World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Amid mass unemployment, corporate profits surge

பாரிய வேலையின்மைக்கு மத்தியில் பெருநிறுவன இலாபங்கள் அதிகரிக்கின்றன

Andre Damon
11 May 2012

Back to screen version

அமெரிக்கத் தொழிலாள வர்க்க மக்களிடையே ஆழ்ந்த வறுமையும், வேலையின்மையும் பெருகியுள்ள நிலையில், அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு மீண்டும் மிக அதிக இலாபங்களை ஈட்டியுள்ளன.

Fortune இதழ் திங்களன்று 500 மிகப் பெரிய அமெரிக்க நிறுவனங்களின் தரப்பட்டியலை வெளியிட்டது. இது அந்நிறுவனங்கள் 2010ல் இருந்து 16% அதிகமாகவும் 2011 இல் மிகஅதிகளவில் மொத்த இலாபங்களாக $824 பில்லியனை ஈட்டியுள்ளன என்பதைக் காட்டுகிறது.

ஆனால் முன்னைக் காட்டிலும் அதிக பணம் ஈட்டியுள்ளபோதிலும்கூட, நிறுவனங்கள் முதலீடு செய்யவும், பணியாளர்களை நியமிக்கவும் மறுக்கின்றன. மாறாக, அவை நிர்வாகிகளுக்கு மிக அதிக மேலதிககொடுப்பனவுத் தொகைகளை வழங்குவதுடன், எஞ்சியிருப்பதை ரொக்கமாகப் பதுக்கி வைத்துள்ளன.

ஒரு சராசரி தலைமை நிர்வாக அதிகாரி 2011ல் $12.14 மில்லியன் ஊதியத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இது 2010ல் இருந்த $12.04 மில்லியனைவிடவும், 2009ல் இருந்த $10.36 மில்லியனைவிடவும் அதிகமானதாகும். இத்தகவல் இம்மாதம் முன்னதாக Economic Policy Institute  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.

தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியம், தொழிலாளர்களின் ஊதியங்களோடு விகித முறையில் ஒப்பிட்டுப்பார்த்தாலும், உறுதியாக ஏற்றம் பெற்றுள்ளது என்று அறிக்கை காட்டுகிறது. ஒரு சராசரி தலைமை நிர்வாக அதிகாரி 2011ல் ஒரு சராசரித் தொழிலாளியின் ஊதியத்தைப் போல் 231 மடங்குகள் அதிகம் பெற்றார். இது 2010ல் இருந்த 228 மடங்கு, 2009ல் இருந்த 193 மடங்கு ஆகியவற்றைவிட அதிகம் ஆகும். இது 2000ம் ஆண்டின் சராசரித் தொழிலாளியை விட நெருக்கடிக்கு முந்தைய உச்சக்கட்டமான 383.4 மடங்கை விரைவில் மீண்டும் அடைந்து விடும்.

நிர்வாகிகள் தங்கள் பைகளில் நிரப்பி வைத்தது போக எஞ்சியிருக்கும் நிதிகள் வெறுமே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பெருநிறுவனங்கள் ரொக்கமாக $1.8 டிரில்லியன் வைத்திருந்தன. இது முந்தைய தசாப்தங்களில் அவை வைத்திருந்த தொகையைப் போல் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும்.

இப்படி ரொக்கத்தைப் பதுக்கி வைத்தல் என்பது உற்பத்தித்திறனுடைய முதலீட்டின் இழப்பில் நடத்தப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் முதலீட்டிற்காகப் பயன்படுத்தப்பட்ட பெருநிறுவனச் சொத்துக்களின் பங்கு பெரிய நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதி சரிந்தது. அதே நேரத்தில் ரொக்கமாக வைக்கப்பட்ட சொத்துக்களின் பங்கு இருமடங்கு ஆகிவிட்டது என்று இந்த மாதம் முன்னதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு கொடுத்துள்ள அறிக்கையில் இருந்து தெரிகிறது.

2006 முதல் 2010 க்குள் மட்டும், பெரு நிறுவனங்களால் ரொக்கமாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள், 2006ல் 4.2 சதவிகிதம் என்பதில் இருந்து 2010ல் 5.3% என உயர்ந்துள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

வணிக முதலீடு இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% இற்கு அண்ணளவாக உள்ளது; இது ரொக்கமாக வைத்திருக்காத முந்தைய அளவுகளைவிட 20% இனால் மிகவும் குறைவாகும் என்று தொழிலாளர் பற்றிய சர்வதேச அமைப்பு  கூறியுள்ளது.

பொருளாதார நெருக்கடியின்போது, அமெரிக்கப் பொருளாதாரம் 9 மில்லியன் வேலைகளை இழந்தது. மிகவும் குறைந்த வேலையிலிருப்போர் என்ற மட்டத்தை தொட்டதில் இருந்து, பொருளாதாரம் 4 மில்லியன் வேலைகளை மட்டுமே சேர்த்துள்ளது. அதே நேரத்தில் 2010ல் இருந்து 3 மில்லியன் மக்கள் பணிபுரியும் வயதிற்கு வந்துவிட்டனர்.

இதன் விளைவாக வேலை-மக்கட்தொகை விகிதம் மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்து விட்டது. 2008ல் இருந்து தற்காலம் வரை, பணிவயதில் இருக்கும் மக்கட்தொகையின் பங்கு வேலையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது என்பது 5 முழு சதவிகிதப் புள்ளிகள் சரிந்துவிட்டது.

நெருக்கடிக்கு முந்தைய அளவுகளை மீண்டும் பெறுவதற்கு, பொருளாதாரம் குறைந்தப்பட்சம் கிட்டத்தட்ட 5 மில்லியன் புதிய வேலைகளைத் தோற்றுவிக்க வேண்டும். தொழிலாளர் திரட்டில் புதிதாக ஒவ்வொரு ஆண்டும் சேரும் 1.5 மில்லியன் வேலைகளைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.

மில்லியன் கணக்கான மக்கள் வேலையில் இல்லை என்றாலும்கூட, அமெரிக்காவின் பொருளாதார உற்பத்தி கடந்த ஆண்டு சரிவிற்கு முந்தைய தரங்களை அடைந்தது. இப்பொழுதும் வளர்கிறது, குறைந்த வேகத்தில் என்றாலும்கூட. 2011ல் அமெரிக்கப் பொருளாதாரம் 1.7% அதிகரித்தது.

பொருளாதார உற்பத்தி இன்னும் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டே மீட்பைக் காண்கிறது என்னும் உண்மை, இப்பொழுது வேலையில்லான மக்கள் பிரிவு முன்னர் செய்த பணிகள் இப்பொழுது எஞ்சியுள்ள தொழிலாளர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதாகும். இது அதிக வேலை கொடுத்தல், தீவிரச் சுரண்டல் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகிறது. ஆனால் அதற்கு ஏற்ப ஊதியங்கள் என்பது முற்றிலும் மாறாக, உறுதியாக சரிந்துவிட்டன.

இக்கண்ணோட்டத்தில் பார்க்கையில், Fortune 500 ன் இலாபங்கள் அசாதாரணமான முறையில் 16% உயர்ந்துள்ளது என்பது புதிர் ஒன்றும் இல்லை. இப்பணம் ஏற்கனவே பெருகிய வேலையின்மை, வறுமை, வீடின்மை ஆகியவை உயர்ந்துள்ள நிலையில் இடர்ப்படும் தொழிலாளர் தொகுப்பில் இருந்து பிழிந்து எடுக்கப்படுவதுதான்.

இது பற்றி முன்னேற்றம் ஏதும் காண்பதற்கும் இல்லை. அமெரிக்கப் பொருளாதாரம் ஏப்ரல் மாதம் 115,000 வேலைகளை மட்டுமே தோற்றுவித்துள்ளது. மக்கள்தொகையின் அதிகரிப்புடன் இயைந்த வகையில் பார்க்கும்போது இது கணிசமான குறைவு ஆகும்.

பெருநிறுவனங்களுக்கு கூடுதல் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கு உந்துதல் ஏதும் கிடையாது. ஏனெனில் அமெரிக்காவில் தற்பொழுது  இருக்கும் பாரிய வேலையின்மை, திகைப்பளிக்கும் சமூக நிலைமைகளில், அவர்கள் முதலீடு செய்வதைக்காட்டிலும் இருக்கும் தொழிலாளர் தொகுப்பைச் சுரண்டுவதை அதிகரித்தாலே கூடுதலான இலாபங்களை அவை பெறலாம்.

இக்கொள்கை தனிப்பட்ட நிறுவனங்களுக்கு என்று மட்டும் இல்லை; அவற்றிற்கு கட்டுப்பட்டுள்ள முழு அரசியல் நடைமுறையுடையதும் ஆகும். பதவிக்கு வந்ததில் இருந்து, பாரக் ஒபாமா தன் அதிகாரத்தில் இருப்பது அனைத்தையும் பயன்படுத்தி ஊதியங்களைக் குறைக்கவும், அதிக வேலைகளை வாங்கவும் செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக இது கார்த்தயாரிப்புத் தொழிலின் பிணையெடுப்பில் நடந்துள்ளது. அங்கு இவர் அரசாங்கம் உதவி கொடுப்பதற்கு முன்னிபந்தனை ஊதியக் குறைப்பு சுமத்தப்படுதல் என்பதை செய்துள்ளார்.

பாரிய வேலையின்மையைப் பயன்படுத்தி ஊதியங்களைக் குறைத்தல், இலாபங்கள் அதிகரித்தல் என்னும் கொள்கை எப்படி பெருமந்த நிலைக்குப் பின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் ஒபாமா நிர்வாகம் சமுகநலச் செலவுக் குறைப்புக்கள், வேலைகளை வழங்குதல் ஆகியவற்றை வெட்டியுள்ளதின் மூலம் பாரிய  வேலையின்மையை அதிகரித்துள்ளது என்பதைக் விளக்குகிறது. இந்த வாரம் முன்னதாக ஆல்பனியில் பேசுகையில் ஒபாமா, சமீபத்திய காலத்தில் மந்தநிலையின்போது அரசாங்க வேலைகளை வெட்டிய முதல் நிர்வாகம் தன்னுடையதுதான் என்று உண்மையில் பெருமை அடித்துக் கொண்டார்.

ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் இந்த ஒட்டுண்ணித்தன, சமூகத்தை இழிவுபடுத்தும் பொருளாதாரக் கொள்கைகள் போருக்குப் பிந்தைய வரலாற்றில் முன்னோடியில்லான வகையில் சமூக இடர்களையும் பேரழிவுகளையும் தோற்றுவித்துள்ளன. மக்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு அலுவலகத்தின்படி 50 மில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் இப்பொழுது உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். பாதிக்கும் மேலான மக்கள் இப்பொழுது ஏழைகள் அல்லது கிட்டத்தட்ட ஏழைகள்.

அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் உயர்ந்த செலவுகள், மற்ற காரணிகளை ஒட்டி பூர்த்தி செய்ய இயலாத மருத்துவத் தேவையைக் கொண்டுள்ளனர் என்று Health Affairs இம்மாத இதழில் வெளிவந்துள்ள ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீடின்மை மற்றும் பட்டினி ஆகியவையும் பல தசாப்தங்களாக இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலையில் உள்ளன.

உத்தியோகபூர்வமாக பொருளாதார மந்தநிலை முடிவுற்றுக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், அன்றாடம் மக்கள் வறுமையில்தான் தள்ளப்படுவதுடன், கடனில் ஆழ்த்தப்படுகின்றனர். அதே நேரத்தில் பெருநிறுவனங்கள் மிக அதிக இலாபங்களை ஈட்டுவதுடன், பெரும் செல்வந்தர்கள் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்குக் கூடுதல் செல்வங்களைக் கொண்டுள்ளனர்.

முதலாளித்துவம் மீண்டும் மக்களின் பரந்த பெரும்பான்மையினரான தொழிலாள வர்க்கத்தின் நலன்களுடன் இயைந்து இல்லை என்பதைத்தான் நிரூபித்துள்ளது. சமூகத்தின் உற்பத்திச் சக்திகள் நிதிய உயரடுக்கின் மரணப்பிடியில் இருக்கும் வரையில் மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பே கிடையாது.

வேலைகள், கௌரவமான வாழ்க்கைத் தரங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, பிற அடிப்படைச் சமூகத் தேவைகளுக்கான உரிமைகள் ஆகியவை தொழிலாள வர்க்கம் தொழிலாளர் அதிகாரத்திற்காக சோசலிச முறையில் சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதற்கான போராட்டத்திற்கு அணிதிரட்டுவதின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும்.

இதன் பொருள், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை பறித்தெடுத்துக் கொள்ளப்பட்டு அவை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் பொதுப் பயன்பாடுகளுக்கான அமைப்புக்களாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான்.

2012 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களாக ஜெரி வைட் மற்றும் பிலிஸ் ஷேரர் ஆகியோர் இந்த சோசலிச திட்டத்தின் அடிப்படையில் நிற்கின்றனர். உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் அனைவரையும் அவர்களுடைய பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறு நாம் வலியுறுத்துகிறோம்.