World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Demagogy in defense of the rich

செல்வந்தர்களைப் பாதுகாப்பதற்கான வாய்வீச்சு

Joseph Kishore
19 September 2011

Back to screen version

அவருடைய போலித்தனவேலைகள் பிரச்சாரத்துடன் சேர்ந்த வகையில்மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி இன்னும் பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு குறைந்த வரிவிகிதங்கள் என்று பில்லியன் கணக்கான டாலர்கள் செலவைக் குறைப்பதற்கான வெட்டுக்களைக் கொண்டுவரும் 4 டிரில்லியன் டொலர்கள் பற்றாக்குறையை வரவு-செலவுத் திட்டத்தில் குறைக்கும் திட்டம் பற்றி ஜனாதிபதி ஒபாமா இன்று அறிவிப்பார்.

வெள்ளை மாளிகையின் இழிந்ததன்மையை மிகைப்படுத்திக் கூறுவது என்பது இயலாத காரியம் ஆகும்; இது இப்பொழுது பிரச்சார வகையிலான நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளது; அவை கூறுவதாக இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட பொருளைச் செய்யும் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டுதல் என்பதே அது.

சமூகப் பாதுகாப்பு நிதியைக் கரைத்து பெருநிறுவனங்களுக்கு புதிய வரிச் சலுகைகள் என்னும் பணமழையை அளிக்கும் நடவடிக்கைகளைக் காங்கிரஸ் இயற்றுவதற்குக் கோரப்படும் பொது உறவு நடவடிக்கைகளில் தொழிலாளர்களும் ஒரு பகுதியினராகச் சேர்க்கப்படுகின்றனர்; அதே நேரத்தில் அதிகப்பட்சம் மிகச்சில வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும். “வேலை தோற்றுவிக்கும் திட்டம் என்று அழைக்கப்படுவதுகுடியரசுக் கட்சியினரால் அதிகம் ஆதரிக்கப்படுபவைசுகாதாரப் பாதுகாப்பு இன்னும் பிற சமூக நலத் திட்டங்கள் மீதான தாக்குதலைக் குறைக்கும் வகையில் இனிப்புப் பூச்சு உடையவைபல மில்லியன் மக்களுக்குப் பேரழிவு விளைவுகளைத்தான் கொடுக்கும்.

ஒபாமா உண்மையான நடவடிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லைபரந்த பொதுநலத்திட்டம் போன்றவற்றை; பெருமந்த நிலைக்குப் பின் ஆழ்ந்த வேலைகள் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு; அதே நேரத்தில் அவர் சமூகநலச் செலவுகளில் பெரும் வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்; இவை வேலையற்றோரின் இடர்களைப் பெருக்கும்.

எந்த உடன்பாட்டின் இறுதி வடிவமைப்பும் இரு கட்சி வரவு-செலவுத் திட்டக் குழுவினால் முடிவெடுக்கப்படும்; மிக அதிகம் பேசப்பட்டுள்ள கடன் உச்சவரம்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஆகஸ்ட் மாதமியற்றப்பட்ட சட்டவரைவிற்காக இக்குழு நிறுவப்பட்டது. முற்றிலும் ஜனநாயக விரோதமானஉயர்குழு அமெரிக்க மக்களால் பெரிதும் எதிர்க்கப்படும் நடவடிக்கைகளை எப்படியும் இயற்றிவிடுவதற்கான பரந்த அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

அவருடைய வேலைத்திட்டங்கள் அனைத்தும் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் இன்னும் பிற பற்றாக்குறைக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் நிதி பெற வேண்டும் என ஒபாமா வலியுறுத்துகிறார். நவம்பர் மாதம் தன் திட்டத்தை வெளியிட இருக்கும் குழுவிடம் அவர்பெரிய அளவில் செயல்பட்டு, அடுத்த தசாப்தத்திற்குள் 1.5 டிரில்லியன் டொலர்கள், வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையையும் மீறிக் குறைக்க வேண்டும் என வலியிறுத்தியுள்ளார்.

இந்த வெகுஜனத் திருப்தியைக் கூட்டும் வகையில், ஒபாமா “Buffet tax”என்று அழைக்கப்படுவதையும் முன்வைக்க உள்ளார்இது பெரும் செல்வந்தர்களின் மீதான வரிவிதிப்பில் குறைந்த பட்ச உயர்வு, இதையொட்டி அவர்கள் சாதாரண மக்களைவிட குறைந்த வரிகளைக் கொடுக்க வேண்டியதில்லை என உறுதி செய்யப்படும். ஒபாமாவிற்கு நன்கு தெரிந்துள்ளபடி, இந்த மிகக்குறைந்த திட்டம்றேகன் நிர்வாகத்தின் முதல் ஆண்டுகளில் இருந்த செல்வந்தர்களுக்கான வரிவிகிதங்களைக்கூட இது மீட்காது பல ஜனநாயகக் கட்சியினராலும் குடியரசுக் கட்சியினராலும் எதிர்க்கப்பட்டதால் வரும்போதே மடிந்துவிட்டது.

குடியரசு செனட் சிறுபான்மைத் தலைவர் மிட்ஸ் மக்கொனல் ஞாயிறன்று இதேபோன்ற திட்டம் 2009ல் காங்கிரசால் நிராகரிக்கப்பட்டது, அப்பொழுது இரு பிரிவுகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை கொண்டிருந்தது என்று குறிப்பிட்டார். பல விஷயங்களில் இரு கட்சியினரும் உடன்பட்டுள்ளனர் என்றும் குழு மூலம் ஒருபெரிய இரு கட்சிச் சாதனை வெளிவரும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த முழு வழிவகையின் விளைவும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து செல்வந்தர்களுக்கு இன்னும் செல்வம் பகிர்ந்து கொடுக்கப்படும் என்பதே ஆகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிதியச் சரிவைத் தொடர்ந்து அமெரிக்க ஆளும் உயரடுக்கு உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் வங்கிகளுக்குப் பிணைஎடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதையொட்டி பங்குச் சந்தைகளில் ஏற்றம் ஏற்பட்டு, அவை பெரும் செல்வந்தர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு கேடயமாயின. இதையொட்டி ஏற்பட்ட கடன் நெருக்கடி ஒரு வாய்ப்பாக  பயன்படுத்தப்பட்டு முதலில் குறைமதிப்பு இறுதியில் தகர்த்தல் என்று 20ம் நூற்றாண்டு முழுவதும் தொழிலாள வர்க்கம் பாடுபட்டுச் சாதித்த அனைத்து சமூக நலன்களையும் அழித்துவிட்டது.

அமெரிக்காவின் சமூக உறவுகளிலுள்ள உண்மை நிலை உத்தியோகப்பூர்வ அரசியல் வாழ்வில் பிரதிபலிப்பைக் காணவில்லை மில்லியன் கணக்கான மக்கள் வீடின்மை, பட்டினி, நம்பிக்கையின்மை ஆகியவற்றின் விளிம்பில் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகள் வாழ்க்கைத் தரங்களில் பெரும் சரிவை ஏற்படுத்திவிட்டன.

அமெரிக்க மக்கள் கணக்கீட்டு அறிக்கை கடந்த வாரம் வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, அமெரிக்காவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை சான்றுகளின்படி 1959 நிலைக்குச் சென்றுவிட்டன. 2010ல் 2.6 மில்லியன் கூடுதலான மக்கள் (மொத்தம் 46.2 மில்லியன் மக்கள்) அரசாங்கத்தின் அபத்தமான வறுமைக்கோட்டுநிலை நுழைவிற்கும் கீழே உள்ளனர்.

இந்த அறிக்கை நடுத்தர வருமான அளவுகள் 1996ல் கடைசியில் இருந்தவற்றில் இருந்தும் தீவிரமாகக் குறைந்துவிட்டதை ஆவணப்படுத்தியுள்ளது. பெருமந்தநிலைக்குப் பின் முதல் தடவையாக மக்கள் நீண்டகால வருமானத் தேக்கத்தைக் காண்கின்றனர்.

சமூக இழிவின் முக்கிய உந்துதல் சக்தியாக வேலையின்மை உள்ளது; முன்னோடியில்லாத வகையில் நீண்ட கால வேலையின்மைத் தரம் உள்ளது. 2010ல் 48 மில்லியன் மக்கள் 18ல் இருந்து 24 வயது வரை இருப்பவர்கள் ஒரு வார வேலைகூட கிடைக்காமல் இருந்தனர்; இது முந்தைய ஆண்டை விட 3 மில்லியன் அதிக எண்ணிக்கையாகும். ஒவ்வொரு வேலைச் சந்தையும் ஒரு வேலை பற்றிய நம்பிக்கை ஒளிக்கீற்றைக் காண்பிப்பவைகூட ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.

ஏற்கனவே பேரழிவிலிருக்கும் பொருளாதார நிலைமை மோசமாகிவருகிறது என்பதற்கான தெளிவான அடையாளங்கள் உள்ளன. கடந்த மாதம் வேலைவிகித வளர்ச்சி பூஜ்யம் என்ற அறிக்கை இருந்தும்கூட, சமூகப் பொருளாதாரத் தகவல்கள் புதுப்பிக்கப்படும் மந்தநிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்கள் கடந்த மாதம் அவற்றின் வேலையின்மை விகிதங்கள் உயர்ந்ததைக் கண்டன; வேலையின்மை பற்றிய புதிய நிலைகள் கடந்த வாரம் ஜூன் மாதத்திற்குப்பின் மிக அதிகம் உயர்ந்தன; குடும்பங்களின் செல்வம் ஓராண்டில் முதல் தடவையாக இரண்டாம் காலாண்டிலும் சரிந்தது.

இதற்கிடையில் பெருநிறுவனங்கள் செல்வத்தைப் பதுக்குகின்றன. 2 டிரில்லியன் டொலருக்கும் மேலான தொகை ஜூன் மாதம் நிதியப் பிரிவற்ற நிறுவனங்களின் இருப்புநிலைக் குறிப்புக்களில் தேங்கியுள்ளன; இது மார்ச் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 பில்லியன் டொலர்கள் அதிகம் ஆகும். பெருநிறுவன-நிதிய உயரடுக்கு ஒரு மூலதன வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வேலையின்மையை உயர்ந்த அளவில் நிறுத்தி, வெகுஜன வேலையின்மையைப் பயன்படுத்தி ஊதியங்களைக் குறைக்க முற்பட்டுள்ளது; அதே நேரத்தில் இது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எந்தப் புதிய வேலை கொடுப்பதற்கும் முன்னிபந்தனையாகக் கோருகிறது.

அமெரிக்கா வர்க்கப் போராட்டத்திற்கு வெடிப்புத்தன்மையுடன் வருவதற்கு கனிந்து உள்ளது. சமூக அழுத்தங்கள் வளர்கின்றன, அரசியல் அமைப்புமுறை எந்தத் தீர்வையும் முன்வைக்க இயலவில்லை. நிதியத் தன்னலக்குழு எதிர்ப்புக் காட்டும் எந்த நடவடிக்கையும் செயல்படுத்தப்பட முடியாது; இதுவோ இரு அரசியல் கட்சிகளையும் ஆதிக்கத்தில் கொண்டிருப்பதுடன், நடைமுறையில் திறமையான சர்வாதிகாரத்தையும் கொண்டுள்ளது.

ஆளும் வர்க்கமும் இதன் உட்குறிப்புக்கள் பற்றிக் கவலை கொண்டுள்ளது. நியூ யோர்க்கின் பில்லியனர் மேயரான மைக்கேல் ப்ளூம்பேர்க் கடந்த வாரம் உயர் வேலையின்மையினால், குறிப்பாக இளைஞர்களிடையே, கலகம் வெடிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்தார். “அதுதான் கெய்ரோவில் நடைபெற்றது. அதுதான் மாட்ரிட்டிலும் நடைபெற்றது என்று உள்ளத் தளர்ச்சியுடன் அவர் கூறினார்.

ஒபாமாவின் செல்வந்தர்கள் சார்பில் ஜனரஞ்சக உரையைக் கொடுப்பது எதையும் தீர்க்காது. மக்கள் இச்செயல்களை முன்னரே பார்த்துள்ளனர்.

வெகுஜனப் போராட்டங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நெருக்கடிக்கு எத்தீர்வும் வராது. மில்லியன் கணக்கான மக்கள் ஒரு கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டாலொழிய முற்றிலும் எதுவும் வெற்றிபெறாது. எதிர்ப்புமுறைகள் அரசியல் கட்டமைப்பு மற்றும் அதன் பல முட்டுக்களில் இருந்தும் முறித்துக் கொண்டுவரும்  தன்மையுடையவையாக இருக்க வேண்டும்; அதேபோல் தொழிற்சங்கங்கள் இன்னும் பல ஜனநாயக கட்சியின் போலி இடதுப் பிரிவுகளில் இருந்தும் முறித்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய போராட்டம் தேவை என்பது மட்டுமின்றி, தவிர்க்கப்பட முடியாததும் ஆகும். அதிருப்தி, ஏமாற்றம், சீற்றம் ஆகியவை வளர்ந்து, வெளியேற்றம் காண முடியாமல் பெரும் தேக்க நிலையில் உள்ளன. ஆனால் இந்த எதிர்ப்பு வெற்றிபெற வேண்டும் என்றால், அது அரசியலளவில் ஒரு முழு நனவு கொண்ட வடிவமைப்பைக் கொள்ள வேண்டும். இங்குத்தான் புரட்சிகரத் தலைமை மற்றும் ஒரு சோசலிசத் திட்டத்தின் வளர்ச்சி ஆகியவை உறுதியாக இருக்க வேண்டும்.

உழைக்கும் மக்கள் ஓர் அடிப்படைப் பொருளாதார, அரசியல் வாழ்வு முழுவதும் ஒரு மறுஒழுங்கமைப்பதைத் தவிர வேறு எதுவும் பலனளிக்காது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அணிதிரட்டி, அதன் அரசியல் பிரதிநிதிகளையும் அவ்வாறு அணிதிரட்டி, இந்த இயக்கத்திற்கு ஒரு சோசலிச, புரட்சிகர முன்னோக்கை அளிப்பது ஆகும்.

ஒபாமா மற்றும் முழு அரசியல் ஸ்தாபனமும் எதிர்ப்புரட்சிக் கொள்கைகளுக்கான விடையிறுப்பு, SEP ஐ தொழிலாளர் சக்தியாகவும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்குத் தயார் செய்யும் வகையில் கட்டமைப்பதுதான்.