World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

In response to Muslim protests

strengthens repressive powers of the state

முஸ்லிம் எதிர்ப்புக்களுக்கு விடையிறுக்கும் வகையில்

ஐரோப்பா அரச அடக்குமுறை அதிகாரங்களை வலுப்படுத்துகிறது

Peter Schwarz
26 September 2012


Back to screen version
 

இஸ்லாமிய விரோத திரைப்படம் The Innocence of Muslims தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனிசியாவில் இருந்து வடமேற்கு ஆபிரிக்காவில் துனிசியா வரை எதிர்ப்புப் புயலை தூண்டியுள்ளது. எதிர்ப்புக்களின் அபாரமான அளவே இவை ஒரு தனிப்பட்ட மத வெறியர்களின் கூக்கூரலுக்கு விடையிறுப்பு அல்ல, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு பரந்த மக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு என்பதை நிரூபிக்கிறது. இவை பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை போரில் தள்ளியுள்ளன, அவர்களுடைய மக்களை அவமானப்படுத்தியுள்ளன, மற்றும் குறைவூதியத் தொழிலாளராக அவர்களைச் சுரண்டியுள்ளன.

 

ஐரோப்பாவில் ஆளும் வட்டங்கள், தடையற்ற சுதந்திரப் பேச்சுரிமையை காத்தல் என்னும் பெயரில் எதிர்ப்புக்களுக்கு விடையிறுக்ககையில் தங்கள் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை செயல்படுத்துகின்றன; இந்த இனவெறி ஆத்திரமூட்டல்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதோடு தங்கள் சொந்த அரச கருவிகளை வலுப்படுத்தியுமுள்ளன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணமாக பிரான்ஸ் உள்ளது; அங்கு அரசாங்கம் Charlie Hebdo  என்னும் அங்கத இதழ் வெளியிட்டுள்ள இழிவுபடுத்தும் முகம்மது பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களையும் தடைக்கு உட்படுத்தியுள்ளது.

இப்படி அரச அதிகாரத்தை கட்டமைப்பது முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராகவாகும். ஆளும் வர்க்கம் வன்முறை நிறைந்த வர்க்கப் போராட்டங்களை எதிர்பார்க்கிறது. யூரோ நெருக்கடி அதிகரித்து, ஒரு புதிய மந்த நிலை உருவாகுகையில் ஐரோப்பாவில் உள்ள சமூக முரண்பாடுகள் மற்றும் அழுத்தங்கள் விரைவாகப் பெருகுகின்றன.

பிரெஞ்சு அரசாங்கம் கருத்துச் சுதந்திர உரிமையைக் காப்பதற்குத் தான் செயல்படுவதாகக் கூறுகிறது; ஆனால் இந்த உரிமை அங்கத இதழிற்குத்தான் போலும்; அதே நேரத்தில் இந்த உரிமை கேலிச்சித்தரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இழிவுபடுத்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படுகிறது. மற்ற நாடுகளிலும் கருத்துச் சுதந்திர உரிமை என்பது, அவதூறுபடுத்தும் கேலிச்சித்திரங்களை நியாயப்படுத்துவதற்கும், அவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள குற்றத்தன்மை வாய்ந்தவை என முத்திரையிடப்படுவதற்குமே உள்ளன.

ஜேர்மனியில் எழுத்தாளர் Gunter Wallraff செய்தி ஊடகத்தை மதம் பற்றிய கேலிச்சித்திரங்களை வெள்ளம் போல் விட்டு நிரப்புக என அழைப்பு விடுத்துள்ளார். Tagesspiegel  செய்தித்தாளிடம் Wallraff, புனிதத்துவம் எனப்படுவதற்கு எதிரான கேலிச்சித்திரங்களும் கட்டுரைகளும் முறையாகக் கையாளப்பட்டு மிகப் பெரிய அளவில் வெளியிடப்பட்டால், அது செய்யவேண்டிய பணியைச் செய்யும்அதாவது செய்தி ஊடகம், கலை, வெளிப்பாட்டு உரிமை இவற்றை வலுப்படுத்துவதுடன் ஜனநாயக நிலைப்பாடுகளையும் காக்கும்.” “டேனிஷ் கேலிச்சித்திரக்காரர் குர்ட் வெஸ்டெர்கார்டை பொறுத்தவரை, முக்கியமான விஷயம் பிற செய்தி ஊடகத்தினரும் அவருடைய கேலிப்படங்களை மறுபதிப்பு செய்ய முடிவெடுத்தன. என்று அவர் தொடர்ந்து கூறினார்.

 

வெஸ்டர்கார்ட் வலதுசாரி டேனிஷ் செய்தித்தாள் Jyllands Posten 2006ம் ஆண்டில் முஸ்லிம்களைத் தூண்டும் வகையில் இழிந்த வகையில் முகம்மது குறித்த கேலிச்சித்திரங்களை இயற்றியவர்களில் ஒருவர் ஆவார்.

 

Wallraff ஒருமுறை சமூகரீதியிலான திறனாய்வு விசாரணை செய்தி முறைக்காகப் புகழ் பெற்றவர். இன்று அவர் ஜேர்மனிய கிறிஸ்துவ ஜனநாயகத் தலைவர் அங்கேலா மேர்க்கலெ மற்றும் பிற பிற்போக்குவாதிகளுடன் கூட்டாக நிற்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேர்க்கெல் வெஸ்டர்கார்ட்டிற்கு ஐரோப்பிய செய்தி ஊடகப் பரிசு கொடுத்ததன் மூலம் கௌரவப்படுத்தினார். பரிசளிக்கும் விழாவில் சிறப்புரை வலதுசாரி Joachim Gauck, தற்போதைய ஜேர்மனிய ஜனாதிபதியால் கொடுக்கப்பட்டது. அவர் இப்பரிசிலை உறுதியாக, நேர்மையாக, தைரியமாக இருப்பவர்கள் அனைவருக்கும் விடுக்கப்படும் அழைப்பு என்ற விவரித்தார்.

 

2006ம் ஆண்டு  உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல், இத்தகைய நயமற்ற கேலிச்சித்திரங்கள், முஸ்லிம் உணர்வுகளை அவமதித்தல், ஆத்திரமூட்டுதல் ஆகியவற்றை செய்யும் நோக்கம் உடைய அரசியல் தூண்டுதல் ஆகும், இவற்றிற்கும் செய்தி ஊடகச் சுதந்திரம், மத சார்பற்ற தன்மையை காத்தல் என்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அதே வாதத்தின் அடிப்படையில், அதாவது, தடையற்ற பேச்சுரிமையை ஒட்டி, நாஜிக்குப்பை ஏடு Der Sturmer  வெளியிட்ட யூத எதிர்ப்பு கேலிச்சித்திரங்களுக்கும் ஒருவர் ஆதரவு தரமுடியும்.

 

ஆறு ஆண்டுகளுக்கு முன் Jullands-Posten  வெளியிட்ட கேலிச்சித்திரங்களை மறுபதிப்பு செய்த Charlie Hebdo வெளியிட்டுள்ள சமீபத்திய கேலிச்சித்திரங்கள், பிரெஞ்சுப் பள்ளிகளில் முஸ்லிம்களின் தலைமறைப்புத் தடை, இஸ்லாமிய எதிர்ப்பு அவச்சொற்கள் Thilo Sarrazin ஆல் ஜேர்மனியில் கூறப்படுபவை மற்றும் இன்னும் சமீபத்திய ஜேர்மனியிலேயே நடக்கும் சுன்னத் தடை குறித்த விவாதம் ஆகியவற்றின் வழியில்தான் உள்ளது.

முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கொண்டுள்ள சீற்றத்தை அறிந்துகொள்ளுவதற்கு ஒருவர் முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பல ஆண்டுகளாகப் போரில் தள்ளப்படுகின்றனர், டிரோன் தாக்குதல்களுக்கு இலக்கு ஆக்கப்படுகின்றனர், ஏகாதிபத்திய சக்திகளால் அவமானத்திற்கு உட்படுகின்றனர், மேற்கத்திய ஜனநாயகம் மற்றும் நாகரிகத்தின் மதிப்புக்களைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் செய்தி ஊடகம் வெளியிடும் இனவாத கேலிச்சித்திரங்களால் அவமதிக்கப்படுகின்றனர்.

இந்த இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தின் நோக்கம் தொழிலாளர் வர்க்கத்தைப் பிரிப்பது, ஏகாதிபத்தியப் போருக்கு எதிர்ப்பை அடக்குதல், வலதுசாரிச் சக்திகளுக்கு ஊக்கம் அளித்தல், பெருகும் சமூக அழுத்தங்களை பிற்போக்குத்தன, இனவாத வழிகளில் திசை திருப்புதல் என்பவை ஆகும்.

இது நவ பாசிச தேசிய முன்னணி (FN) இன் தலைவர் பிரெஞ்சு நாளேடு Le Monde க்குக்   கொடுத்துள்ள நீண்ட பேட்டியில் தெளிவாக நிரூபணம் ஆகிறது. மரின் லு பென் ஆளும் சோசலிஸ்ட் கட்சி, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தும் வன்முறைக்கு ஆதரவு கொடுக்கிறார்; முஸ்லிம்களின் செயற்பாடுகள், கருத்துச் சுதந்திர உரிமை, செய்தி ஊடகம் ஆகியவற்றின் மீதான தாக்குதல் மற்றும் பிரெஞ்சுக் குடியரசின் கொள்கைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றின் மீதான தாக்குதல் என விவரிக்கிறார். மத சார்பற்ற தன்மையும், சுதந்திரமும் ஒரு வலுவான அரசால்தான் காக்கமுடியும் என அவர் தெரிவிக்கிறார். அரசு கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டிய பாதுகாப்புகுறித்துப் பேசுகையில் அவர் Le Monde  இடம் அதிகாரத்தை விளங்குவதற்கான தேவை உள்ளது என்று கூறுகிறார்.

அதன் தர்க்கரீதியான முடிவிற்குச் சென்றால், இந்த நிலைப்பாடு இஸ்லாமிய அடையாளங்களை அடக்குதல் என்பதைக் கோருவதுடன் யூதர்களின் அடையாளங்களையும் தடைக்கு உட்படுத்தும். லு பென், கோஷர் மற்றும் ஹலால் உணவுகளைப் பள்ளிகளில் தடுக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய தலையணிகளையும் யூதத் தலை தொப்பிகளையும் பொது இடங்களில் அணிவதைத் தடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். இஸ்லாம் எதிர்ப்பு என்பது யூத எதிர்ப்பின் இரணைபோல், பிற்போக்குத்தனத்தைத் தூண்டுதல், இனவகை அழுத்தங்களை அதிகரித்தல், மதவகை வெறுப்புணர்வை பெருக்குதல் என அதே நோக்கங்களைக் கொண்டு மாறிவிட்டது.

முகம்மது பற்றிய அவதூறுக் கேலிச்சித்திரங்களை நிராகரிப்பது என்பது, அரசாங்கத் தடைக்கு ஆதரவு கொடுப்பது என்று ஆகிவிடாது என சமூக எழுச்சி பற்றி அச்சம் கொண்டிருக்கும் ஜேர்மனிய அரசாங்கக் கட்சிகளின் நபர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வலதுசாரிகள் பலர் குற்றவியல் விதித்தொகுப்பில் மத அவமதிப்பு முறைகள் மறுபடி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றுகூட வாதிட்டுள்ளனர்; கடந்தகாலத்தில் இவைதான் இழிவான மதகுருமார்களின் விடையிறுப்பாகச் செயல்பட்டன. அரச கருவிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று முகம்மது கேலிச்சித்திரங்களை ஆதரிப்போர் கோரும் வெற்றுத்தன வாதம்தான் இது.

இனவெறிக்கு எதிரான போராட்டம், ஜனநாயக உரிமைகளைக் காத்தல் ஆகியவை தவிர்க்க முடியாமல் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டியதுடன் பிணைந்துள்ளது. அனைத்து தேசிய, இன எல்லைகளைக் கடந்து முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக, அடக்குமுறை மற்றும் போர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுவதின்மூலம் மட்டும்தான், அரசியல் பிற்போக்குத்தனம், மத பழங்கருத்துக்கள் ஆகியவை அகற்றப்பட முடியும்.