World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

The JVP crisis and the SEP’s struggle for Marxism in Sri Lanka

இலங்கையில் ஜே.வி.பீ. நெருக்கடியும் மார்க்சிசத்துக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டமும்

By the International Students for Social Equality
8 November 2011
Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) உள் நெருக்கடி பற்றி கொழும்பில் பகிரங்க விரிவுரை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

கட்சியின் தலைமைத்துவம் சந்தர்ப்பவாதமானது என்றும் கட்சியின் ஆதரவு வீழ்ச்சியடைந்தமைக்கு தலைமைத்துவமே பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டும் ஒரு மாற்றுக் குழுவினால் ஜே.வி.பீ.யினுள் ஏறத்தாழ ஒரு முழு பிளவு வெடித்துள்ளது. தாம் 2004ல் குமாரதுங்க அரசாங்கத்துக்குள் நுழைந்தும், 2005ல் ஜனாதிபதி மஹிந்தி இராஜபக்ஷ தேர்வு செய்யப்படுவதற்கு ஆதரவளித்தும் மற்றும் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்தும் தவறுகளை செய்துள்ளதாக இரு தரப்பினரும் பகிரங்கமாக பிரகடனப்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் இரு எந்தத் தரப்பினரும் எந்தவொரு விளக்கமும் தரவில்லை.

ஜே.வி.பீ. கூறிக்கொள்வது போல், அது ஒரு காலமும் மார்க்சிசக் கட்சியாக இருக்கவில்லை. மாறாக அது ஆரம்பத்தில் இருந்தே ஸ்ராலினிம், காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்கள வெகுஜனவாதத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. கடந்த இரு தசாப்தங்களாக, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்குள் ஒருங்கிணைந்திருந்த ஜே.வி.பீ., நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத யுத்தத்தை பலமாக ஆதரித்தது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஜே.வி.பீ. பரந்தளவில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்த மாற்றுக் குழுவினர் ஜே.வி.பீ.யை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசியல் பொறியாக புதுப்பிக்கும் முயற்சியில் ஏக்கத்துடன் முயற்சிக்கின்றனர்.

சோ.ச.க.யும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) கடந்த நான்கு தசாப்தங்களாக உண்மையான மார்க்சித்தின் அடிப்படையில் ஜே.வி.பீ.க்கு எதிராக ஒரு கொள்கைரீதியான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வந்துள்ளன. முன்னாள் பு.க.க. பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய 1970களில் எழுதிய மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலும் வர்க்கப் பண்பும் என்ற நூல், ஜே.வி.பீ.யின் தோற்றங்களையும் பரிணாமங்களையும் புரிந்துகொள்ள விரும்பும் எவரும் வாசிக்க வேண்டியது அவசியமாகும்.

ஐ.எஸ்.எஸ்.இ. நடத்தும் கூட்டத்தில், சகல வடிவிலுமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை அடிப்படையிலேயே எதிர்க்கும் உண்மையான மார்க்சித்தின் அடிப்படையில் ஜே.வி.பீ.யின் நெருக்கடி பற்றிய ஒரு பகுப்பாய்வு முன்வைக்கப்படும்.

விரிவுரையாளர்: Wije Dias, SEP General Secretary
இடம்: Mahaweli Centre Auditorium, Green Path, Colombo.
திகதி: Thursday, November 17
நேரம்: 3.30 p.m.