World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

After Russia’s UN veto, US talks of “coalition of the willing” against Syria

ஐ.நா.வில் ரஷ்ய தடுப்பதிகார வாக்கெடுப்பிற்குப்பின், சிரியாவிற்கு எதிரான "விருப்பம் உடைய நாடுகளின் கூட்டணி" குறித்து அமெரிக்கா பேசுகிறது

By Jean Shaoul and Chris Marsden
6 February 2012
Back to screen version

ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானத்திற்கு எதிரான ஒரு ரஷ்ய, சீன தடுப்பதிகார வாக்கெடுப்பு, சிரியாவிற்கு எதிராக தற்பொழுது நடக்கும் ஒரு மேற்கத்தைய ஆதரவுடைய தலையீட்டிற்கான தயாரிப்புக்களை நிறுத்திவிடாது. தீர்மானத்தின் மீதான அரசியல் விவாதம் ஆரம்பத்தில் இருந்தே ஒரு அரசியல் தந்திரோபாயம்தான்; ஜனாதிபதி பஷர் அலப்-அசாத்தின் ஆட்சிக்கு எதிராக லிபிய வகையிலான நடவடிகைக்கு ஒரு ஐ.நா. மறைப்பைக் கொடுப்பதற்கு மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கை வலியுறுத்துதல் என்பதற்கு வடிவமைக்கப்பட்டது அல்லது ஆட்சி மாற்றத்திற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மாற்றீட்டை நியாயப்படுத்துவதற்கான வடிவமைப்பைக் கொண்டது.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அரபு லீக்கிலுள்ள பல சர்வாதிகாரிகள் காட்டும் மனிதாபிமானத் தன்மையுடன் இந்த இலக்கு எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இதன் நோக்கம் ஒரு மேற்கத்தைய சார்பு, சுன்னி சார்பு சக்திகளின் மேலாதிக்கத்தில் இருக்கும் அரசாங்கம், வளைகுடா நாடுகளான சௌதி அரேபியா மற்றும் கட்டார் ஆகியவற்றிற்கு நெருக்கமாக இருந்து, அதையொட்டித் தற்போதைய சிரிய ஆட்சியின் முக்கிய நட்பு நாடான ஈரானை இன்னும் தனிமைப்படுத்தும் அரசாங்கம் நிறுவப்படவேண்டும் என்பதுதான்.

முழு அமெரிக்க மேலாதிக்கத்தை எண்ணெய் வளம் உடைய மத்திய கிழக்கு மற்றும் காஸ்பியன் பகுதிகளின் மீது செலுத்துவதற்கு ஒரே பிராந்தியத் தடை என்றுதான் ஈரான் காணப்படுகிறது. அசாத் ஆட்சியை அகற்றி, தெஹ்ரானை வலுவிழக்கச் செய்வது ரஷ்யா மற்றும் சீனாவை அவற்றின் எஞ்சிய செல்வாக்குத் தளங்களில் இருந்து வெளியேற்றுவதற்கும் உதவும்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை சிரியாவிற்கு அது அனுப்பிவைத்த நோக்கர் பணிக்குழு அறிக்கையின் அடிப்படையில் எழுந்த, அசாத் ஆட்சி நடத்தும் வன்முறையைக் கண்டிக்க வேண்டும், அசாத் அதிகாரத்தை தன் துணை அதிபரிடம் புதிய அரசாங்கத்திற்கான தயாரிப்பிற்காக ஒப்படைத்து விட வேண்டும், அந்த அரசாங்கத்தில் எதிர்த்தரப்பு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பயன்படுத்த முனைந்தன.

லீக்கின் பணிக்குழுவின் பெயரை இழுத்தது முற்றிலும் நேர்மையற்ற செயல் ஆகும். வன்முறை குறைந்துவிட்டது, சிரிய அரசாங்கம் அரபு லீக்கின் தேவைகள் பலவற்றைச் செயல்படுத்திவிட்டது என்றுதான் நோக்கர்கள் கண்டறிந்தனர். சிரியாவில் தங்கள் பணிக்குக் அவர்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனர். சௌதி அரேபியா இதை எதிர்கொண்டவிதம், தன் பங்கை முடித்துக் கொண்டதுதான்; அதே நேரத்தில் கட்டார் எமிரின் அரபு இராணுவத் தலையீடு வேண்டும் என்று முறையிடுவதற்கு CNN  இடம் சென்றார்.

அரபு லீக்கின் தலைமைப் பதவியை இந்த நேரத்தில் இப்பதவியை வகிக்க இருந்த கட்டார் பாலஸ்தீன அதிகாரத்திற்கு 400 மில்லியன் டொலர்கள் நிதி உதவி அளித்துவிட்டுத் தானே எடுத்துக் கொண்டது. இப்பதவியை பயன்படுத்தி, நோக்கர்களின் அறிக்கையை நசுக்கியது, அசாத் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியது, பணிக்குழு செயல்பட்டது போதும் என்று கூறிவிட்டது. இதன்பின் அசாத் விலக வேண்டும் என்னும் பரிந்துரையை ஐ.நாவிற்கு அனுப்பி வைத்தது.

அரபு லீக் திட்டத்தின் சில கூறுபாடுகள் இறுதி வரைவில் இருந்து நீக்கப்பட்டாலும், தீர்மானம் இயற்றபட்டிருந்தால், அது அமெரிக்காவிற்கு இன்னமும் சிரியாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு ஒரு மறைப்பைக் கொடுத்திருக்கும். அது அசாத் விலக வேண்டும் என்ற கோரிக்கை உட்பட லீக்கின் பல கோரிக்கைகளை வரவேற்றது; அதே நேரத்தில் தீர்மானத்தின் முந்தைய வரைவுகளில் விவரிக்கப்பட்டிருந்த கருத்துக்களில் இருந்தும் பிறழவில்லை.

ரஷ்ய வெளிநாட்டு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் சுட்டிக்காட்டியதுபோல், அனைத்து சிரிய இராணுவம் மற்றும் ஆயுதப்படைகளை நகரங்கள், சிறு நகரங்களில் இருந்து திரும்பப் பெற்று அவற்றை தாயக முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது ஆட்சி எளிதில் ஏற்கமுடியாத இறுதி எச்சரிக்கை ஆகும்; அதுவும் மேற்கத்தைய ஆதரவுடன் ஆயுதமேந்திய எழுச்சியை அது எதிர்கொள்ளும் நிலையில். ஒரு நேரடி இராணுவத் தலையீட்டிற்கான காரணம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அந்தக் கோரிக்கை சேர்க்கப்பட்டது.

வன்முறைக்கான முழுக் குற்றச்சாட்டையும் ஆட்சியின் மீது இருத்தும் தீர்மானத்தை மாஸ்கோவும் எதிர்த்தது. அரசாங்கத்தைச் செல்வாக்கிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்படக்கூடாது...ஆயுதமேந்திய குழுக்களையும் உட்படுத்துதல் தேவை, ஏனெனில் இரு திறத்தாரும் கருத்திற்கொள்ளாவிட்டால், உள்நாட்டுப்போரில் ஒரு கட்சிக்கு ஆதரவு என்ற பொருளாகிவிடும் என்று அது கூறியது.

வாக்கெடுப்பின் மீதான விவாதம் காலம் கடந்த கெடுவை அடைந்தபோது, சிரிய எதிர்ப்பு அணிதிரட்டப்பட்டுவிட்டது. சிரிய தேசியக் குழுவும் (SNC) சுதந்திர சிரிய இராணுவமும், துருக்கி, கட்டார், சௌதி அரேபியா மற்றும் லண்டனை தளமாகக் கொண்ட சிரிய நோக்கர் தளம் ஆகியவை தாக்குதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

சிரிய பாதுகாப்புப் படைகள் ஹோம்ஸ் நகரத்தின் பகுதிகள் மீது குண்டு வீசியதாகச் செய்தி ஊடகத்திற்குத் தகவல்கள் குவிந்தன. இறந்துவிட்டவர்களின் எண்ணிக்கை என்று கூறப்பட்டது ஒவ்வொரு மணி நேரமும் செல்லச் செல்ல அதிகமாயிற்று; முதலில் 260, பின்னர் 300+, மற்றும் காயமுற்றோர் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமானது என்று. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட ஏழு சிரியத் தூதரகங்கள் தாக்கப்பட்டன; அவைகள் கண்டிக்கப்பட்டது மிக மோசமான படுகொலை என்ற கருத்தை உயர்த்திக் காட்டுவதற்கு நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரம் ஆகும்.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகியவை மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்துப் பெரும் கோபம் அடைந்தவையாகக் காட்டிக் கொள்வதற்கு ஹோம்ஸ் உபதேச மேடை ஆயிற்று.

அமெரிக்க வெளிநாட்டு மந்திரி ஹில்லாரி கிளின்டன் ரஷ்யாவும் சீனாவும் அசாத் ஆட்சி செய்யும் கொடுமைகளுக்கு உடந்தை என்றார். இத்தீர்மானத்தை தடுப்பது என்பது சிரியத் தளத்தில் நடக்கும் கொடூரங்களுக்கு பொறுப்பு கொள்ளுதல் என்பதாகும் என்று அவர் அறிவித்தார்.

ஜனாதிபதி பாரக் ஒபாமா சிரிய அரசாங்கத்தின் சொல்லொணாத் தாக்குதல் ஹோம்ஸ் மக்களுக்கு எதிராக என்று அவர் குறிப்பிட்டதைக் கண்டித்து, அசாத் சிரியக் குடிமக்களை, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படக் கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

வாஷிங்டனின் ஐ.நா. தூதர் சூசன் ரைஸ் ரஷ்யாவும் சீனாவும் சிரிய மக்களை விற்றுவிட்டு, ஒரு இழிந்த கொடுங்கோலரைக் காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளன என்றார். பின்னர் அவர் ட்விட்டரில் எழுதினார். ரஷ்யா மற்றும் சீனா ஐ.நா.பாதுகாப்புச் சபை அதன் ஒரே நோக்கத்தை நிறைவேற்றாமல் தடுப்புதலில் வெறுப்படைந்துள்ளேன்..

ஸ்தாபனச் செய்தி ஊடகங்களில் எதுவும் இந்த அறிக்கைகளில் இருந்ததாகக் கூறப்படும் உயர்நிலையிலிருந்து வெறுப்பைக் காட்டும் இழிந்த மற்றும் பாசாங்குத்தன தன்மையைக் குறிப்பாக கூட சுட்டிக்காட்டவில்லை; இவைகள்தான் அமெரிக்கா ஈராக்கில் தலையிட்டதை பாராட்டினர்; அதில் பல்லுஜா நகரம்அழிக்கப்பட்டது, சிரிய ஆட்சி செய்த எச்செயலையும் விட மிகத் தொலைவானது ஆகும்; இவைகள்தான் அரசியல் பொறுப்பை ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் லிபியாவில் இலக்கு வைத்து நடத்தப்படும் படுகொலைகளுக்கும் கொண்டவையாகும்.

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே, இத்தகைய தீர்மானம் ஏற்கப்படுவதை தடுப்பவர்கள் வரலாற்றில் பெரும் பொறுப்பை சுமக்க நேரிடும்....ஹோம்ஸில் நடந்த படுகொலை மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் ஆகும்;  இதற்கான பொறுப்பு உடையவர்கள் அதற்கு விடையிறுத்தே தீரவேண்டும.

அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டிஷ் கண்டனங்கள் ரஷ்யா மற்றும் சீனாவை பற்றி முரட்டுத்தன ஒலிக்குறிப்பில் இருப்பவை குறிப்பிடத்தக்கவை, மாஸ்கோ மற்றும பெய்ஜிங்கிற்கு எதிராக இயக்கப்படும் சதிகளின் பெருகும் தன்மையை காட்டுபவை. ரஷ்யா இதை நன்கு கருத்திற்கொண்டுள்ளது.

இந்தக்கட்டத்தில் ஹோம்ஸில் நடந்தது என்ன என்பது பற்றித் துல்லியமாக அறிய இயலாது. அசாத் ஆட்சி குண்டுத்தாக்குதல் பற்றிய அறிக்கைகளை மறுத்துள்ளது; இறந்தோர் புகைப்படங்கள் மட்டும்தான் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளது; அப்படத்தில் ஓர் அறையில் எட்டுச் சடலங்கள் உள்ளன, அவைகள் குண்டுத் தாக்குதலைக் கொண்ட அடையாளங்களைப் பெற்றிருக்கவில்லை. அரசாங்கம் ஆயுதமேந்திய துப்பாக்கி ஆட்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட குடிமக்களுடையது என்று கூறுகிறது.

ஞாயிறன்று வெளியிட்ட தகவல் ஒன்றில் நியூ யோர்க் டைம்ஸ் ஒபாமா நிர்வாகம் மற்றும் சிரிய எதிர்த்தரப்பினரின் வழியை பிரதிபலித்தாலும், ஹோம்ஸில் புதிய மோதல்கள் எதிர்த்தரப்பினால் தூண்டப்பட்டன என்பதை ஒப்புக்கொள்கிறது. எதிர்தரப்பு தீவிரச் செயற்பாட்டாளர்களை மேற்கோளிட்டு இச்செய்தித்தாள் சிரிய இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்கள் வெள்ளியன்று இரு இராணுவ சோதனைச் சாவடிகளை தாக்கி 13 முதல்19 சிரிய இராணுவத்தினரை கடத்தினர் என்று கூறுகிறது. இத்தாக்குதல் மேற்கத்தைய ஆதரவுடைய தீர்மானம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபை விவாதங்களை கொண்ட அதே நேரத்தில் வந்தது.

ஆனால் எதிர்தரப்பின் ஒருமித்த, திறனாயாத கூற்றுக்கள் பற்றி செய்தி ஊடகங்கள் தகவல் அளிப்பதை எதுவும் நிறுத்த முடியாது. ராய்ட்டர்ஸ்தான் வெளிப்படையான கருத்தான, சிரியப் படைகள் ஏன் இத்தகைய தீவிர குண்டுத்தாக்குதலை நடத்தின என்பது உடனடியாக தெளிவாக இல்லை, அதுவும் பாதுகாப்புச் சபையில் தூதர்கள் அரபு லீக்கின் கோரிக்கையான டாக்டர் அசாத் பதவி விலக வேண்டும் என்பதை விவாதித்துக் கொண்டிருந்தபோது.

BBC மட்டும்தான் ஹோம்ஸில் சனிக்கிழமை நடந்த இறப்புக்கள் குறித்த தகவல்கள் கிட்டத்தட்ட 200 எண்ணிக்கையை பேசுகின்றன... உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு எனப்படும் முக்கிய செயற்பாட்டுக் குழுக்களில் ஒன்று பின்னர் அதன் திருத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை 55 என்று உறுதிப்படுத்தியது.

இப்பொழுது அமெரிக்காவும் பிரான்ஸும் ஐ.நா.விற்கு வெளியே செயல்படப் புறப்பட்டுவிட்டன போல் தோன்றுகிறது; ஈராக்கில் 2003 போரின்போது தொடரப்பட்ட விருப்பமுடையோர் கூட்டணி என்பதின் புதிய பதிப்பு வந்துள்ளதுஅரபு லீக்கும், துருக்கியும் தேவையான அரசியல் மறைப்பை கொடுக்கின்றன.

செயலற்ற தன்மையாக ஆக்கப்பட்டு விட்ட பாதுகாப்புச் சபையை எதிர்கொண்ட நிலையில், நாம் ஐ.நா.விற்கு வெளியே நம் முயற்சிகளை இரு மடங்காக்க வேண்டும், சிரிய மக்களின் நல்ல வருங்காலத்திற்கான உரிமைகளை ஆதரிக்கும் நம் நட்பு நாடுகள், பங்காளிகளுடன் சேர்ந்து கொண்டு என்று கிளின்டன் கூறினார்.

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி பிரான்ஸ் அதன் ஐரோப்பிய மற்றும் அரபுப் பங்காளிகளுடன் இணைந்து செயல்பட்டு அவரால் அழைக்கப்படும் சிரிய மக்களின் நண்பர்கள் குழுஎன்பதைத் தோற்றுவிக்கும் என்றார்.

அரபு லீக்கின் வெளியுறவு மந்திரிகள் கெய்ரோவில் அடுத்த சனியன்று கூடவிருக்கையில், எகிப்திய வெளியுறவு மந்திரி மகம்மத் கமால் அம்ர் சிரியாவிற்கான ஒரு தீர்வு அரபு பின்னணயில் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.