World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain’s Socialist Workers Party and Socialist Party back extradition of Assange

பிரித்தானியாவின் சோசலிச தொழிலாளர் கட்சியும் சோசலிசக் கட்சியும் அசாஞ் திருப்பி அனுப்பப்படுவதற்கு ஆதரளவு அளிக்கின்றன

By Chris Marsden
27 August 2012
Back to screen version

பிரித்தானியாவின் மிகப்பெரிய போலி இடது குழுக்கள் விக்கி லீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ் ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பபட வேண்டும் என்ற கோரிக்கைக்கு  ஆதரவளிக்கின்றன.

சோசலிச தொழிலாளர் கட்சி-SWP- மற்றும் சோசலிசக்கட்சி- SP- இரண்டுமே தாராளவாதச் செய்தி ஊடகத்தின் பிரச்சாரமான அசாஞ் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும், பாலியல் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்வீடன் இன்னும் பிற அரசாங்கங்கள் அவரை மௌனப்படுத்தி விக்கிலீக்ஸை அழிப்பதுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் எதிரொலிக்கின்றன.

சோசலிச தொழிலாளர் கட்சி யின் ரொம் வாக்கர் பின்வருமாறு எழுதுகிறார்: ஜூலியன் அசாஞ் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும்; அமெரிக்காவில் பழிவாங்குதலை அல்ல. பிராட்லி மானிங்கின் விதி பற்றி, குறிப்பிட்டு அரசாங்க இரகிசயங்களை வெளியிட்டதாக்க் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர், இராணுவச் சிறையில் விசாரணையின்றி 800 நாட்களுக்கும் மேலாக உள்ளார் என்று குறிப்பிடுகிறார். மானிங் கை, கால் கட்டப்பட்டு பெரும்பாலும் தனிமைச் சிறையில் ஒரு நாளைக்கு 23ல் இருந்து 24 மணி நேரம் வைக்கப்படுகிறார், இரவில் உடைகளும் போர்வைகளும் மறுக்கப்படுகிறார் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் அவர் அவ்வாறு கூறுவது அசாஞ்சேயில் வழக்கு .... மிக அதிகச் சிக்கல் உடையது என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார். ஏனெனில் அவர் ஸ்வீடனுக்கு அனுப்பப்படுவது ஈக்வடோர் அவருக்குப் புகலிடம் கொடுத்துள்ளதால் தடை செய்யப்பட்டுள்ளது.  அவரோ அங்கு கைது செய்யப்படவும், இரு மகளிர் அவர் மீது கொடுத்துள்ள கற்பழிப்பு, பாலியல் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணையை எதிர்கொள்ளுகிறார் என எழுதியுமுள்ளார்.

அசாஞ்சும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்களை முக்கியமானதாக எடுத்துக் கொள்ள மறுக்கின்றனர். என்று அவர் கீழ்க்கண்டவற்றை ஒப்புக் கொள்ளுவதற்கு முன்னர் புகார் கூறுகிறார்: அசாஞ் ஒரு இரகசியக் குற்றச்சாட்டை அமெரிக்காவில் எதிர்கொள்ளுகிறார் என்பது நமக்குத் தெரியும், ஒரு பெரும் நடுவர் மன்றம் விக்கிலீக்ஸிற்கு எதிராகக் கூட்டப்பட்டது.

வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சியில், ஸ்வீடனின் அதிகாரிகள் அசாஞ்ச் அமெரிக்காவிற்கு நாடுகடத்தாமல் உறுதியளிக்கவேண்டும், அதுதான் அவர் தன்மீது குற்றம்சாட்டுபவர்களை எதிர்கொள்ள வழியமைக்கும் என்று வலியுறுத்துகிறார்.

ஸ்வீடன் அத்தகைய உறுதிமொழியைக் கொடுக்க மறுத்துவிட்டது, கொடுத்தாலும் அது பயனற்றது என்பதை வாக்கர் நன்கு அறிவார்.

சோசலிசக் கட்சி அதன் ஆஸ்திரேலிய சக சிந்தனையாளர்கள் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றை, அமெரிக்காவிற்கு அனுப்புதல் கூடாது என்ற தலைப்பில் வந்துள்ளதை மறுபடியும் வெளியிட்டுள்ளது.  இக்கட்டுரை மறைமுகமாக  அசாஞ்ச் ஸ்வீடனுக்கு அனுப்பப்படுவதை ஆதரிக்கிறது; மகளிருக்கு எதிரான குற்றங்கள் பல நேரமும் புறக்கணித்து, அற்பமாக நடத்தப்படும் சமூகத்தில் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எளிதில் உதறித் தள்ளப்பட்டுவிடக்கூடாது, முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று அது வாதிட்டுள்ளது.

சில கற்பழிப்புக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டாம் என்னும் கருத்தை நிராகரித்தல் சோசலிஸ்ட்டுக்களுக்கு முக்கியமாகும் என்று சோசலிசக் கட்சி வலியுறுத்துகிறது; அசாஞ்சின் ஆதரவாளர்ளை அமெரிக்காவின் செனட் வேட்பாளர் டோட் அகின்னுடன் ஒப்பிடும் அளவிற்குச் சென்றுள்ளது. அகின் கடந்த வாரம் நியாயமான கற்பழிப்பு குறித்துக் அவருடைய பிற்போக்குத்தனமான கருத்து ஒன்றை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிசக்கட்சி இரண்டும் அசாஞ்சை முற்கூட்டியே குற்றம்சாட்டுவது பற்றி பெரும் மௌனத்தை கொண்டிருந்தன.  கடைசியாக சோசலிச தொழிலாளர் கட்சி ஒரு ஐந்து வசன தகவலை அசாஞ்ச் பற்றி மார்ச் 5, 2011லும் சோசலிசக்கட்சி  கடைசியாக டிசம்பர் 15, 2001 இலும் எழுதின.

அவற்றின் தயக்கத்திற்கான காரணம் இப்பொழுது தெளிவாகிவிட்டது. இரண்டுமே நீண்ட காலமாக வலதுசாரி மற்றும் பெயரளவு தாராளவாத ஊடகம் அசாஞ்சை ஒரு பாலியல் வகைக் குற்றவாளி என வர்ணிக்கும் அசாதாரணப் பிரச்சாரத்துடன் உடன்பட்டுள்ளன. ஆனால் அதை பகிரங்கமாகக் கூறத் தயங்கின. இப்பொழுது காலதாமதம் செய்வதற்கான நேரம் முடிந்துவிட்டது. அவ்வாறு செய்வது அவர்கள் சார்ந்துள்ள குட்டிமுதலாளித்தவத்தின் உயரடுக்குகளை பகைத்துக் கொள்ளுவது போல் ஆகும். அவை நீண்டகாலமாக பால், இன அரசியலை வளர்த்துள்ளதுடன், வர்க்க அடித்தளமுடைய சோசலிசத்திற்கு எதிராகச் செயல்படுகின்றன; இப்பொழுது அவை அசாஞ்சிற்கு எதிராகத் தூண்டுதல் நடத்துகின்றன.

செய்தி ஊடகத்தின் சீற்றக் கூச்சல்கள், அசாஞ் படுக்கையில் நடந்து கொள்ளுவதாகக் கூறப்படும் முறை பற்றி, என்பவை மகளிருக்குப் பாதுகாப்பு கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் பெரும் கூக்குரல்கள்தான், இயற்கை நீதி பற்றிய கருத்துக்கள் வெறும் வார்த்தைகளாகும். செய்தி ஊடகத்தின் ஒரே நோக்கம் அரசியல் நீரைக்குழப்பி, நடப்பில் உள்ள உண்மைப் பிரச்சினைகளை மறைத்து மற்றும் நாடுகடத்தலை எதிர்ப்பவர்களை பெண்களின் எதிரிகள் என்று கூறி மிரட்டுதல், ஏன், கற்பழிப்பிற்கு ஆதரவு கொடுப்பவர்கள் என்றுகூடச் சித்தரிப்பதுதான்.

சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிசக்கட்சி இரண்டின் நிலைப்பாட்டிற்கும் ஓவன் ஜோன்ஸ் போன்ற பல தாராளவாத விமர்சகர்களின் நிலைப்பாட்டிற்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை. ஓவன் ஜோன்ஸ் இண்டிபென்டென்டில்  அசாஞ் போற்றவர்கள் மற்றபடி பாராட்டும் பணிபுரிபவர்கள், கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டால் அவற்றைப் பிறர் போல் ஏற்றுக் கொள்ள வேண்டும்..... கற்பழிப்பு கற்பழிபுத்தான் என்பது பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்தச் செய்தி ஊடக விமர்சகர்கள், முன்னாள் இடதுகள் உட்பட இருப்பவர்களை ஒன்றுபடுத்துவது அசாஞ்சிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எனக்கூறப்படுபவை  (இன்னும் எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை) கடுமையானவை, தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக உள்ளது. தீவிரமாக என்பது குறித்த அவர்கள் பொருளுரை, முற்றிலும் விமர்சனத்திற்குட்படுத்தாமல் எல்லாவற்றிற்கும் மேலாக எந்தப் பின்னணியில் அவை கூறப்படுகிறது என்பதைக் குறிப்பிடாமல் இருப்பது ஆகும். வேறுவிதமாகச் செய்தால் அது அவர்மீது குற்றம்சாட்டும் இருவரையும் வினாவிற்கு உட்படுத்துவது மட்டும் இல்லாமல், எல்லா இடங்களிலும் கொள்ளைமுறை ஆண்கள் பெண்களைச் சுரண்டுவதை ஒப்புதல் கொடுப்பது போல் ஆகும் என்று வலியுறுத்துகின்றனர். இப்படி முடிவில்லாத வகையில் தடை என்பது நிராகரிக்கப்பட வேண்டும். இந்த ஆழ்ந்த நிலைகுழம்பிய வட்டங்கள் என்று கார்டியன், இண்டிபென்டென்ட் போன்றவை இருக்கும் வட்டங்கள்தான். இவைதான் சோசலிச தொழிலாளர் கட்சியினதும் சோசலிசக்கட்சியினதும் முக்கிய உள்பிரிவினராகும். இவர்களின்படி நிரபராதி என்று முடிவு வரும் வரை எல்லா பெண்களும் உண்மை கூறுகிறார்கள், எல்லா ஆண்களும் பொய்யர்கள், பாலியல் கொள்ளையர்கள் என வலியுறுத்தப்பட வேண்டும் என்று கருத வேண்டும் போலாகின்றது.

அசாஞ்சிற்கு எதிராக இன்னும் ஏன் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை அவர் மீது குற்றம் சுமத்துபவர்களால் என்பதற்கான காரணம் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. இரண்டு மகளிருடனும் அவருடைய உறவுகள் இணங்கி நடத்தப்பட்டவை. உண்மையில் இரு பெண்களும் அவர்கள் புகார்களுக்கு இட்டுச்சென்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னரும் கூட பலமுறை அசாஞ்சுடன் நீண்ட காலத்திற்குப் பாலியல் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.

அசாஞ்சிற்கு எதிரான ஐரோப்பிக் கைது ஆணைகள் அவர் முதல் குற்றம்சாட்டுபவரை தன் உடல் கனத்தால் கீழே இருத்தி, ஆணுறை பயன்படுத்தாமல் பாலியல் தாக்குதலை நடத்தினார் என்பதாகும். இதே குற்றச்சாட்டான ஆணுறை பயன்படுத்தப்படவில்லை என்பது இரண்டாம் குற்றச்சாட்டு கூறுபவராலும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் அசாஞ் பாலியல் தொடர்பைத் தொடங்கியபோது குற்றம்சாட்டியவர் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இறுதிக்கூற்று அவர் வேண்டுமென்றே முதல் குற்றம்சாட்டுபவர் மீது அவருடைய விறைத்த ஆண்குறியை பெண்ணின் உடல்மீது வைத்துத்தாக்கினார் என்பதாகும்.

மகளிர் பொலிசுக்குக் கொடுத்துள்ள அறிக்கைகள் விருப்பம் இல்லை என்ற குறிப்பைக் கொண்டிருக்கவில்லை அல்லது வலிமையை பயன்படுத்தப்பட்டது என்றோ, ஒரு பயனற்ற ஆணுறை பயன்படுத்தப்பட்டது என்ற குறிப்பும் இல்லை. மாறாக ஆணுறை பயன்படுத்தப்படவில்லை என்பதுதான். செல்வி. டபுள்யூ (இரண்டாம் குற்றம் சாட்டுபவர்) உடைய சாட்சியம் தூக்கத்தில் அவர் இருந்தார் என்பது அவருடைய ட்வீட்டுக்களினாலேயே முரண்பாடாகின்றனஅவற்றில் அவர் தான் அரைகுறைத் தூக்கத்தில் இருந்ததாகக் கூறுகிறார். முதல் குற்றம் சாட்டுபவர் அவருக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் நிகழ்ச்சிக்குப் பின் ஒரு விருந்தைக் கொடுக்கிறார், அசாஞ்சேயைத் தன் அறையில் தங்குமாறு பின்னர் அழைப்புக் கொடுக்கிறார்.

இந்த மகளிர் துவக்கத்தில் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டபின் பொலிசிடம் சென்றுள்ளனர். அப்பொழுதும் அசாஞ் ஒரு HIV சோதனக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதற்குத்தான். இது சாதாரண நடைமுறைகளில் இருந்து அசாதாரண மீறல் ஆகும். பொலிஸ் அதை செய்தனர். மகளிர் கற்பழிப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை.

எனவேதான் ஆகஸ்ட் 20, 2010 துவக்க விசாரணை கைவிடப்பட்டு, அசாஞ்சிற்கு எதிரான பிடி ஆணை மறுநாள் ஸ்ரொக்ஹோமின் மூத்த அரசாங்க வக்கீல் ஒருவரான ஈவா பின்னேயால் இரத்து செய்ய்பட்டது. செய்தி ஊடகத்திற்கு ஓர் அறிக்கையில் அவர்: அவர் கற்பழித்தார் என்று சந்தேகப்படுத்துவதற்குக் காரணம் ஏதும் இல்லை என்று நான் நினைக்கிறேன். எனக்கூறினார்.

பிடி ஆணை மறுபடியும் வெளியிடப்பட்டது, ஸ்வீடனின் தலைமை அரசாங்க வக்கீல் மரியன்னே நி செப்டம்பர் 1, 2010 அன்று தலையிட்டபின்தான் நடைபெற்றது.

பொதுவாகச் சாதாரணச் சூழலில் இத்தகைய அற்பமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் குற்றவியல் குற்றச்சாட்டாகவே கருதப்பட்டிருக்க மாட்டாது. குறிப்பாக இரு பெண்களும் பேசிக் கொண்டு அதற்குப் பின் ஒன்றாக பொலிசுக்குச் சாட்சியம் கொடுத்தபின். ஆனால் இவை ஒன்றும் சாதாரணச் சூழ்நிலை அல்ல.

அவருக்கு எதிராகக் குற்றம் சாட்டுபவர்கள் எத்தகைய வெற்றுத்தனச் சொற்களைப் பயன்படுத்தினாலும், அசாஞ்சிற்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தல் என்பது அரசியல் நோக்கத்தை கொண்டது என்பது தெளிவு. பொலிசார், அரசாங்க வக்கீல்கள் மற்றும் ஸ்வீடன் அரசாங்கம் இவற்றிற்கு இடையே ஆலோசனைகளுக்குப்பின்தான் இது நடந்துள்ளது.

அதேபோல் கன்சர்வேடிவ்-தாராளவாத ஜனநாயக அரசாங்கம் பிரித்தானியாவிற்கு அசாஞ்சை நாடுகடத்தவேண்டும், இது ஈக்வடோருடன் இராஜதந்திர உறவுகள் முறித்தாலும் சரி, என்பதற்கும் அரசியல் உந்துதல்கள் தவிர வேறு காரணங்கள் கிடையாது. இதுவும் எல்லாவற்றிற்கும் மேலாக பாசிச வெகுஜனக் கொலைகாரர் அகஸ்டோ பினோஷே  ஸ்பெயினுக்கு நாடுகடத்தப்படக்கூடாது என்பதற்காக அரும்பாடு பட்ட நாடுதான் இது.

வாஷிங்டன் இந்நிகழ்வுகளில் தொடர்பு கொண்டுள்ளது என்று மறுக்கும் செய்தியாளர் கூட்டப்  போலி நபர்கள் தாங்கள் பொய்கூறுகிறோம் என்பதை நன்கு அறிவர். அவர்கள் இவ்வாறு செய்வதற்குக் காரணம் அசாஞ் மௌனப்படுத்தப்பட வேண்டும் என்ற பகிர்ந்து கொள்ளப்படும் விருப்பத்தினால்தான். சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிசக்கட்சி போல் அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படலாம் எனப்படும் அச்சுறுத்தல் பாலியல் தொடர்புடைய வன்முறைக்கு எதிரான போராட்டத்தைத் தடுத்துவிடக்கூடாது  என்று கூறுபவை இன்னும் வெட்கம்கெட்ட முகத்தை உடையவையும் மற்றும் ஒரே இறுதிமுடிவிற்கே பங்களிக்கின்றன.