World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama publicly embraces drone killings

ஆளில்லா விமான படுகொலைகளை ஒபாமா பகிரங்கமாக ஏற்கிறார் 

Bill Van Auken
2 February 2012
Back to screen version

பாகிஸ்தானுக்கு எதிராக 2004இல் அமெரிக்கா தொடங்கிய, மற்றும் ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததும் உடனடியாக கூர்மையாக தீவிரப்படுத்தப்பட்ட மரணகரமான ஆளில்லா விமான தாக்குதல் நடவடிக்கையை ஒபாமா திங்களன்று பகிரங்கமாக நியாயப்படுத்தினார்.

பொதுவாக ஆளில்லா தாக்குதல்கள் குறித்து எதுவும் கருத்து தெரிவிப்பதில்லையென்ற ஒரு கொள்கையை அமெரிக்க அரசாங்கம் கொண்டுள்ளது. தங்கள்மீது யார் படுகொலைகளை மழை போல் பொழிகிறார்கள் என்பதில் பாகிஸ்தானிய மக்களுக்கு எவ்வித ஐயமும் இல்லையென்ற போதினும், அந்த நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் பத்திரிகைகளில் பரவலாக வெளியாகின்றன என்றபோதினும் கூட, அவை CIAஇன் உத்தரவின்கீழ், இரகசிய நடவடிக்கைகளாக கையாளப்படுகின்றன.

ஒபாமாவின் பகிரங்கமான குறிப்புகள் ஒரு பாதுகாப்பு மீறல் என்று நிர்வாக அதிகாரிகள் கவலைகளை வெளியிட்டதோடு, அது ஜனாதிபதியால் தெரியாமல் வெளியிடப்பட்டதல்ல என்பதையும் வலியுறுத்தினர்.

உண்மையில், ஆளில்லா விமான படுகொலைகளைப் பகிரங்கமாக நியாயப்படுத்துவதற்குரிய ஒரு களத்தை ஒபாமா விரும்பினார் என்பதை நம்புவதற்கு அங்கே எல்லா காரணங்களும் உள்ளன. கூகுள் ஏற்பாடு செய்திருந்த "ஆன்லைன் டவுன் ஹால்" என்பதில் அவர் அவருடைய கருத்துக்களை வெளியிட்டார். அந்த நிகழ்வில், பொதுமக்களிடமிருந்து சுமார் 130,000 கேள்விகள் பெறப்பட்டு, அவற்றிலிருந்து வெறும் ஆறு கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் ஆளில்லா விமான தாக்குதல்கள் குறித்த கேள்வியும் ஒன்றாக இருந்தது.  

உண்மையில் ஆளில்லா விமானத்தாக்குதல்கள் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்களைக் காயப்படுத்தவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்,” ஒபாமா அந்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்திருந்தார். அவர் கூறுகையில், “பெரும்பாலும், அவை அல்கொய்தா மற்றும் அவற்றின் கூட்டாளிகளுக்கு எதிராக மிக துல்லியமான, நுட்பமான தாக்குதல்களை நடத்தின,” என்றார்

மேலும் அவர் கூறுகையில், “செயல்பட்டுவந்த பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்தவர்கள், அமெரிக்கர்களை, அமெரிக்க இடங்களை, அமெரிக்க தளங்களை தாக்க, அதற்காக செயல்பட முயல்பவர்களை மற்றும் இன்னும் இது போன்றவர்களை இது இலக்காக கொண்டுள்ளது.” அந்த படுகொலைகள் "ஆய்வறிவுடையவை" என்று வாதிட்ட ஒபாமா, ஒரு "குறிப்பிட்ட இலக்கை நோக்கிய தாக்குதலைச்" செயல்படுத்தும் திறனானது, “ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதிப்பதாகும்" என்று கூறினார்.

ஜனாதிபதியின் விடையிறுப்பு ஒட்டுமொத்தமாக பொய்கள் மற்றும் திரித்தல்களால் கட்டமைக்கப்பட்டிருந்தன.

அமெரிக்கா பாகிஸ்தானுடன் யுத்தத்தை நடத்தவில்லை. அத்தகையவொரு நாட்டில் ஆளில்லாத விமானங்கள் அண்ணளவாக 2,700 மக்களைக் கொன்றுள்ளது என்பதே நிஜமாக உள்ளது. புரூக்ஸ் ஆய்வகத்தால் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, ஒபாமாவால் சித்தரிக்கப்பட்ட துல்லியமான தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டு, ஒவ்வொரு ஆயுத தாக்குதலிலும் அது 10 உயிர்களையாவது பலி கொண்டது என்று குறிப்பிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆயிரக்கணக்கான வறிய பாகிஸ்தானிய கிராமத்தவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்கள் ரிமோட்-கண்ட்ரோல் யுத்த முறையின் இந்த கொடிய வடிவத்திற்கு பலியாகி உள்ளனர்.    

ஆளில்லா விமான தாக்குதல்களில் 168 குழந்தைகள் இறந்ததாக, உறுதியான ஊடக செய்திகளின் அடிப்படையில், இலண்டனை மையமாக கொண்ட ஒரு இலாப நோக்கமல்லாத புலனாய்வு பத்திரிகை கடந்த ஆகஸ்டில் மதிப்பிட்டு ஒரு மிகவும் குறைமதிப்பிலான மதிப்பீட்டை வெளியிட்டது. இது ஒபாமாவைப் பொறுத்த வரையில் "பெரிய எண்ணிக்கை" அல்ல.

அல்கொய்தா போராளிகளை CIA இலக்கில் கொண்டிருந்தமை அமெரிக்க இலக்குகளின் தாக்குதல் வளைந்திருந்தது என்ற வாதம், குற்றத்தனமான தாக்குதலை அமெரிக்க மக்கள் ஏற்கும்படி செய்ய அவர்களைத் தீவிரப்படுத்த ஒரு போலித்தனமான பயங்கரவாத அச்சுறுத்தலை வாஷிங்டன் தூண்டிவிடுவதற்கான மற்றொரு சான்றாக உள்ளது. ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட பெருமளவிலான "போராளிகள்" அமெரிக்க தாக்குதல் இலக்குகளில் இருந்த சாமானிய போராளிகள் அல்லர், மாறாக அவர்கள் அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிமிப்பு இராணுவத்தை வழிநடத்தி சென்றவர்களாவர்.

இந்த படுகொலை நடவடிக்கையை ஆதரித்து அவர் ஏன் பொதுப்படையாக வர வேண்டும்? அது பாகிஸ்தானிய அரசாங்கத்தின் மீது இன்னும் கூடுதலான அழுத்தத்தை அளிக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம். பல தொடர்ச்சியான அமெரிக்க ஆத்திரமூட்டல்களாலும் மற்றும் பாகிஸ்தானிய மக்களின் உள்ளார்ந்த விரோதத்தாலும் அந்நாடின் விமானத்தளங்களிலிருந்து ஆளில்லா விமானங்களை ஏவ சமீபத்தில் CIA அனுமதி மறுத்தவுடன் தான், இஸ்லாமாபாத் அந்த தாக்குதல்களுக்கு உடன்பட்டது.

எவ்வாறிருந்த போதினும், மிக அடிமட்டத்தில், ஒபாமாவின் கருத்துகள் உள்நாட்டை சமாதானப்படுத்தும் நோக்கம் கொண்டிருந்தது. அது நிர்வாகத்தால் பொதுப்படையாக ஒப்புக்கொள்வதற்கான ஒரு பரந்துபட்ட நடவடிக்கையின் பாகமாக உள்ளது. இதன்மூலம் அது அமெரிக்க இராணுவ-உளவுத்துறை கருவிகளால் நடத்தப்பட்ட குற்றத்தனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, சாதாரணமானவையாக ஆக்குகின்றது.

கடந்த டிசம்பரில், குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களைப் போன்றவரைகளையும் வழக்குகளோ அல்லது குற்றங்களோ இல்லாமலேயே காலவரையின்றி கைது செய்ய வைக்க கண்டனத்திற்குரிய அமெரிக்க சட்டத்தை மீறிய, அதீத-அரசியலமைப்பு நடைமுறையாக ஒபாமா தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தில் கையெழுத்திட்டார். அது ஒட்டுமொத்தமாக வெள்ளை மாளிகையே பொறுப்பேற்றிருந்தது.

யேமனில் கடந்த செப்டம்பரில் கொல்லப்பட்ட நியூ-மெக்சிகோவில் பிறந்த அமெரிக்க குடிமகனான அன்வர் அல்-அவ்லாகி மீதான ஆளில்லா விமானத்தாக்குதல் படுகொலையை போலி-சட்டங்கள் மூலமாக நியாயப்படுத்த ஒபாமா நிர்வாகம் அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டரின் ஒரு உரையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் Newsweekஇன் டேனியல் கிளெய்டுமேன் குறிப்பிட்டார். இது எவ்வித ஆதாரமும் இல்லாமல், ஒரு நீதிமன்ற சட்டத்தில் நிரூபிக்க வேண்டிய அவசியமும் கூட இல்லாமல், அமெரிக்க குடிமக்களை அதீத-சட்ட உரிமையுடன் தூக்கிலிட உத்தரவிடும் ஜனாதிபதியின் அதிகாரத்தின் பொதுமக்களின் குற்றச்சாட்டுகளைச் சொந்தமாக்கி இருந்தது.

இத்தகைய அனைத்து நடவடிக்கைகளோடு, ஒபாமா நிர்வாகம் ஒரு பொலிஸ் ஆட்சிக்கான அமைப்புரீதியிலான கட்டமைப்பைக் கட்டியெழுப்பி வருகிறது.

வோல் ஸ்ட்ரீட், இராணுவ-உளவுப்படை கூட்டணி மற்றும் செல்வாக்கு பெற்ற மத்தியதட்டு வர்க்கத்தின் பிரிவுகள் (இவர்கள் ஒருசமயத்தில் தங்களை தாராளவாதிகளாகவும் அல்லது “இடதுகளாகவும்” கூட பிம்பப்படுத்தியவர்கள்) போன்ற அவரின் நிஜமான "அடித்தளத்தை அன்னியமாக்கும் பயமும் கூட இல்லாமல் அவர், புஷ் நிர்வாகத்தால் நடத்தப்பட்டதை கடந்தும் கூட செல்லும் பிற்போக்குத்தனமான மற்றும் ஒடுக்குமுறை முறைமைகளை ஏற்க தற்போது தயாராகி வருகிறார்.

இந்த அடுக்கின் அரசியல் மாற்றமானது, அவர்களை பெருபான்மை உழைக்கும் மக்களிடமிருந்தும் மற்றும் வர்க்க போராட்டத்தின் மீள்-எழுச்சியின் அதிகரித்துவரும் அறிகுறிகளிலிருந்தும் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சமூக பிளவை ஏற்படுத்துவதோடு பின்னி பிணைந்துள்ளது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது, யுத்தத்திற்கு எதிரான போராட்டம் ஆகிய அனைத்தும் இன்று சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தோடு பிரிக்க முடியாதபடிக்கு பின்னி பிணைந்துள்ளன. இவை அனைத்தும் ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியில் ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும்.