World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

மீனவர்கள் போராட்டம் பற்றி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கூட்டம்

By the Socialist Equality Party
26 June 2012
Back to screen version
சோசலிச சமத்துவ கட்சியும் (இலங்கை) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், மீனவர்களின் போராட்டங்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாட ஜூன் 30 அன்று மேற்கு கடற்கரை நகரா சிலாபத்தில் பொது கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளன.
பெப்பிரவரி மாதம், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கேற்ப, எரிபொருள் விலையை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகரித்தது. மது செலவுகள் படு மோசமாக அதிகரிப்பதை எதிர்கொண்ட ஆயிரக்கணக்கான மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு அரசாங்கம் ஆயுத படைகளை திரட்டி பதிலளித்தது.

சிலாபத்தில் அன்டனி வர்ணகுலசூரிய என்ற ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு மேலும் மூன்று பேர் கடும் காயமுற்றனர். கடந்த வாரம், காயமடைந்த மீனவர்களில் ஒருவரான W.J. கிங்ஸ்லி பெர்னாண்டோ, காயம் தன்னை செயலிழக்கச் செய்ததன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளால் தற்கொலை செய்துகொண்டார்.
மீனவர்களுக்கு 25 சதவிகித எரிபொருள் மானியத்தை வழங்கும் அரசாங்கத்தின் வாக்குறுதி மோசடியானது என்பது விரைவில் நிரூபிக்கப்பட்டது. அது ஒரு சில மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மீன்பிடி உபகரணங்களுக்கான செலவு வானளாவ உயர்ந்த போதும், மீனவர்கள் பிடிக்கும் மீன்களின் விலை உயரவில்லை.
மீனவர்களின் போராட்டம் ஒரு பரந்த போராட்டத்தின் பகுதியாகும். அனைத்து தொழிலாளர்களும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளாலும் ரூபாய் மதிப்பிறக்கத்தாலும் மின்சாரம் மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய தேவைகளின் விலை உயர்வாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெகுஜன எதிர்ப்பு வளர்கின்ற நிலையில், அரசாங்கம் பெருகிய முறையில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடுகின்றது.
அரசாங்கத்துக்கும் மற்றும் அதன் வேலைத்திட்டத்துக்கும் எதிரா ஒரு அரசியல் போராட்டம் இன்றி, மீனவர்களோ அல்லது உழைக்கும் மக்களின் ஏனைய பிரிவினரோ தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை காக்க முடியாது. சமூகத்தின் பெரும்பான்மையானவர்களின் நலனுக்காக ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தின் மூலம் இராஜபக்ஷ அரசாங்கத்தை பதிலீடு செய்வதற்கான ஒரு அரசியல் போராட்டத்தின் தேவையையே இது அர்த்தப்படுத்துகிறது.

சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க.) மட்டுமே சோசலிச அனைத்துலகவாத முன்நோக்குக்காகப் போராடும் ஒரே கட்சியாகும். நாம் மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இடம்: சுதசுன மண்டபம், சிலாபம்
நாள் மற்றும் நேரம்: ஜூன் 30, சனி, மாலை  3.30 மணி