World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government moves to extend the police custody period

இலங்கை அரசாங்கம் போலீஸ் காவலில் வைக்கும் காலத்தை நீட்டிக்க முயற்சிக்கின்றது

By Sanjaya Jayasekara
13 July 2012


Back to screen version

இலங்கை அரசாங்கம், எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சித் (யூ.என்.பீ.) தலைவர்களின் ஆதரவுடன், மக்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் போலீஸ் காவலில் வைக்கும் காலத்தை இரட்டிப்பாக்கும், அதாவது 48 மணி நேரமாக்கும், சட்டத்தை பாராளுமன்றம் மூலம் கொண்டுவர முயற்சிக்கின்றது.

குற்றவியல் சட்ட விதிக்கு முன்மொழியப்பட்டுள்ள இந்த திருத்தங்கள், கைது ஆணையின்றி கைது செய்தல், மற்றும் பொலிஸ் தடுப்புக் காவல் போன்றவை அடங்கும் சட்டத்தில் கனிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போது
, விதியின் 37வது பிரிவு, ஒரு சந்தேக நபரை நீதிபதி முன் நிறுத்தும் முன் 24 மணி நேரம் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கிறது.

2007ல்
, தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் உள்நாட்டு யுத்தம் தீவிரப்படுத்தப்பட்ட போது, முக்கியமாக பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதுடன் தொடர்புபட்ட, சில பட்டியலிடப்பட்ட குற்றங்களுக்கு போலீஸ் காவலில் வைக்கும் காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த விதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அரசாங்கத்தின் இராணுவ வெற்றியின் பின்னர்,  31 மே, 2009 அன்று தளர்த்தப்பட்டன.

போர் முடிந்து மூன்று ஆண்டுகளின் பின் பிரேரிக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டம்
, முன்னெப்போதும் இல்லாத வகையில், 48 மணி நேர காலத்தை நிரந்தரமாக்கி அதை போலீஸ் காவலில் இருக்கும் அனைவருக்குமாக விரிவுபடுத்துகிறது. இது, அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை மொத்தமாக மீறி, யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளை பலப்படுத்தும் அரசாங்கத்தின் மற்றொரு நடவடிக்கை ஆகும்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான, யூ.என்.பீ. பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச இராஜபக்ஷ
, இந்த திருத்தங்களுக்கு சங்கத்தின் ஆதரவை அறிவித்தார். "அதிகரிக்கும் குற்ற அலையை தடுக்கும் பொருட்டு எமது பிரதிநிதிகள் சந்தித்து மசோதாவுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்," என அவர் லக்பிமநியூஸ் பத்திரிகைக்குக் கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில்
, யூ.என்.பீ. ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக காட்டிக்கொண்டதோடு, பல்வேறு போலி இடது குழுக்களும் அதை ஆதரித்தன. ஆனால் இராஜபக்ஷவின் கருத்துக்கள் வலதுசாரி பெரும் வணிகக் கட்சியின் உண்மையான நிறத்தை வெளிக்காட்டிவிட்டன.

"அனைத்து போலீசாரும் பிழையானவர்கள் அல்ல. போலீசார் நம் அனைவரது நன்மைக்காகவும் குற்றங்களை எதிர்த்து போரிடுகின்றனர். எனவே உதவ வேண்டியது எமது கடமையாகும்,
என இராஜபக்ஷ டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்தார். எனினும், அதே பேட்டியில், சித்திரவதை என்பது வழக்கமான போலீஸ் கருவியாக இருக்கின்றது என்றும் ஒப்புக்கொண்டார். "இந்த திருத்தங்கள் கொண்டு வரப்படாமல், சட்டம் இருப்பது போன்றே இருந்தாலும் கூட, சித்திரவதை நிறுத்தப்பட முடியாது," என்று அவர் சிடுமூஞ்சித்தனமாக வாதிட்டார்.

சித்திரவதைகளைப் பயன்படுத்துவதும்
, அதே போல் கைதிகளை சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்வதும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் பரவலாக இருந்து வருகின்றது. இந்த திருத்தங்கள், சுமத்தப்படும் ஒரு குற்றஞ்சாட்டு பற்றி எந்தவொரு முறையான விசாரணையையும் ஆரம்பிக்கும் முன், இது போன்ற செயல்களுக்கு மற்றொரு மறைப்பை வழங்கும்.

கடந்த ஆண்டு, இலங்கை-சித்திரவதை வழக்குகள் 1998-2011 என்ற தலைப்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட ஒரு அறிக்கை, முந்தைய பத்து பன்னிரண்டு ஆண்டுகளில் காவலில் இந்த சந்தேக நபர்களை போலீஸ் சித்திரவதை செய்தமை பற்றிய 1
,500 வழக்குகளை ஆவணப்படுத்தியுள்ளது. காவலில் இருக்கும் போது மரணங்கள் ஏற்படுவது பொதுவானதாகியுள்ளது. கடந்த நவம்பரில், தொம்பே பிரதேச போலீஸ் 29 வயதான கயான் ரசாங்கவை கொலைசெய்த பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகால விதிகளின் கீழ், போரின் போதும்
, போருக்குப் பின்னும், போலீஸ் மற்றும் இராணுவ காவலில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளுக்கு எதிராக பரவலாக சித்திரவதைகள் பயன்படுத்தப்படுத்தப்பட்டமை பற்றிய செய்திகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட்டில், அவசர சட்டங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அகற்றிய போதிலும், பாதுகாப்பு படைகள் மற்றும் அரசாங்க சார்பு குண்டர்கள் நாட்டின் பெரும் பகுதியில், குறிப்பாக வடக்கில், ஏறத்தாள கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன.

ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டிருந்த இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சி
, பெருகிய முறையில், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு விரோதமான எதிர்ப்பை அடக்குவதற்கு அணிதிரட்டப்படுவது தெளிவாகின்றது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளில், உழைக்கும் மக்களுக்கு எந்தவொரு சம்பள அதிகரிப்பும் இல்லாமல், பொது சேவைகள் மற்றும் மானியங்களை கடுமையாக வெட்டிக் குறைத்தல், மற்றும் கடுமையான விலை அதிகரிப்பும் அடங்கும். இவை 2012 இறுதியில் வரவு செலவு திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் இட்டுள்ள ஆணையை நிறேவேற்ற செயல்படுத்தப்பட்டு வருகின்றன

கடந்த ஆண்டில்
, அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை கட்டுப்படுத்தும் உத்தரவுகளைப் பெற பல முறை நீதிமன்றங்களை பயன்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய வேலை நிறுத்தத்தின் போது பொலிசாரால் சுடப்பட்டு இறந்த ரொஷேன சானக ரட்னசேகர என்ற தொழிலாளியின் இறுதிச்சடங்கில், நீதிமன்ற உத்தரவின் பேரில் எந்த உரையும் ஆற்றுவது தடை செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம், சிலாபத்தில் இன்னொரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான அன்டனி பெர்ணான்டோ வர்ணகுலசூரியவின் அஞ்சலி நிகழ்வும் நீதவானால் கட்டுப்படுத்தப்பட்டது.


உலக நிதிய நெருக்கடி வெடித்ததில் இருந்து, தமது வாழ்க்கை மற்றும் தொழில் நிலைமைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு ஆழமடைந்து வருவதை எதிர்கொள்ளும், உலகம் பூராவும் உள்ள நாடுகள் மேற்கொள்ளும் ஜனநாயக-விரோத கொடூர நடவடிக்கைகளுக்கு சமாந்தரமானவையாக இராஜபக்ஷ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உள்ளன.