World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Jerry White visits Debs museum in Terre Haute, Indiana

Remembering a pioneer American socialist

இந்தியானாவில் Terre Haute அருங்காட்சியகத்திற்கு ஜெரி வைட் விஜயம்

ஒரு முன்னோடி அமெரிக்க சோசலிஸ்ட் நினைவுகூரப்படுகிறார்

By Tom Mackaman 
7 March 2012
Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு தேர்தல் வலைத் தளம் socialequality.com ஐக் காணவும்

மார்ச் 28 செவ்வாயன்று, சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் இந்தியானாவிலுள்ள  Terre Haute இன் Eugene V.Debs அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தார். வைட்டின் பிரச்சாரம் அமெரிக்க சோசலிசத்தின் முதல் முக்கிய மனிதரான டெப்ஸ் கிட்டத்தட்ட 1 மில்லியன் வாக்குகளை 1912 தேர்தலில் அடைந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகிறது; அத்தேர்தலில் டெப்ஸ் ஜனநாயகக் கட்சியின் வூட்ரோ வில்சன், குடியரசுக் கட்சியின் ஹோவர்ட் டஃபாட் மற்றும் முற்போக்கு தியோடோர் ரூஸ்வெல்ட் ஆகியோரை எதிர்த்து நின்றிருந்தார். 

1912ல் அவர் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிட்டபோது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாக்குகளைப் பெற்றார். 1920ல் முதல் உலகப் போரை எதிர்த்துச் சிறையில் இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாக்குகளைப் பெற்றார். அவருடைய புகழ்பெற்ற போர் எதிர்ப்பு உரையை ஓகையோ கான்டனில் கொடுத்தற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த அருங்காட்சியகம் 60,000 மக்கள் கொண்ட தென்மேற்கு இந்தியானாவில் Terre Haute என்னும் நகரத்தில் பழைய டெப்ஸ் வீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தைச் சுற்றி அருங்காட்சியகத்தின் இயக்குனரும் டெப்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக உதவியாளருமான கரேன் பிரௌன் இனால் வைட் அழைத்துச் செல்லப்பட்டார். அருங்காட்சியகம் புதிப்பிக்கப்பட்டுவந்தாலும்கூட, ஆண்டு ஒன்றிற்கு 1,500 பார்வையாளர்களை ஈர்க்கிறது. 20ம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் ஏராளமான மக்கள் வந்திருந்த நிலையில், இன்று அதிகம் டெப்ஸ் அறியப்படவில்லை என்று பிரௌன் தெரிவித்தார்; அவரைப் பற்றிப் பள்ளிகளிலும் அபூர்வமாகத்தான் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
 

1965ல் திறக்கப்பட்ட அருங்காட்சியகம் டெப்ஸைப் பற்றியும், ஆரம்பகால அமெரிக்க சோசலிசத்தைப் பற்றியும் அதிகம் அறிய விரும்பும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் மேன்மை மிக்க  இலக்கிடமாகும். அவருடைய பல கடிதங்கள், படைப்புக்கள் மற்றும் 1912 தேர்தல் அரங்க ஆவணங்கள் போன்ற கட்சியின் சோசலிச ஆவணங்கள் எண்முறைப்படுத்தப்பட்டு இப்பொழுது இந்தியானா மாநிலப் பல்கலைக்கழக நூலக வலைத் தளத்தில் கிடைக்கின்றன. இல்லத்தில் பெருமையுடன் காட்டப்படுவது உப்டன் சின்கிளேரின் கையெழுத்திடப்பட்ட The Junge, சின்கிளேர் லெவிஸ் பாப்பிட், மற்றும் எம்மா கோல்ட்மனுடைய நூல் ஒன்று ஆகியவை உள்ளன. டெப்ஸின் கார்ல் மார்க்ஸின் மூலதனப் பிரதி ஒன்றும் மிளிர்கிறது; இந்நூலை அவர் 1894ம் ஆண்டு புல்மன் வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்தியதற்குச் சிறையில் அடைக்கப்பட்டபோது அங்கு படித்தார். மேலும் எழுத்தாளர்கள் Carl Sandberg, Theodore Dreiser ஆகியோருடனான கடிதத் தொடர்புகளும் அடங்கியுள்ளன; பிந்தையவரும் Terre Haute வாசிதான்.

டெப்ஸ் இல்லத்திற்கு வருகை புரிந்தபின், ஜெரி வைட் WSWS இடம் கூறினார்: தொழிலாள வர்க்கத்திற்கு அதன் வரலாற்றைப் பற்றிய அறிவை மறைப்பதற்கே இவ்வளவும் செய்யப்பட்டுள்ளது; ஒரு நூற்றாண்டிற்கு முன் வீரம் செறிந்த போராட்டத்தை டெப்ஸும் பிற சோசலிச முன்னோடிகளும் செய்தவற்றைப் பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டுவிட்டன. இங்குள்ள புகைப்படங்கள், நூல்கள் இன்னும் பலவும் சக்திவாய்ந்த சர்வதேச சோசலிசம், மார்க்சிசம் மற்றும் ரஷ்யப் புரட்சி பற்றி அமெரிக்க தொழிலாள வர்க்கம் அறிந்தவற்றை எடுத்துக் காட்டுகின்றன.

உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் மீண்டும் உலக முதலாளித்துவத்தின் சரிவை எதிர்கொள்கையில், புதிய உலகப் போர்களின் ஆபத்தை எதிர்கொள்கையில், இந்தப் போராட்டங்களின் செழிப்பு மிகுந்த மரபுகள் புதுப்பிக்கப்பட வேண்டும், 21ம் நூற்றாண்டின் ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்துடன் இணைக்கப்பட வேண்டும். அதுதான் நம் தேர்தல் பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும்.

 

இயூஜின் விக்டர் டெப்ஸ் பெரும் புரட்சிகர மரபுகளின் உருவகமாக இருந்தார். பிரான்ஸில் இருந்து குடியேறி வந்தவர்களுக்குப் பிறந்த டெப்ஸ் பிரெஞ்சு ரொமான்ட்டிக்ஸ் எழுத்தாளர்கள் மற்றும் மெய்யியல்வாதிகளின் நூல்களைக் கற்று வளர்ந்தார்; அவரே புதின எழுத்தாளர்கள் இயூஜின் சூ மற்றும் விக்டர் யூகோவின் பெயர்களைத்தான் பெற்றிருந்தார். அவருடைய கொள்ளுப் பாட்டனார் ஒருவர் பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் 1789ல் உறுப்பினராக இருந்து, அதன்பின் அல்சாட்டியன் புரட்சி அரசாங்கத்தில் ஒரு சிறு பதவியையும் வகித்தவராவார். ஆயினும் அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் மரபியம்தான் லிங்கன் படுகொலை செய்யப்பட்டபோது டெப்ஸிற்கு 10 வயதுதான் இந்த இளைஞரின் உள்ளத்தில் சிந்தனைகளை நிரப்பியிருந்தன. டெப்ஸின் வாழ்க்கை நூலை எழுதியவர்களின் கருத்துப்படி, நவீன தொழில்துறை முதலாளித்துவத்தின் எழுச்சியும் அத்துடன் நவீன வர்க்க சமுதாயம் அமைந்த விதமும், டெப்ஸின் கண்ணோட்டத்துடன் மோதின; அதுவோ ஜேபர்சன், லிங்கன், சமத்துவ குடியரசுப் பொதுநலம், தொழிலாளர்களுக்குக் கௌரவம் ஆகியவற்றைத் தளம் கொண்டிருந்தது.

டெப்ஸ் இரயில் நிறுவனம் ஒன்றில் 14 வயதிலேயே வேலைக்குச் சென்றார்; இளைஞராக இருக்கும்போது தற்காலத் தொழிற்சங்கங்களுக்கு முன்னோடிகளாக இருந்த இரயில்வே சகோதர அமைப்புக்களுடன் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்தது இல்லை. ஆனால் ஒரு தலைவர் என்ற திறனைப் பெற்றிருந்தது அவருக்கு உள்ளூர் அரசியலிலும் சகோதர அமைப்புக்களிலும் பதவிகளைப் பெற்றுத் தந்தது. 1877, 1886 நாடு தழுவிய கவனத்தையீர்த்த வேலைநிறுத்தங்களில் ஒரு பங்காளராகவும் நோக்கராகவும் இருந்தார். பெரும் ஏற்றம், பெரும் எழுச்சி எனப் பெயர் பெற்றிருந்த இயக்கங்கள் தொழிலாள வர்க்கத்தை ஒரு சக்தி வாய்ந்த சமூக சக்தியாக வெளிப்படக் கட்டியம் கூறினஅத்துடன் அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் மூர்க்கத்தன வன்முறையை கையாண்டு அதை நிறுத்துவதும் வெளிப்பட்டது. 

1894ம் ஆண்டு புல்மன் வேலை நிறுத்தத்தின் போது டெப்ஸ் ஒரு பிரபலமான மனிதராக இருந்தார். இது தற்கால தொழில்துறைச் சங்கத்தில், அமெரிக்க இரயில்வேத் தொழிற்சங்கத்தின், முதல் மிகப் பெரிய வேலைநிறுத்தம் ஆகும்; இதற்கு டெப்ஸ் தலைமை வகித்தார். ஜனாதிபதி கிரோவர் க்ளீவ்லாந்த் வேலைநிறுத்தத்தை முறியடிக்க ஒரு தடுப்பாணையை பயன்படுத்தினார்; அதன் பின்னர் அமெரிக்க இராணுவத்தை சிக்காகோவிற்கு  வேலைநிறுத்தக்காரர்களை பணிய வைப்பதற்கு அனுப்பினார். அந்த மோதலில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன்கணக்கில் பலர் காயமுற்றனர்.  

புல்மன் வேலைநிறுத்தத்தின்போது டெப்ஸ் பின்வாங்க மறுத்தது ஆளும் வர்க்கத்தின் விரோதத்தைத்தான் அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. நியூ யோர்க் டைம்ஸ் அவரை மனிதகுலத்திற்கு ஒரு எதிரி என்று விவரித்தது; ஆனால் டெப்ஸ் முதலாளித்துவ ஊடகங்களிலிருந்து வெளிப்பட்ட அத்தகைய பெருமைகளை ஒரு பெருமிதச் சான்றாகத்தான் அணிந்து கொண்டார். டெப்ஸும் மற்ற வேலைநிறுத்தத் தலைவர்களும் தடுப்பாணையை மீறியதற்கு சிறையில் தள்ளப்படுமாறு கிளீவ்லாந்து செய்தார். ஒரு இளைஞரும், அதிகம் அறியப்படாத பெருநிறுவன வக்கீல்தான் விசாரணையின்போது டெப்ஸிற்கு வக்கீலாக இருந்தார்: அவர்தான் கிளாரன்ஸ் டாரோ.

சிறையில் இருக்கும்போதுதான் மார்க்ஸின் எழுத்துக்களை அறிந்து, சோசலிசம் குறித்த ஆழ்ந்த கருத்துக்களில் டெப்ஸ் மூழ்கத் தொடங்கினார். அவருடைய அரசியலும் சோசலிசம் பற்றிய உணர்வும் நாட்பட ஒழுங்குற்றது என்றாலும், டெப்ஸ், புல்மன் அனுபவத்திற்குப்பின் தொழிற்சங்க போராளித்தனம் முதலாளித்துவத்தினரை எதிர்த்துப் போராடப் போதுமானதாக இருக்காது என்பதில் உறுதியானார். ஓர் அரசியல் போராட்டம்தான் தேவைப்படும். இந்நிலைப்பாட்டில் இருந்து அவர் தளர்ச்சி அடையவில்லை. முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து வெளியேறுங்கள் என்று தொழிலாளர்களிடம் டெப்ஸ் முழங்கினார்: உங்களுக்கு அங்கு வேலையில்லை.

இக்கருத்தாய்வு டெப்ஸை அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் (AFL) தலைவர் சாமுவல் கோம்பர்ஸுடன் வாழ்நாள் விரோதியாக்கியது. பிந்தையவர் தொழிலாளர்களை ரொட்டி மற்றும் வெண்ணைத் தொழிற்சங்க வாதத்துடன் முடக்க விரும்பினார்; அவர்கள் உள்ளத்தில் இருந்து எவ்வித அரசியல் கருத்தையும் அகற்ற விரும்பினார். இது டெப்ஸை இரட்டைத் தொழிற்சங்கவாதம் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வைத்தது; பிக் பில்” Haywood, Daniel De Leon உடன்  சேர்ந்து, 1905ம் ஆண்டு புரட்சிகர சிண்டிகலிஸ்ட் தொழிற்சங்கம், IWW எனப்பட்ட தொழில்துறை உலகத் தொழிலாளர்கள் என்னும் அமைப்பை சிகாகோ தொழிலாளர் வர்க்கத்தின் கண்ட மாநாட்டில் (Continental Congress of the Working Class in Chicago) தொடக்க வைத்தது.

தொழிலாள வர்க்கத்தின் தலைவர் என்னும் உயர்மதிப்பில் டெப்ஸ் விரைவில் 1901ம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய பிரபல்ய நபரானார். அமெரிக்காவில் முதல் உலகப் போருக்கு முன் சோசலிச இயக்கம் சீர்திருத்த சாக்கடை சோசலிஸ்ட்டுக்களான மிலுவாக்கியின் விக்டர் பெர்ஜெர், நியூ யோர்க் இன் மோரிஸ் ஹில்க்விட் ஆகியோரின் செல்வாக்கிற்கு அதிகம் உட்பட்டிருந்தது. அவர்களை லியோன் ட்ரொட்ஸ்கி பாபிட்டுக்களின் பாபிட்டுக்கள் (திருப்தியுற்ற மத்தியதர வர்க்கக் கருத்தினர்)... வெற்றிகரமான பல்வைத்தியர்களின் சோசலிச இலக்குத் தலைவர் என்று பொருத்தமாகக் குறிப்பிட்டார். ஆனால் டெப்ஸ் புரட்சிகரக் கொள்கைக்கு நிலைப்பாடு கொண்டிருந்தவர்களுடன்தான் எப்பொழுதும் இருந்தார் என்று சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) ஜேம்ஸ் பி. கனன் கூறியுள்ளார்.

சொந்த முறையில் டெப்ஸை நியூ யோர்க் நகரத்தில் அவர் இருந்தபோது அறிந்திருந்த ட்ரொட்ஸ்கி நேர்மையான புரட்சியாளர் என்று நினைவு கூர்ந்தார்; லெனின் டெப்ஸை புரட்சிகரத் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதி என்று அழைத்தார்.

1912 தேர்தலில் (மொத்த வாக்குகளில் சதவிகிதம் என்ற கணக்கில்) சோசலிஸ்ட் இயக்கம் அதன் மிகப் பேரிய தேர்தல் வெற்றியைக் கண்டது; டெப்ஸ் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றார். சோசலிசச் சவால், முக்கிய தொழில்துறை வேலைநிறுத்தங்ளின் எழுச்சியுடன் இணைந்து அமெரிக்க ஆளும் வர்கத்தின் பிரிவுகளை புரட்சியை திசைதிருப்ப, ஒரு சில சீர்திருத்தங்களைக் கொடுப்பது நல்லது, ஏகாதிபத்திய நோக்கங்களை வெளிநாடுகளில் கொள்ளலாம் என்று நம்பவைத்தது. இந்த முற்போக்கு பார்வைதான் 1912 தேர்தலில் டெப்ஸின் மூன்று எதிர்ப்பாளர்களான வில்சன், ரூஸ்வெல்ட் மற்றும் டாப்ட் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

1917ல் அமெரிக்காவை உலகப் போரில் தள்ளுவதில் வில்சன் வெற்றி அடைந்தபோது, அப்பொழுதுதான் ரஷ்யப் புரட்சி ரஷ்யாவை போரில் இருந்து அகற்றும் வழிவகையில் இருந்தது; டெப்ஸ் பெரும் தைரியத்துடன் முதலாளித்துவ பெரும் தீயை எதிர்த்தார்.

பிற்போக்குத்தன அரசுத் துரோக சட்டத்தை வெளிப்படையாக மோதிய வகையில், டெப்ஸ் ஜூன் 1918ல் ஓகையோ கான்டனில் போரைக் கண்டித்து ஓர் உரையை நிகழ்த்தினார். சிறையில் ஒரு சுதந்திர ஆன்மாவை உடையவராக இருப்பதை ஆயிரம் மடங்கு தெருக்களில் முகஸ்துதி செய்யும் கோழையாக இருப்பதைவிட விரும்புவேன் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியுடன் ஒற்றுமையை அறிவித்த டெப்ஸ் வோல் ஸ்ட்ரீட் ஜங்கர்களையும் கண்டித்தார். இந்த உரைக்காக நீதிமன்றம் அவருக்குத் தண்டனை அளித்தபோது, டெப்ஸ் நீதிமன்றத்திடம் கூறினார்: கீழ் வர்க்கம் என்ற ஒன்று உள்ளபோது; அதில் நான் உள்ளேன். கருணையையோ, தயவுப் போக்கையோ அவர் நாடவில்லை.

வயதில் மூப்பானவர் அட்லான்டா கூட்டாட்சிச் சிறையில் அடைக்கப்பட்டார்; அங்கு அவர் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வாரன் ஹார்டிங் தண்டனைக் குறைப்பைமன்னிப்பு அல்லவெளியிடும் வரை, 1921 வரை இருந்தார். சிறையில் அவர் இருக்கும்போது, சோசலிஸ்ட் கட்சி அதன் புரட்சியாளர்களையும் சீர்திருத்தவாதிகளையும் தனியே இருத்திய நிலையில், கடைசித் தடவயாக ஜனாதிபதிப் பதவிக்கு நியமித்தது. இம்முறை அவர் 900.000 வாக்குகளுக்கு மேல், சிறையில் இருந்தபடியே பெற்றார்.

தொழிலாளர்களை ஈர்க்கும் திறனில் டெப்ஸ் இணையற்று விளங்கினார். ஆரம்பகால சோசலிச இயக்கத்தில் வேறு எந்த உண்மையான தேசிய மட்டத்திலான தலைவரும் இல்லை. இது டெப்ஸை கன்சர்வேடிவ் கூறுபாடுகளிடன் சமரசம் செய்ய வழிவகுத்தாலும்கூட, அவர் ஒருபோதும் தான் முழுத் தொழிலாள வர்க்கத்திற்காகவும்தான் பேசுகிறோம் என்ற உண்மையை மறந்துவிடவில்லை; அதனிடம் அவர் தன் புகழ்பெற்ற சொல்லாற்றல் மூலம் உரையாற்றினார்.

சிறப்பு திறமைபெற்ற தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், விவசாயிகள் என்று அனைவரும் டெப்ஸின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் கூடினர். டெப்ஸின் புகைப்படங்கள் அனைத்தும் யூதக் குடியேற்றக் குடும்பங்களின் சுவர்களில் பொதுவாகக் காணப்பட்டது; அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அடித்தளத்தில் இருந்து வெளிப்பட்ட முதல் பெரிய மனிதர் அவர்; தன்னுடைய கைகளை உயர்த்தி, நான் உன் சகோதரன் எனக்கூறினார் என்று ஒரு நினைவுக் குறிப்பு தெரிவிக்கிறது.

1926ல் டெப்ஸ் மறைந்தபோது, இறுதிச்சடங்குகளுக்காக Terre Haute ல் 10,000 பேர் கூடினர்; இப்பொழுது டெப்ஸ் அருங்காட்சியகம் என்று இருக்கும் அவருடைய முன்முகப்பில் அது நடைபெற்றது.