World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Dutch grand coalition agrees on austerity programme

டச்சுப் பெரும் கூட்டணி சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு உடன்படுகிறது

By Elizabeth Zimmermann
6 November 2012
Back to screen version

செப்டம்பர் 12 டச்சுப் பாராளுமன்றத் தேர்தல்களை தொடர்ந்து ஆறு வாரங்களுக்குப் பின்னர் பிரதம மந்திரி மார்க் ருட்டேயின் VVD எனப்படும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கான பழமைவாத மக்கள் கட்சி, டீடிரிக் சாம்சனின் சமூக ஜனநாயக தொழிற் கட்சி (PvdA) ஆகியவை ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்க உடன்பட்டுள்ளன. இக்கூட்டணி ஒரு கடுமையான சிக்கனத் திட்டமான 15 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க $19 பில்லியன்) வெட்டுக்களைச் செயல்படுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளது.

அக்டோபர் 29ல் டச்சு அரசாங்கத் தலைமையிடமான ஹாக் இல் கூட்டணி அரசாங்கம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பிரதம மந்திரி ருட்டேஇப்பொழுது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரவு-செலவுத் திட்டம், நீடித்த வளர்ச்சிக்கு உந்துதல் கொடுக்கும் வகையில் அதன் இருப்புக்களை நியாயமாகப் பகிரும் நேரம் இதுஎன்றார். கூட்டணி அரசாங்கத்திற்குபாலங்கள் கட்டுவதுஎன்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால் அதன் உள்ளடக்கம் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கடும் சிக்கனத் திட்டத்தை தொழிலாளர்கள், வேலையின்மையில் வாடுபவர், நோயாளிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் இழப்பில் செயல்படுத்துவதாகும்.

கிட்டத்தட்ட 5 பில்லியன் யூரோக்கள் சுகாதாரப் பிரிவுச் செலவுகளில் மட்டும் வெட்டப்படும். நீண்டக்கால பாதுகாப்புக் காப்பீட்டிற்கு அரசாங்கத்தின் அளிப்பு அகற்றப்படும். சுகாதாரக் காப்பீட்டு திட்டத்திற்கு கட்டாய ஊழியர் அளிப்பு வருங்காலத்தில் வருமானத்துடன் நெருக்கமாகப் பிணைந்திருக்கும். மோசமானவர்களுக்குக் கொடுக்கப்படும் நிதியங்களும் வெட்டப்படும்.

மருத்துவ மனைகளில் தங்கும் நாட்களில் கொடுக்கப்படும் நலன்கள் மறைந்துவிடும். நீண்டக்கால நோயாளிகள் இனிமேல் சிகிச்சை, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அதிக பணம் கொடுக்க வேண்டும். ஒரு மருத்துவரின் குறிப்பி இன்றி அவசர கால நிலையில் மருத்துவமனையில் நுழைவோர், 50 யூரோக்கள் செலுத்த வேண்டும்.

சமூகச் செலவுகள் 3 பில்லியன் யூரோக்கள் குறைக்கப்படும். பணிநீக்க அறிவிப்புக் காலங்கள் குறைக்கப்படும்; இதையொட்டி முதலாளிகள் பணிநீக்கத்தின்போது கொடுக்கப்படும் பணம் குறையும். தற்பொழுது அதிகப்பட்சமாக 39 மாதங்களுக்குக் கொடுக்கப்படும் வேலையின்மை நலன் பெரிதும் குறைக்கப்படும். ஹார்ட்ஸ் பொதுநலம் மற்றும் தொழிலாளர்சீர்திருத்தம்என்று ஜேர்மனியில் அழைக்கப்படுவது போல், வேலையில்லாதவர்கள் விரைவில் வேலையை ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவர்; அது முந்தைய வேலையைவிடக் கணிசமான ஊதியத்தைக் கொடுத்தாலும்கூட; குறைந்த தகுதி உடையவர் செய்தால்போதும் என்று இருந்தாலும் கூட. இது குறைந்த ஊதியத்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஓய்வூதியம் பெறத் தகுதி பெறும் வயது ஆரம்பத்தில் திட்டமிட்டதைவிட மிக விரைவில் 65ல் இருந்து 67 என உயர்த்தப்படும். அரசாங்க ஊழியர்களின் ஊதியங்கள் முடக்கப்படும். இன்னும் கூடுதலான சேமிப்புக்கள் 100,000 க்கும் குறைவான மக்கள் வசிக்கும் உள்ளூர் நகர சபைகளால் சாதிக்கப்படும்; அவை உள்ளூர் பணிகளையும் பணியாளர்களையும் குறைத்துவிடும்.

பல நூறாயிரக்கணக்கானவர்களுக்கு வேதனை தரும் மற்றொரு வெட்டு, அடைமான உதவிநிதியில் குறைப்பு ஆகும்; 1893ல் இருந்து உரிமையாளரே வசித்து வரும் இல்லங்களில் செயல்படத்தப்பட்டதில் இக்குறைப்பு வரும். கடந்த காலத்தில் குடும்பங்கள் தங்கள் வீடுகளைக் கட்டுபவை அடைமான வட்டியில் 52% ஐ வரிகளுக்கு எதிராக ஈடு கட்ட முடியும்.

PvdA இந்தவீட்டு உரிமையாளர்களுக்கான உதவித் தொகையைமுற்றிலும் அகற்ற விரும்புகிறதுதேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதம மந்திரி ருட்டே தாங்களே வீடு கட்டியவர்களின் வீடுகள் மீதான அடைமானங்களைப் பாதிக்கும் வகையில் வெட்டுக்கள் இராது என்று கூறியிருந்தார்.

கூட்டாட்சி அரசாங்க உடன்பாடு தற்போதைய 52%ல் இருந்து 38% வரையிலான வட்டி நிவாரணத்தை படிப்படியாகக் குறைக்கும் நோக்கத்தை உடையது: இதில் தற்பொழுதுள்ள அடைமானங்களும் அடங்கும். இவ்வகையில், அரசாங்கம் 770 மில்லியன் யூரோக்களைச் சேமிக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதன் பொருள் தங்கள் வீடுகளின் செலவுகள் கடுமையாக உயர்தல் என்பதாகும்; ஏற்கனவே வீட்டுச் சந்தையில் சரியும் மதிப்புக்களால் பலருக்கும் இது கடினமாக உள்ளது.

அயல்நாடுகளுக்குக் கொடுக்கும் உதவி வெறும் 4 பில்லியன் யூரோக்களில் இருந்து 1 பில்லியன் யூரோவாகக் குறைக்கப்பட்டுவிடும்.

இந்த நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் 2017 ஐ ஒட்டி 15 பில்லியன் யூரோக்களைச் சேமிக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் படி புதிய அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது 2.7% என்றுகுறைந்துவிடும். கடந்த ஆண்டு இது 4.7% என்று இருந்தது.

நவ-தாராளவாத VVD மற்றும் சமூக ஜனநாயக PvdA க்கும் இடையே அதிக உடன்பாடு வரிவிதிக்கும் கொள்கையில் உள்ளது. இவை இரண்டும் 150 உறுப்பினர்கள் இருக்கும் பாராளுமன்றத்தின் கீழ் பிரிவில் குறுகிய 79 உறுப்பினர் கொண்ட பெரும்பான்மையில் உள்ளன. புதிய கூட்டசி அரசாங்கத்தால் உயர்மட்ட வருமான வரி விகிதம் 52 ல் இருந்து 49% எனக் குறைக்கப்படும். மதிப்புக்கூட்டு வரி (விற்பனைவரி) இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிக்கன நடவடிக்கை வரவு-செலவுத் திட்டத்தில் 21% என அதிகரிக்கப்பட்டது. இதுவும் ஏழைகளிடம் இருந்து எடுத்து செல்வந்தர்களுக்குக் கொடு என்ற மொழிக்கேற்பத்தான் உள்ளது.

தொழிலாளர்கள்,வேலையில்லாதவர்கள் மற்றும் நோயாளிகள் வெட்டுக்களை முகங்கொடுக்கையில், பொலிஸ் மற்றும் அரசாங்க அடக்குமுறைக் கருவிகள்மீது செலவழிக்கப்படும் பணம் அதிகமாகி வருகிறது. வருங்காலத்தில் குடியேறுபவர்கள் தற்பொழுதுள்ள ஐந்து ஆண்டுகளுக்குப்பின் என்பதற்குப் பதிலாக ஏழு ஆண்டுளுக்குப்பின்தான் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். வண்ணப்பூச்சு என்னும் முறையில் வருங்காலத்தில் பல ஓரினச் சேர்க்கைத் தம்பதிகளை திருமணம் செய்விக்க பதிவாளர்கள் மறுக்க முடியாது.

புதிய டச்சு அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத் தரத்திற்கு தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வெட்டுக்களுக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் ஆதரவைக்கொடுக்கிறது. கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின்மீது ஜேர்மனிய அரசாங்கம் கொண்டிருக்கும் கடுமையான நிலைப்பாட்டிற்கு ஹாக் ஆதரவைக் கொடுக்கிறது. ஐரோப்பிய வங்கிய ஒன்றியம் (European Banking Union) அமைக்கப்படுவதற்கு இது ஒப்புதல் கொடுக்கிறது; ஐரோப்பாவில் கடுமையான குடியேறுவோர் பற்றிய விதிகள் வேண்டும் என்று கூறகிறது; இதன் பொருள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகள் அகதிகள், குடியேறுபவர்களுக்கு இன்னும் நுழையமுடியாத்தன்மையை அளிக்கும்.

செய்தி ஊடகத் தகவல்கள்படி, அடுத்த வாரத் தொடக்கதில் ருட்டே அளிக்க இருக்கும் புதிய மந்திரிசபை , சமூக ஜனநாயக வாதிகள் கட்சியின் ஜெரோன் ஜெசல்ப்ளோமை நிதி மந்திரியாகக் கொண்டிருக்கும். பிரான்ஸ் டிம்மெமன்ஸ் வெளியுறவு மந்திரியாக இருப்பார், லோட்விஜங் அஷ்செர் சமூக விவகாரங்கள் மந்திரியாகவும் அரசாங்கத் துணைத் தலைவராகவும் இருப்பார். டியடெரிக் சாம்ஸன் PvaD பாராளுமன்றக்குழுவின தலைவராகத் தொடர்வார்.

38வயதான லோட்வெய்ஜிக் அஸ்ஷெர் தனக்கென ஆம்ஸ்டெர்டாமில் சமூக விகாரங்களின் மேயர் என்ற பெயரை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவருடைய இலக்குகுழந்தைகளுக்கு முதலில் என்ற பெயரில் இவர் அனைத்துப் பள்ளிக்கு வருமுன் உள்ள குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை சொல்லாட்சியை வகுத்துள்ளார். பள்ளிகளுக்கு அவர் ஏற்கனவே செயற்பாட்டுப் பட்டியலை நிறுவியுள்ளார். அதற்கு அசெஷெர் நெறி என்று பெயர். தேர்வுகளில் மோசமாகச் செயல்படும் பள்ளிகள் பொது விமர்சனத்திற்கு உட்படும்.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகத்தின் வழிவகைளை நினைவுபடுத்துகின்றன. அவை ஆசிரியர்ளையும் மாணவர்களையும் மாநில அரசாங்கப்பள்ளிகளில் இருக்கும் மோசமான நிலைமைக்குப் பொறுப்பாக்குகின்றன. அவையோ வெட்டுக்கள் மற்ற சமூகநலப் பிரச்சினைகளினால் ஏற்பட்டவை ஆகும். எனவே கல்வி மற்ற பொதுப்பணிகள் தனியார்மயமாக்கப்படுவதை நியாப்படுத்துகின்றன.

கூட்டணி உடன்பாட்டில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை சமூக உரிமைகள் மீதான தாக்குதல் மகத்தான முறையில் இருந்தபோதிலும்கூட, அரசாங்கம் தொழிற்சங்கங்களிடம் இருந்தோ, 15 பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்டிருக்கும் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தோ எதிர்ப்பைக் கண்டு அஞ்சவில்லை. கூட்டணி உடன்பாடு குறித்து FNV டச்சுத் தொழிலாளர் கூட்டமைப்பிடம் இருந்து வந்துள்ள ஒரே குறைபாடு VVD, PvdA இரண்டும் அதிகம் சேமிக்கின்றன, குறைவாக முதலீடு செய்கின்றன என்பதாகும். சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் எமிலி ரோமர் இதேபோன்ற உணர்வுளை வெளிப்படுத்தும் வகையில், “VVD முதலீடு செய்வதற்குப் பதிலாக அதிகம் சேமிக்கிறது. இது வெட்ககரமானது.” என்றார்.