World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP marks 25th anniversary of Keerthi Balasuriya’s death

இலங்கை சோசலிச சமத்துவ கட்சி கீர்த்தி பாலசூரியாவின் மரணத்தின் 25 வது வருடத்தை  நினைவுகூருகின்றது

By our correspondent
19 December 2012

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க.), அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய இறந்து 25வது ஆண்டு நிறைவை, கொழும்பில் அவரது சமாதிக்கு அருகில் ஒரு ஒன்றுகூடலுடன் நேற்று நினைவு கூர்ந்தது. பாலசூரிய 1987ல் கொழும்பு கட்சி அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, அவரது 39 ஆவது வயதில் ஒரு பெரும் மாரடைப்பால் இறந்தார்.

கொழும்பு பொது மயானத்தில் நடந்த நிகழ்வில், கீர்த்தியுடன் நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளர்களாக இருந்த தோழர்கள் உட்பட சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். கே. ரட்னாயக்க, நந்த விக்கிரமசிங்க ஆகிய இரு சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர்கள் சோ.ச.க. சார்பாக மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்வுக்கு தலைமை வகித்த கே. ரட்னாயக்க, கீர்த்தியின் நினைவை கௌரவிக்க இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

வருகை தந்திருந்த பல பு.க.க. ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான, சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் நிகழ்வில் உரையாற்றினார். "தோழர் கீர்த்தி முன்னெடுத்த அரசியல் போராட்டங்களில் உயர்ந்த படிப்பினைகள் அடங்கியுள்ளன. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் மட்டுமன்றி, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் இப்போது கட்டவிழ்ந்து வரும் சமூக புரட்சிகர போராட்ட காலகட்டத்தில் அவை நினைவு கூறப்பட்டு மீண்டும் மீண்டும் கிரகித்துக்கொள்ளப்பட வேண்டும்", என அவர் தெரிவித்தார்.

ட்ரொட்ஸ்கிசத்துக்கு கீர்த்தி செய்த அரசியல் பங்களிப்புகளுக்கான சர்வதேச மதிப்பு, டிசம்பர் 18 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள முன்னோக்கு கட்டுரையிலும் மற்றும் கீர்த்தியின் மரணத்தின் 20வது ஆண்டு பூர்த்தியின் போது உலக சோசலிச வலை தள ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் எழுதிய மதிப்பாய்வின் மறுவெளியிட்டிலும் பிரதிபலித்துள்ளது, என டயஸ் கூறினார்.

1964ல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து கொண்டு, லங்கா சமசமாஜ கட்சி (ல.ச.ச.க.) செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பால் உருவாக்கப்பட்ட அரசியல் குழப்பத்தை தெளிவுபடுத்த போராடிய, கீர்த்தி உட்பட சிறு இளைஞர்கள் குழுவின் அரசியல் பரிணாம வளர்ச்சியை டயஸ் விளக்கினார்.

இந்த தெளிவுபடுத்தும் செயற்பாட்டில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) ஆற்றிய தீர்க்கமான பாத்திரத்தை சோ.ச.க. பொதுச் செயலாளர் கோடிட்டுக் காட்டினார். ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பின் அரசியல் வேர்களை, 1950களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்திற்குள் உருவான ஒரு திருத்தல்வாத போக்கான பப்லோவாதத்திலேயே காண வேண்டும் என அனைத்துலகக் குழு விளக்கியது

கீர்த்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்த இளைஞர்கள் மத்தியில், அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களின் போது சோசலிச அனைத்துலகவாதத்தின் மிக உறுதியான பிரதிநிதியாக இருந்தார். "தோழர் கீர்த்தி தனது வாழ் நாளில் அந்த சர்வதேசிய அடித்தளங்களில் இருந்து ஊசலாடவே இல்லை," என டயஸ் கூறினார்.

"தொழிலாள வர்க்க அனைத்துலகவாதத்துக்காக கீர்த்தி முன்னெடுத்த போராட்டத்தின் படிப்பினைகளை புதிய தலைமுறை புரட்சியாளர்கள் தீவிரமாக கற்று கிரகித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய டயஸ் விளக்கியதாவது: அந்த படிப்பினைகளின் அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கம், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் இளைஞர்களால் எதிர்கால புரட்சிகர வெடிப்புகளில் சமூக விடுதலைக்கான வழியைத் திறக்க முடியும்."

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் நிகழ்வில் உரையாற்றினார்: "தோழர் கீர்த்தி, 1953ல் பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்திலும் மற்றும் 1963ல் பப்லோவாதத்துடன் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒருங்கிணைவு மீதான அனைத்துலகக் குழுவின் கொள்கைப் பிடிப்பான எதிர்ப்பிலும் காலூன்றியிருந்தார். அவர் இந்தியத் துணைக் கண்டத்தில் உருவான பல்வேறு திருத்தல்வாதப் போக்குகளுக்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தை ஆழப்படுத்த செயற்பட்டதோடு தொழிலாள வர்க்கத்திற்கு புதிய அரசியல் படிப்பினைகளை புகட்டவும் செயற்பட்டார். நாம் அந்த படிப்பினைகளால் பயிற்றப்பெற்ற காரியாளர்களாவோம்."

பீரிஸ், 2011ல் நடந்த சோ.ச.க. ஸ்தாபக மாநாட்டில் ஏற்கப்பட்ட இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்களை சுட்டிக்காட்டினார். "அந்த ஆவணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மைய அம்சம், இந்திய துணை கண்டம் முழுவதும் ஒரு புரட்சிகர மூலோபாயத்துக்காக சோ.ச.க. முன்னெடுக்கும் போராட்டமேயாகும். பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) ஓடுகாலிகளிடம் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு 1985-86ல் பிளவடைந்த பின்னரே எம்மால் அந்த வளர்ச்சியை அடைய முடிந்தது."

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்ததற்கு எதிராக, அமெரிக்க தொழிலாளர் கழகத்தின் தேசியச் செயலாளர் டேவிட் நோர்த் தலைமையில் நடந்த போராட்டத்தில் கீர்த்தியின் முக்கிய வகிபாகம் பற்றி பீரிஸ் விளக்கினார்.

ஜனவரி மாதம், சோசலிச சமத்துவ கட்சி கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களை நினைவுகூர  கொழும்பில் ஒரு பெரும் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.