World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The euro crisis and the role of SYRIZA

யூரோ நெருக்கடியும் சிரிசாவின் பங்கும்

Christoph Dreier
8 June 2012

Back to screen version

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் அதன் பொது நாணயத்தின் நெருக்கடியும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், அது பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தின் தேவையை முன்னே நிறுத்துகிறது. சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பலமுறை வெகுஜன எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களையும் தொழிலாளர்கள் நடத்தியுள்ள கிரேக்கம், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்ல், அயர்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த இரு ஆண்டுகளின் அனுபவங்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளின் கொள்கைகள் கீழிருந்து பரந்த அழுத்தம் வந்தால் மாற்றப்பட முடியும் என்னும் கூற்றுக்களின் தவறான தன்மையைத்தான் காட்டுகின்றன.

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகியோரின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட சிக்கனக் கொள்கைகள் கிரேக்கத்திலும் பிற அதிக கடன் பட்டுள்ள தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மக்களின் பரந்த அடுக்குகளை வறிய நிலைக்குத் தள்ளிவிட்டன; மக்களுடைய கடன்கள் தீவிரமாகிவிட்டன; வங்கி நெருக்கடிகளும் ஏற்பட்டுவிட்டன. தொடர்ச்சியான ஐந்தாம் ஆண்டாக சகதியில் சிக்கியுள்ள கிரேக்கம் அதன் கடன் 2008ம் ஆண்டு 250 பில்லியன் டாலர் என்பதில் இருந்து இன்று 350 பில்லியன் டாலர் என உயர்ந்துள்ளதைத்தான் காண்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் ஐரோப்பிய சிக்கனக் கொள்கைகளை வங்கிப்பிணை எடுப்புக்களின் அளவை அதிகரிப்பதின் மூலம் மாற்றலாம் என்பது, தொழிலாள வர்க்கத்திற்கு நலன்களை எதையும் கொடுக்கப்போவதில்லை. இத்திட்டங்கள், முக்கிய ஐரோப்பிய சக்திகள் பெருந்திகைப்பில் நடத்தும் பேச்சுக்களுக்கு இடையே வெளிவந்துள்ளன; இவற்றுள் இன்னும் கூடுதலான வரவு-செலவுத் திட்ட குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மீதான புதிய தாக்குதல்கள் ஆகியவை அடங்கும்.

ஐரோப்பாவை ஆளும் நிதிய உயரடுக்குகளின் திவால்தன்மையைத்தான் இந்நெருக்கடி அம்பலப்படுத்தியுள்ளது; அதேபோல் முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வியையும் அம்பலப்படுத்தியுள்ளது. யூரோ நெருக்கடிக்கு முற்போக்கான விடையை அளிக்கக் கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான். அதன் தொழில்துறை மற்றும் சமூகப் பலம் சர்வதேசப் போராட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதன் உறுப்பான முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் எதிராக அணிதிரட்டப்பட வேண்டும்; அது, தொழிலாளர் அதிகாரத்தை நிறுவுவதற்கான போராட்டம், முதலாளித்துவத்தை அகற்றுதல், ஐரோப்பா மற்றும் சர்வதேச மட்டத்தில் சோசலிசத்தை வளர்த்தல் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஆளும் வர்க்கத்தின் கன்னைகளில் ஒன்றிற்கு தொழிலாளர்ளை அடிபணியவைக்க முற்படும் குட்டி முதலாளித்துவ இடது சக்திகள் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன, சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக உள்ளன. தற்பொழுது ஐரோப்பாவில் இச்சக்திகளின் முக்கிய பிரதிநிதியாக இருப்பது கிரேக்கத்தின் தீவிர இடது கூட்டணி எனப்படும் சிரிசாவும் அதன் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸும்தான்.

ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகளை சுமத்திய முந்தைய அரசாங்கக் கட்சிகளுக்கு எதிராக வாக்காளர்கள் ஒரு மாற்றீட்டை நாடுகையில், கருத்துக் கணிப்புக்களின்படி, சிரிசா ஜூன் 17 தேர்தல்களில் வலுவான கட்சியாக வெளிப்படலாம், சிப்ரஸ் பிரதம மந்திரி ஆகக்கூடும். ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் கிரேக்கத்தின் கடன் நிலைகள் குறித்த பழைய பேச்சுக்களை நிராகரிக்க வேண்டும், சிக்கன நடவடிக்கைகள் முடக்கப்பட வேண்டும் என்று கூறியமுறையில் சிரிசா வாக்கெடுப்பில் ஏற்றம் பெற்று வருகிறது.

ஆனால் சிரிசா ஒன்றும் ஒரு புரட்சிகரக் கட்சி அல்ல. அது ஒரு குட்டி முதலாளித்துவக் கட்சி; இதன் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரளலுக்கு விரோதப்போக்கை கொண்டது.

சமூகத் தாக்குல்கள் குறித்த சீற்றத்தை அது கட்டுப்படுத்த முற்படுகிறது; அதே நேரத்தில் தொழிலாளர் போராட்டங்களை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மேலாதிக்கத்திற்குள் வைத்திருக்க விரும்புகிறது; பிந்தையதோ கிரேக்கத்தின் முந்தைய அரசாங்கங்களுடன், தொழிலாளர்கள் மீது அவை பேரழிவுத் தாக்குதல்கள் நடத்தியபோது நெருக்கமாக ஒத்துழைத்திருந்தன. அதன் செயற்பாடுகள் தொழிலாள வர்க்கத்தை கிரேக்க ஆளும் வர்க்கம், ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவத்திற்கு தாழ்த்தும் ஒரு கருவி போல் செயல்படவேண்டும் என்பதுதான்.

கிரேக்க வாக்காளர்கள் என்று இல்லாமல், சர்வதேச செய்தி ஊடகங்களுடன் பேசுகையில், சிப்ரஸ் அதிகாரத்திற்கு வந்தால் தன் கட்சி நிதியச் சந்தைகள் திருப்தி அடையத் தேவையானவற்றை செய்வதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். முக்கிய வங்கிகள், பெருநிறுவனங்களுக்கு பிணை எடுப்புக்கள் திட்டத்தையும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளையும் இணைந்த வகையில் முன்னெடுக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என சிரிசா நம்புகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்திருக்க விரும்புவதாகவும் சிப்ரஸ் பலமுறை கூறியுள்ளார். அடிப்படைக் கட்டுமானச்  சீர்திருத்தங்களுக்கு அது உடன்படும் என்பது மட்டும் இல்லாமல்அவை ஏற்கனவே ஊதியங்களை வெட்டி, பல்லாயிரக்கணக்கான வேலைகளையும் அழித்துவிட்டனநாட்டின் கடன்களையும் மதிக்கும் என்று கூறியுள்ளார்; இதைத்தான் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கன நடவடிக்கைகளை சுமத்த நெம்புகோல் போல் பயன்படுத்தியுள்ளது.

Der Spiegel க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், சிப்ரஸ் ஹாலண்டை நம்பிக்கைக்கு ஆதராம் என்று கூறியுள்ளார்; பிரெஞ்சு ஜனாதிபதியின் திட்டமான ஐரோப்பிய மத்திய வங்கி அதிக நாணயம் அச்சடித்தல், யூரோப் பத்திரங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஒபாமாவின் கொள்கைகளை பலமுறை பாராட்டியுள்ளார்; ஐரோப்பியத் தலைவர்கள் மந்தநிலைக்கால பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்லட்டின் புதிய உடன்பா டு போன்ற கொள்கைகளை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தகைய வெற்றுத்தன ஒப்புமைகள் கிரேக்க நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஐரோப்பியக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரும் வாய்ப்பு உள்ளது என்னும் போலி உணர்வுகளைத்தான் வளர்க்கும். அமெரிக்காவில் வேலைகள், ஊதியங்கள்மீது ஒபாமா மிருகத்தனத் தாக்குதல்களை நடத்தியுள்ளார்; பரந்த வேலையின்மை, வரவு-செலவுத்திட்ட குறைப்புக்கள் ஆகியவற்றால் விளைந்துள்ள இடர்களைக் குறைக்க சீர்திருத்தக் கொள்கைகளையும் நிராகரித்துவிட்டார். அமெரிக்க முதலாளித்துவத்தின் பரந்த சரிவு அமெரிக்க அரசியல் நடைமுறையில் இருந்து எத்தகைய சமூக சீர்திருத்தக் கொள்கையும் வெளிவராததில் நன்கு புலனாகும். கிரேக்க முதலாளித்துவம் முந்தைய சகாப்தத்தின் சீர்திருத்தக் கொள்களைகளை செயல்படுத்துவதற்கு வளங்களைக் கொண்டிருக்கவில்லை.

முதலாளித்துவ நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், நிகழ்ச்சிநிரலில் கடுமையான வர்க்கப் போராட்டங்கள்தான் வரவிருக்கின்றன; இதில் குட்டி முதலாளித்துவ இடது கட்சிகளான சிரிசா போன்றவை தொழிலாள வர்க்கத்தை நட்பு அமைப்பாக அணுகாது; கடுமையான எதிரியாகவே அணுகும்.

உயர்மட்ட அதிகாரிகளுடன் ஒருவேளை ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தை யூரோப்பகுதியில் இருந்து அகற்றினால் எடுக்கப்பட வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் குறித்து சிரிசா இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக சிப்ரஸே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் பேச்சுக்களின் விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. கடந்த வாரம் அவர் கிரேக்கத்தில் இராணுவத் தலைமைக் கட்டுப்பாட்டைச் சந்தித்து ஆயுதப்படைகளின் வலிமையை அதிகரிக்க அழைப்புக் கொடுத்துள்ளார்.

முக்கியமான ஆபத்து என்பது சிரிசா போன்ற கட்சிகளும் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத் தட்டுக்களும் மத்தியதர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளில் இருந்து வருபவை; அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பொருளாதாரச் சரிவு சர்வாதிகாரத்திற்கு எதிரானதொழிலாளர் வர்க்கப் போராட்டங்களை தடுத்து நிறுத்தி சீர்குலைத்துவிடும்.

போலி இடது போக்குகளுக்கு எதிராக ஒழுங்குமுறையான அரசியல் போராட்டத்தின் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சுயாதீன சோசலிச வேலைதிட்டத்தை அடித்தளமாக கொண்டு தொழிலாளர்கள் இவர்களுக்கு எதிரான தங்கள் அரசியல் போராட்டத்தை முன்னேடுக்காமல் ஒரு அடிகூட முன்னேற முடியாது.

தொழிலாள வர்க்கம், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவவும் கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதிலும் ஒரு புதிய புரட்சிகரக் கட்சியை கட்டமைக்கும் பணியை எதிர்கொள்கின்றது. அதற்கான கட்சிதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும்.