World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Syria in the crosshairs

சிரியா இலக்குவைக்கப்படுகின்றது

Joseph Kishore
15 December 2012

Back to screen version

அமெரிக்காவும் முக்கிய ஐரோப்பியச் சக்திகளும் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தைக் கீழிறக்கும் நோக்கத்தில் சிரியாவில் அவர்கள் தூண்டிவிட்டுள்ள குறுங்குழுவாத உள்நாட்டுப்போரில் நேரடியாகத் தலையிட இந்த வாரம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அமெரிக்க பின்னணியுடனான இச்செயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் பெரும் பொருளாதாரப் பேரழிவை எதிர்நோக்கியுள்ள சிரியா, இப்பொழுது அமெரிக்கக் குண்டுத் தாக்குதலின் விளைவுகளை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பல நாடுகளின் பட்டியலில் சமீபத்தியதாகும்.

வெள்ளியன்று அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா அமெரிக்க இராணுவம் 400 துருப்புக்களுடன் பாட்ரியட் ஏவுகணைக் கலங்களை துருக்கிய சிரிய எல்லையில் நிலைநிறுத்த ஆரம்பிக்கும் என்று அறிவித்துள்ளார். அவற்றுடன் 400 ஜேர்மனிய மற்றும் 360 டச்சு படையினரும் மேலதிக ஏவுகணைக் கலங்களைச் செயல்படுத்துவதற்கு இணைவர்.

ஒரு சிரியத் தாக்குதல் துருக்கிக்கு எதிராக நடந்தால், அதற்கானபாதுகாப்புஎன்ற போலிக் காரணத்தின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ள   இந்த நடவடிக்கை அமெரிக்கப் போர் உந்துதலின் கணிசமான விரிவாக்கம் ஆகும். இந்த ஏவுகணை முறைகள் எதிர்த்தரப்புப் பிரிவினருக்கு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளிலிருந்து பாதுகாப்புகொடுக்கவும் அல்லது எல்லை முழுவதும்பறக்கக் கூடாதுபகுதி நிறுவவும் பயன்படுத்தப்படலாம். இரண்டுமே நேரடி இராணுவ நடவடிக்கைக்கு முன்னோடியான செயல்கள் ஆகும்.

மொரோக்கோவில் சிரியாவின் நண்பர்கள்கூட்டம் நடந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன. இதில் அமெரிக்கா உட்பட முக்கியச் சக்திகள் தமது உத்தியோகப்பூர்வ ஆசியை தேசிய சிரியப் புரட்சி, எதிர்ப்புச் சக்திகளின் கூட்டணிக்கு கொடுத்துள்ளனர். இக்குழு ஒரு மாதம் முன்புதான் ஒபாமா நிர்வாகத்தால் உத்தியோகப்பூர்வ அரசாங்கமாக நியமிக்கப்படும் நோக்கத்துடன் ஒன்றுபடுத்தப்பட்டது.

தேசியக் கூட்டணியை சிரிய மக்களின் சட்டபூர்வமான பிரதிநிதிக்குழுஎன்று அறிவித்துள்ளதின் மூலம், ஏகாதிபத்தியச் சக்திகள் முழு வெற்றி பெறும் வரை குறுங்குழுவாதப்போரில் குருதி கொடுத்தலை விரிவாக்கும் திட்டத்தை ஏற்றுள்ளன. அதாவது சிரிய அரசாங்கத்தை கவிழ்தல், அதற்குப் பதிலாக வாஷிங்டனின் நோக்கங்களுக்கு இன்னும் வளைந்து கொடுக்கும் அரசாங்கம் இருத்துதல்.

மீண்டும் ஒரு முழுச் சமுதாயமும் அழிக்கப்படுகிறது. அடிப்படைவாத சுன்னி இஸ்லாமியக் குழுக்கள் அமெரிக்காவுடன் இணைந்து பெருகிய முறையில் முக்கியப் பங்கைக் கொண்டுள்ள சிரியாவில் நடக்கும் குறுங்குழுவாத உள்நாட்டுப்போரில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள்  உயிரிழந்துவிட்டனர். கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் என்று மதிப்பிடப்பட்டவர்கள் அகதிகளாக்கப்பட்டுவிட்டனர். நூறாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

மத்திய கிழக்கில் ஒப்புமையில் ஒரு முன்னேற்றமடைந்த நாடும் மிக கூடிய ஆயுட்காலத்தை மக்கள் கொண்டுள்ள  நாடுகளில் ஒன்று, இடைவிடாமல் பின்னோக்கித் தள்ளப்படுகிறது. சர்வதேச நிதிய அமைப்பு போர் மற்றும் சர்வதேசத் தடைகளின் விளைவாக பொருளாதாரம் 2012ல் 20% சுருங்கும் என்று இந்த வாரம் முன்னதாக கூறியுள்ளது.

பணவீக்கம் 40% உயர்ந்துவிட்டது. இத்துடன் வாங்கும் திறன் அதனுடன்தொடர்புபட்ட விகிதத்தில் சரிந்துவிட்டது. சமூக உள்கட்டுமானம் சரவில் உள்ளது. பட்டினி எங்கும் படர்ந்துள்ளது. ரொட்டி பெருகிய முறையில் கிடைப்பது அரிதாகிவிட்டது. மில்லியன் கணக்கான மக்கள் எரிபொருள் விலையுயர்வினால் வீட்டிற்குச் சூடேற்ற முடியவில்லை. டஜன் கணக்கான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன அல்லது அடிப்படை வசதிகள் இல்லாதுள்ளன.

இந்நிலைக்கு முக்கிய பொறுப்பு ஏகாதிபத்தியச் சக்திகளிடம்தான் உள்ளது. 2011 ஆரம்பத்தில் அசாத்-எதிர்ப்பு கிளர்ச்சிகள் துவங்கியதில் இருந்து, அமெரிக்கா இடையறாமல் தனது சொந்த நலன்களை முன்னெடுப்பதற்காக இயங்கிவருகிறது. இதற்கு அது தீவிர வலதுசாரி மற்றும் அல் நுஸ்ரா முன்னணியால் தலைமை தாங்கப்படும்  அல்குவைதாவுடன் பிணைந்துள்ள போன்ற பிற்போக்குத்தனச் சக்திகளை நம்பியுள்ளது. இந்த வாரம் முன்னதாக இம்முன்னணி டமாஸ்கஸில் கார்க்குண்டுத் தாக்குதலை நடாத்தியதில் குறைந்தப்பட்சம் 24 மக்கள் கொல்லப்பட்டனர். இவற்றுள் ஏராளமான குழந்தைகளும் அடங்கும்.

அமெரிக்க நடவடிக்கையின் முற்றிலும் இழிந்த தன்மை பற்றிக் கூறுவது கடினம். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்கக் கொள்கையின் மத்திய சிந்தனைப்போக்கின் வடிவமைப்பாக உள்ள பயங்கரவாதத்தின் மீதான போர் எனப்படுவது வெளிநாடுகளில் போர் நடத்துவது, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளைத் தாக்குவது ஆகியவற்றை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் 2011ல் லிபியாவில் இருந்ததைப்போலவே அமெரிக்க இராணுவமும் CIAஉம் இப்பொழுது நடைமுறையில் சிரியாவில் அல்குவைதாவுடன் கூட்டுச்சேர்ந்துள்ளது.. அல் நுஸ்ரா முன்னணியை ஒரு பயங்கரவாத அமைப்புஎன்று உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் பெயரிட முற்படும் முயற்சி கிளர்ச்சியாளர்களுள்மிக முக்கியப் போரிடும் பிரிவாக அதைக் கட்டமைக்கு உதவி, இந்த அமைப்புடன் அது பல மாதங்கள் நெருக்கமாக உழைத்துள்ளது என்ற உண்மையை ஓரளவிற்கு மறைக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

அமெரிக்கா தூண்டிவிட்டுள்ள மோதல் மிருகத்தனமான குறுங்குழுவாத  கொலைகளாக வந்தடையும்  என்ற அச்சுறுத்தலையும், நேட்டோ குண்டுத்தாக்குதல்கள் வரும் என்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இறப்பு எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் என்பது விரைவில் நூறாயிரக்கணக்கில் என்று உயரும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றத்தன்மை இரண்டாம் உலகப் போருக்கு முன் நாஜி ஜேர்மனியின் செயற்பாடுகளில் காணப்பட்டதற்கும் அப்பால் செல்கிறது. முழுப் பொய்களின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா என ஒவ்வொரு நாடாக அரசாங்கம் அகற்றப்படுவதற்கு இலக்காகிறது. இது ஒரு ஆரம்பம்தான். ஈரானுடனான நட்பு என்னும் முக்கிய காரணத்தினால், மத்திய கிழக்கில் எல்லைகளை மாற்றி வரைதல் என்னும் பரந்த நோக்கத்தினதும் மற்றும் அமெரிக்காவின் நிலைமையை அதன் முக்கிய பூகோளஅரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக வலுப்படுத்துவதற்கும் சிரியா அச்சாணிஆகிறது.

அதே நேரத்தில் ஒபாமா நிர்வாகம் ட்ரோன் தாக்குதல்களுக்கான ஒரு உலகப் பிரச்சாரத்திலும் மற்றும் பாக்கிஸ்தான், யேமன், சோமாலியா ஆகியவற்றில் சட்டவிரோதப் படுகொலைகளிலும் ஈடுபட்டுள்ளது. ஆபிரிக்காவும் அதன் செயற்பாடுகளில் முக்கிய இடமாகின்றது. அமெரிக்கா சீனாவைச் சுற்றிலும் தென்கிழக்கு ஆசியாவில் இராணுவ சக்திகளைக் குவிக்க முற்படுகிறது. உலகின் எப்பகுதியையும் அமெரிக்கா ஆளும் வர்க்கம் தன் செல்வாக்கு மண்டலத்திற்குப்அப்பால் உள்ளது என்று கருதவில்லை.

அமெரிக்க ஆளும்வர்க்கம் இத்தகைய திமிர்த்தனமான குற்றத்தன்மையுடன் தான் செயல்படலாம் என்று உணர்வதற்குக் காரணம் உத்தியோகப்பூர்வ போர் எதிர்ப்பு அமைப்புக்கள் ஒபாமா நிர்வாகத்தின் கருவிகளாக முதலாளித்துவ அரசியலமைப்பினுள் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டு, இவ்வாறான தலையீட்டிற்கு தீவிர ஆதரவு கொடுக்கும் அமைப்புக்களாகிவிட்டதாலாகும். இடதுஎன்று கூறப்படுபவை CIA  யினால் தூண்டப்பட்டு அல்குவேடா தலைமையில் நடத்தப்படுகின்ற சிரியப் புரட்சிக்குக்தமது ஆதரவை கொடுக்கிறது.

ஆனால் உத்தியோகபூர்வ அரிசியலமைப்பு மிகக்குறுகிய அஸ்திவாரங்களில் தங்கியுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், ஆளும் வர்க்கம் ஆழ்ந்த செல்வாக்கற்ற கொள்கையைத்தான் செயல்படுத்திவருகிறது. முடிவிலாப் போர் மற்றும் அது அடையாளம்காட்டும் பேரழிவை நிறுத்துவது என்பது சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்திற்காக தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமாக அரசியல்ரீதியாக அணிதிரளுவதில்தான் தங்கியுள்ளது.