World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French youth riot against police brutality in Amiens-Nord

அமியான்-வடக்கில் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிராக பிரெஞ்சு இளைஞர்கள் கலகம்

By Antoine Lerougetel
16 August 2012
Back to screen version

ஞாயிறு, திங்கள் இரவுகளில் வடக்கு பிரான்ஸில் உள்ள அமியான் தொழில்துறை நகரத்தின் அமியான்-வடக்கு மாநகரப் பகுதியில் இளைஞர்களுக்கும் பொலிசுக்கும் இடையே வன்முறை மோதல்கள் நிகழ்ந்தன. எட்டு நாட்களுக்கு முன்புதான், உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் இப்பகுதியை பிரான்ஸின் 15 முன்னுரிமைப் பாதுகாப்புப் பகுதிகளில் (Priority Security Zones) ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார்.

டஜன் கணக்கான கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன; எரியும் குப்பைகள் தடைகளாக நிறுவப்பட்டன, ஒரு தொடக்கப் பள்ளி தீயினால் ஒரு பகுதி எரிந்தது, உள்ளூர் பொலிஸ் நிலையம் ஒன்று சூறையாடப்பட்டது. இது கிட்டத்தட்ட 1 மில்லியன் யூரோக்கள் (அமெரிக்க $1.23 மில்லியன்) நஷ்டத்தை சேதத்தில் ஏற்படுத்தியது. அமியானின் மற்ற பகுதிகளில் ஏழு கார்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

1960, 1970களில் கட்டப்பட்ட இப்பகுதி, கிட்டத்தட்ட 15,000 மக்கள், பெரும்பாலும் வட ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் வசிக்கும் இடம் ஆகும். பிரான்ஸ் முழுவதும் இதேபோல் இருக்கும் பல பகுதிகளைப் போலவே, இங்கு 25 வயதுக்கு கீழேயுள்ளவர்களின் வேலையின்மை விகிதம் 50%க்கும் அதிகம் ஆகும்; இதைத்தவிர இங்கு நீண்ட கால பொலிஸ் அடக்குமுறை வரலாறும் உள்ளது. இது 1989, 1991, 1994, 1999 மற்றும் 2005 ஆண்டுகளில் எழுச்சிகளைக் கண்டுள்ளது.

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய உறுதிமொழி, இத்தகைய 45 பகுதிகளை நிறுவுதல், அவற்றில் நிரந்தரமாக பொலிசார் தீவிர ஈடுபாட்டுடன் நிறுத்தப்படுவர் என்பதாகும்.

ஜூலை மாதம் முதல் gendarmes mobiles பொலிஸ் பிரிவுகள் அப் பகுதியில் ரோந்து வந்தன; ஞாயிறு அன்று BAC எனப்படும் குற்ற எதிர்ப்புப் பிரிவினர் அப் பகுதியில் ஒரு வழிச் சாலையில் தவறாக ஓட்டினார் என்று கூறி ஒரு சாரதியைக் கைப்பற்ற முயன்றதால் மோதல்கள் தீவிரமடைந்து வந்தன.

ஒரு விரோதப் போக்குடைய இளைஞர் குழுவை அணுகியபோது தாங்கள் தங்களைக் காத்துக் கொள்ள கண்ணீர்ப்புகைக் குண்டை வீச வேண்டியதாயிற்று என்று பொலிசார் கூறுகின்றனர். அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தொடர்பற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்திருந்த Nadir Hadji என்னும் இளைஞருக்கு துக்கம் கடைப்பிடிக்கக் கூடியிருந்த இளைஞர் குழு ஒன்று கண்ணீர் புகைக்குண்டின் தாக்குதலுக்கு உட்பட்டு, பின்னர் பொலிஸ் தடைக்கும் உட்பட்டது.

அவருடைய சகோதரியான சப்ரினா ஹட்ஜி Médiapart இடம் கூறினார்: கிட்டத்தட்ட இரவு 11 மணிக்கு, BAC துக்கத்திற்கு வந்திருந்த ஒரு இளைஞரைச் சோதனையிட்டனர். அது ஒன்றும் சோதனையல்ல, ஒரு ஆத்திரமூட்டும் செயலாகும். இது முடிந்தபின் பொலிசார் என்னுடைய சித்தப்பாவையும் தந்தையையும் தேடினர். CSR (கலகப்படைப் பொலிஸ்) அங்கு வந்து, உங்கள் கும்பலின் தலைவர், கூட்டிக் கொடுக்கும் நபர் கல்லறையின்கீழ் உள்ளார் என்றனர். எங்கள்மீது கண்ணீர்ப்புகையை வீசினர், ரப்பர் தோட்டாக்களையும் வீசினர். மகளிரும் குழந்தைகளும் அங்கிருந்தனர். நாங்கள் ஒன்றும் விலங்குகள் அல்ல.

ஒரு சில மோதல்கள் அன்றிரவு நடந்தன; ஆனால் மறுநாள் இரவு சீற்றம் அடைந்த இளைஞர்கள் அப் பகுதிக்குள் நிலைப்பாடு கொண்டிருந்த வெறுக்கப்பட்ட CRS உடன் மோதினர். கிட்டத்தட்ட 100 இளைஞர்கள் மூன்று மணி நேரத்திற்கு எறியக்கூடியவற்றையும், எரிபொருள்களையும் பொலிசார் மீது வீசினர்; தோட்டாக்கள் அற்ற துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலையும் தாங்கள் பெற்றதாக அவர்கள் கூறினர்.

16 பொலிசார் காயமுற்றதாகக் கூறப்படுகிறது; கைதுகள் ஏதும் செய்யப்படவில்லை.

கலவரம், ஐரோப்பா மற்றும் சர்வதேசம் முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கும் அரசியல் ஸ்தாபனம் மற்றும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும்  இடையே உள்ள சமூகப் பிளவிற்கு சான்றாக உள்ளன. நான்கு ஆண்டுகளாக ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியினால் வேலையின்மை மற்றும் சமூகநலச் செலவுச் சிக்கனங்கள் தொடர்கையில், பொலிஸ் மிருகத்தன மற்றும் பொருளாதார ஒடுக்குமுறைக்கு மக்கள் எதிர்ப்பு இன்னும் வெடிப்பு மிக்க வடிவங்களை எடுக்கிறது.

லண்டனில் Tottenham இல் ஒரு நிரபராதியான சாரதியை பொலிசார் கொன்றது பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வறிய தொழிலாள வர்க்க இளைஞர்களின் கலகங்களைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 முதல் 10 வரை தூண்டியது. இவை அரசாங்கத்தால் பாரிய பொலிஸ் வன்முறை, அவசர விசாரணைகள் என்ற முறையில் காட்டுமிராண்டித்தனமாக அடக்கப்பட்டன.

மதிப்பிழந்த முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் சட்டம் ஒழுங்கு மற்றும் வரவு செலவு திட்ட குறைப்புக் கொள்கைகளை PS அரசாங்கத்தின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் தொடர்கையில் பிரான்சில், சமூக அழுத்தங்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது; தேசிய வேலையின்மை 10 விகிதத்தை விட அதிகமாகிவிட்டது; ஏராளமான பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள் ஆகியவற்றிற்கு இடையே இந்நிலை உள்ளது; வடக்கு தொழில்துறைப் பகுதி அமியானை சுற்றியும் இந்நிலைதான் உள்ளது.

ஹாலண்டும் பிரதம மந்திரி Jean-Marc Ayrault  ம் அமியான் வடக்கில் வசிப்பவர்களை கண்டிக்கும் வகையில் இதை எதிர்கொண்டு, பொலிஸ் படைகளை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளனர். அய்ரௌல்ட் பொலிசாருக்கு தனது அனைத்து ஆதரவையும் அரச உதவியையும் தருவேன் என்று கூறியதுடன் அமியான் நிகழ்வுகள் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் இதைச் செய்தவர்கள்மீது உறுதியான மிகப் பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தன்னுடைய சிந்தனை அமியான், எய்க்ஸ் இன்னும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நகரங்களில் இருக்கும் பொலிசார் பால் செல்லுகிறது என்ற ஹாலண்ட், gendarmerie,  மற்றும் பொலிசாருக்குத் துணை நிதிகள் வழங்கப்படும்.... இன்னும் அதிக படைகள் கொண்டுவரப்படும், பல ஆண்டுகளாக பொலிசார் எண்ணிக்கை துரதிருஷ்டவசமாகக் குறைந்து வருகிறது என்றார்.

செவ்வாய் காலையில் Radio France Info வினால் பிற்பகல் அமியான்-வடக்குக்கு திட்டமிடப்பட்டிருந்த பயணத்திற்கு முன் பேட்டி காணப்பட்டபோது வால்ஸ், PS அரசாங்கத்தின் செல்வாக்கற்ற கொள்கைகளை இரக்கமற்ற முறையில் தொடரும் உறுதிப்பாட்டை தெளிவாக்கினார். அமியான்-வடக்கில் அடக்குமுறை நடவடிக்கை தேவை என வலியுறுத்திய அவர், குடியரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு அங்கு சுமத்தப்படும் என்றார். சமூக சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் தளர்த்தப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

வால்ஸ் அமியான்-வடக்கிற்கு பெரும் பொலிஸ் பாதுகாப்புடன் உள்ளூர் அதிகாரிகளை பார்க்க வந்தபோது அவர் நகைப்பிற்கும் கேலிக் குரலுக்கும் உட்படுத்தப்பட்டதில் வியப்பு ஏதும் இல்லை. Nadir Hadji குடும்பத்தினரை அவர் சந்தித்தார், ஆனால் திட்டமிட்டபடி அப்பகுதியைச் சுற்றிப் பார்க்க முடியவில்லை; ஒரு காரில் பயணித்து, சேதமடைந்த வோல்டயர் தொடக்கப் பள்ளையைத்தான் பார்க்க முடிந்தது.

போலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாப்படுத்தப்பட முடியாது, அதே போல் பொதுச் சொத்தைத் தீக்கு இரையாக்கியதும் நியாம் அல்ல.... பொலிஸ் மீது தீர்ப்புக் கூற மக்களை ஒருபொழுதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று அவர் வலியுறுத்தினார்.

Nadir Hadji இன் தாயாரும், சகோதரியும் மந்திரியுடனான பேட்டியில் இருந்து வெளியேறியபோது பெரும் கோபத்துடன் இருந்தனர் என்று Liberation குறிப்பிட்டது. அப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் மக்களுடைய சொற்களிலேயே அவருடைய தாயார் கூறினார்: [வால்ஸ்] காயமுற்ற பொலிசாரைப் பற்றி மட்டும்தான் பேசினார், அது பொறுக்க இயலாது என்றார். எங்களை விலங்குகள் போல் பொலிசார் நடத்துவது குறித்து அவருக்கு அக்கறையே இல்லை. அவர்கள் எங்கள்மீது கண்ணீர்ப்புகை விட்டனர், பலவற்றை விட்டு எறிந்தனர். எனவேதான் பகுதி இளைஞர்கள் கோபத்தில் உள்ளனர்.’”

இப்பகுதியில் வசிக்கும் தன் தாயாரை வாடிக்கையாகப் பார்க்க வரும் அல்ஜீரியத் தொழிலாளி WSWS இடம் அப்பகுதியில் சரிந்துவிட்ட சமூக உறவுகளைப் பற்றி வருத்தம் தெரிவித்தார். பொதுப்பணம் சில சமூகத் திட்டங்கள்மீது சேலவிடப்பட்டிருக்கலாம், ஆனால் மக்களிடையே உள்ள சமூக வேறுபாட்டு உணர்வு அகற்றப்படவில்லை. முந்தைய PS அரசாங்க ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் குறித்து அவர் குறிப்பாகக் குறைகூறினார்; 1982-83 இல் (அதுதான் அவருடைய சிக்கனக் கொள்கையின் ஆரம்பகாலம்) அப்பகுதியை கட்டுப்படுத்த இளைஞர் கும்பல் தலைவர்களுக்கு நிதியளித்திருந்தார். அவர்கள்தான் அடக்குமுறை மற்றும் ஊழல் மிகுந்த போராளிகளாக, வசிக்கும் மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

இத்தகைய கவுன்சில் எஸ்டேட்டுகளின் வீடுகள்தான் மக்களின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரைக் கொண்டுள்ளன.

2005ம் ஆண்டில் பொலிசாரிடம் இருந்து மறைந்து தப்புகையில் ஒரு துணை மின்நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் இறந்து போனது மூன்று வார காலம் நாடு தழுவிய கலகங்களை தூண்டியதுபிரான்ஸில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்குப் பெரும் புறநகர் கலகங்கள் நிகழ்ந்தன. அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த கோலிச அரசாங்கத்தின் ஜாக் சிராக் மூன்றுமாதத்திற்கு அவசரகால சட்டத்தை அறிவித்தார். குறிப்பாக 2007ல் பாரிஸ் புறநகரான Villiers-le-Bel ல் பொலிசாருக்கு எதிரான கலகங்கள் அடக்கப்பட்டபோது பிரான்ஸின் தொழிலாள வர்க்கப் பகுதிகளில் அமைதியின்மை தொடர்ந்தது.