World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

An insider’s view of Wall Street criminality

வோல் ஸ்ட்ரீட்டின் குற்றத்தன்மை குறித்த ஓர் உள் நபரின் பார்வை

Andre Damon and Barry Grey
15 March 2012
Back to screen version

கோல்ட்மன் சாக்ஸில் ஒரு நிர்வாக இயக்குனராக இருக்கும் கிரெக் ஸ்மித் புதன் அன்று தன்னுடைய இராஜிநாமாவை நியூயோர்க் டைம்ஸில் ஆசிரியர் தலையங்கத்திற்கு எதிர்ப்பக்கக்கட்டுரையில் அறிவித்து, வங்கியின் நச்சுத் தன்மை நிரம்பிய பேராசை மற்றும் மோசடிகளையும் கண்டித்துள்ளார்.

நிறுவனத்தின் அமெரிக்கப் பங்குகளின் ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிரிவுகளுக்கு ஸ்மித் தலைவராக இருந்தார். நான் ஏன் கோல்ட்மன் சாக்ஸை விட்டு விலகுகிறேன் என்ற தலைப்புடைய கட்டுரையில், அவர் வாடிக்கையாளர்களையும், பொது மக்களையும் ஏமாற்றி குறுகியகாலத்தில் அதிப இலாபத்தை கறக்கவைக்க அதன் உத்தியோகஸ்தர்களை தூண்டும் பெருநிறுவனச் சூழ்நிலை பற்றி அவர் விவரித்துள்ளார். தங்கள் வாடிக்கையாளர்களை சுரண்டுவதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இங்கு நபர்கள் பேசுவது என்னை துன்பத்திற்குள்ளாக்குகின்றது. என்று அவர் எழுதியுள்ளார்.

தன் வாடிக்கையாளர்களை முட்டாள்கள் என்றும் ஒரு ஒப்பந்தத்தை செய்து முடிப்பதை விழிகளைத் தோண்டி எடுத்தல் எனக்கூறுவதும் ஸ்மித் கூற்றின்படி கோல்ட்மன்னில் சர்வ சாதாரணமாக இருக்கிறது. வோல் ஸ்ட்ரீட் பெருநிறுவனம் முன்னேறுவது என்பது நம் கைவிடவிரும்பும் பங்குகள் மற்றும் பிற பொருட்கள் மீது வாடிக்கையாளர்களை முதலீடு செய்யச் சொல்லுவது, கோல்ட்மனுக்கு மிக அதிக இலாபம் கொடுப்பதைக் கொண்டுவரும் எவ்வகையான வணிகத்தை செய்யச் சொல்லுவது இன்னும் விளக்கமற்ற, வெளிப்படையற்ற பொருளை மூன்றெழுத்து முதற்சொல்லெழுத்து வணிகம் நடத்துதல் ஆகியவற்றின் மூலம் என்று அவர் எழுதியுள்ளார்.

இக்கட்டுரை நிதிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நேர்மையுடன் நடத்துதல், அவர்களுடைய நலன்களை பாதுகாத்தல் என்பது குறித்த சட்டங்களும் கட்டுப்பாடுகளும் எப்படி வாடிக்கையாக ஒரு செயற்பாட்டில் மீறப்படுகின்றன என்பதை விவரிக்கிறது. கோல்ட்மன் சாக்ஸை பற்றிய குற்றச்சாட்டு ஒரு உள் நபரிடம் இருந்த வருவது, ஒரு பரந்த நிகழ்சிப்போக்காக அமெரிக்க முதலாளித்துவம் முழுமையாகவே குற்றத்தன்மையைக் கொண்டிருப்பது குறித்து எடுத்துக்காட்டுகிறது.

வோல் ஸ்ட்ரீட்டின் மிகப் பெரிய இலாபங்களை அடைய வேண்டும் என்னும் வெறித்தன முயற்சி எப்படி ஓர் உலக நிதியக் கரைப்பைத் தூண்டி, பெருமந்த நிலைக்குப்பின் மிக ஆழ்ந்த சரிவைக் கொடுத்தது. மேலும் பெருநிறுவன அமெரிக்காவின் குழு இயக்குனர்களின் அறைக் கூட்டங்களில் எதுவும் மூன்றரை ஆண்டுகளில் மாறவில்லை என்பதை ஓர் உள் நபரின் கருத்துக்கள் மூலம் இது உறுதிப்படுத்துகிறது. இதே மோசடித்தன, பல நேரமும் சட்டவிரோத வழக்கங்கள் என்று அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்தை செழிக்கவைத்து சமூகத்தின் பிற பகுதிகளை கொள்ளையடிக்கும் முறைகள் சற்றும் குறையாமல் தொடர்கின்றன. மேல்மட்டத்தில் இருக்கும் குற்றவாளிகள், வரிசெலுத்துவோரின் நிதியில் இருந்து டிரில்லியன் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு பிணையெடுக்கப்பட்டவர்கள் இப்பொழுது முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்குப் பணம் திரட்டுகின்றனர். மில்லியன் கணக்கான சாதாரண மக்கள் வறுமையிலும், வீடின்மையிலும் தள்ளப்பட்டுள்ளனர்.

கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கான நிதியொதுக்கல் கைவிடப்பட்டுள்ளது. ஊதியங்கள் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன, இன்னும் சிக்கன நடவடிக்கைகள்தான் செயலுக்கு வரும், ஏனெனில் பணம் இல்லை என்று கூறப்படுகின்றது. இதற்கிடையில் பெருநிறுவன இலாபங்களும், தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியங்களும் புதிய உயர்ந்த மட்டத்திற்குச் சென்றுவிட்டன.

இது கோல்ட்மன் சாக்ஸ் குறித்த குற்றச்சாட்டு மட்டும் அல்ல. வோல்ஸ்ட்ரீட் பற்றி மட்டும் அல்ல, மாறாக முழுப் பொருளாதார, அரசியல் முறையைப் பற்றியதாகும். வெள்ளை மாளிகை, காங்கிரஸ், நீதிமன்றங்கள், செய்தி ஊடகம், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் என்ற அனைத்து உத்தியோகபூர்வ நிறுவனமும் இதில் உடந்தையாக உள்ளது.

ஸ்மித்தின் கட்டுரை செய்தி ஊடகத்தில் பரந்த முறையில் தகவல் கொடுக்கப்பட்டது. NBC இரவுச் செய்திகள் புதன் இரவு இத்தகவலுடன் தன் அறிக்கையைத் தொடங்கி, கோல்ட்மன் சாக்ஸின் முன்னாள் நிர்வாகி விவரித்த வழக்கங்கள் குறித்துக் கண்டிப்பதற்காக பாதுகாப்புப் பத்திர மற்றும் பரிமாற்ற ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஒருவரைப் பேட்டி கண்டது. ஆளும் வர்க்கத்திற்கு வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான சீற்றம் குறித்து நன்கு தெரியும். மற்றும் முதலாளித்துவமே பெருகிய முறையில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் பார்வையில் இழிவுற்று வருகிறது என்பதும் தெரியும். இத்தகைய வழிவகைதான் ஆரம்ப வெளிப்பாடாக வோல்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கவும்- Occupy Wall Street- என்னும் எதிர்ப்புக்களில் வெளிப்பட்டது. இப்பொழுது இது ஸ்மித்தின் கட்டுரை இந்த உணர்வை இன்னும் எரியூட்டும் என்றுதான் கவலைப்படுகிறது.

ஸ்மித் சுட்டிக்காட்டும் வழக்கங்களும் அதையும் விட மோசமானவையும் ஒபாமா நிர்வாகத்திற்கும் நிதியக் கட்டுப்பாட்டு அமைப்புக்களுக்கும் நன்கு தெரிந்தவைதான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செனட்டின் விசாரணைகள் பற்றிய நிரந்தரத் துணைக்குழு 640 பக்க அறிக்கை ஒன்றை செப்டம்பர் 2000 வீழ்ச்சிக்கு வழிவகுத்த முக்கிய வங்கிகளின் மோசடித்தன, சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விரிவாக கோடிட்டிருந்ததை வெளியிட்டது. அறிக்கையில் முழுமையாக 260 பக்கங்கள் கோல்ட்மன் சாக்ஸ் குறித்து இருந்தன. ஒரு கூறுபாடுகூட விட்டுவிடாமல் அது தேதிகள், பெயர்களைக் கொடுத்து எப்படி வங்கி அதன் வாடிக்கையாளர்களை அவர்களுக்கு அடைமானப் பத்திரங்களை விற்றதின் மூலம் மோசடி செய்து, அதே நேரத்தில் அவர்களுக்கு அது பற்றித் தெரிவிக்காமல் அதே முதலீடுகளுக்கு எதிராகப் பந்தயம் கட்டியது என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

அக்குழு கடன்தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் கூட்டாட்சிக் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் 2007-08ல் முறிந்த பாரிய அடைமான Ponzi திட்டத்திற்கும் உடந்தையாக இருந்தது குறித்தும், இவை எப்படி ஒரு புதிய உலக மந்த நிலையை ஏற்படுத்தியது என்பது பற்றி ஆவணப்படுத்தியுள்ளது. கோல்ட்மன் மற்றும் அது ஆய்வு செய்திருந்த இரு வங்கிகளான Washington Mutual, Deutsche Bank எப்படிப் பாதுகாப்புப் பத்திர சட்டங்களை மீறின என்று மேற்கோளிட்டுள்ளது.  மேலும் இத்தகவலை ஒபாமா நிர்வாகத்தின் நீதித்துறைக்கும் இதை அனுப்பி வைத்துள்ளது.

இதற்கான வெள்ளை மாளிகையின் பிரதிபலிப்பு ஒன்றுமே செய்யவில்லை என்பது வெளிப்படைதான். ஒரு மூத்த வங்கி அதிகாரிகூட குற்றத்தன்மை வகையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இக்குற்றங்களோ அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான, கணக்கிலடங்காத மக்களின் வாழ்க்கைகளைப் பேரழிவிற்கு உட்படுத்திவிட்டன. மாறாக, வெள்ளை மாளிகை பெருநிறுவனக் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பைத்தான் கொடுத்துள்ளது.

வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, கோல்ட்மன் சாக்ஸ், பாங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிக்ரூப், கன்ட்ரிவைட் பைனான்சியல் என, பாதுகாப்புப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற ஆணையம் பதிவு செய்த குற்றங்களை நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன; தவறினை ஒப்புக் கொண்டதால், பெயரளவிற்கு அபரதாங்கள் விதிக்கப்பட்டன. இது இன்னும் தொடர்கிறது என்பது திங்களன்று கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஐந்து முக்கிய வங்கிகளுக்கும், மாநில, கூட்டாட்சி அரசாங்கங்களுக்கும் இடையே வங்கிகளின் சட்டவிரோத வீடுகளை ஏலத்திற்குவிடும் நடவடிக்கைகள் குறித்து காதலர்போல் பேசித் தீர்த்துக் கொண்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. வங்கிகள் மொத்தத்தில் கூட்டாக $5 பில்லியன் அபராதத்தை ஆயிரக்கணக்கான குடும்பங்களை அவற்றின் வீடுகளில் இருந்து சட்டவிரோதமாக துரத்தியற்குக் கொடுத்தால் போதும், தவறு என ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. இதற்கு ஈடாக பல பில்லியன்கள் இழப்பீட்டுத் தொகைகள், அபராதங்கள் ஆகியவற்றை விதித்திருக்க்கூடிய அரசாங்க விசாரணைகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒபாமா நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு மட்டும் கொடுக்கவில்லை; அவர்களுடைய பிரதிநிதிகளைத் தன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவில் சேர்த்துள்ளது. சில உதாரணங்கள் கீழே உள்ளன:

* முன்னாள் கோல்ட்மன் சாக்ஸின் செல்வாக்குத் திரட்டுபவரான மார்க் பாட்டர்சன், இப்பொழுது நிதிமந்திரி திமோதி கீத்னருக்கு தலைமை அலுவலக அதிகாரியாவார்.

* கோல்ட்மன் சாக்ஸில் முன்னாள் நிதிய ஆய்வாளராக இருந்த டயானா ஃபரெல் இப்பொழுது தேசியப் பொருளாதாரக் குழுவில் துணை இயக்குனர் ஆவார்.

* ஒபாமாவின் தலைமை அலுவலக அதிகாரி, சிட்டிக்ரூப்பில் ஒரு முன்னாள் உயர்மட்ட நிர்வாகி ஆவார். தன்னுடைய வெள்ளை மாளிகை செயற்பாடுகளுக்குத் தலைமை வகிப்பதற்கு மற்ற இரு வங்கியாளர்களுடன் இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; மற்ற இருவர், முறையே ஜே.பி. மோர்கனின் முன்னாள் நிர்வாகி வில்லியம் டேலேயும், சிக்காகோ முதலீட்டு வங்கியின் முன்னாள் அதிகாரியான ரஹ்ம் எமானுவேலும் ஆவர்.

அமெரிக்கப் பெருநிறுவன நிதிய உயரடுக்கு குற்றத்தன்மையானது முதலாளித்துவ முறையில் இருந்து பிரிக்கப்பட முடியாதது ஆகும். இது பல தசாப்த நெருக்கடி, சிதைவு என்னும் வழிவகையின் விளைவு ஆகும்இதில் ஆளும் உயரடுக்கு பெருகிய முறையில் தன் செல்வச்செழிப்பை அதிகரிப்பதை உண்மையான மதிப்பை உற்பத்தி செய்வதில் இருந்து பிரித்துவிட்டது.

உற்பத்தி முறையும், உற்பத்திமுறை உள்கட்டுமானங்களும் சிதைக்கப்பட்டுவிட்டன; அதே நேரத்தில் நிதியத் திரித்தல், ஊகம் ஆகியவை பொருளாதார வாழ்வின் மீது மேலாதிக்கம் செலுத்துகின்றன. தொழிலாள வர்க்கம் அதன் சமூக நிலைமையில் பேரழிவுச் சரிவை கண்டுள்ளது. அதே நேரத்தில் ஓர் ஒட்டுண்ணித்தன நிதியப் பிரபுத்துவம் அரசியல் அமைப்புமுறையின்மீது நடைமுறையில் சர்வாதிகாரத்தைச் செலுத்துகிறது.

எல்லா பிரபுத்துவங்களை போலவும் அமெரிக்க நிதிய உயரடுக்கும் தன் செல்வம், அதிகாரம் ஆகியவற்றில் எக்குறுக்கீட்டையும் ஏற்காது. தொழிலாள வர்க்கம் வோல் ஸ்ட்ரீட்டின் இரு கட்சிகளையும் எதிர்ப்பதற்கும் ஒரு தொழிலாளர்களின் அரசாங்கம் மற்றும் சோசலிச கொள்கைகளை நிறுவுவதற்கும் தன் வலிமை முழுவதையும் திரட்ட வேண்டும். அது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதில் தொடங்கி, அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் பொது நிறுவனங்களாக மாற்றப்படுவதில் முடிய வேண்டும்.