World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK Prime Minister Cameron attacks “culturally rewarding” cinema

இங்கிலாந்துப் பிரதம மந்திரி காமெரோன் கலாச்சாரரீதியாக தரமுடைய சினிமாக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்

By Paul Bond
23 January 2012
Back to screen version

கடந்த வாரம் பிரித்தானிய திரைப்படத் தொழிலுக்கு நிதி கொடுப்பது பற்றிய டேவிட் காமெரோனுடைய கருத்துக்கள், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடுக்கின் விலைபோகும்  கலைத்தன்மையற்றதைத்தான் அம்பலப்படுத்தியுள்ளது.

 “வியப்பளிக்கும் சமீப காலத்திய வெற்றிகளை கண்ட அவர், குலுக்குசீட்டு மூலமான நிதியளிப்பு சிறந்த சர்வதேசத் தயாரிப்புகளின் தரம் மற்றும் போட்டியிடக்கூடிய வணிகரீதியான வெற்றிகரத் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதற்கான திசையில் இயக்கப்பட வேண்டும்; கலாச்சாரரீதியில் தரமுடைய திரைப்படங்கள் என்பதற்குப் பதிலாக இவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பிரித்தானிய திரைத் தொழில் இன்னும் இயக்கம்மிக்கதாகவும் வர்த்தக நோக்குடையதாகவும் ஓர் உலக முத்திரை பதித்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரித்தானிய திரைப்படங்கள் தேசிய குலுக்குச்சீட்டு -National Lottery- மூலம் சேர்க்கப்படும் நிதியை வினியோகிப்பதின் மூலம் பணம் பெறுகின்றன. கடந்த ஆண்டு வரை, இதற்குப் பொறுப்புக் கொண்டிருந்த அமைப்பு UK Film Council எனப்படும் பிரித்தானிய திரைப்படக்குழு ஆகும்இது 2000ம் ஆண்டில் கிறைஸ் ஸ்மித் தொழிற்கட்சி அமைச்சரவையின் கலாச்சார மந்திரியாக இருக்கும்போது தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் 2009 கடைசியில் தொழிற்கட்சி ஏற்கனவே திரைப்படக்குழுவின் சில செயற்பாடுகளை British Film Institute (BFI). என்னும் பிரித்தானிய திரைப்படக் கூடத்தின் செயற்பாடுகளுடன் இணைத்துவிடும் திட்டங்களை தொடக்கி விட்டது. இக்கூட்டணி அரசாங்கம் 2010ல் திரைப்படக்குழுவை முற்றிலும் தகர்த்துவிட்டு அதன் நிதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் பிரித்தானிய திரைப்படக் கூடத்தின் (BFI) பொறுப்புக்களுக்கு மாற்றிவிட்டது.

பைன்வுட் திரைப்படத்தயாரிப்பு நிறுவனத்திற்குத் தான் செல்லுவதற்கு முன்னதாக காமெரோன் இக்கருத்துக்களைக் கூறினார். பிரித்தானிய திரைப்படங்கள் நம்முடைய கலாச்சாரத்திற்கு கணக்கிடமுடியாத பங்களிப்பை கொடுத்துள்ளன என்று கூறியபின், 2012ல் வருங்காலம் குறித்துத் தைரியமான விழைவுகளை நாம் நிர்ணயிக்கையில், உலகின் பார்வை நம் மீது இருக்கும் என்ற நிலையில், நாம் இன்னும் உயர்ந்த வகையில் வியக்கத்தக்க சமீப காலத்திய வெற்றிகளைவிடக் காண்பதற்கு இலக்கு கொள்ள வேண்டும். என்றார் அவர்.

ஹாலிவுட்டில் இருந்து வரும் மிகப் பெரிய திரைப்படங்கள், நிதிய அளவில் பெறும் வெற்றிபெறும் படங்களைப் பற்றி காமெரோன் பேசியுள்ளார்; ஆனால் விமர்சகர்கள் சில சிறிய குறைந்த வரவு-செலவுத்திட்டம் கொண்ட பிரித்தானிய பிரிவுகள்  ஒப்புமையில் வணிக முறையிலும் வெற்றிபெற்றுள்ளன என்று சுட்டிக் காட்டியுள்ளனர். இயக்குனர் கென் லோச் கூறினார், அனைவருக்கும் எது வெற்றி பெறும் என்று தயாரிப்பதற்கு முன்பே தெரியும், இதையொட்டிப் பிரச்சினை ஏதும் இல்லை என்றார்.

இப்பொழுது ஸ்மித் பிரபுவாக இருக்கும் கிறிஸ் ஸ்மித், பிரித்தானிய திரைப்படத் தொழிலின் நிதியக் கூறுபாடுகளைக் கவனிக்கும் திரைப்படக் கொள்கைக் குழுவிற்கு தலைவராக இருந்து வருகிறார். இக்குழு மீண்டும் திரைப்படத் தயாரிப்பிற்கு நிதியளித்தல், குலுக்குசீட்டு வகையில் சேகரிக்கப்படும் நிதியங்களை வழங்குதல் ஆகிய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. காமெரோனுடைய கருத்துக்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு ஒரு திரைத்தூக்குதல் போல் பரந்த அளவில் காணப்படுகின்றன. பல விமர்சகர்களும் இதற்குப் பின் அறிக்கையிலுள்ள கண்டுபிடிப்புக்கள் காமெரோனுடைய கருத்துக்களில் இருந்தவை போல் மட்டமாக இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டுள்ளனர்; ஆனால் அவை அதே சிந்தனைப்போக்கு கட்டமைப்பிற்குள் செயல்படும் என்றும் காண்கின்றனர்.

திங்களன்று ஸ்மித் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டபோது, அவரும் பெரும் வெற்றி அடையக்கூடியத் திரைப்படங்களுக்கு மட்டும் நிதியளிப்பது இயலாது, ஏனெனில் வணிகரீதியான வெற்றி என்பது பாதுகாப்புடன் முன்கூட்டிகணிக்கப்பட முடியாது என்று கூறினார். குழுவின் நிலைப்பாட்டைக் காமெரோனின் அப்பட்டமான கலையார்வமின்மையுடன் வேறுபடுத்திக் காட்டும் வகையில், அவர் குழுவின் அறிக்கை வணிகரீதியில் இருந்து கலைச் செழிப்பு உடையவை வரை மிகப் பரந்த வேறுபாடுகளை உடைய திரைப்படங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று வாதிடுகிறது, என்றார்.

ஆனால் குழு காமெரோனுடைய வாதங்களில் இருக்கும் கூடுதலான நயமுடைய பதிப்பாக இருக்கும் தன்மையைத்தான் கொண்டுள்ளது; இது பிரித்தானிய திரைப்படத் தொழிலின் பொது நிதியத்தைப் பொதுவாக நம்பியிருக்கும் தன்மையைக் குறைத்து, வணிகரீதியான வெற்றியடையும் திரைப்படங்களுக்கு நிதிய ஊக்கத்தொகைகளை அறிமுகப்படுத்தும். வணிகரீதியாக வெற்றிபெறும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அவர்கள் பெறும் குலுக்கல்சீட்டு முறையிலான நிதியை மீண்டும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட மாட்டார்கள், ஆனால் வருங்காலத் திட்டங்களின் அதை மறுமுதலீடு செய்ய முடியும். வெற்றிக்கு வெகுமதியளிக்கும் கொள்கை முக்கியமானது, ஏனெனில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒருமுறை வெற்றி அடைந்தால், அவர்கள் மீண்டும் வெற்றி அடையக்கூடும். என்றார் ஸ்மித்.

லோச் பன்முக திரையிடும் வளாகங்கள் குறுகிய அளவிலான திரைப்படங்களைக் காட்டுவதில் கொண்டுள்ள ஏகபோக உரிமை என்று அழைத்திருப்பதைத்தான் காமெரோனுடைய கருத்துக்கள் திட்டவட்டமாக இலக்கு கொண்டுள்ளன. இப்பொழுது சுயாதீன சினிமாவின் பரந்த வலைப்பின்னல் ஏதும் இல்லை என்று லோச் குறிப்பிட்டுள்ளார். திரைப்படம் முடிந்தவுடன் வழங்கப்படுவதற்கு இது இன்னும் கூடுதலான பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது; இப்பிரச்சினை பிரிட்டிஷ் தயாரிப்பாளர்களை சமீபத்திய காலத்தில் பெரும் திகைப்பிற்கு உட்படுத்தியுள்ளது.

சினிமாவிற்கு பரந்த பார்வையாளர்கள் வரவேண்டிய பிரச்சினை குறித்தும் ஸ்மித்தின் அறிக்கை விவாதிக்கிறது; ஆனால் இது ஓரளவு திரைப்பட பொழுது போக்கு மன்றங்கள் மற்றும் சமூக மையங்களுக்கு திரைப்படங்களைக் காட்டும் வசதிகளுக்கு ஆதரவு அளிப்பதின்மூலம் வரும் என்று அவர் கருதுகிறார். இந்த தன்னார்வ ஆதரவு வலைப்பின்னலைத் தவிர, நிதிய ஊக்கத் தொகைகள் கொடுப்பதைப் பரிந்துரைப்பதுடன், தயாரிப்பாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் இடையே ஒரு திரைப்பட நிதி கொடுக்கப்படுவதில் இருந்தே ஒத்துழைப்பு இருப்பதற்கான ஊக்கமும் கொடுக்கப்பட வேண்டும் என்று ஸ்மித் கூறுகிறார். இந்த அறிக்கை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தால் வரவேற்கப்பட்டுள்ளது.

 மிகச்சிறந்த சர்வதேச தயாரிப்புக்களுடன் போட்டியிட வேண்டும் என்னும் காமெரோனுடைய விழைவு சினிமாவிற்கு அவர் கொடுக்க விரும்பும் கலாச்சாரத் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. கலாச்சாரரீதியாக தரமுடைய என்பது குறித்து அவர் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது தெளிவாகக் காட்டியிருப்பது போல், அவர் திரைப்படத் தயாரிப்பு என்பது முற்றிலும் ஒரு வணிகச் செயல் என்றுதான் காண்கிறார். கலையும் கலாச்சாரமும் பணத்தின் சொத்துக்கள் மட்டுமே என கருதுகிறார்.

பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களுடன், காமெரோன் சமீபத்திய பிரிட்டிஷ் வரலாற்றைப் பற்றிய களிப்புடன் பின்னோக்கிச் செல்லும், புதிய தென்றலைக் கொடுக்கும் பார்வையை அளிக்கக்கூடிய பல சிந்தனைப்போக்கு நிறைந்த படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அழைப்புவிடலாம். The Queen, The King’s Speech and The Iron Lady ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்கு பரிவு உணர்வு காட்டும் வகையில் வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து மேம்போக்குத்தன்மை, வெறும் சொல்லாட்சி ஆகியவற்றைத்தான் குறிப்பாகக் கொண்டுள்ளன.

இத்தகைய போக்கு பிரித்தானியத் தொலைக்காட்சியிலும் நன்கு புலனாகிறது; அதில் 1950களில் இருந்து வரும் அரசியல் பொதுவாக வெற்றுத்தன அலங்கார ஆடைகள் உடைய நாடகத்திற்குக் கொடுக்கப்படும் மரியாதையைத்தான் பெறுகின்றன. இதில் ஒரு தொடர்புள்ளது; BBC and Channel 4 இரண்டுமே பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பிற்கு கணிசமான நிதியளிக்கும் அமைப்புக்கள் ஆகும். இதேபோன்ற பங்களிப்புக்களை Sky and ITV ஆகியவையும் ஈர்ப்பதற்கு ஸ்மித்தின் அறிக்கை முயல்கிறது.

சமூக உள்ளடக்கத்தை வணிகரீதியான வெற்றி என்ற வகையில் காமெரோன் அடையாளம் காண்கிறார். The King’s Speech என்பது எக்காலத்திலும் சுயாதீன பிரித்தானியத் திரைத்துறையில் மிக அதிகமான வருவாயை ஈட்டிய திரைப்படம் ஆகும்--£9 மில்லியன் செலவில் உலகம் முழுவதும் £250 மில்லியனை ஈட்டியது. காமெரோனுடைய கருத்துக்கள் பற்றிய செய்தி ஊடக விவாதங்களில், இதற்கு மாறாக, மைக் லேயின் படைப்புக்கள் தொடர்ந்து வணிகரீதியற்றவை என்று பிரதிபலிக்கப் படுகின்றன.

காமெரோன் எத்தையக திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார் என்பது மிகத் தெளிவாக உள்ளது.

இவருடைய கருத்துக்கள் பிரித்தானிய கலாச்சார வாழ்வின் மீது நடத்தப்படும் தற்போதைய தாக்குதலின் ஒரு பகுதியாகும். இது ஓரளவிற்கு தற்பொழுதுள்ள அமைப்புமுறை நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் நிதியைக் குறைத்தல், அவற்றை அழித்தல் என்னும் வகையில் நடைபெறுகிறது. இங்கு ஒரு விந்தையான நிலைப்பாடு உள்ளது. இப்பொழு செயல்படாத திரைப்படக்குழு The King’s Speech போன்ற சில திரைப்படங்களுக்கு நிதியளித்துள்ளது; அப்படங்கள்தான் காமெரோனுடைய வருங்காலப் பிரித்தானிய படங்களுக்கு ஒரு (முன்)மாதிரியை அளித்துள்ளன.

கலைகள் மீது இத்தகைய குறைப்புத்தாக்குதல், உலகின் சிக்கல்வாய்ந்த உண்மை நிலையைக் கலைஞர்கள் முகங்கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ள நேரத்தில் வந்துள்ளது. அதன் இறுதிப் பகுதியில் UK Film Council பொதுவாக உலகம் முழுவதும் உள்ள சிக்கல்களைப் பிரதிபலிக்க முயலும் திரைப்படங்களுக்கும் நிதியளித்துள்ளது. Paddy Considine உடைய Tyrannosaur, Lynne Ramsay We Need to Talk About Kevin என்பதைச் சற்றே மாற்றி எடுத்துக் கொண்டது, Andrea Arnold உடைய  Fish Tank மற்றும் Steve McQueen’s Hunger, ஆகியவை இவற்றுள் அடங்கும் சில படங்கள் ஆகும்.

இத்தகைய நிதியளிக்கும் வடிவமைப்பு காமெரோனுடைய கருத்துக்களைப் பார்க்கும்போது நீடிக்கும் எனத் தோன்றவில்லை. சினிமா ஒரு கலை வடிவம் கொண்டது, அரசாங்கம் எந்த திரைப்படங்களுக்கு பிரித்தானிய திரைக்கூடத்தின் நிதி கொடுக்கப்படவேண்டும் என்பதை ஆணையிடக்கூடாது என்று ஸ்மித்தின் அறிக்கை வலியுறுத்தும் அதே நேரத்தில், பார்வையாளர்களைக் கருத்திற்கொள்ள வேண்டிய தேவை குறித்தும் எழுதியுள்ளது. எங்கு பொருத்தமானது அங்கு சந்தைமுறைச் பரிசோதனை தேவை என்றும் அறிக்கை வாதிடுகிறதுஇது திரைப்படங்கள் முற்றிலும் முடிவதற்கு முன்பு பரிசோதனைரீதியாக காண்பிக்கப்பட்டு சரி செய்யப்படுவதைக் குறிக்கிறது.

லோச் தெரிவித்துள்ள மாதிரியில் இருந்து ஒரு படி நகர்ந்துவிட்ட நடவடிக்கை ஆகும். அவர் அதில் பல வேறுபட்ட, வித்தியாசமான திட்டங்களுக்கு நிதியளிக்கப்பட வேண்டும்.... சில வெற்றிபெறும், சில முதன்மைத்தன்மை பெற்றிருக்கும், சில படைப்பாற்றல் கொண்டிருக்கும், நமக்கு ஒரு துடிப்புடைய தொழில்துறை கிடைக்கும்  என்று கூறியுள்ளார்.

Channel 4 ன் ஒரு சுயாதீனத் திரைப்படத் தயாரிப்பாளர் காமெரோனுடைய கருத்துக்களைப் பற்றி, இவை முழுப் படைப்பாற்றல், பலதரப்பட்ட தன்மைகள் உடையன என்பதின் மூலம் வலிமை பயன்படுத்தப்படுவதைத்தான் இது குறிக்கிறது என்றார்.

திரைப்படங்களைத் தயாரிப்பதில் தயாரிப்பாளர்கள் பெரும் இடர்களைச் சந்திக்கின்றனர். எத்தகைய நிதி பெறுவதும் கடினமாக உள்ளது. BFI திரைப்பட செலவுத்திட்டங்கள் சீராகச் சரிந்து கொண்டிருக்கின்றன. நடுத்தர செலவுத்திட்டங்கள் ஒரு பிரித்தானியத் திரைப்படத்திற்கு 2010ல் £1.2 மில்லியன் என்று இருந்தது. இது 2003ல் £2.9 என்பதுடன் ஒப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் 2010ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் 2003ல் இருந்து மிகக் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருந்தது. 2010ல் பிரித்தானியாவில் 79 திரைப்படங்கள்தான் தயாரிக்கப்பட்டன, அதற்கு முந்தைய ஆண்டில் 87 ல் இருந்து குறைவாகும்.

இச்சூழ்நிலையில் சமூக நிலைமைகளின் உண்மைத் தன்மைகளை  ஏதோஒருவகையில் காட்டுவதற்கான முனைவும் மற்றும் அவற்றை கலையுணர்வுடன் வெளிப்படுத்துதல் என்பது சாதிக்கப்படுவதற்கு கடினமாகவுள்ளபோதும் அதற்கான  தேவை முன்னரைவிட அதிகமாக உள்ளது.