக்கப்பட்டது.

அரசாங்கத்தை மேற்குப் புறம் உள்ளஎழுச்சியாளர்கள்மூலம் அகற்றும் முயற்சியில் முதலில் ஈடுபட்டபின், அமெரிக்காவும் நேட்டோவும் இப்பொழுது இன்னும் நேரடியான வழிவகையை ஏற்றுள்ளன.

ஆனால் அமெரிக்க படுகொலைக் கொள்கை கடாபியுடன் நின்றுவிடவில்லை. புதன்கிழமை அன்று ஒபாமா நிர்வாகம்பயங்கரவாத எதிர்ப்பிற்கு தேசிய மூலோபாயம்என்பதை வெளியிட்டது; இதில் தன் நலன்களுக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா எங்கு கண்டாலும், அங்குஇலக்கு வைக்கப்பட்ட கொலைகள் இருக்கும் என்னும் மூலோபாயம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகர் ஜோன் பிரென்னன் மூலோபாயத்தை விவரிக்கையில், “நம் சிறந்த தாக்குதல் எப்பொழுதும் வெளிநாட்டில் ஏராளமான இராணுவத்தினரை நிறுத்துவது அல்ல, ஆனால் நம்மை அச்சுறுத்தும் குழுக்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட அறுவை சிகிச்சை முறை அழுத்தங்களை அளிப்பது என்றார்.

இலக்குவைக்கப்பட்ட அறுவைசிகிச்சை முறை அழுத்தம்என்பதின் மூலம் இராணுவமும் CIAயும் ஒசாமா பின் லேடனைப் படுகொலை செய்த சிறப்புப் படைகள் போன்ற குழுவுடன் சேர்ந்து நடத்தும் வான்வழி ஆளில்லா விமான தாக்குதல் என்பது பொருளாகும். ஒபாமா நிர்வாகத்தின்கீழ் அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், ஈராக், யேமன் மற்றும் இப்பொழுது லிபியா ஆகியவற்றில்போராளி”, “பயங்கரவாதிஎன அறிவிக்கப்படும் எவரையும் கொல்லுவதற்கு டிரோனைப் பயன்படுத்துவது பெரிதும் அதிகரித்துள்ளது.  கடந்த வாரம் இப்பட்டியலில் ஆறாவது நாடு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது; சோமாலியாவில் அல் குவேடாவுடன் இணைந்த அமைப்பின் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள் மீது அமெரிக்க டிரோன் விமான ஏவுகணைகள் செலுத்தப்பட்டன.

ஒரு முந்தைய வரலாற்றுக் காலத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் இத்தகைய கொள்கைகள் எழுப்பும் பெரும் ஆபத்துங்களை அறிந்திருந்தது. 1965ல் அதிகாரத்திற்கு வந்தபின், உலகின் பல பகுதிகளில் அமெரிக்காவின் படுகொலைத் திட்டங்களுக்கான சான்றுகளை எதிர்கொண்ட முறையில் ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காஒரு இழிந்த கொலை நிறுவனத்தைநடத்திக் கொண்டிருக்கிறது என்று புகழ்வாய்ந்த முறையில் கூறினார்.

1976ம் ஆண்டு Church Committee, CIA வின் படுகொலைத் திட்டங்களைப் பற்றி செனட் விசாரணைகளை நடத்தியது, படுகொலைக் கொள்கைஎன்பது நம் வாழ்வியலில் அடிப்படையாக உள்ள அறநெறிக் கருத்துக்களை மீறுகின்றனஎன்ற முடிவிற்கு வந்தது. குழு அறிக்கையை தொடர்ந்து அத்தகைய நடைமுறையை வெளிப்படையாக தடுக்கும் நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒருபொற்காலம்என எப்பொழுதும் இருந்தது கிடையாது. ஆனால் கடந்த 35 ஆண்டுகள் சட்டபூர்வத்தன்மை, ஜனநாயகப் பொறுப்புணர்வு பற்றிய போலித்தனத்தின் சரிவைத்தான் சந்தித்துள்ளன. அரசாங்கமே கொல்லுவது என்பது முடிவிலா ஆக்கிரமிப்பு போர்கள், சித்திரவதை, குற்றச்சாட்டு இல்லாமல் காவலில் வைத்தல், அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் அழிப்பு ஆகியவற்றை அடக்கியுள்ள ஒரு வழிவகை ஆகும். இதுதான் அமெரிக்காவிற்குள்ளேயே சமூக உறவுகளின் மாற்றத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. அதாவது ஒரு ஒட்டுண்ணித்தன நிதிய பிரபுத்துவத்தின் எழுச்சியுடனும் அசாதாரணமான சமூக சமத்துவமின்மையின் எழுச்சியுடன் பிணைந்துள்ளது.

கடாபியை படுகொலை செய்யும் கொள்கையை ஒரு இராணுவ மூலோபாயம் போல் தொடரப்படுவது ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தும். ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் தங்களுக்குத் தடையென நினைப்பவரை நீதிக்கு அப்பாற்பட்டு கொல்லுவதற்கு தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி விட்டன. மேலும் இது அரசியல் அமைப்புக்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் என வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மட்டும் இல்லை. மாறாக இதேபோன்ற நடவடிக்கைகளை எவ்விதமான முக்கியமான உள்நாட்டு எதிர்ப்பிற்கு எதிராகவும் அமெரிக்க அரசாங்கத்தின் ஊழியர்கள் பயன்படுத்துவர் என்பதில் சந்தேகம் இல்லை.