World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian TV program exposes Assange frame-up

ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி அசாஞ்ச் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்துகிறது

By Mike Head
28 July 2012
Back to screen version

“Four Corners” என்னும் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனத்தில் தற்போதைய நிகழ்வுகள் நிகழ்ச்சி இந்த வாரம் விக்கிலீக்ஸின் ஆசிரியர் ஸ்வீடனில் நடத்தியதாகக் கூறப்படும் பாலியல் முறைகேடுகள் ஒரு போலிக்குற்றச்சாட்டுகள் என்பதை கிட்டத்தட்ட அம்பலப்படுத்தியுளது. அசாஞ்ச் லண்டனில் ஈக்வடோர் நாட்டுத் தூதரகத்தில் இன்னும் உள்ளார். ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக அந்நாட்டில் அரசியல் புகலிடம் கேட்டு அவர் அங்கு உள்ளார். அவர் ஸ்வீடனுக்கு கடத்தப்பட்டால் அது அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதை எளிதாக்கிவிடும்.

இந்த நிகழ்ச்சி ஸ்வீடனில் 2010 ஆகஸ்ட் நடுப்பகுதியில் அசாஞ்ச் வந்தபின் மூன்று முக்கிய வாரங்களில் என்ன நடந்தது என்பதை ஒன்றாகத் தொகுத்துக் கூறிய வகையில் பெறுமதியான பணியைச் செய்துள்ளது. ஒரு மாநாட்டில் அங்கு பேசுவதற்கும், ஒரு பாதுகாப்பான கணணி வசதியுடன் விக்கிலீக்ஸ் செயற்பாடுகள் அந்நாட்டில் நடத்த முடியுமா என ஆராய்வதற்கும் அசாஞ்ச் சென்றிருந்தார். கால அவகாசத்தைச் சரியாக ஆராய்ந்த அளவில், இந்நிகழ்ச்சி ஸ்வீடனின் சூனிய வேட்டைக்கும் அமெரிக்காவில் பெரும் நடுவர் மன்றம் அசாஞ்ச் மீது அமெரிக்கப் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக விக்கிலீக்ஸின் ஆசிரியர் மீது குற்றச்சாட்டுக்களை கொண்டுவந்ததற்கும் இடையே உள்ள பிணைப்பையும் தெளிவுபடுத்தியுள்ளது. (பார்க்கவும்: “Sex, Lies and Julian Assange”).

 

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறானவை, அரசியல் நோக்கத்தை கொண்டவை என்பதற்கு இந்நிகழ்ச்சி கணிசமான சான்றுகளைக் கொடுத்துள்ளது. ஸ்வீடனிலும் உலகெங்கிலும் அவருடை பெயரை இருண்டதாக ஆக்குவதற்கு நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டன. அதேபோல் அவரும் விக்கிலீக்ஸும் அமெரிக்கா இன்னும் பிற சக்திகளின் குற்றங்கள் மற்றும் தந்திரோபாயங்களை தைரியமாக அம்பலப்படுத்தியதற்காக பெற்ற வெற்றி போன்ற மிகப் பரந்த பொதுமக்கள் ஆதரவை எதிர்ப்பதற்கு இது செய்யப்பட்டது.

ஆண்ட்ரூ பௌலரினால் தகவல் கொடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட இந்நிகழ்ச்சி அசாஞ்ச் ஆகஸ்ட் 11ம் திகதி ஸ்வீடனில் இறங்கியபோது, அவருக்கு அன்னா ஆர்டின் அடுக்குவீட்டில் தங்க வசதி கொடுக்கப்பட்டது. அன்னா ஆர்டின் வெளியே செல்வதாக இருந்தது, ஆனால் ஆகஸ்ட் 13 மாலையில் வீட்டுக்கு திரும்பிவிட்டார். அன்று இரவு அசாஞ்சுடன் விரும்பி உடலுறவு கொண்டார்.  அசாஞ்ச் அந்த வீட்டில் ஆகஸ்ட் 18வரை தொடர்ந்து தங்கியிருந்தார். அதாவது அசாஞ்ச் பலவந்தமாக அவருடன் உடலுறவு நடத்தியதாகக் கூறப்பட்ட தினத்திற்கு ஐந்து நாட்களுக்கு பின்னரும் அங்கிருந்திருக்கின்றார்.

உண்மையில், விக்கிலீக்ஸின் தலைவரை பிறர் தம்முடைய வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொண்டாலும், அவற்றை நிராகரித்து அசாஞ்ச் தொடர்ந்து  தன் வீட்டில் இருக்க வேண்டும் என்று பல தடவை ஆர்டின் வலியுறுத்தினார். தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட தினத்திற்கு இரு இரவுகளுக்குப் பின்னர், ஆர்டின் அசாஞ்சுக்காக ஒரு கிரேபிஷ் பார்பெக்யூ (crayfish barbecue) தயாரித்து ஒரு விருந்திலும் அவர் அருகே அமர்ந்து கலந்து கொண்டார். கிரேபிஷ் விருந்தின்போது அவர், அதிகாலை 2 மணிக்கு வெளியே அமர்ந்து, உலகின் மிக நேர்த்தியான, மிடுக்கானவர்களுடன் அமர்ந்திருக்கிறேன்! இது வியப்பானதாகும்! என்று அவர் ட்வீட் செய்துள்ளார். பின்னர் தன் நண்பர் ஒருவருடன் தான் அவருடன் சிறப்பான வார இறுதியைக் கழித்ததாகவும் கூறினார்.

ஆகஸ்ட் 16 ம் திகதியன்று ஆர்டினுக்கு தெரிந்து, அசாஞ்ச் நகரத்திற்கு வெளியே சோபியா விலென் என்னும் ஓர் இரண்டாம் இளம் பெண்ணுடன் இரவைக் கழிக்கச் சென்றார். இதற்கு மறுநாள் இரு மகளிரும் மின்னஞ்சல் பறிமாற்றம் செய்துகொள்ளத் தொடங்கினர். இறுதியில் நான்கு நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 20 அன்று ஆர்டினும் விலெனும் ஸ்ரொக்ஹோம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அசாஞ்ச்சை ஒரு கட்டாய பாலியல் சோதனைக்கு உட்படுத்தப்பட முடியுமா எனப் பார்த்தனர்.

மாறாக, பொலிசார் அசாஞ்ச் ஒருவேளை கற்பழித்திருக்கலாம், துன்புறுத்தியிருக்கலாம் என்பது குறித்து கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட உள்ளதாக அறிவித்தனர். இதைக் கேள்விப்பட்ட விலென் பெரும் திகைப்பு அடைந்து சான்றுகள் தர மறுத்து, இதுவரை பொலிசார் எழுதிக் கொண்டு வந்ததில் கையெழுத்திடவும் மறுத்துவிட்டார். அன்று இரவே அரசாங்க வக்கீல் அசாஞ்ச் மீது பிடி ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். அரசாங்க வக்கீலின் அலுவலகம் அசாஞ்ச்சுடன் தொடர்பு கொள்ளவில்லை. மாறாக, ஒரு சில மணி நேரத்திற்குள், அது பரபரப்புச் செய்தித்தாள் Expression இடம் இரு மகளிரும் கொடுத்த அறிக்கைகள் கொடுத்து செய்தியைக் கசியவிட்டது. செய்தித்தாளின் முன்பக்கத்தில் ஸ்வீடனில் கற்பழிப்பு செய்ததற்கு அசாஞ்ச் தேடப்படுகிறார்என்று செய்தியை வெளியிட்டது.

இது மிக உயர்மட்டத்தில் கூட்டாகச் செயல்பட்டதற்கு முதல் சான்று ஆகும்.  இதில் அரசாங்க வக்கீல் அலுவலகம், பொலிஸ் மற்றும் செய்தி ஊடகம் அசாஞ்ச்சின் புகழை அழிக்கும் கருத்தைக் கொண்டிருந்தன.

பிடி ஆணை வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மற்றும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஒரு மூத்த அரசாங்க வக்கீல் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்களை உதறித்தள்ள, குறைந்தப்பட்ச குற்றச்சாட்டான துன்புறத்தலை மட்டுமே எடுத்துக் கொண்டார். ஆகஸ்ட் 30 அன்று அசாஞ்ச் தானாகவே பொலிசைப் பார்க்கச் சென்று, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அப்பேட்டியின்போது அவர் தான் எது கூறினாலும் அது Expressen னில்  வெளியாகக் கூடும் என்ற தன் அச்சத்தை வெளிப்படுத்தினார். பேட்டி கண்ட பொலிஸ் அதிகாரி, நான் எதையும் கசியவிடப் போவதில்லை என்றார். ஆயினும்கூட பேட்டி கசியவிடப்பட்டது.

அசாஞ்ச் மீது இன்னமும் எந்தக் குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. இன்றுவரை இந்த உண்மைதான் நிலவுகிறது. மாறாக அவர் விசாரணை நடந்தபோது நாட்டை விட்டு நீங்கலாம் என்று அரசாங்க வக்கீலால் உறுதியளிக்கப்பட்டார். இந்த உறுதிப்பாடு பின்னர் வியத்தகு அளவில் பின்வாங்கப்பட்டது.

அசாஞ்ச் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்கள் தயாரிக்கப்பட்டன, அல்லது மகளிர் இருவரும் அவருக்கு எதிராகச் சாட்சியம் அளிக்கக் கணிசமான அழுத்தங்களுக்கு உட்பட்டனர் என்ற ஒரே முடிவுதான் இதில் இருந்து பெறமுடியும். அசாஞ்ச்க்கு எதிராக இரு மகளிரும் தற்பொழுது கூறும் குற்றச்சாட்டுக்கள் தெளிவாக இல்லை. அவர்களுடைய வக்கீல் Claes Borgstrom வழக்கு பற்றி எதையும் கூற மறுத்துவிட்டார். “Four Corners” அவரிடம், அசாஞ்ச்சை எப்படியும் பொறியில் தள்ள அவர்கள் விரும்புகின்றனர் எனத் தோன்றுகிறது எனக் கூறியதற்கு, அந்த வக்கீல் எச்சரிக்கை உணர்வுடன், எனக்கு அது பற்றி நன்கு தெரியும் என்றார்.

அசாஞ்ச் செப்டம்பர் 27ம் திகதி லண்டனுக்குப் புறப்பட்டுவிட்டார். இது அக்டோபர் 22 ம் திகதி விக்கிலீக்ஸ் வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது மூன்றாம் பெரிய தாக்குதலை The Iraq War Logs மூலம் வெளியிடுவதற்குத் தயாரிப்புக்கள் நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆவணத் தொகுப்புக்களில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் கொலைசெய்யப்பட்டது இன்னும் பிற போர்க்குற்றங்களைப் பற்றிய ஆதாரங்கள் இருந்தன. அவற்றைத் தவிர நூற்றுக்கணக்கான தவறான முறைகள், சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் ஈராக்கியப் பொலிசார், இராணுவத்தினர் 2004ல் இருந்து 2009 வரை செய்த கொலைகள் பற்றிய தொகுப்பு இருந்தது.

முன்னதாகவே “Collateral Murder” (கூட்டு கொலைகள்) என்ற ஒளிப்பதிவு படத்தை வெளியிட்டதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் விக்கிலீக்ஸ் ஏற்கனவே கண்டிக்கப்பட்டு இருந்தது. அந்த ஒளிப்பதிவில் ஈராக்கில் நிரபராதியான குடிமக்கள் வான்தாக்குதல்கள் மூலம் கொலையுண்டது காட்டப்பட்டிருந்தது; இதைத்தவிர ஆப்கானியப் போர் நிகழ்வுகள் என்பது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளின் சிறப்புப் படைகளும் அங்கு குடிமக்கள்மீது செய்த கொலைகள், வன்முறைத் தாக்குதல்கள் ஆகியவை ஆவணமிடப்பட்டிருந்தன.

நாட்டை விட்டு நீங்குவதற்கு அசாஞ்ச்க்கு அனுமதி கொடுத்த 12 நாட்களுக்குப் பின், அவர் ஈராக்கியப் போர் கோப்புத் தொகுப்புக்களை வெளியிடத் தயார் செய்து கொண்டிருக்கையில், தீய முறையில் ஸ்வீடனின் அதிகாரிகள் திடீரென சர்வதேசப் பொலிஸின் சிகப்பு முன்னறிவிப்பை (Interpol Red Notice) ஐ அவரைக் கைது செய்வதற்குப் பிறப்பித்தனர். ஒருமாத காலத்திற்குள் திரும்பிவருவதாக அசாஞ்ச் உறுதியளித்தார். ஸ்வீடன் அதிகாரிகள் இந்தப் பிடி ஆணை ஏற்கனவே வெளியிடப்பட்டதால் அது மிகவும் தாமதமாகிவிடும் என்றனர்.

இதே வாரங்களில் ஒபாமா நிர்வாகம் விக்கிலீக்ஸிற்கு எதிராக முழுமையான விசாரணையைத் தூண்டி, விக்கிலீக்ஸிற்கு நிதிகளை வற்றச் செய்வதற்காக ஒரு நிதிய முற்றுகையையும் தொடக்கியது.

மே 2012 ஆஸ்திரேலியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த ஜெப்ரி ப்ளீச், அசாஞ்ச்சை ஸ்வீடன் நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கத் தொடர்பு ஏதும் இல்லை என மறுத்துக் கூறியதை “Four Corners” மறு ஒளிபரப்புச் செய்தது. இதைப் பற்றி அமெரிக்கா ஒன்றும் கவலைப்படவில்லை, இது குறித்து அது அக்கறையும் கொள்ளவில்லை, இத்துடன் அமெரிக்காவிற்குத் தொடர்பு ஏதும் இல்லை என்று ப்ளீச் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி அசாஞ்ச்க்கு எதிராக பெருநடுவர் மன்றம் தயாரித்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்துப் பெருகிய சான்றுகளைக் கொடுத்தது. அமெரிக்க பெருநடுவர் மன்றம் எத்ததைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம் என்பது பற்றிய அழைப்பாணையின் ஒரு பிரதியை காட்டியதுடன், குற்றச்சாட்டுக்களில் தேசியப் பாதுகாப்புத் தகவல் குறித்து தொடர்பு கொள்வது அல்லது வெளியிடல் என்பதும் அடங்கும் ஆகியவை பற்றிய சான்றுகள் இருந்தன.

இந்தப் பிடி ஆணை அடையாள நெறிகள் 10, 3793 ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அசாஞ்ச்சின் அமெரிக்க வக்கீல் மைக்கேல் ரட்னெர் விளக்கினார்: பெருநடுவர் நீதிமன்றத்தின் எண் 10, இது தொடங்கிய ஆண்டைக் காட்டுகிறது; GJ என்பது பெருநடுவர் நீதிமன்றத்தைக் குறிக்கிறது, 3793 என்று இதற்குப் பிறகு உள்ளது. 3 என்பது அமெரிக்க நாட்டின் சதித்திட்டச் சட்டம் ஆகும். 793 என்பது உளவுத்தகவல் சட்டம் ஆகும். எனவே அவர்கள் விசாரணை செய்வது 3793, அதாவது ஒற்றுத் தகவல் சேகரிக்க சதித்திட்டம் என்று பொருள்.

இது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சதித்திட்டக் குற்றச்சாட்டு என்பது அசாஞ்ச்சை பிராட்லி மானிங்குடன் பிணைக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பிராட்லி மானிங் ஓர் அமெரிக்க இராணுவத்தினராவார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் இவர் விக்கிலீக்ஸிற்கு தகவல்களைக் கசிய விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். உளவுத்தகவல் சட்டப்படி மட்டும் அசாஞ்ச் மீது குற்ற விசாரணை நடத்தால், அதில் சட்டரீதியான பிரச்சனைகள் இருக்கும். ஏனெனில் உண்மையில் தகவல்களை வெளியிட்டதில் விக்கிலீக்ஸ் ஆற்றிய பங்கிற்குச் சான்றுகள் ஏதும் கிடையாது.

“Four Corners” இனால் தொலைப்பேசி மூலம் ஈக்வடோரின் தூதரகத்தில் இருக்கும் நிலையில் பேட்டி காணப்பட்டபோது, அசாஞ்ச் தான் தஞ்சம் நாடும் கட்டாயத்தை ஏற்படுத்திய சில நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தினார். முதலில் ஸ்வீடன் அரசாங்கம் என்னை கடுமையான சூழலில் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தாமல் சிறையில் அடைப்பதாக அறிவித்தது. அன்று மாலையே என்னுடைய காலைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த இலத்திரனியல்  தளையை பொருத்திய இங்கிலாந்து அரசாங்கத்தின் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள், முன்தகவல் கொடுக்காமல் இரவு 10.30க்கு வந்து என்னுடைய காலில் மற்றொரு தளையையும் பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு மறுநாள் ஸ்வீடன் அரசாங்கத்தின் சார்பில் செயல்பட்டது என நாங்கள் நினைக்கும் அரசாங்க வழக்குதொடுனர் அலுவலகம், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு நான் கொடுக்க வேண்டிய விண்ணப்பத்தின் அவகாசம் 14 நாட்கள் என்பதற்குப் பதிலாக பூஜ்ய நாட்கள் குறைக்கப்பட வேண்டும் எனக் கோரியது.

அசாஞ்ச்சின் ஸ்வீடன் நாட்டு வக்கீல் பெர் சாமுவெல்சன் ஸ்வீடனுக்கு அனுப்பப் பட்டால் அசாஞ்ச் நான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். என்னையும் என்னுடைய சக வக்கீலையும் மட்டும்தான் அவர் பார்க்க முடியும். நான்காம் நாள் அவர் ஒரு நீதிமன்றத்திற்கு ஒரு சிறைக்காவல் நீதிபதி முன் கைவிலங்குகளுடன் அழைத்து வரப்படுவார் என்றார்.

ஸ்வீடன் இரண்டு ஸ்வீடன் நாட்டுக் குடிமக்களை எகிப்திற்கு CIA கடத்திச் செல்ல உதவி குறித்த சான்றை “Four Corners“ பரிசீலித்தது. கடந்த தசாப்தத்தில் அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்னர். ஆண்ட்ரூ பௌலர் விளக்கினார்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்று பின்னர் ஸ்வீடன் தவறினைக் கண்டறிந்தது. அந்நாடு இழப்பீடு கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

தொலைபேசியில் அசாஞ்ச் “Four Corners” இடம் பின்வருமாறு கூறினார்: நான் திடீரென ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்பட்டால், அமெரிக்க தொடர்பாக நான் அரசியல் தஞ்சத்தை கோரும் நிலையில் இருக்க முடியாது. முட்டுச்சந்தில்தான் நான் நிற்பேன். ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்குத்தான் நான் எடுத்துச் செல்லப்படுவேன்.

பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் இன் கேடுவிளைவிக்ககூடிய  அறிக்கை ஒன்றையும் “Four Corners” மறுபடியும் ஒளிபரப்பியது. இது முதலில் டிசம்பர் 2010ல் தயாரிப்புக்கள் முதலில் வேகம் பெற்ற நேரத்தில் கொடுக்கப்பட்ட பேட்டியாகும். அதாவது அசாஞ்ச்சின் அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை வெளியிட்டது சட்ட விரோதம் என்று கூறியதை. இந்நிகழ்ச்சி ஒரு ஆஸ்திரேலியக் குடிமகனுக்கு எதிரான ஒபாமா நிர்வாகத்தின் தேசவிரோத குற்றச்சாட்டுக்களில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தீவிர தொடர்பு குறித்து ஆராயவில்லை. ஆயினும்கூட, பெருநடுவர் நீதிமன்றத்தில் சாட்சியம் கொடுத்த வகையில், இது அசாஞ்ச் மீது அமெரிக்கா குற்றச்சாட்டுக்களை கொண்டுவருவது பற்றிய திட்டங்கள் பற்றி ஏதும் தெரியாது என்று அரசாங்கம் கூறிவந்ததைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தை “Four Corners” அசாஞ்ச் பற்றிச் சில வினாக்களைக் கேட்டபோது, வெளியுறவு மந்திரி பாப் காரின் செய்தித்தொடர்பாளர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே பற்றி நின்றார். திரு.அசாஞ்ச்சை குற்றச்சாட்டிற்கு அமெரிக்க அரசாங்கம் உட்படுத்தப்படுவது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எத்தகவலும் கிடையாது. என்றார் அவர். ஆஸ்திரேலிய அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்திடம் திரு.அசாஞ்ச்க்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களும் முறையான சட்ட நெறிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் எனத் தான் எதிர்ப்பதாக தெரிவித்தது.

வேறுவார்த்தைகளில் கூறினால், எதுவும் தெரியாது என்ற மோசடியைக் கூறிக்கொண்டிருக்கையிலேயே, அமெரிக்காவோ அசாஞ்ச்சை அதுவும் ஆயுட்காலத்திற்கு சிறைக்குத் தள்ளும் வழிவகைகளை தயாரிக்கையில் கில்லார்ட் அரசாங்கம் அர்த்தமற்ற அமெரிக்க உத்தரவாதங்களான முறையான விசாரணைகள் குறித்தவற்றை ஏற்க அது தயாராக இருப்பதை அடையாளம் காட்டியது.

ஆஸ்திரேலிய முழு அரசியல் அமைப்புமுறையும் அசாஞ்ச்க்கு எதிரான பழிதீர்க்கும் நடவடிக்கையில் உடந்தையாகும். பசுமைக்கட்சிவாதிகள் நடைமுறையில் சிறுபான்மை தொழிற்கட்சி அரசாங்கத்துடன் கூட்டணியில் உள்ள நிலையில், அதன் செயல்கள் அனைத்திற்குப் பொறுப்புக் கொண்டது ஆகும். மேலும் அசாஞ்ச் மற்றும் விக்கிலீக்ஸைக் பாதுகாப்பவர்கள் என்று காட்டிக் கொள்ளும்போது, பசுமைவாதிகள் ஸ்வீடன் நாட்டின் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்களை நம்பும் வகையில் அந்த வழக்குத் தொடரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஜூலை 1ம் திகதி மெல்போர்னில் அசாஞ்ச்க்கு ஆதரவான அணிவகுப்பு ஒன்றில் பேட்டி காணப்பட்டபோது, பசுமைவாதிகளின் தலைவர் ஆடம் பண்ட் பின்வருமாறு கூறினார்: சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பது வெளிப்படை. ஸ்வீடனில் தோன்றியுள்ளவற்றிற்கு விடையளிக்கப்பட வேண்டும்... அதுதான் எங்கள் உண்மையான அக்கறை. அசாஞ்ச் ஸ்வீடனில் அவருக்கு எதிராகக் கூறப்படுபவற்றை எதிர்கொண்டு விடையளிக்க வேண்டும். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவிற்குப் பாதுகாப்பாகத் திரும்பிவர உரிமை உண்டு. ஆஸ்திரேலிய_அரசாங்கம் அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படாமல் இருக்க அனைத்தையும் செய்யும்.

போலி இடது சோசலிச மாற்றீட்டுக் குழுவும்- Socialist Alternative group- இதேபோல் ஸ்வீடனின் போலிக் குற்றச்சாட்டுத் தயாரிப்பை எதிர்க்க மறுத்து, இக்குற்றச்சாட்டுகளில் இருக்கும் உண்மை என்பது ஒரு பிரச்சினை ஆகும்; நாம் ஒருவேளை அதன் மீது முடிவெடுக்க முடியாது. எனக் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவிலும் சர்வதேச அளவிலும், போலி இடதுகள் அசாஞ்ச்க்கு எதிரான அமெரிக்காவின் பழிவாக்கும் நடவடிக்கைகளுக்கு மையக் கருவி ஆகியுள்ள நிலை, அவர்கள் பெண்ணுரிமை, இன்னும் பிற மத்தியதர வர்க்க அடையாள அரசியலுடன் தீவிர ஆர்வம் கொண்டிருப்பதைத்தான் பிரதிபலிக்கிறது. இந்தத் தட்டுக்களை பொறுத்தவரை, தீர்ப்பு வரும் வரை நிரபராதி என்று கருதுவது, இன்னும் பிற அடிப்படை சட்டக் கோட்பாடுகள், பாலியல் தாக்குதல் என்ற குற்றச்சாட்டுக்கள் வரும்போது ஜன்னல் வழியே தூக்கி எறியப்படுகிறது.

இத்தகைய நிலைப்பாட்டிற்கு எதிராக தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் அசாஞ்ச்சை பாதுகாக்க முன்வர வேண்டும். அடிப்படை சட்டபூர்வ, மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். தங்கள் குற்றங்கள் மேலும் அம்பலப்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கத்தைக் கொண்ட அரசாங்கங்களுக்கு எதிராக அணிதிரளவேண்டும்.