World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israeli man immolates himself over social crisis

இஸ்ரேலிய மனிதன் சமூக நெருக்கடியை ஒட்டி தனக்கே தீ வைத்துக் கொள்ளுகிறார்

By Patrick Martin
18 July 2012
Back to screen version

இஸ்ரேலின் மோசமாகும் சமூக நிலைமைகள் குறித்து டெல் அவிவில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  தனக்கே தீ வைத்துக் கொண்ட மூன்று நாட்களுக்குப் பின் 57 வயதான மோஷே சில்மன் செவ்வாயன்று மரணத்திற்கு வெகு அருகே, உடலில் அனைத்து உறுப்புக்களும் செயல்பாடு இழந்து நிற்கும் நிலையில் உள்ளார் என்று டாக்டர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

கடன்களாலும் நோய்வாயுற்றதினாலும் அழிவதற்கு முன் ஒரு வெற்றிகரமான வாகனமூலம் சரக்குகளை அனுப்பும் சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த சில்மன், கடந்த ஆண்டு வாழ்க்கைச் செலவினங்கள் உயர்ந்து, சமூகநலத் திட்டங்கள், ஆதாயங்கள்ஆகியவற்றின் வெட்டுக்களை எதிர்த்து வந்த எதிர்ப்பு இயக்கத்தில்  வாடிக்கையாகப் பங்கு பெறுபவர் ஆவார். சனிக்கிழமையன்று அந்த எதிர்ப்புக்களின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டிக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் அவரும் ஒருவராவார்.

பேச்சாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், சில்மன் சில்மன் தன் உடல்மீது பெட்ரோலைத் தெளித்துக் கொள்ளத் தொடங்கிப் பின்னர் தனக்கே தீ வைத்துக் கொண்டார். சக எதிர்ப்பாளர்கள் அவரைச் சூழ்ந்து நிற்னு தங்கள் சட்டைகளாலும், குடிநீர் பாட்டில்களில் இருந்து நீரினாலும் நெருப்பை அணைக்க முற்பட்டனர்; ஆனால் அவர் உடலில் 90% மேலான தீக்காயங்கள் ஏற்பட்டுவிட்டன.

ஒரு தட்டச்சுசெய்யப்பட்ட தற்கொலைக் குறிப்பை சில்மன் விட்டுச் சென்றுள்ளார். இஸ்ரேல் நாடு, பிரதம மந்திரி பென்ஞமின் நெத்தென்யாகு, நிதிமந்திரி யூவல் ஸ்டீனிட்ஸ ஆகியோரை “வலிமை இழ்ந்துள்ள இஸ்ரேலியக் குடிமக்களுக்கு அன்றாடம் அவமானத்தைக் கொடுப்பதற்காகவும் ஏழைகளிடம் இருந்து பணத்தைப் பறித்துச் செல்வந்தர்களுக்குக் கொடுப்பதற்காகவும்” குற்றம் சாட்டினார்.

அரசாங்கம் தான் ஒரு வாழ்வை நடத்துவதை அழிப்பதற்கும், அவர் வீடற்ற நிலை என்ற விளிம்பில் நிறுத்தியுள்ளதற்கும் அதன்மீது அவர் குறைகூறியுள்ளார். “இஸ்ரேலிய அரசாங்கம் என்னிடத்தில் இருந்து திருடுகிறது, கொள்ளை அடிக்கிறது” என்று எழுதிய அவர், “அது என்னிடத்தில் மிச்சம் எதையும் வைக்கவில்லை.” அவர் மேலும் கூறியது” “நான் வீடில்லாமல் இருக்க முடியாது, எனவேதான் இத்தகைய எதிர்ப்பு.”

இஸ்ரேலியச் செய்தி ஊடகத் தகவல்படி, சில்மன்னுடைய போக்குவரத்து வாகனம் தேசியக் காப்பீட்டு உயர்கூடத்துடன் ஏற்பட்ட ஒரு மோதலுக்குப் பின் செயற்பாட்டில் இல்லை. அந்தக் காப்பு அமைப்பு வரி பிரச்சினைகள் குறித்த ஓர் அரசாங்க நிறுவனம் ஆகும். முதலில் அவருடைய வாகனங்கள் கடன்களைத் தீர்ப்பதற்குக் கைப்பற்றப்பட்டன; பின்னர் அவருடைய வங்கிக் கணக்குகளும் இறுதியில் அவருடைய தாயார் தன் மரணத்திற்குப் பிறகு அவருக்கு விட்டுச் சென்றிருந்த வீடும் இதே கதிக்கு உள்ளாயின.

உடல் வலுவற்ற தன்மைக்கு அவரைத் தள்ளிய ஒரு பெரிய வாத தாக்குதலுக்குப் பின்னர் அவருக்கு மாதம் 2,300 ஷெகெல்கள்தான் கொடுக்கப்பட்டன;  அந்த நாட்டிலோ வாழ்க்கைச் செலவுகள் அமெரிக்காவை ஒத்து உள்ளன. பகுதி நேரம் டாக்ஸி ஓட்டுவதற்கு, சுகாதாரக் காரணங்களை ஒட்டி அவர் அனுமதி மறுக்கப்பட்டார். டிசம்பர் மாதம் அவருக்குக் கொடுக்கப்பட்டுவந்த இயலாத நிலை உதவிகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டன; அதன் பின் பொது வீடுகளுக்கு அவர் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டார். தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேற இரு வாரங்கள் அவகாசம் அவருக்கு அளிக்கப்பட்டது. 

சில்மனுடைய சகோதரர் அமரோன் எலுல், செய்தி ஊடகத்திடம் சில்மன் இறக்கும் தறுவாயில் படுத்துள்ள மருத்துவமனைக்கு வெளியே கூறினார: “அவர் இஸ்ரேலில் பிறந்தார், ஏழு ஆண்டுக் காலம் இராணுவத்தில் பணிபுரிந்தார் அதன் பின் பல ஆண்டுகள் இருப்புக் கடமைகளையும் செய்தார். எவருக்கும் அவர் தொந்திரவு கொடுக்கவில்லை, ஆயினும்கூட அரசாங்கம் அவரிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டது, அவருடைய வணிகம் வீடு என; இறுதியில் எவரும் அவருக்கு உதவத் தயாராக இல்லை.”

இஸ்ரேலிய சமூகம் முழுவதும் இத்தற்கொலை எதிர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஞாயிறன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவில் பரிவுணர்வு காட்டும் வகையில் அணிவகுத்தனர். சில்மன் வசித்து வந்த ஹாபா பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் “நாடு முழுவதும் மோஷே சில்மன்னிற்கு ஆதரவாக உள்ளது” என்ற கோஷ அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

ஜெருசலத்தில் பிரதம மந்திரி நெத்தென்யாகுவின் வீட்டிற்கு வெளிய பலர் “நாங்கள் அனைவரும் மோஷே சில்மன்தான்: அரசாங்கத்தின் கைகளில்தான் இரத்தக்கறை படிந்துள்ளது, “பீபி நீங்கள் எங்களையும் தீக்காயத்திற்கு உட்படுத்திவிட்டீர்கள்” என்ற கோஷ அட்டைகளை ஏந்திக் கூடியிருந்தனர்.

இஸ்ரேலிய செய்தித்தளம் Ynet பிரசுரித்துள்ள கருத்துப்படி, சில்மன்னுடைய பொருளாதார அழிவு மற்றும் உடல் இயலாமை நெத்தென்யாகு நிதி மந்திரியாக 2004-05ல் இருந்துபோது இயலாமைப் படிகளில் சுமத்திய கடுமையான வெட்டுக்கள் வந்த நேரத்திலேயே ஆகியவை சரிந்தன. வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் சுகாதாரப் பாதுகாப்பின்மீது கொண்ட பாதிப்பு “சில்மன் மருத்துவ மனைக்கு தீக்காயங்களுக்கான பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அங்கு ஒரு படுக்கை கூட அவருக்காக இல்லை. பிரிவு அதன் முழு அளவில், பல இஸ்ரேலிய மருத்துவமனைப் பிரிவுகள் இருப்பதைப் போலவே இருந்தது. சில்மன் மற்றொரு நோய்ப்பிரிவிற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.”

மேலும், Calcalist கடந்த மாதம் வெளியிட்டு ஆய்வு ஒன்றின்படி, இஸ்ரேலிய மக்களின் “மத்தியதர வகுப்பில் 63 சதவிகிதத்தினர் ஒரே ஒரு அவசரக்காலச் செலவான 8,000 ஷெகெல்களைக்கூடத் தாங்க இயலாதவர்கள்; மக்களில் பெரும்பாலானவர்கள் மோஷே சில்மனை அழித்த நெருக்கடி முறையைப் போன்றதைத்தான் எதிர்நோக்கியுள்ளனர்.”

சில்மனுடைய தற்கொலை முயற்சி போலவே இரண்டாம் நபர் ஒருவர் திங்களன்று தெற்கு இஸ்ரேலில் Be’er  Sheva முயற்சித்தார். 47 வயதான அவர் எரியும் திரவம் ஒன்றின் மூலம் தனக்குத் தீ வைத்துக் கொள்ள முற்பட்டார்; ஆனால் ஒரு பாதுகாப்பு அலுவலர் மிக விரைவுடன் அவர் மீது பாய்ந்து மற்றொரு பெரும் துயரத்தைத் தவிர்த்தார். சமீபத்தில் அந்த நபர் வீட்டு அதிகாரிகளைத் தனக்கு உறைவிடம் கொடுக்குமாறு கேட்டார் என்று ஒரு தகவல் கூறுகிறது.

இஸ்ரேலிய அரசியல் நடைமுறை சில்மன்னுடைய சோக எதிர்ப்பிற்கு வாடிக்கையான பொருட்படுத்தாத்தன்மை மற்றும் இகழ்வுணர்வுடன் எதிர்கொண்டுள்ளது. பிரதம மந்திரி நெத்தென்யாகு இச்செயலை “ஒரு தனிப்பட்ட நபரின் சோகம்” என்று—அதாவது இதற்குப் பரந்த சமூகப் பொருள் இல்லை என்று, உதறித்தள்ளிவிட்டார். அவருடைய உத்தியோகபூர்வச் செய்தித்தொடர்பாளர் தற்கொலை முயற்சி “ஒரு மனிதாபிமானச் சூழ்நிலையுடன் தொடர்பு கொண்டது, அரசியலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை” என்றார்.

டெல் அவிவ் உடைய மேயரின் செய்தித் தொடர்பாளர் சில்மன் அந்நகரத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றும் “வெளி நபர்” என்றும் சுட்டிக்காட்டப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். அவர் எழுதியது: “இந்தப் பெரும் சோக நிகழ்வு டெல் அவிவில் நடந்தாலும், உண்மையில் இது நகர நடைமுறையுடன் தொடர்பு கொண்டதில்லை. தன்னைத்தானே தீ வைத்துக் கொண்ட நபர் டெல் அவிவிற்கு வெளியில் இருந்து வந்து, நகரத்தில் பெரிய அளவிற்கு இச்செயலைச் செய்துள்ளார்.”

எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஷெல்லி யாசிமோவிச், “சில்மன் விவகாரம் நிச்சயமாக ஒரு சமூக நீதி எதிர்ப்பிற்கான அடையாளம் என பார்க்கப்படக்கூடாது” என்றார்.

ஆனால் ஒரு டெல் அவிவ் அதிகாரியுடய கருத்தின்படி, இஸ்ரேலில் ஆண்டு ஒன்றிற்கு 400 பேர் இஸ்ரேலில் பொருளாதாரச் சுமைகளினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். உண்மையில் ஆண்டில் ஒவ்வொரு நாளும் ஒரு மோஷே சில்மன் செயல் நடைபெறுகிறது.

இஸ்ரேலின் பொதுநல, சமூகப் பணிகள் அமைச்சரகமும் தேசியக் காப்பீட்டுக் கூடமும் ஒரு குழு நிறுவப்படும் என்றும், அது “நம்மிடையே இப்பொழுதுள்ள கருவிகளுக்கு அப்பால் நடக்கும் அசாதாரண விவகாரங்களைத் தீர்க்க முற்படும்”, மேலும் “சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளை தீர்க்க, அவற்றிற்கு உதவ” ஒரு அவசர நேரடித் தொலைத் தொடர்பும் ஏற்படுத்தப்படும் எனக் கூறியுள்ளன. அத்தகைய வண்ணப்பூச்சுச் செயல்கள் அரசாங்கத்திற்கு வருங்காலத்தில் அதன் பொருளாதார நெருக்கடி, அதன் வலதுசாரி சமூகக் கொள்கைகள் ஆகியவற்றினால் ஏற்படும் பேரழிவு தரும் பாதிப்பு குறித்து வரும் சங்கடத்தைக் குறைப்பதுதான்.