World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government manoeuvres for resolution to Libyan war

லிபிய போர்த் தீர்விற்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் தந்திரோபாயங்கள்

By Patrick O’Connor
13 July 2011

Back to screen version

நிக்கோலா சார்க்கோசியின் பிரெஞ்சு நிர்வாகம் முயம்மர் கடாபியை ஓரம் கட்டிவிட்டு நேட்டோ குண்டுத் தாக்குதலை எண்ணெய் வளமுடைய நாட்டில் நிறுத்துவதற்கான உடன்பாடு ஒன்றை லிபிய அரசாங்கத்துடன் கொள்வதற்கான அதன் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த இராஜதந்திர தந்திரோபாயங்கள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் சட்டவிரோத இராணுவ நடவடிக்கை அதன் ஐந்தாவது மாதத்தை எட்டுகையில், திரிப்போலியின் ஆட்சிமாற்றத்தை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும் என்ற அதன் முக்கிய இலக்கை எட்டாத நிலையில், எதிர்கொண்டிருக்கும் பெருகிய நெருக்கடியை பிரதிபலிக்கின்றன.

ஞாயிறன்று பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி கெராட் லோங்குவே அவருடைய அரசாங்கம் கிழக்கு லிபிய நகரமான பெங்காசியிலுள்ள இடைக்கால தேசிய சபையிடம் (TNC) கடாபி அரசாங்கத்துடன் பேச்சுக்களைத் தொடக்க வேண்டும் எனக் கோரியுள்ளதாக அறிவித்தார்.

“TNC உடைய நிலைப்பாடு மற்றவற்றில் இருந்து தொலைவில்தான் உள்ளது என்று லாங்குவே கூறினார்: இது பேச்சுக்களுக்கு முன்னதாக கடாபி அதிகாரத்தை விட்டு நீங்க வேண்டும் என்று பிறஎழுச்சியாளர்கள் கோருவதை வெளிப்படையாகக் குறைகூறுவது ஆகும்.” இப்பொழுது மேசையைச் சுற்றி உட்கார்ந்து பேசும் தேவை உள்ளது…. நாங்கள் [நேட்டோ] லிபியர்கள் ஒருவரோடு ஒருவர் பேச்சுக்களை தொடங்கியவுடன், இரு பக்கத்து இராணுவத்தினரும் அவரவர் முகாம்களுக்கு மீண்டபின், குண்டுவீச்சுக்களை நிறுத்துவோம். இப்பொழுது அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசலாம், ஏனெனில், வெறும் வலிமையின் மூலம் தீர்வு இல்லை என்பதை நாங்கள் அவர்களுக்குக் காட்டுகிறோம் என்றும் அவர் கூறினார்.

கடாபி  ஏதேனும் ஒருவகையில் பதவியில் இருக்கும் வாய்ப்பு குறித்து லாங்குவே எழுப்பியதுடன், அவர்தன் அரண்மனையில் மற்றொரு அறையில் வேறு ஒரு அதிகார பட்டத்துடன் இருக்கலாம் என்றார்.

வாஷிங்டன், பிரெஞ்சுப் பாதுகாப்பு மந்திரியின் கருத்துக்களை உடனே சாடியது; இது நேட்டோ நட்பு நாடுகளுக்குள் தொடர்ந்து இருக்கும் அழுத்தங்களைத்தான் உயர்த்திக் காட்டுகிறது. அமெரிக்க வெளிவிவகார செய்தித் தொடர்பாளர் ஒருவர், “பிரான்சின் நிலைப்பாட்டில் குழப்பம் உள்ளது என்று அறிவித்து, “கடாபி அகல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வலியுறுத்தினார்.

ஞாயிறன்றே அல்ஜீரியச் செய்தித்தாள் எல் கபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாமுடன் நடத்திய பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தது; அவர் ஏற்கனவே பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச்சுக்கள் தொடங்கிவிட்டார் என்றது. “உண்மை என்னவென்றால் நாங்கள் எழுச்சியாளர்களுடன் இல்லாமல் பிரான்சுடன் பேச்சுக்களை நடத்துகிறோம் என்றார் சைப் அல்-இஸ்லாம். “சார்க்கோசிக்கு நாங்கள் அனுப்பியுள்ள தூதர் பிரெஞ்சு ஜனாதிபதி தெளிவாக உள்ளார் என்றும் அவரிடம்நாங்கள் இடைக்காலக் குழுவைத் தோற்றுவித்தோம், எங்கள் ஆதரவு, பணம், ஆயுதங்கள் இல்லாமல் குழு தோன்றியிருக்கவே முடியாது” என்று சார்க்கோசி கூறியதாக கூறினார். பிரான்ஸ் கூறியது: “உங்களுடன் நாங்கள் உடன்பாட்டை அடையும்போது, குழுவை போரை நிறுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்துவோம்”.

இத்தகைய கூற்றுக்களை பாரிஸ் மறுத்துள்ளது. ஆனால் சில விவாதங்கள் உள்ளன என்பது தெளிவு. சார்க்கோசி கடாபியின் படைத்தலைவர் பஷிர் சலேயை ஒரு மாதம் முன்பு சந்தித்தார் என்ற தகவலை நேற்று Le Monde  கொடுத்துள்ளது. ஜனாதிபதியின் அலுவலகம் இந்தத் தகவல் பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே பிரான்ஸ் இன்போ வானொலி நிலையத்திடம் தனியே கூறினார்: “உண்மையில் சில தொடர்புகள் உள்ளன; ஆனால் அவை உண்மையான பேச்சுவார்த்தைகளாக மாறவில்லை. லிபிய ஆட்சி அதன் தூதர்களை எல்லா இடத்திற்கும், துருக்கி, நியூ யோர்க், பாரிஸ், என அனுப்புகிறது. “கடாபி அகலத் தயாராக இருக்கிறார், அது பற்றிப் பேசுவோம் என்று கூறும் தூதர்களைத்தான் நாங்கள் சந்தித்து வருகிறோம்.”

யூப்பே மேலும் கூறியது: “இந்த நெருக்கடியை எப்படி முடிப்பது என்பது பற்றி ஒருமித்த உணர்வு உள்ளது; அதன்படி கடாபி பதவியை விட்டு விலக வேண்டும். இந்த நிலை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னால் இல்லை.”

இந்தஒருமித்த உணர்வில் ஆபிரிக்க ஒன்றியமும் உள்ளது என்று பிரெஞ்சு வெளியுறவு மந்திரியின் கூற்று ஆகும். ஞாயிறன்று யூப்பே எதியோப்பியாவிலுள்ள ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகத்திற்குச் சென்றிருந்தார்; பின்னர் அவர் அந்த அமைப்பின் முக்கிய அதிகாரிகள்பிரான்ஸ் மற்றும் கூட்டணியுடைய நிலைப்பாட்டுடன் முன்பு இல்லாத அளவிற்கு நெருக்கமாக உள்ளனர் என்று அறிவித்தார். ஆபிரிக்க ஒன்றியம் முன்பு ரஷ்ய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து உடனடியாக நேட்டோ தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி கடாபி அதிகாரத்தில் தொடர்வதற்கான வாய்ப்பைத் திறந்து வைத்திருந்தது.

நேற்று பாரிஸில் தேசியச் சட்டமன்றம் லிபியாவில் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் இருப்பதற்கு 482 – 27 என்ற வாக்கெடுப்பில் ஒப்புதல் கொடுத்தது; சார்க்கோசியின் யுஎம்பி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி ஆகியவை போர் முயற்சிக்கு ஒற்றுமையைக் காட்டின.

பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் வாக்கெடுப்பிற்கு முன் சட்டமன்றத்தில் கூறினார்: “முன் எப்பொழுதையும்விட இப்பொழுது லிபியாவில் அரசியல் தீர்வு மிக முக்கியமாகும், அது இப்பொழுது உருவாகிக் கொண்டிருக்கிறது.” திட்டமிடப்பட்டுள்ளதீர்வு பற்றி வேறு விவரம் எதையும் அவர் கூறவில்லை; ஆனால்கேணல் கடாபி அதிகாரத்தில் இருந்து நீங்க வேண்டும் என்பது முக்கியம் என்றார்.

பிரான்சின் இராஜதந்திர தந்திரோபாயங்கள் லிபியா மீதான நேட்டோப் போரின் மூலோபாய மைய நோக்கங்களுடன் பொருந்தியவை ஆகும். போரே கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றி ஒரு வாடிக்கையாளர் நிர்வாகத்தை திரிப்போலியில் நிறுவுதலை நோக்கமாக கொண்டிருந்தது. அக்குழு, கடாபி ஆட்சியின் மூத்த அதிகாரிகளைக் கொண்டது, பெரிய எண்ணெய் நிறுவனங்கள் நாட்டின் ஆதாயம் தரும் இருப்புக்களைச் சுரண்ட வசதி செய்யும் என்பதுடன் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அண்டையிலுள்ள துனிசியா, எகிப்தி மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் அவற்றின் நடவடிக்கைகளை விரிவாக்க ஒரு அரங்கையும் அமைக்கும்.

ஆனால் நான்கு மாத காலம் இடைவிடாமல் குண்டுத்தாக்குதல் நடத்தியும்கூட இராணுவ நடவடிக்கைகள் இந்த இலக்குகளை அடையத் தவறிவிட்டது. “எழுச்சிப் போராளிகளுக்கு பிரான்ஸ் ஆயுதம் கொடுத்தது, சிறப்புப் படைகள் மற்றும் பிறஆலோசகர்களை பெங்காசியில் நிலைநிறுத்தியது, கடாபி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது பல படுகொலை முயற்சிகளை மேற்கொண்டது, கடாபியின் உள்வட்டத்திற்கு அவர்களுடைய தலைவருக்கு எதிராக நடந்துகொள்ளுவதற்கான முறையீடுகள் ஆகியவையும் இருந்தன. இப்பொழுது பேச்சுவார்த்தைகள் இராணுவத் தேக்க நிலையை முறிக்கும் வழிவகைக்கான திறன் கொண்டுள்ளதாக காணப்படுகிறது.

இந்தப் போக்குகள் லிபியாவில்ஜனநாயகத்திற்காக போரிடுவதான நேட்டோக் கூற்றுக்களின் இழிந்த தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உண்மையில் ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் ஐரோப்பிய பங்காளிகள் கடாபியை அகற்றி அதே நேரத்தில் அவருடைய அடக்குமுறைப் பாதுகாப்புக் கருவிகளை தக்கவைப்பதற்கு முயல்கின்றன. பெயரிடப்படாதமூத்த மேற்கத்தைய இராஜதந்திரி ஒருவர் பிரிட்டனின் டெலிகிராப்பிடம் நாட்டின் மேற்குப் பகுதியில் இப்பொழுதுள்ள அரசாங்க முறை கடாபி ஆட்சி விரைவில் சரிந்தால் முற்றிலும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்ற கருத்து மேற்கத்தைய இராஜதந்திரிகளிடையே உள்ளது என்று கூறினார்.

மாற்றுக்கால தேசியக் குழு, நீண்டகாலமாக அரசாங்கத்தில் முன்பு இருந்தவர்களை அதிகமாகக் கொண்டது, கடாபி வீழ்ச்சியுற்றால் இருத்தப்பட வேண்டிய தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியின் முக்கிய பதவிகள், உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மாற்றுக்கால தேசியக் குழுவின் உறுப்பினர் ஒருவரான நாஜி பாரகட் திரிப்போலியில் மாற்றுக்கால தேசியக் குழு “30 முதல் 40” பேருடன்தான் இணைந்து செயல்படத்தயார் என்று கூறியுள்ளார்.

எழுச்சிப் படைகள் எனப்படுபவற்றின்ஜனநாயக சான்றுகள் சமீபத்தில் திரிப்போலிக்கு தெற்கே நபுசா மலைகளில் அவை கைப்பற்றிய சிறுநகரங்கள், கிராமங்களில் மேற்கொண்ட அச்சுறுத்தும் ஆட்சி மூலம் இன்னும் அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு மனித உரிமைக் கண்காணிப்புக் குழு, “எழுச்சிப் போராளிகளும் ஆதரவாளர்களும் சொத்துக்களைச் சேதப்படுத்தி, சில வீடுகளை எரித்து, மருத்துவமனைகள், வீடுகள், கடைகளில் இருந்து பொருட்களைக் கொள்ளையடித்து, அரசாங்கப் படைகளுக்கு ஆதரவு எனக் கருதப்பட்ட நபர்கள் சிலரை அடித்து உதைத்தனர் என்று குறிப்பிட்டுள்ளது. காவலிஷ் கிராமத்தில் இருந்து வந்துள்ள நியூ யோர்க் டைம்ஸ்  தகவல் ஒன்று கடாபி எதிர்ப்புப் போராளிகள் அரசாங்க ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் பழங்குடி மக்கள்மீது மிருகத்தனக் கூட்டுத் தண்டனையைச் சுமத்துகின்றனர், முழுச் சமூகங்களும் பொறுப்பற்ற கொள்ளையடித்தல், தீவைப்பிற்கு முன்பு தங்கள் வீடுகளில் இருந்து ஓட வைக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் கடாபிக்காக சண்டையிடுபவர்களால் நடத்தப்படுகின்றன என்பதுதான் நேட்டோத் தலையீட்டிற்கு மத்திய போலிக்காரணமாக இருந்தன; ஆனால் இப்பொழுது ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மை படைகள்தான் குடிமக்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன.

பிரெஞ்சுத் தலைமையிலான முயற்சிகள், நேட்டோ செயற்பாட்டை முடிப்பதற்கு என்னும் பேச்சுவார்த்தைகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க முடியும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை ஐயத்திற்கு இடமின்றி போரைத் தீவிரப்படுத்த தயாரிப்புக்களை முடுக்கியுள்ளன; இதில் பேச்சுக்கள் பயனற்றுப் போனால் தரைப் போர் படைகளை நிலைநிறுத்துவது உட்பட பலவும் அடங்கியுள்ளன.

நேற்று தேசிய சட்டமன்றத்தில் பிரான்சுவா பியோனின் உரை பல அதிகம் மறைக்கப்படாது அச்சுறுத்தல்களைக் கொண்டிருந்தன. ராய்ட்டர்ஸ் அறிக்கை ஒன்றின்படி, கடாபிசுவரில் சாய்ந்துள்ள நிலையில் உள்ளார் என்றும் அதே நேரத்தில் நோக்கம் அவரைஅகற்றுவதில் இல்லை என்றும் வலியுறுத்தப்படுகிறது. பிய்யோன் தொடர்ந்தார்: “இன்னும் முறியும் கட்டத்திற்கு நாம் வரவில்லை. ஆனால் இப்பொழுதுதான் முன்னைக் காட்டிலும் உறுதியாக இருக்க வேண்டும். இப்பொழுதுதான் சர்வதேச சமூகம் முன்னைவிட உறுதியாக இருக்க வேண்டும்; வளையாமல் தான் இருப்போம் எனக் காட்டிக் கொள்ளவேண்டும்.” தேசிய சட்டமன்றத்தின் வாக்கெடுப்பு மற்றும் விவாதத்தின் நோக்கம் கடாபிக்கு பிரான்ஸ் மற்றும் நேட்டோவின்முழு உறுதிப்பாட்டையும் நிரூபிப்பது ஆகும்.”