World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British teenager arrested for Facebook comments criticizing Afghan war

ஆப்கன் போரை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்திட்ட பிரிட்டிஷ் இளைஞர் கைதானார்

By Harvey Thompson and Mark Blackwood
26 March 2012
Back to screen version

இங்கிலாந்தின் ரேவன்ஸ்தோர்ப் பகுதியைச் சேர்ந்த அசார் அகமது என்கின்ற 19 வயது இளைஞர்பொது ஒழுங்கிற்கு இனவெறி ரீதியாய் சேதாரமிழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வெஸ்ட் யோர்க்சயர் போலிசாரால் சென்ற வாரத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் ஆறு பிரிட்டிஷ் படைவீரர்கள் மரணமடைந்தது பற்றிய செய்திகள் ஊடகங்களில் இரண்டு நாட்களாக நிரம்பி வழிந்ததைத் தொடர்ந்து மார்ச் 8 அன்று அகமது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதினார்:

மிருகத்தனமாய் கொல்லப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்கள் பற்றிய….பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் பற்றியதுண்டுபோடப்பட்ட குழந்தைகள் பற்றியஉங்கள் கருத்தென்ன! உங்கள் எதிரிகளாய் இருந்தவர்கள் தலிபான்களே அன்றி அப்பாவிக் குடும்பங்களல்லவே. சிப்பாய்கள் எல்லோருமே செத்து நரகம் செல்லட்டும்! கழிசடையான பிழைப்பு! போங்கள் உங்கள் சிப்பாயின் கல்லறையில் அழுது விட்டு அவர் நரகத்திற்குச் செல்ல விடைகொடுங்கள் ஏனென்றால் அவர் அங்கே தான் சென்று கொண்டிருக்கிறார்.”

அகமதுவின் கைது குறித்து விளக்கமளித்த யோர்க்ஷயர் போலிசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்: “சொல்ல வந்ததை அவர் சரியாகச் சொல்லாமல் போய் அது அவரை சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது.”

அகமது இனம் பற்றி எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால் இந்தபொது ஒழுங்கிற்கு இனவெறி ரீதியாக சேதாரமிழைத்தார்என்கிற மோசடியான குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட நேர்ந்தது. ஆயினும் கூட 2003 ஆம் ஆண்டின் தகவல் பரிவர்த்தனை சட்டம் பிரிவு 127 இன் படிமொத்தமாய் மனத்தைப் புண்படுத்தத்தக்கதாகநீதிமன்றம் கருதிய ஒரு செய்தியை அனுப்பியதற்காக 2003 தகவல் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு டூஸ்பரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார்

அகமது குற்றத்தை மறுத்தார்.

127 ஆம் பிரிவில் இருக்கும் ஜனநாயக விரோத ஷரத்துகள் கூறுவது என்னவென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மனத்தை அச்செய்தி புண்படுத்துகிறதா இல்லையா என்பதேஒட்டுமொத்தமாய் புண்படுத்துகிறதன்மையைச் சோதிப்பதற்கான வழியாகும், அவர்கள் அச்செய்தியைப் பெறுபவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அகமது நீதிமன்றத்திற்கு வரும்போதும் அங்கிருந்து செல்லும்போதும் அங்கு கூடியிருந்த சுமார் 40 அதி-வலது ஆர்வலர்களின் கூட்டம் ஊளையிட்டது. பிரதானமாக ஆங்கிலேய பாதுகாப்புக் கழகத்தின் (EDL) ஆதரவாளர்களையும் ஒன்றிணைந்த முன்னாள்-படைவீரர்கள் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவையும் கொண்டிருந்த இக்கூட்டத்தினர் செயிண்ட் சார்ஜ் கொடியைத் தாங்கியிருந்ததோடுநமது படைகளை அவமதிக்கும் அத்தனை பேரையும் சிறையில் தள்ளுவோம்என்றும்பிரிட்டிஷ் இராணுவப் படையினருக்கு மரியாதை செய்வோம்என்றும் எழுதப்பட்டிருந்த அட்டைகளைச் சுமந்திருந்தனர்

அகமது ஒரு வெளியிடப்படாத முகவரிக்கு பிணையில் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஜூலை 3 அன்று ஹடர்ஸ்ஃபீல்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவிருக்கிறார்.

நாடெங்கிலுமான ஒளிபரப்பு மற்றும் மின்னணு ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தான் 2003 தகவல் பரிவர்த்தனைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது வெளிப்படையான விஷயம். அது உரிமையாளருக்கான விதிகளின் மாற்றங்களிலும் கவனம் செலுத்தி நியூஸ் இண்டர்நேஷனலின் ரூபர்ட் முர்டோக் போன்ற ஊடக முதலைகளின் கரங்களில் பெரும் கட்டுப்பாட்டைக் கொண்டு சேர்க்க வசதியளித்தது

இப்போது இந்தச் சட்டம் பொதுவாக சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு அடிப்படையான அச்சுறுத்தலாய் ஆகும் வண்ணம் இணையத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, 2010 ஜூன் மாதத்தில் போல் சாம்பர்ஸ் என்கிற ஒரு முன்னாள் பயிற்சிக் கணக்காளர் 2003 தகவல் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் குற்றவாளி ஆக்கப்பட்டார், டான்கேஸ்டர் அருகே ராபின் ஹூட் விமான நிலையத்தில் காத்திருந்த சமயத்தில், சமூக இணைப்பு வலைத்தளமான ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொண்ட ஒரு செய்திக்காக.

ஜனவரி மாதத்தில் பனியால் விமானநிலையம் மூடியிருந்ததில் வெறுப்படைந்திருந்த சாம்பர்ஸ் வெறுப்பில்அச்சுறுத்தும் தன்மை கொண்ட ஒரு செய்தியை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். “கடுப்பு! ராபின் ஹூட் விமானநிலையம் மூடியிருக்கிறது. விஷயத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள ஒரு வாரமும் இன்னும் கொஞ்சம் காலமும் இருக்கிறதுஇல்லையென்றால் இந்த விமானநிலையத்தை நான் தகர்த்தெறிவதாக இருக்கும்!.” (“Crap! Robin Hood airport is closed. You’ve got a week and a bit to get your shit together, otherwise I’m blowing the airport sky high!”) என்று ட்வீட் செய்தது அவர் செய்த குற்றம்.

தனது ட்வீட்அற்பமானதுஎன்று ஒப்புக் கொண்ட சாம்பர்ஸ் போலிஸின் எதிர்வினையைஅபத்தம்என்றழைத்தார். தனது ட்வீட்என்றாவது வேலையிடத்தில் வெறுப்பில் இருக்கும் சமயத்தில்முதலாளியை கொல்லலாமான்னு இருக்குஎன்று சொல்வது போலத் தான், “அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லைஎன்றார் அவர்.

விமானநிலையம் இதுநம்பத்தகுந்த அச்சுறுத்தல் அல்லஎன்று வரையறை அளித்த போதிலும் சவுத் யார்க்ஷயர் போலிசுக்குத் தகவலளிக்கும் கடப்பாடு அதற்கு இருந்தது. சாம்பர்சுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர் தனது வேலையையும் விட வேண்டி வந்தது.

தனது விபரிப்பை குழப்பமின்றி சரிவரச் செய்யவில்லைஎன்ற காரணத்தின் பேரில் அகமது கைது செய்யப்பட்டதும் ஆரம்பத்தில்பொது ஒழுங்கிற்கு இனவெறி ரீதியாக சேதாரமிழைத்தார்என்று குற்றம்சாட்டப்பட்டதும் ஒட்டுமொத்தமான ஜனநாயக அத்துமீறலுக்கு ஒரு மிகத் தெளிந்த உதாரணமாகும்

பேச்சு சுதந்திரம் என்று ஒன்று இருக்குமென்றால், மற்றவர்கள் புண்படுத்துவதாகக் கருதக்கூடியதையும் கூறுவதற்கான உரிமை என்றே அதன் அர்த்தமாக இருக்க முடியும். பன்மடங்கு ஏராளமாய் ஆப்கன் அப்பாவி மக்களுக்கு நேர்ந்த சேதாரங்களுக்கு ஊடகங்கள் வாயே திறந்திராத நிலையில், இறந்த ஆறு சிப்பாய்களுக்காய் உத்தியோகபூர்வ துக்கம் அனுஷ்டிப்பதை அகமது தெளிவுறப் புண்படுத்தியதாகக் கண்டார். அதற்கு அவர் கோபமாய் பதிலிறுப்பு செய்தார். தவிரவும், இன்னும் ஏராளமான பலரும், ஆக்கிரமிப்பில் பங்குபெற்ற சிப்பாய்கள் விடயத்தில் அவரின் பதிலிறுப்பு நியாயமானதா என்ற கருத்தில் உடன்பட்டாலும் படாவிட்டாலும், ஊடகங்களின் இரட்டைவேடம் தொடர்பான அவரது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வர்  என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆயினும் அகமதுவின் கருத்து மனத்தைப் புண்படுத்தியதாய்க் கூறும் ஐந்து சாட்சிகளை வெறுமனே கொண்டு வந்து நிறுத்தி அரசுத் தரப்பு வாதிடலாம் என்று தெரிகிறது. இந்த நிர்ணயத்தைக் கொண்டு பார்த்தால் ஒரு பொது மனிதர் மீதான விமர்சனம் தொடங்கி கடவுளின் இருப்பை மறுப்பது வரை ஏறக்குறைய எந்த ஒரு கருத்தும் அது கூறப்பட்டதற்காக தண்டிக்கப்பட முடியும். எல்லாவற்றுக்கும் மேல், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் மிக சமீபத்தில் லிபியா என பிரிட்டன் பங்குபெற்ற காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்புப் போர்கள் குறித்த விமர்சனத்தையும் கூட இது குற்றமாக்கி விடும்.

ஈராக் மீதான படைப் பிரயோகமும் ஆக்கிரமிப்பும் மில்லியன்கணக்கான ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் படுகொலையில் முடிந்தது. ஆக்கிரமிப்புக்கு பிந்தைய வன்முறையும் ஈராக்கில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படைகளின் ஆதரவுடன் நடந்து வரும் கிளர்ச்சி-ஒடுக்கும் நடவடிக்கைகள் ஆப்கனின் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட பங்களிப்பு செய்திருக்கிறது. மிக சமீபத்தில் 11 சிறார்கள் உட்பட 16 பேர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதும் இதில் அடங்கும்.   

இதற்கு ஒத்துதூம் ஊடகங்கள் உதவி செய்கின்றன, உடந்தையாக இருக்கின்றன. இவை ஊனமுற்ற மற்றும் உயிரிழந்த படைவீரர்களுக்கு பொதுமக்கள் காட்டும் அனுதாபத்தைப் பெரிதுபடுத்தி போர் ஆதரவு மனோநிலையை ஊக்குவிக்கின்றன. இப்போதெல்லாம் ஹெல்ஃப் ஃபார் ஹீரோஸ் போன்ற தொண்டு அமைப்புகள் மிலிட்டரி ஒய்ஃப்ஸ் பதிவு மற்றும் படைவீரர்களின் சவப்பெட்டிகள் இராணுவ நகரங்களின் வழி கொண்டு செல்லப்படுவது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகள் தவறாது தொடர்ச்சியாகக் காணத்தக்கதாய் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாய் மனம் புண்படுத்தியதான குற்றச்சாட்டு எதனையும் கூற வேண்டுமென்றால், அது முர்டோக் மற்றும் போர்க்கூச்சலிடும் மற்ற ஊடக முதலைகளை நோக்கியதாகத் தான் இருக்க வேண்டும்கிடைக்கும் வேலைகள் ரொம்பவும் குறைச்சலாய் இருக்கிற ஒரு பொருளாதாரச் சூழலில் படைவீரராய் பணி சேரும் சிப்பாய்கள் செல்வத்தில் கொழிக்கும் ஒரு உயரடுக்கின் நலன்களைப் பாதுகாப்பதற்காகக் கொல்வதற்கும் சாவதற்கும் அனுப்பப்படுகிறார்கள் என்கிற உண்மையை மறைப்பவர்கள் அவர்கள் தான்.