World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Obama addresses UK parliament: A joint agenda for austerity and war

இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஒபாமா உரையாற்றுகிறார் சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு ஒரு கூட்டுச் செயற்பட்டியல்

By Julie Hyland
26 May 2011
Back to screen version

அதிகரித்தளவில் மதிப்பிழந்துவரும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் பிரிட்டனின் ஆழ்ந்த செல்வாக்கற்ற கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் அரசாங்கத்திற்கும் பாரக் ஒபாமாவின் மூன்றுநாள் உத்தியோகபூர்வ இங்கிலாந்து வருகை பெரும் ஆடம்பரமான பொதுஉறவு பற்றிய நிகழ்வு என்பதையும் விட அதிகமாகத்தான் இருந்தது.

தமது இரண்டு நாடுகளிலும் ஒரு சமூக எதிர்ப்புரட்சியை எப்படியும் கொண்டுவரும் வாஷிங்டன், லண்டன் ஆகியவற்றின் முயற்சிகளில் உள்ள ஒற்றுமையைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. அதே நேரத்தில் இதேபோன்ற “வைத்தியங்கள்” உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தேவை என்று வலியுறுத்தப்படுவதுடன், இதை எதிர்க்கும் திறன் உடைய சவால் விடுபவர்கள்மீது தண்டனை நடவடிக்கை என்ற அச்சுறுத்தலும் வெளிப்பட்டுள்ளது.

பெரும் ஆடம்பர அரச விருந்து, 410 துப்பாக்கி முழக்க மரியாதை, பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளிலும் உரையாற்றுதல் என்று ஒபாமாவிற்குக் கொடுக்கப்பட்ட அபூர்வ அழைப்பு ஆகியவற்றின் மூலம் இன்னும் மோசமான ஒரு பொருளாதார மந்தநிலையின் வாசலில் நின்று தட்டுத்தடுமாறும் பிரிட்டனின் ஆளும் உயரடுக்கு உலகளவில் தன்னுடைய மதிப்பைக் காட்டுவதற்கு இந்த சிறப்பு உறவு முக்கியமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால் இன்னும் வியக்கத்தக்க வகையில் ஒபாமா பிரதியுபகாரமாக கூற முற்பட்டமை மேலோங்கி நின்றது. “மனிதனுடைய உரிமைகள், சுதந்திரங்களை வகுத்துக் கூறியவர்கள், “சட்டத்தின் ஆட்சியை எடுத்துரைத்தவர்கள்என்று ஆங்கிலயர்களைப் பாராட்டியுதுடன், போர்ப்பிரதம மந்திரி வின்ஸ்டன் சேர்ச்சில் பற்றித் தெளிவான குறிப்புக்களைச் சுட்டிக்காட்டி, “தன் நாட்டிற்கும் உலகிற்கும் அசாதாரண பணியை வாழ்க்கை முழுவதும் செய்துவரும் ''அரசி எலிசபெத்திற்கு வணக்கம்ஆகியவை இதில் அடங்கியிருந்தன.

அமெரிக்கக் குடியேற்றங்கள் இழப்பு பற்றி பீதியை வெளிப்படுத்திய மூன்றாம் ஜோர்ஜின் கடிதம் காட்டப்பட்டபோது, ஒபாமா இராணியிடம், “உறவுகளில் ஒரு முக்கியமற்ற காலகட்டம்தான்அது என்றார். இது போன்ற நகைச்சுவைக் கருத்துக்கள் தொடர்ந்தன. “தேனீர் மற்றும் வரிகள் பற்றிய சிறு பூசல்”, இல்லாவிட்டால் அனைத்துமேசுமுகமாகத்தான் சென்றன”.

இது ஒரு சிறப்பு உறவு மட்டும் அல்ல; வருகையுடன் இணைந்த வகையில் ஒபாமாவும் பிரதம மந்திரி டேவிட் காமெரோனும் டைம்ஸில் கொடுத்துள்ள கூட்டறிக்கையில்நமக்கும் உலகத்திற்கும் ஒரு முக்கியமான உறவு.” எனக்கூறப்படுகின்றது.

நம் உறவின் திறவுகோல் நம் பொதுநலன்கள், பகிர்ந்து கொள்ளும் மதிப்பீடுகளை இது முன்னெடுக்கிறது. நம் இருவருக்கும் தேவையானதையும் நாம் இருவரும் நம்புவதையும் சரியாக இணைக்கிறது. இது வலுவாக இருப்பதின் காரணம் பல நேரமும் சரியான முடிவைக் கொடுத்துள்ளதுஎன்று அதில் விளக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில், ஒபாமா, “இரு உலகப் போர்கள், பனிப்போர், 1990 களின் ஆரம்பத்தில் ஸ்ராலினிச அரசுகளின் சரிவு என ஒன்றாக நாம் பல பெரிய சவால்களைச் சந்தித்துள்ளோம்என்று வலியுறுத்தினார்.

இதன்பின் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில்போர் துவங்கியது, மந்தநிலையில் அது முடிவுற்றதுஎன்றார் அவர். “ஆனால் நாம் நம்முடைய பகிர்ந்து கொள்ளப்படும் வரலாற்றில் இந்தப் புதிய அத்தியாயத்தில் நுழையும் நேரத்தில், நமக்கு முன் ஆழ்ந்த சவால்கள் தோன்றியுள்ளன.”

இந்தஆழ்ந்த” (“பெரியஎன்று கூட இல்லாமல்) சவால்கள் என்று எவற்றை ஒபாமா குறிப்பிடுகிறார்?

மிகவும் ஒரே மாதிரியான நிதிய ஒட்டுண்ணித்தனம், தடையற்ற ஊகவணிகம், அப்பட்டமான திருட்டு என்று உலகில் பொருளாதாரத்தை 2008ல் சரிவிற்குக் கொண்டுவந்த இரு நாடுகளின் அரசியல் பிரதிநிதிகள்தான் ஒபாமாவும் காமெரோனும் ஆவர்.

கூடியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒபாமாஉலகப் பொருளாதாரம் ….இப்பொழுது ஸ்திரமடைந்துவிட்டது மற்றும் மீட்சி பெற்று வருகிறது என்றார்.

இத்தகைய கூற்றை அவர் வெளியிடுவது ஒபாமா மற்றும் அவரின் உரையைக் கேட்பவர்கள் ஆகியோரைப் பொறுத்தவரை பெரும் செல்வந்தர்களுடைய இலாபம் பற்றி அக்கறை கொள்ள வேண்டியது மட்டுமே பொருளாதார அடையாளங்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நிதியத் தன்னலக்குழுவின் இருப்புநிலைக் குறிப்புக்கள் பொது நிதியில் இருந்து எடுக்கப்பட்ட பிணை எடுப்பின் மூலம் பல பில்லியன் டாலர்கள் ஏற்றம் அடைந்த நிலையில், வாஷிங்டன் மற்றும் லண்டன் ஆகியவை பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி உள்நாட்டில் சமூக உறவுகளை மாற்றி அமைக்கவும், வெளிநாடுகளில் நிதியத் தன்னலக்குழுவின் நலன்களை இன்னும் விரிவாக்கவும் முயற்சிகளை முன்னிறுத்துகின்றன.

எனவேகடந்த சில ஆண்டுகளில் சந்தைகளும் சில நேரம் தோற்கக்கூடும் என்றும் நாம் நினைவுபடுத்தப்பட்டோம்என்று அப்பட்டமாகக் கூறிய ஒபாமா, “தடையற்ற முயற்சி முறையைத் தவிர செல்வத்தையும், நவீனத்தையும் தோற்றுவிக்க வேறு பெரும் ஊக்குவிப்புகருவி இல்லைஎன்றார்.

தடையற்ற சந்தைதான் அமெரிக்காவையும் பிரிட்டனையும் வரையறுத்துள்ளது என்று அவர் அறிவித்தார்.

பிரிட்டனின் கூட்டணி அரசாங்கம் 1920களுக்குப் பின்னர் மிகக் கடுமையான செலவுக் குறைப்புக்களைச் சுமத்தி வருகிறது. அப்படி இருந்தும்கூட, இது ஆரம்பம்தான் என்று பரந்த முறையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த வார இறுதியில்தான் வணிக மந்திரி வின்ஸ் கேபிள் கார்டியனிடம் பொருளாதார நிலைமைபெரும் வேதனை அளிக்கிறது…. அரசியல் வர்க்கம் முழுமையாக எந்த அளவிற்குப் பிரச்சினை பாரியது என்று பகிரங்கமாக கூற தயாராக இல்லைஎன்றார்.

வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகம் அடுத்த 12 ஆண்டுகளில் $4 டிரில்லியன் குறைப்புக்களுக்கான சிக்கன நடவடிக்கைகளை தொடக்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் தேசியக்கடன் இப்பொழுது $14 டிரில்லியன் என்று உள்ள நிலையில் இன்னும் கூடுதலான வெட்டுக்களுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே அமெரிக்காவும் இங்கிலாந்தும்நம் குடிமக்களின் அடிப்படைப் பாதுகாப்பிற்குஉறுதியாக உள்ளன என்று ஒபாமா அறிவித்தபோது, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றை தாக்கும் அரசாங்கத்தின் தலைவர் என்னும் முறையில் தேசிய சுகாதாரப் பணியை தகர்க்கும் நோக்கமுடைய பார்வையாளரிடம்தான் பேசிக் கொண்டிருந்தார்.

தொழிலாள வர்க்கத்தின் ஆதாயங்கள், நிலைமைகள் மீது முன்னோடியில்லாத வகையில் நடத்தப்படும் தாக்குதல்களில் இருந்து விளையும் தவிர்க்க முடியாத சமூக வெடிப்பு, வாஷிங்டன் மற்றும் லண்டனில் உயரடுக்குகளால் எதிர்கொள்ளப்படும் சவால்களில் ஒன்றாக இருக்கும்.

இவை சர்வதேசப் போட்டியாளர்களிடம் இருந்தும் பெருகிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன

தற்கால அரசியலின் மத்திய கூறுபாடு, வரலாற்று, பொருளாதார ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அசாதாரணமாக வீழ்ச்சியடைந்துள்ளது ஆகும். வாஷிங்டனுக்கும் (அதே நிலைப்பாட்டில் லண்டனும் உட்படும்) அதன் முக்கிய போட்டி நாடுகளுக்கும் இடையே தீவிர அழுத்தங்களின் குறிப்பிடத்தக்க மூலங்களாக இவையே உள்ளன.

சீனா, இந்தியா போன்ற எழுச்சி பெற்று வரும் பொருளாதார சக்திகள் பற்றிக் குறிப்பிட்ட ஒபாமா, “சில பிரிவினரிடையே இந்த தேசங்களின் எழுச்சி அமெரிக்க, ஐரோப்பிய செல்வாக்கை உலகெங்கிலும் குறைத்துவிடுமோ என்ற வினாக்களை எழுப்புதலை வழமையாக்கியுள்ளது. சிலவேளைகளில், இந்த தேசங்கள் வருங்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, நம் தலைமைக்கான காலம் கடந்துவிட்டது என்றும் வாதிக்கப்படுகிறதுஎன்றார்.

இதை அவர் உறுதியாக நிராகரித்தார்: “நம் தலைமைக்கான காலம் இப்பொழுதே உள்ளது.” என்ற அவர், “உலகத் தலைமைக்கான பொறுப்புக்களை அதிக நாடுகள் எடுத்துக் கொள்ளும்போது, நம் கூட்டு இந்த நூற்றாண்டை உருவமைப்பதில் தவிர்க்க முடியாததாக இருக்கும்என்று சேர்த்துக் கொண்டார்.

இங்குத்தான் மற்றொரு சவால் உள்ளது; பெருகிய முறையில் இராணுவாதத்தில் ஈடுபடுதல்.

அமெரிக்க ஜனாதிபதி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் துருப்புக்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவது பற்றிப் பெரிதும் கூறினார். அதே நேரத்தில் எகிப்து, துனிசியா ஆகிய நாடுகளில் மக்கள் இயக்கங்களைப் பாராட்டினார்; அங்குமக்கள் இரும்புக்கரப் பிடிப்பில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள திரண்டுள்ளனர்என்றார்.

தங்கள் கூட்டு அறிக்கையில் ஒபாமாவும் காமெரோனும், “இப்பகுதியில் நிகழ்வுகள் ஒரேசீராக இருக்காது. இம்மாற்றத்தின் வேகம், அளவு ஆகியவற்றை ஆணையிடுவது நம் வேலை அல்லஎன்று கூறியுள்ளனர்.

இது பொய் என்பது, அறிக்கை வருவதற்கு முதல் நாள் நேட்டோ திரிப்போலியில் லிபியத் லைவர் முயம்மர் கடாபியை அகற்றும் நோக்கத்துடன், அதன் மிகத் தீவிர குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது என்ற உண்மையில் வெளிப்பட்டது.

செய்தியாளர் கூட்டம் ஒன்றில் இருவரும் தங்களுடைய லிபியத் தாக்குதலுக்கும் ஜோர்ஜ் புஷ் மற்றும் டோனி பிளேயர் ஆப்கானிஸ்தானத்திலும் ஈராக்கிலும்  நடத்திய போர்களுக்கும் இடையே உறவு ஏதும் இல்லை என்று மறுத்தனர். “ஆக்கிரமிப்புப் படைகள், படையெடுக்கும் இராணுவங்கள்ஆகியவற்றை தாங்கள் கொள்ளவில்லை என்று காமெரோன் கூறினார்; ஒபாமா இராணுவச் சக்திமூலோபாய வகையில் கவனத்துடன் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

உண்மையில், தவிர்க்க முடியாத போர்கள் என்று புஷ், பிளேயர் நடத்திய போர்களுக்கும் இப்பொழுது ஒபாமாவும் காமெரோனும் நடத்தும் குற்றம் சார்ந்த இராணுவ நடவடிக்கைக்கும் இடையே நேரடித் தொடர்ச்சிதான் உள்ளது. மீண்டும்பொது நலன்கள்”, “பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்பீடுகள்என்பவை எண்ணெய் இருப்புக்கள் மீது கட்டுப்பாடு, மற்றும் மூலோபாய புவி அரசியல் முக்கியத்துவம் கொண்ட ஒரு நாட்டில் நிறுவதல் கோட்டையைஎன்றுதான் உள்ளன.

கூடியிருந்த செய்தியாளர்களிடம் காமெரோன், அமெரிக்காவும் இங்கிலாந்தும், “லிபியாவில் வெப்ப நிலையை அதிகரிக்கும்என்றார்; “அனைத்து விருப்பு உரிமைகளும் பரிசீலனையில் உள்ளனஎன்றும் சேர்த்துக் கொண்டார். இதில் லிபியாவில் பயன்படுத்தப்பட இங்கிலாந்தின் தாக்கும் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படல், மற்றும் இரு தலைவர்களும் கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மூலம்எழுச்சிசக்திகளுக்கு ஆயுதம் கொடுத்தல் பற்றி விவாதித்தாக வந்துள்ள தகவல்கள் ஆகியவை உள்ளன.

கடாபி மீது செலுத்தப்படும் அழுத்தத்தில்குறைப்புஏதும் இருக்காது என்று ஒபாமா கூறினார். “ பெரும் வான்படையின் தாக்கத்தை கொண்டு வந்துள்ளோம். இது ஒரு பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு மெதுவான, ஆனால் உறுதியான வழிவகை; ஆட்சியின் சக்திகளைத் தளர்ச்சியடையச் செய்துவிடுவோம்என்றார் அவர்.

லண்டனும் வாஷிங்டனும்மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் பலருக்கும் உள்ள சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் மற்றும் பாசாங்குத்தனம் என்ற குற்றச்சாட்டுகளையும் கடந்துவர வேண்டியுள்ளதுஎன்று ஒபாமா ஒப்புக் கொண்டார்.

இக்குற்றச்சாட்டுகள் பஹ்ரைனில் நடக்கும் எதிர்ப்பாளர்களை அடக்குமுறை மூலம் கையாண்டிருப்பது குறித்த அமெரிக்க, பிரிட்டஷ் மௌனம் பற்றித் தொடர்புடையவை. அதாவது நடைமுறை ஆதரவு பற்றியவை. கடந்த வெள்ளியன்றுதான் காமெரோன் பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமத் அல்-கலிபாவை டௌனிங் தெருவிற்கு அவர் உத்தியோகபூர்வமாக வந்திருந்தபோது வரவேற்றிருந்தார்.

இவற்றுள்  வாஷிங்டனும் லண்டனும் சமீபத்தில் தங்கள் சிறப்புப் படைகள் யேமனில் பயன்படுத்தப்டுவதை விரிவாக்கம் செய்தல், சிரியாவிற்கு எதிரான பதிலடி நடவடிக்கை என்னும் அச்சுறுத்தல்கள், ஈரானுக்கு எதிரான கூடுதல் நடவடிக்கை பற்றிய திட்டங்கள் குறித்து லண்டனில் ஒபாமா பேசியது ஆகியவை அடங்கும். வழக்கம் போல் சவுதி அரேபியா பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

வாஷிங்டனுக்கு வந்திருந்த இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடன்யாகுவால் சீற்றமுடன் நிராகரிக்கப்பட்ட இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கும் இடையே ஒருசமாதான உடன்பாட்டிற்குஆதரவு என்னும் இவருடைய பகிரங்க அறிக்கை குறித்துஒபாமா ஐக்கிய நாடுகள் சபையில் ஆதரவுத் தீர்மானத்தை அடையலாம் என்ற கருத்து பாலஸ்தீனியர்களிடையே இருப்பது குறித்து எச்சரித்தார்.

டைம்ஸில் வந்துள்ள அறிக்கை, “நாங்கள் வன்முறையை பயன்படுத்துவதில் தயக்கம் கொண்டுள்ளோம்; ஆனால் நம் நலன்களும் மதிப்பீடுகளும் ஒன்றாக வரும்போது, செயல்படுதவற்குப் பொறுப்பு எங்களிடம் உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.” என்று கூறுவது முக்கியம் வாய்ந்தது ஆகும்.

ஆப்கானிஸ்தானில் துருப்புக்களைக் குறைப்பது பரிசீலனையில் இருக்கையில், அது அவை மற்ற இடங்களில் பயன்படுத்தப்படலாம் என்ற கண்ணோட்டத்தில்தான் உள்ளது.

இந்த உள்ளடக்கத்தில் இரு தலைவர்களும் அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு மூலோபாயக் குழு ஒன்றைத் தோற்றுவிப்பது பற்றி அறிவித்தனர். அக்குழுஉலகப் பொருளாதார, பாதுகாப்புச் சூழ்நிலையில்  நீண்டகாலச் சவால்களை சந்திக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையை வளர்க்கும்.”

அமெரிக்க தேசிய பாதுகாப்பு  அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்புச் செயலகம் இரண்டும் கூட்டாகத் தலைமை தாங்கும் இந்த அமைப்பு, “பாதுகாப்பு, சர்வதேச நிதி உதவி, உதாரணமாக ஆப்கானிஸ்தான் அல்லது லிபியாவில் போலல்லாது ஏற்கெனவே கூட்டு நடவடிக்கை இல்லாத பிரதேசங்களில் வெளியறவுக் கொள்கையில் புதிய மூலோபாயங்களை வளர்க்கும் மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்கள் பற்றி ஆராயும்.” என்று இண்டிபெண்டன்ட் பத்திரிகை  தகவல் கொடுத்துள்ளது.