World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Hollande attends Berlin summit after inauguration

பதவியேற்புக்குப் பின் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் பேர்லின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

By Alex Lantier
16 May 2012

Back to screen version

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் நேற்று பாரிஸில் நடந்த தனது பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கிருந்து நேராய் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெலுடன் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பேர்லின் சென்றார்.

மேர்க்கெல் மற்றும்  ஹாலண்டுக்கு முன்னர் இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் நிக்கோலோ சார்க்கோசி ஆகியோரது தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு ஐரோப்பாவெங்கிலும் எழுந்த வெகுஜன எதிர்ப்பு பெருகிச் சென்ற நிலையில், அத்துடன் கிரீஸில் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. ஹாலண்ட் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதுசிக்கன நடவடிக்கை என்பது தவிர்க்கமுடியாத தலைவிதி அல்ல என்று அறிவித்து மேர்கேல் மற்றும் சார்க்கோசியினது கொள்கைகளை விமர்சித்து வந்திருந்ததால் இந்த சந்திப்பு பதட்டம் நிரம்பியதாய் இருந்தது.

மேர்க்கெலுடன் சந்திப்பு நிகழ்ந்த பின்னர் நேற்றிரவு இருவரும் கூட்டாய் நிகழ்த்திய ஒரு செய்தியாளர் சந்திப்பில், கிரேக்க மக்களுக்கு தான் ஒருசெய்தியை கூறுவதாக ஹாலண்ட் கூறினார்: “யூரோ மண்டலத்தில் அவர்கள் தொடர்ந்து இருப்பது உறுதிப்படுத்தப்படும் வகையில் நாங்கள் அவர்களை வளர்ச்சி நடவடிக்கைகளைக் கொண்டு அணுகுவோம்.”

கிரீஸ் நாடு யூரோவைப் பயன்படுத்துவதைத் தொடர வேண்டும் - இந்நாடு தனது கடன்களைத் திருப்பிச் செலுத்தவியலாத ஆபத்தில் இருக்கிறது, ஏனென்றால் வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் திணித்த சீரழிவான சமூக வெட்டுக்களால் அதன் பொருளாதாரம் நொறுக்கப்பட்டது - என்பதே தனது விருப்பம் என்றும் மேர்க்கெல் தெரிவித்தார்.

ஆயினும், இந்த மார்ச் மாதத்தில் பேசி ஏற்பாடு செய்யப்பட்ட ஐரோப்பிய நிதிய ஒப்பந்தத்தில் இடப்பட்டிருக்கும் நிதிநிலை வெட்டுகள் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளின் அடிப்படையான கட்டமைப்பை ஹாலண்ட் ஏற்றுக் கொள்கிறார் என்பதை அவரது கருத்துகள் தெளிவாக்கின. இது தாயகத்திலான அவரது கொள்கைகளுடன் ஒரே வரிசையில் நிற்பனவாகும். செலவின வெட்டுகள் மற்றும் வரி அதிகரிப்பு இந்த இரண்டையும் ஒருசேரப் பயன்படுத்தி வருடாந்திரப் பற்றாக்குறைகளில் 100 பில்லியன் யூரோக்களுக்கும் (127 பில்லியன் அமெரிக்க டாலர்)அதிகமாய் அகற்றுவதின் மூலமாக பிரான்சின் நிதிநிலைப் பற்றாக்குறையை 2017 ஆம் ஆண்டுக்குள் பூச்சியமாக்குவதாக அவர் வாக்குறுதியளித்தார்

பிரச்சாரத்தின் போது தான் முன்வைத்த யோசனையான நிதிய ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவது என்பதற்குப் பதிலாக வெறுமனேவளர்ச்சிக் கொள்கைகள் மீதான ஒரு தனியான பிரகடனத்தைக் கூட தான் ஏற்றுக் கொள்ளக் கூடும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார் ஐரோப்பிய ஒன்றிய நிதிகளை முதலீட்டுக்கென பயன்படுத்துவதற்கும் அத்துடன் ஐரோப்பிய அரசுகளின் இறையாண்மைக் கடன்களுக்கு நிதியாதாரம் திரட்டும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒட்டுமொத்தமான ஆதரவுடன்ஐரோப்பியப் பத்திரங்கள் என்று அழைக்கப்படுவதான கடன் கடப்பாடுகளை விநியோகிப்பதற்கும் அவர் ஆலோசனையளித்தார். “அனைத்துத் தரப்பிலிருந்தும் வருகிற வளர்ச்சிக்குப் பங்களிக்கக் கூடிய எதுவொன்றும் அனைத்தும் மேசையில் வைக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.  

மேர்க்கெலும் தன் பங்காக, தான் ஹாலண்டுடன் கைகோர்த்து வேலை செய்யவிருப்பதை வலியுறுத்தினார்: “ஐரோப்பா நல்ல வளர்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்வதில் எங்களது இரு நாடுகளின் பொறுப்புகளையும் நாங்கள் அறிவோம். அந்த நோக்கத்தில் நாங்கள் தீர்வுகளைத் தேடுவோம்.”

ஆயினும் சிக்கன நடவடிக்கைகளை ஜேர்மனி வலியுறுத்தி வருவதை அந்நாடு கைவிடப் போவதில்லை என்பதை அவரது அடுத்துவந்த கருத்துகள் தெளிவாக்கின. வளர்ச்சி என்கிற ஒருபொதுவான விடயம் பல்வேறு மாறுபட்ட கொள்கைகளின் வழியாகவும் அமல்படுத்தப்பட முடியும் என்ற அவர் ஹாலண்டின் கொள்கைகள் தன்னுடையதில் இருந்து அதிகம் மாறுபட்டதில்லை என்று கூறினார்: “பொது அரங்கில் ஒருவர் பார்க்கும்போது, யதார்த்தத்தில் இருப்பதை விடவும் அதிகமான வித்தியாசங்கள் இருப்பது போல் தெரியும்.”

பிரான்சில் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஹாலண்ட் தனது தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் பலவற்றையும் கிடப்பில் போட்டு விட்டு சற்று கூடுதல் வெளிப்படையான சிக்கன நடவடிக்கை ஆதரவு வேலைத்திட்டத்தில் இறங்குவார் என்பதற்கான சமிக்கைகளை அவர் அளிப்பதையே மேர்க்கெல் அவ்வாறு குறிப்பிட்டார்

ஐரோப்பியக் கொள்கையின் விடயத்தில், புதிய பிரெஞ்சு ஜனாதிபதி கொண்டு வர முனையும் மாற்றங்கள் முழுமையாக நடப்பு சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் சுற்றுவட்டத்திற்குள் தான் இருக்கும் என்பதை இந்த வாரத்தில் ஹாலண்டின் ஆலோசகர்கள் மீண்டும் நினைவூட்டினர்.

ஹார்வர்ட் பொருளாதாரப் பேராசிரியரும் ஹாலண்டின் பொருளாதார ஆலோசகருமான Philippe Aghion திங்களன்று ஃபைனான்சியல் டைம்ஸில் தான் எழுதியதில் கூறினார்: “ஐரோப்பிய ஆணையத்தின் முன்னாள் தலைவரும் தனிச் சந்தையின் வடிவமைப்பாளருமான Jacques Delors தான் [ஹாலண்ட்] பின்பற்றும் மாதிரி ஆவார். ஐரோப்பாவும் நிதி ஒழுங்கிற்கான கவலையும் இரண்டுமே அவரது இரத்தத்திலேயே ஓடுபவை. மேர்க்கெல் ஒரு நம்பிக்கையான மனோநிலையுடன் இருக்க வேண்டும். ஐரோப்பாவை மறுமலர்ச்சி காணச் செய்யும் மேர்க்கெலின் இலட்சியத்தில் விரைவாய் சிந்தித்து நிதானமாய் நடந்து கொள்கின்ற பிரான்சின் புதிய ஜனாதிபதி ஒரு விருப்பமான கூட்டாளியாக நிரூபணமாவார்.”

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வெட்டுகளின் விடயத்திலான மேர்க்கெலின் வேலைத்திட்டத்தின் பக்கம் ஹாலண்ட் ஓரளவுக்கு வந்து விடுவார் என்பதற்கான அறிகுறிகள் பல இருக்கின்றன என்கிற அதே சமயத்தில், ஐரோப்பாவில் ஆளும் வர்க்கங்களின் மாறுபட்ட நலன்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதில் கூர்மையான கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. ஐரோப்பிய இறையாண்மைக் கடன் நிலுவைகளைக் கொண்டிருக்கும் வங்கிகளுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்தும் பொருட்டு ஐரோப்பிய மத்திய வங்கியை பணத்தை அச்சடிக்க அனுமதிக்க (இக்கொள்கையைத் தான் ஹாலண்ட் தொடர்ந்து ஆலோசனையளித்து வருகிறார்) பேர்லின் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது.

ஹாலண்ட் பதவியேற்பு விழாவின் எஞ்சிய பகுதியும் அவரது ஜனாதிபதிப் பதவியின் மத்தியமமான, வணிக ஆதரவுத் தன்மையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் இருந்தது. எலிசே ஜனாதிபதி மாளிகையில் தான் நிகழ்த்திய பதவியேற்பு உரையில் அவர் பிரான்சின்பெருமளவிலான கடன்கள் மற்றும்போட்டித் திறனில் தோல்வி காண்பது ஆகியவை குறித்து எச்சரித்தார். “பிரான்சை நியாயமான முறையில் மறுகட்டுமானம் செய்வதும், ஐரோப்பாவில் ஒரு புதிய பாதையைத் திறப்பதும், உலக அமைதியைப் பாதுகாப்பதும் தான் தனது நிகழ்ச்சி நிரல் என்று அவர் அறிவித்தார்.

பிரெஞ்சு நிர்வாகத்தில் அதிகாரப்பரவலை மேலும் விரிவாக்குவதற்கும் அரசுச் செலவினங்களை உள்ளூர் நிர்வாகங்களின் பக்கம் தள்ளி விடுவதற்கும் அத்துடன்சமூகக் கூட்டாளிகள்” (முதலாளிகளின் குழுக்கள் மற்றும் சமூகச் செலவினங்களை மேற்பார்வையிடுகின்ற தொழிற்சங்கக் கூட்டமைப்புகள்)உடன் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்துவதற்கும் ஹாலண்ட் வாக்குறுதியளித்தார்.

பிரான்சின் ஐந்தாம் குடியரசின் அத்தனை ஜனாதிபதிகளுக்கும் தனது மரியாதையை அவர் செலுத்திக் கொண்டார். இதில் ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து ஜனாதிபதியான பிரான்சுவா மித்திரோனைத் தவிர மீதி அனைவருமே முதலாளித்துவ வலதைச் சேர்ந்தவர்கள். “பிரான்சின் பெருமிதத்தையும் இறையாண்மையையும் கட்டிக் காப்பதில் பெருமிதம் கண்ட சார்லஸ் டு கோல், தொழிற்துறைக் கட்டாயங்களை தேச முன்னுரிமையாக்கிய ஜோர்ஜ் பொம்பிடோ, பிரான்சின் நவீனமயமாக்கலுக்கு மீண்டும் உத்வேகமளித்த வாலறி ஜிஸ்கார்ட் டெஸ்டாங் ஆகியோருக்கு ஹாலண்ட் புகழ்மாலை சூடினார். மித்திரோனுக்குமிகத் தனித்துவமான ஒரு நினைவுகூரலைஅளித்த ஹாலண்ட் மித்திரோனுக்கு அடுத்து வந்த கன்சர்வேடிவ் கட்சியின் ஜாக் சிராக்குக்கும் பாராட்டு வழங்கினார்.

அதன்பின் ஹாலண்ட் தனது எலிசே மாளிகை ஊழியர் தலைவர் பெயரையும் ஜூன் 10-17 வரை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் காலம் வரை ஆட்சி செலுத்தவிருக்கும் ஒரு தற்காலிக அரசாங்கத்திற்கான புதிய பிரதமரின் பெயரையும் அறிவித்தார்.

மாளிகை ஊழியர் தலைவராக பியர் ரெனே லுமாஸ் ஐ அவர் தேர்வு செய்தார். 1980களின் சமயத்தில் உள்துறை அமைச்சக அதிகாரியாக இருந்த இவர் அதிகாரப்பரவல் கொள்கைப் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தார். பின் Corsica மற்றும் Moselle இன் தலைமை அதிகாரியாகச் சேவை செய்யச் சென்றார். அதன் பின் செனட் தலைவர் ஜோன் பியர் பெல்லுக்கு செயலாளராகப் பணியாற்றினார். லுமாஸுக்கு உதவியாக எமானுவேல் மேக்ரோன் (Rothschild வங்கியின் முன்னாள் அதிகாரியான இவர் பொருளாதார விடயங்களில் லுமாஸுக்கு ஆலோசனையளிப்பார்)மற்றும் முன்னாளில் பாரிஸ் மேயர் Bertrand Delanoë க்கு ஊழியர் தலைவராய் இருந்த நிக்கோலோ ரெவேல் ஆகியோர் நியமிக்கப் பெற்றுள்ளனர்.

எலிசேயின் தூதரக ஆலோசகராய் போல் ஜோன் ஓரிட்ஸ் இருப்பார். இவர் முன்னதாக வெளியுறவு அமைச்சகத்தில் ஆசியா மற்றும் ஓசானியாவுக்கான இயக்குநராய் இருந்தார்.

இடைக்காலப் பிரதம மந்திரியாக முன்னாளில் தேசிய சட்ட அவையில் PS சட்டமன்றக் குழுவின் தலைவராய் இருந்தவரான ஜோன் மார்க் அய்ரோல்ட் ஐ ஹாலண்ட் தேர்வு செய்திருப்பதாக லுமாஸ் அறிவித்தார். மற்ற இடைக்கால அமைச்சர்கள் குறித்த அறிவிப்புகள் இன்று எதிர்பார்க்கப்படுகின்றன. Nantes மேயரும், ஜேர்மனியின் முன்னாள் பேராசிரியருமான அய்ரோல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஹாலண்ட் ஜேர்மனியுடன் நெருக்கமான உறவுகளைப் பராமரிக்க விரும்புவதையே காட்டுவதாக பிரெஞ்சு ஊடகங்கள் வருணித்தன.

பிரான்சின் வலது சாரி மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியம் (UMP) கட்சியின் நிர்வாகிகள் அய்ரோல்ட் நியமனத்தை விமர்சித்தனர். பொது ஒப்பந்தங்களை வழங்கியதில் பாரபட்சம் காட்டிய குற்றத்திற்காக 1997 ஆம் ஆண்டில் அவருக்கு 30000 ஃபிராங்க் (4600 யூரோ) அபராதமும் ஆறுமாத கால இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர். “விசாரணை நடத்தப் பெற்று குற்றம் உறுதி செய்யப்பட்ட எவரொருவரும் என்னுடன் எலிசே மாளிகையில் இருக்க மாட்டார்கள் என்று ஏப்ரல் 15 அன்று அளித்த ஒரு நேர்காணலில் ஹாலண்ட் கூறியிருந்ததை இவர்கள் மேற்கோள் காட்டினர்.

ஜோன் மார்க் அய்ரோல்ட் விசாரணை செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டவர் என்பதால் பிரான்சுவா ஹாலண்டின் தகுதி வரையறைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை என்கிற நிலையில், ஹாலண்ட் பிரெஞ்சு மக்களுக்குக் கூறிய நம்பிக்கை வாக்குறுதியில் முதல் முறிவு இது என்று நவ பாசிசத் தலைவர் மரின் லு பென் தெரிவித்தார்.

ஜேர்மனியுடன் உறவுகளை சுமூகமாக்க அய்ரோல்ட் நியமனம் உதவும் என்பதான கூற்றுகளை மரின் லு பென் தாக்கினார்: “நமக்கு ஜேர்மன் பேசும் பிரதம மந்திரி எல்லாம் அவசியமில்லை. திருமதி மேர்கலுடன் பேசும் போது ‘Nein’ (இல்லை) என்கிற ஒரே வார்த்தையைத் தெரிந்து கொண்டாலே போதுமானதாக இருக்கும்”.

தன் நியமனம் குறித்து எழுந்த விமர்சனத்துக்கு அய்ரோல்ட் அளித்த பதிலில் 2007 இல் தீர்ப்பு மாறியது என்றும் இத்தீர்ப்பில் தனதுதனிநபர் நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்றும் கூறினார். குற்றம் உறுதி செய்யப்பட்டதாய்குறிப்பிடுவது என்பதுகுற்றவியல் சட்டத்தை மீறுவதாகும் என்று அவரது வழக்குரைஞர் TF1 யிடம் தெரிவித்தார்.