World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

Hong Kong: A tale of two cities

ஹாங் கொங்: இரண்டு நகரங்களின் கதைகள்

By Jean Shaoul
17 March 2011
Back to screen version

ஹாங் கொங்கில் வீட்டு விலைகளிலும், வாடகைகளிலும் ஏற்பட்டுள்ள கிடு கிடு உயர்வு, கடந்த ஐந்தாண்டுகளில் இருமடங்காகி அங்கு சமூக அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக  அரசாங்க  கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகியுள்ளதோடு குறைந்த வட்டியில், அன்னிய முதலீட்டாளர்களுக்கான கதவை திறக்கும் கொள்கை, மற்றும் கட்டுமானத்திற்காக கிடைக்கும் நிலத்தின் மீதான விலையில் கடுமையான கட்டுப்பாடுஹாங் கொங் பல்கலைக்கழகத்தின் அனைத்து குடியிருப்புகளின் விலை குறியீட்டெண் 2010

ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் 2010 வரையிலான காலக்கட்டத்தில் 28.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஹாங்காங் என்பது ஒரு வானளாவிய கட்டிடங்கள்  அடங்கிய காடு என்ற பொது அபிப்பிராயம் உள்ள அதே நேரத்தில், பிரிட்டனினால் ஏற்படுத்தப்பட்ட காலனிய ஆட்சியின் கொள்கைகள் மற்றும் 1997 ல் கையளிக்கப்பட்ட பின்னர் சீனா அதை தொடர்ந்து கடைப்பிடித்தன் விளைவாக கட்டிடம் கட்டுவதற்கு வெறும் 24 சதவிகித நிலம் மட்டுமே உள்ளது என்பதை வெகு சிலரே உணர்ந்துள்ளனர். இந்த நிலக் கொள்கைகள் ஒரு சில கட்டுமான நிறுவனங்களின் கைகளில் சொத்துக்களையும், அதிகாரத்தையும் குவித்தன.

சமூக அதிருப்தியை சாந்தப்படுத்தும் ஒரு பகுதியாக 1970 களிலும் மற்றும் 80களிலும் செய்யப்பட்ட பொது குடியிருப்பின் மிகப்பெரிய விரிவாக்கத்தினால் குறைந்த வருவாய் உடைய குடும்பங்களுக்கு மலிவான வாடகையில் வீடுகள் அளிக்கப்பட்டன. ஆனாலும், இந்த நடவடிக்கை ஹாங் கொங் முதலாளிமார்களை குறைந்த சம்பளங்களை கொடுக்க நியாயப்படுத்த முடிந்தது. 1978 க்கு பின்னர், வீட்டு உரிமையாளர் திட்டம், வசதிபடைத்த தொழிலாளர்களுக்கு தங்களுக்கு சொந்தமான வீடுகளை வாங்க சாத்தியமாக்கியதோடு, குறைந்த அளவிலான பொது குடியிருப்பே ஏழை குடும்பத்தினருக்கு வாடகைக்கு கிடைக்க செய்தது

1977 ல் ஏற்பட்ட ஆசிய நெருக்கடி மற்றும் நில சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பின்னர், ரியல் எஸ்டேட் மதிப்புகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன், ஹாங் கொங் தீவு மற்றும் கோலூன் ஆகிய இடங்களில் ஹாங் கொங் வீட்டுவசதி ஆணையம் பொது வீட்டு திட்டங்களை முடக்கிய அதே நேரத்தில், வானளாவிய அடுக்குமாடி ஆடம்பர குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தை விற்பனை செய்தது.

ஆண்டு ஒன்றுக்கு 50,000 அமெரிக்க டாலருக்கு மேல் நாட்டுக்கு வெளியே பணபரிமாற்றம் கூடாது என்ற கட்டுப்பாட்டுகளையும் மீறி, ஹாங் கொங்கில் உள்ள பல ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளும், மாளிகைகளும் சீனாவின் பிரபல செல்வந்தர்களால் "பரிசு கோப்பைகளைப்" போல வீடுகள் வெறித்தனமாக வாங்கப்பட்டன. மாலை மங்கிய பின்னர் இருண்டு கிடப்பதன் மூலம் நிரூபணமாகும் ஆளில்லாத அந்த குடியிருப்புகளை, உள்ளூர் மக்களுக்கு சந்தை விலைக்கு அதிகமாக அவர்கள் விற்பதோடு, ஒவ்வொருவருக்குமான விலையை அதிகரித்து, ஏராளமானோர்களுக்கு வீடு கிடைக்காமல் செய்கின்றனர்

அழகு நயமிக்க அடுக்குமாடி குடியிருப்புகளுடன், சர்வதேச உயர் ரக பிராண்டுகள் மற்றும் பனிச்சறுக்குகளுடன் கூடிய ஏராளமான ஆடம்பர வணிக வளாகங்களுடன் ஹாங் கொங் நிரம்பி வழிகிறது. இந்த கடைகள் பாரம்பரியமான குறைந்த-விலை சந்தை வியாபாரிகளை வெளியே தள்ள வைத்துவிட்டன. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வணிக வளாகங்களில்,முன்னணி நகை மற்றும் கடிகார கடைகளுக்குள் நுழைபவர்களை மார்ஷல்கள்(marshals) வரிசையாக ஒழுங்குபடுத்துவதையும், வாடிக்கையாளர்களுக்கு, அவர்களில் பெரும்பாலானோர் சீனாவிலிருந்து வருபவர்கள், கடை உதவியாளர்கள் சேவை செய்ய தயாராக இருப்பதையும் பார்ப்பது இதுவரை இல்லாத புதுமையாக உள்ளது.  

ஹாங் கொங்கின் மிகவும் பயன்படுத்தப்பட்ட பொது குடியிருப்பு துறையால், அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப ஈடுகொடுக்க முடியவில்லை. ஏராளமான மக்கள் மூன்று அல்லது நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் அதேநேரத்தில், மற்றவர்கள் சுகாதாரமற்ற குறைந்த வாடகைக் கொண்ட தற்காலிக குடியிருப்புகளில் சட்ட விரோதமாக வசிக்கின்றனர். ஒன்றின் மீது ஒன்றான படுக்கைகள் கொண்ட குடியிருப்புகளில் வசிப்பது சில வருடங்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்டபோதிலும், மக்களுக்கு அது அசாதாரணமானதாக இல்லை

சர்வதேச சில்லறை ஆடை நிறுவனமான  G2000 ன் தலைவரும், புதிய மக்கள் கட்சியின் துணைத் தலைவருமான Michael Tien Puk-sun, தனது அலுவலகத்தை ஒரு தெரு கூட்டும் வேலை செய்வதாக மாற்றிக்கொண்ட தனது அனுபவத்தை South China Morning Post ல் எழுதினார். தனது ஒன்றின் மீது ஒன்றான படுக்கைகள் கொண்ட குடியிருப்புக்கு அவரது மாதச் சம்பளமான HK$5,000 ஹாங்கொங் டொலர் HK$1,300 ஹாங்கொங் டொலராக வாடகையாக கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவரது 15 சதுர அடி இடம், மிகவும் விரும்பத்தக்க இடங்களில் உள்ளதைக் காட்டிலும் மிக அதிகமான விலையில், சதுர அடி ஒன்றுக்கு HK$85 ஹாங்கொங் டொலராக கணக்கிடப்பட்டுள்ளது. விலை மலிவான அறைகள் சிறிதாகவும், ஈரத்துடனும்,வெளிச்சமில்லாமல் நாற்றத்துடனும், கேஸோ அல்லது சுடு தண்ணீரோ அல்லாமல் இருந்துள்ளன.

வீட்டு விலை உயர்வுடன், உணவு பொருட்களுக்கான விலை உயர்வையும் குடும்பத்தினர் முகம்கொடுக்க வேண்டியதுள்ளதோடு, கடந்த 12 மாதங்களில் சில பொருட்களின் விலை 30 சதவிகிதம் வரை அதிகரித்ததால், சிலருக்கு சாப்பாடே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இது நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக உள்ள ஜனநாயக கூட்டணியை, அரசாங்கம் உணவு வங்கிகளுக்கான தனது உதவியை மேலும் கூடுதலாக HK$500 மில்லியன் ஹாங்கொங் டொலர்களை அளித்து அதனை விரிவுபடுத்துமாறு அழைப்பு விடுக்கத் தூண்டிவிட்டது.

ஹாங்காங்கின் நபர் ஒன்றுக்கான வருமானம் ஜிடிபியில்(GDP) 42,800 அமெரிக்க டொலராகவுள்ள அதேவேளையில், ஏராளமான வருவாய் உடைய மிகச் சிறிய பிரிவினரிடம் இது ஒருபக்கமாக குவிந்துள்ளது. 2009 ல், ஹாங்காங்கின் மொத்த தொழிலாளர்களில் 15 சதவிகிதமாக இருந்த 550,000 துப்புரவாளர்கள், ஆண்டொன்றுக்கு சராசரியாக HK$7,960 ஹாங்கொங் டொலர்களை ஈட்டினர். ஹாங்காங்கின் ஏழு மில்லியன் மக்களில், ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் வறுமையில் வாழ்ந்தார்கள்.

உற்பத்தித் தயாரிப்பு வேலைகளை சீனாவின் பிரதான இடத்திற்கு மாற்றியது, ஆசிய நிதி நெருக்கடி மற்றும் பொது வேலைகளை வெளியிடங்களுக்கு வழங்கியது போன்றவற்றை தொடர்ந்து, ஹாங் கொங்கில் சம்பளங்கள் மிகக் குறைவாக உள்ளன. பொதுத் துறையில் 2005 ஆம் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு HK$10,000 ஹாங்கொங் டொலர் சம்பளம் பெற்ற உடல் உழைப்பு தொழிலாளர்கள், தற்போது தனியார் துறைகளில் அதே வேலையை HK$4,800 ஹாங்கொங் டொலர்களுக்கு செய்கிறார்கள். நாளொன்றுக்கு அவர்கள் ஒன்பது மணி நேரம் வேலை செய்கிறார்கள். இறுதியாக மே மாதத்தில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்சக் கூலியாக HK$28 ஹாங்கொங் டொலர்களாக ஹாங் கொங் கொண்டு வர உள்ளது, இது 314,600 தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும்.