World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK: Poorer families to lose up to one-quarter of income due to government austerity

ஐக்கிய இராச்சியம்: அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளால் வறிய குடும்பங்கள் வருமானத்தில் கால் பகுதியை இழக்கும் நிலை

By Robert Stevens
12 April 2012
Back to screen version

கடந்த ஆண்டில் பிரிட்டனில் வறுமை கணிசமாக உயர்ந்துவிட்டது என்பது பதிவாகிவிட்ட உண்மையாகும். மிகச் சமீபத்திய அளவைகளின்படி, மக்களில் 22%க்கும் மேலானவர்கள் உத்தியோகபூர்வமாக வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். தேசிய அளவில், மூன்று குழந்தைகளில் ஒன்று வறுமையில் வாடுகிறது. சில பகுதிகளில் குழந்தைகள் வறிய நிலை என்பது 40 முதல் 50% என்று உள்ளது.

ஆனால் புள்ளிவிவரங்கள் மட்டும் இத்தகைய ஆழ்ந்து நிலைத்துள்ள, இழிந்த நிலைமைளால் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் மனித இழப்புக்களின் தன்மையை முற்றிலும் வெளிப்படுத்திவிடமுடியாது. லண்டனில் இருந்து வெளிவரும் Evening Standard இதைப்பற்றிச் சற்று தெளிவுபடுத்துகிறது.

2012ல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் லண்டன் தெருக்களில் பட்டினி கிடக்கின்றன என்ற தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் ஆசிரியர் டேவிட் கோஹன் Kids Company எனப்படும் அறக்கட்டளை நிறுவனத்தின் பணி பற்றித் தகவல் கொடுத்துள்ளார்; இந்நிறுவனம் தற்பொழுது ஒவ்வொரு வாரமும் 2,000 சிறு வயதினருக்கு உணவளித்து வருகிறது; அவர்களில் பலர் பெரும் ஊட்டச்சத்து அற்ற நிலையில் உள்ளனர்.

தன்னுடைய கட்டுரையை கோஹன் இவ்வகையில் ஆரம்பிக்கிறார்: தெளிவான அடையாளங்களுடன் குழந்தைகள் வருகின்றன: சுருங்கிய முகங்கள், வற்றிய தோல், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள், அழுகும் பற்கள். சில 11 வயதுக் குழந்தைகள் மிகவும் குறைந்த எடையில் இருப்பது, குறைந்த தேகவாகுவைக் கொண்டிருப்பது அவர்களுக்கு 6 வயதுத் தோற்றத்தைத்தான் கொடுக்கிறது; சில நேரம் மூன்று அல்லது நான்கு வயது உடையவர்கள் போல் தோன்றுகின்றனர்.

இக்கோடையில் லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துகிறது; உலக சோசலிச வலைத் தளம் கூறியுள்ளபடி, இந்நிகழ்வு நிதிய உயரடுக்கின் ஆடம்பரக் களிப்புக் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்பதற்கு அனைத்தும் உறுதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், 2012ல் லண்டன் தெருக்களில் கடுமையான ஊட்டச்சத்தற்ற குழந்தைகளைக் காணமுடியாது, ஒலிம்பிக் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தெருக்களில் இவர்கள் இருக்க மாட்டார்கள். என்று கோஹன் குறிப்பிட்டுள்ளார்.

Standard இடம் Kids நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Camille Batmanghelidjh கூறினார்: பட்டினிப் பிரச்சினைகளுடன் எங்களை அணுகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்தில் ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது; தங்களையே அறிமுகப்படுத்திக் கொண்டு அன்றாடம் வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இரு மடங்காகிவிட்டது.

இப்பெரிய அளவிற்கு மௌனமாகப் பட்டினித் தொற்று ஏற்பட்டுள்ளதைச் சமாளிக்க நாங்கள் திணறுகிறோம். ஒவ்வொரு வாரமும் நாங்கள் உதவும் 2,000 குழந்தைகளில் 60% மேலானவர்கள் வீட்டில் உணவில்லை என்கின்றனர், 85% எங்களைத்தான் நாளின் முக்கிய உணவிற்கு நம்பியுள்ளனர். நான் காண்பது எனக்கேகூட அதிர்ச்சி அளிக்கிறது. தானும் தன்னுடைய சகோதரனும் பட்டினி இருந்த நிலையில் இருவரும் தாங்கள் சென்றிருந்த அடுக்குவீட்டில் இருந்து குளிரூட்டப்பட்டிருந்த மாமிசத்தைத் திருடியதாக என்னிடம் ஒரு குழந்தை கூறியதுஅவர்கள் அப்படியே அதை பச்சையாகத் உண்டுள்ளனர்.

உள்ளபடி முழுப்பட்டினி கிடக்கும் குழந்தைகளை நாங்கள் காண்கிறோம்: இதில் பெற்றோர்கள் பிரித்தானியாவில் தொடர்ந்து வசிக்க விரும்புகின்றனர், ஆனால் அதற்கிடையில் உதவி நலன்களோ, வேலைகளோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை; அதையொட்டி குழந்தைகளுக்கு அவர்கள் ஏதும் செய்யமுடிவதில்லை. லண்டனிலேயே பிறந்த பெற்றோர்களுடைய குழந்தைகளும்கூட இப்படிப் பட்டினியில் இருப்பது அதிகரித்துள்ளதை நாங்கள் காண்கிறோம்; எப்படியோ அவர்கள் வாழ்கிறார்கள், விலைவாசி ஏற்றம், வேலையின்மை என்பதுடன் இப்பொழுது பாதி வாரத்திலேயே உணவின்மையையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர் என்னும் நிலை வந்துவிட்டது.

பல மில்லியனர்களும், பில்லியனர்களும் வசிக்கும் இந்நகரத்தில், பல உழைக்கும் வர்க்கக் குடும்பங்களைப் பற்றிய பரிதாப நிலையில் இந்த விளக்கம், அரசாங்கத்தின் மந்திரமான நாம் அனைவரும் ஒன்றாகக் கூடி வாழ்கிறோம் என்பதின் பின் உள்ள உண்மையைத்தான் நிரூபிக்கிறது. பட்டினி கிடக்கும் குழந்தைகள் உணவிற்கு தொண்டுநிறுவனங்களைத்தான் நம்பியுள்ளன; அதே நேரத்தில் பில்லியனர்கள் ஆடம்பர உச்சியில் களிக்கின்றர், இழிந்த அளவு பெரும் செல்வத்தைக் கொண்டுள்ளனர்; அரசாங்கத்தால் பெரும் வரிவிலக்குகளைப் பெறுகின்றனர்; தலைநகரில் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அரண்மனைகளைப் போன்ற வீடுகளை, வாங்குகின்றனர்.

2011 ம் ஆண்டிற்கான Sunday Times கொடுத்துள்ள பணக்காரர்கள் பட்டியலில் நிதியப் பிரபுத்துவம் இன்னும் 18% உயர்வைத் தன் செல்வத்தில் கொண்டுள்ளது என்றுகாட்டுகிறது. இந்த 1,000 பேரும் இப்பொழுது மொத்தத்தில் 395.8 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். இது மட்டுமே அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகள் மூலம் சேமிக்கும் 83 பில்லியன் பவுண்டுகளைப் போல் 5 மடங்காகும்.

மில்லியன் கணக்கான மக்கள் முகங்கொடுக்கும் பெரும் வறுமையானது ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களைக் குறைக்கும் வகையில் நடத்தும் முழு உணர்வுடன் கூடிய தாக்குதலின் விளைவாகும். முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தின் பல பில்லியன் பவுண்டுகள் பெரும் செல்வந்தர்களைப் பிணை எடுப்பதற்கு அளித்த நிதி கன்சர்வேடிவ்/லிபரல் கூட்டாட்சி அரசாங்கத்தால் தொடர்ந்து, ஆழ்ந்து செயல்படுத்தப்படுகிறது.

சிக்கன நடவடிக்கைகளின் முதல் ஆண்டுகள், உயரும் பணவீக்கம் ஆகியவற்றால், 2011ம் ஆண்டு வீடுகளில் செலவழிக்கக்கூடிய வருமானம் என்பது 1921க்குப் பின்னர் மிகவும் குறைந்த அளவை அடைந்துவிட்டது.

வீடுகளின் வருமானம் என்பது ஐந்து தொடர்ச்சியான ஆண்டுகளிலும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பாங்க் ஆப் இங்கிலாந்து குடும்பங்கள் செலவழிக்கக்கூடிய பணத்தில் ஆண்டு ஒன்றிற்கு 552 பவுண்டுகள் இழப்பைக் கண்டுவிட்டன என்று கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கையும் கூட ஒரு குறைமதிப்பாக இருக்கலாம்; ஏனெனில் கடந்த ஆண்டின் விற்பனை வரி (VAT) உயர்வு மட்டுமே ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்குச் சராசரியாக 450 பவுண்டுகள் ஆண்டிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலையின்மை தொடர்ந்து ஏற்றம் பெற்றுள்ளது; ஒரு மில்லியனுக்கும் மேலான இளைஞர்கள் இப்பொழுது வேலை ஏதும் கிடைக்காமல் உள்ளனர்.

இவை அனைத்துமே மில்லியன் கணக்கானோர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலைமைதான்; இப்பொழுது கறுப்பு வெள்ளி (ஏப்ரல் 6)” என முத்திரையைடிக்கப்பட்டுள்ளதற்கு முன்பே வாழ்க்கைத் தரங்களில் புதிய தாக்குதல்கள் வருவதற்கு முன்பே, நடைமுறையில் வந்துவிட்டன; இதற்குக் காரணம் மார்ச் மாதம் வந்த வரவு-செலவுத் திட்டமும் அதற்கு முந்தைய நடவடிக்கைகளும்தான்.

IFS எனப்படும் நிதிய ஆய்வுகள் கூடம் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, குழந்தைகள் உள்ள 850,000 குடும்பங்கள் இப்பொழுது ஆண்டு ஒன்றிற்கு 511 பவுண்டுகளை சராசரியாக இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன; இதற்குக் காரணம் தற்பொழுதுள்ள குழந்தைகள் வரி விலக்கு என்பது அகற்றப்படுவதுதான். குறைந்த ஊதியம் கொண்ட இல்லங்கள் வேண்டுமென்றே இலக்கு கொள்ளப்படுகின்றன; கிட்டத்தட்ட 212,000 உழைக்கும் தம்பதிகள், ஆண்டு ஒன்றிற்கு 17,000 பவுண்டுகளுக்கும் குறைவாக ஈட்டுபவர்கள் தங்கள் உழைக்கும் வரி விலக்கு அனைத்தையும் இழக்கின்றனர்; அது கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றிற்கு 3,870 பவுண்டுகள் என்று இருந்தன; தங்கள் உழைக்கும் நேரத்தை அதிகப்படுத்த முடியாமற்போனால் அவர்களுக்கு இந்தக் கதிதான் வரும்.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் கால் பகுதி வரை இழக்க நேரிடும். இளம் தம்பதிகள் கொண்ட ஒரு குடும்பம், வாரத்திற்கு 23 மணி நேரம் உழைத்தால், ஒரு குழந்தை இருக்கும் நிலையில், வீட்டு வருமானம் 15,000 பவுண்டுகள் என்று இருந்தால், கிட்டத்தட்ட 6,000 பவுண்டுகள் வரிவிலக்கில் இருந்து பெறும். ஒரு குழந்தை இருக்கும் நிலையில், வீட்டு வருமானம் 15,000 பவுண்டுகள் என்று இருந்தால், கிட்டத்தட்ட 6,000 பவுண்டுகள் வரிவிலக்கில் இருந்து பெறும். Resolution Foundation கடந்த வெள்ளியன்று கொடுத்துள்ள புள்ளிவிவரத்தின்படி இக்குடும்பங்கள் தங்கள் வருமானங்களில் உடனடியாக 2961 பவுண்டுகளை, அதாவது 19% இழப்பதைக் காணும்.

Save the Children அறக்கட்டளைக் கருத்துப்படி, ஏற்கனவே 3.5 மில்லியன் குழந்தைகள் வறுமையில் உள்ளன. இந்த நடவடிக்கைகளும், இன்னும் பிறவும் இத்தரத்தை மேலும் உயர்த்திவிடும். அரசாங்கம் ஆரம்பிக்க இருக்கும் மற்றொரு நடவடிக்கை குறித்தும் அறக்கட்டளை சுட்டிக் காட்டியுள்ளது—Universal credit (UC) என்பதின்படி, உழைக்கும் ஒற்றை தாய்மார்கள் வாரம் ஒன்றிற்கு 68 பவுண்டுகளை இழப்பர்; கால் மில்லியன் குழந்தைகள் மேலும் வறுமையில் தள்ளப்படுவர். சில குடும்பங்கள் ஆண்டு ஒன்றிற்கு 1,800 பவுண்டுகளை இழக்கும்; ஒற்றைப் பெற்றோர், இரு குழந்தைகளைக் கொண்டவர்கள், முழு நேர வேலை பார்ப்பவர்கள், கிட்டத்தட்ட குறைந்தப்பட்ச ஊதிய நிலையில் இருப்பவர்கள் 2,500 பவுண்டுகள் வரை இழப்பர் என்று அறக்கட்டளை கண்டறிந்துள்ளது.

பல ஓய்வூதியம் பெறுவோரும் வருமானத்தில் வெட்டுக்களை எதிர்கொள்வர், அது இன்னும் பெரும் இழப்புக்களை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை வரவு-செலவுத் திட்டம் உறுதிபடுத்தியுள்ளது. வயது தொடர்புடைய படிகள் (allowances) முடக்கப்பட்டுவிட்டது, ஐந்து மில்லியன் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆண்டிற்கு 60 முதல் 200 பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்தும். இவ்வகையில் அரசாங்கம் இன்னும் ஒரு 5 பில்லியன் பவுண்டுகளை பெரும் செல்வந்தர்களுக்குக் கொடுப்பதற்காக திரட்டும்.

மொத்தத்தில் இத்தாக்குதல்கள் அனைத்தும் ஐக்கிய இராச்சியத்தில் ஏற்கனவே பரவியுள்ள வறிய நிலையை மேலும் அதிகமாக்கும். கருத்துக் கட்டுரை ஒன்றில் டைம்ஸ் ஏப்ரல் 5ம் தேதி, IFS புள்ளிவிவரங்கள் தேசிய மொத்தங்கள்; அவை பிராந்திய வேறுபாடுகளைப் பிரதிபலிக்கவில்லை; இதன்பொருள் ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகளில் குறிப்பாக வளமுடைய தென்கிழக்கைத் தவிர வெளியிடங்களில் மக்கள் இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களை வருமானத்தில் பெறுவர், இதற்குக் காரணம் கூடுதலாக பொதுநல நிதியை நம்பியிருப்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் சுமத்தப்படும் தாக்குதல்கள் ஒரு ஆரம்பம்தான். அரசாங்கம் பொதுநலச் செலவுகளில் இன்னும் 10 பில்லியன் பவுண்டுகளை வெட்டுவதற்கு தயாரிப்புக்களை கொண்டுள்ளது என்ற நிலையில், செய்தித்தாள் தொடர்கிறது: அரசாங்கக் கடனைக் கட்டுப்படுத்தும் திட்டம் பல தசாப்தங்கள் நீடிக்கும், இனி தாராளமான ஓய்வூதியங்கள் இருக்காது, ஓய்வு பெறும் வயது தள்ளிப்போகும், அரசாங்கத்தின் சுகாதாரப் பாதுகாப்பு பகிர்ந்துதான் கொடுக்கப்படும், அனைவருக்கும் நலன்கள் என்னும் தாராளத்தன்மையில் மேலும் வெட்டுக்கள் வரும்.

இந்தச் சிக்கன நடவடிக்களின் நோக்கத்தைப் பற்றி டைம்ஸ் வெளிப்படையாகவே கூறுகிறது: வாழ்க்கைத் தரங்கள் இன்னும் நசுக்கப்படும், தொழிலாளர் தொகுப்புக்கள் சீனா, பிரேசில் போன்ற எழுச்சி பெறும் பொருளாதாரங்களில் போட்டியிடும் கட்டயாத்திற்குத் தள்ளப்படுகையில் என்று அது கூறியுள்ளது.

இதேபோன்ற நடைமுறைதான் ஐரோப்பா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது; அங்கெல்லாம் அரசாங்கங்கள் நிலைத்து நீடிக்க இயலாத சமூகப் பாதுகாப்பு முறைகளின் மரபியத்தையும் பல தசாப்தங்களான அரச செலவுகள் உயர்வையும் எதிர்கொள்கின்றன.”