World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Edward Snowden’s open letter sparks asylum debate in Brazil

எட்வார்ட் ஸ்னோவ்டெனுடைய பகிரங்கக் கடிதம் பிரேசிலில் தஞ்சம் பற்றிய விவாதத்தைத் தூண்டுகிறது

By Bill Van Auken 
19 December 2013

Back to screen version

 பிரேசிலிய மக்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்என செவ்வாயன்று எட்வார்ட் ஸ்னோவ்டெனால் வெளியிடப்பட்ட கடிதம் பிரேசிலுக்குள் முன்னாள் தேசியப்பாதுகாப்பு அமைப்பின் (NSA) ஒப்பந்தக்காரருக்குத் தஞ்சம் அளிப்பது குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.

ஸ்னோவ்டென் பிரேசிலிலும் சர்வதேச அளவிலும் NSA இன் செயற்பாடுகளை அம்பலப்படுத்தியது அவருக்கு பிரேசிலிய மக்களிடையே கணிசமான ஆதரவைப் பெற்றுக் கொடுத்துள்ளபோதும், தொழிலாளர் கட்சியின் (PT) ஜனாதிபதி டில்மா ரௌசெப் உடைய அரசாங்கம் வாஷிங்டனை எதிர்த்து நின்று அடிப்படை ஜனநாயக உரிமைகள் பற்றி வினா எழுப்பத் தயாராக இல்லாதுள்ளது.

கடந்த செப்டம்பர் பிரேசிலிய செய்தி ஊடகம் வெளியிட்ட தகவல்கள் ஸ்னோவ்டெனால் பகிரங்கமாக்கப்பட்ட NSA ஆவணங்களை மேற்கோளிட்டு ரௌசெப்பின் சொந்த மற்றும் அலுவலக தொலைப்பேசிகள், கணினிகள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆகியவற்றை NSA திருட்டுத்தனமாக கண்காணிக்கிறது, பரந்த அளவில் பிரேசிலிய அரசாங்க எரிசக்தி பெறுநிறுவனமான பெட்ரோப்ராஸுக்கு எதிராகப் பொருளாதார உளவுபார்த்தலை நடத்தியுள்ளது, அரசாங்கத்தின் சுரங்க, எரிசக்தித்துறை அமைச்சரகத்தையும் உளவுபார்த்துள்ளது என நிரூபித்தன.

பிரேசிலில் NSA உளவுபார்த்தமை குறித்து விசாரணை நடாத்தும் பிரேசிலிய பாராளுமன்றக் குழுவிடமிருந்தும் மற்றும் நாட்டின் மத்திய  பொலிஸிடமிருந்தும் ஒற்று பற்றி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட ஸ்னோவ்டென் கடிதத்தில் உளவு அமைப்பின் குற்றங்களை அம்பலப்படுத்த உதவும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் வாஷிங்டனின் தொடர்ச்சியான அவரை மௌனமாக்கும் முயற்சிகளையும் மேற்கோளிட்டார். குறிப்பாக ஒபாமா நிர்வாகம் நடத்தும் சர்வதேசக் குண்டர் முறையை சுட்டிக்காட்டியுள்ளார். இதில் ஸ்னோவ்டென் இலத்தீன் அமெரிக்காவிற்கு பயணித்துக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பொலிவிய ஜனாதிபதி ஈவோ மோரேல்ஸின் விமானம் கடந்த ஜூலையில் ஆஸ்திரேலியாவில் கீழிறங்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டது குறித்தும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

NSA இன்னும் பிற ஒற்று நிறுவனங்கள் நம்முடைய சொந்தப் பாதுகாப்பிற்குத்தான் அதாவது டில்மாவினதும், பெட்ரோப்ராஸிட் இனதும் பாதுகாப்பிற்காகத்தான் அவை நம் அந்தரங்க உரிமையை மீறி நம் வாழ்வில் நுழைந்துள்ளனஎன்று ஸ்னோவ்டென் எழுதினார். தங்கள் நாட்டு மக்களையும் வேறு எந்த நாட்டிலும் மக்களைக் கேட்காமல் அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

பிரேசிலியர்களின் வாழ்வில் இந்த உளவின் உண்மைப்பாதிப்பைச் சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தார்: இன்று சாவோ பாலோவில் நீங்கள் ஒரு கைபேசியை எடுத்துச்சென்றால், NSA நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியும், கண்டுபிடிக்கிறது. இதை அது உலகம் முழுவதும் ஒரு நாளில் 5 பில்லியன் தடவை செய்கின்றனர்.பிளோரியனோ பொலிஸில் எவரேனும் ஒரு வலைத் தளத்தை பார்க்கிறார் என்றால், NSA அது எப்பொழுது, எங்கு அவர் அதைச்செய்தார் என்பதற்குச் சான்றுகளை பதிந்துவைத்துள்ளது. போர்ட்டோ அலிக்ரேயில் ஒரு தாயார் தன் மகனை பல்கலைக்கழகத் தேர்விற்கு நல்லாசி வழங்க தொலைபேசியில் கூப்பிட்டால், NSA அந்த அழைப்புச் சான்றை ஐந்து ஆண்டுகள் அதற்கும் மேலாக வைத்திருக்க முடியும். அவை தாம் இலக்குவைத்துள்ள ஒருவரின் புகழை சேதப்படுத்தவேண்டுமானால் எவராவது வேறொருவருடன் ஒரு தொடர்பை வைத்திருந்தால் அல்லது பாலுணர்ச்சிதூண்டும் வலைத் தளங்களை பார்க்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து வைக்க முடியும்.

NSA வெகுஜனக் கண்காணிப்பு வலைத் திட்டங்களை செயல்படுத்துகிறது; இவை முழு மக்களையும் அனைத்தையும் பார்க்கும் கண்ணின்கீழ் கொண்டுவந்து பிரதிகளையும் எப்பொழுதும் சேமிக்கிறது.என்று ஸ்னோவ்டென் கண்டித்தார். இத்திட்டங்கள் பயங்கரவாதத்தைப்பற்றி ஒருபொழுதும் இருந்ததில்லை: இவை பொருளாதார உளவு, சமூகக் கட்டுப்பாடு, இராஜதந்திர திரித்தல் ஆகியவை பற்றியதாகும். இவை அதிகாரத்தைப் பொறுத்தவையாகும்.

இக்கடிதம் முதலில் ரியோ டி ஜெனிரியோ தளம் கொண்ட அமெரிக்க செய்தியாளர் கிளென் க்ரீன்வால்ட் உடைய பங்காளி டேவிட் மிராண்டாவில் பேஸ்புக் பக்கத்தில் முதலில் பதிவிடப்பட்டது. அவர் ஸ்னோவ்டென் வழங்கிய இரகசிய ஆவணங்களை அடித்ததளமாக கொண்டு NSA இன் பாரிய அமெரிக்க மற்றும் சர்வதேச ஒற்று வேலைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஒன்பது மணி நேரம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் வைக்கப்பட்டு, அவருடைய பொருட்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் பறிமுதலாகிய மிரண்டா, ரௌசெப் பிரேசிலில் ஸ்னோடெனுக்கு தஞ்சம் வேண்டும் எனக்கோரும் ஒரு மனுவிற்கு கையெழுத்து சேர்க்க முன்னெடுத்துள்ளார். Avaaz வலைத் தளத்தில் முதல் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 50,000 மக்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.

புதன் அன்று ரௌசெப் தன் முதல் பிரதிபலிப்பை இந்த அழைப்புகளுக்கு கொடுத்துள்ளார். பிரேசிலிய அரசாங்கம் நமக்குத் தெளிவாக்காத ஒரு விடயம் பற்றி ஒரு நபர் எழுதியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை.என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். எனக்கு வராத ஒன்றைப் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் உரிமையை நான் கொள்ளவில்லை. ஒரு கடிதத்திற்கு நான் விளக்கமளிக்கப் போவது இல்லை. என்றார்.

பிரேசிலிய பெயரிடப்படாத வெளியுறவு அமைச்சரக அதிகாரிகளை மேற்கோளிட்டு, நாளேடு Folha de Sao Paulo வெளிப்படையாக பின்வருமாறு எழுதியது: பிரேசிலிய அராங்கம் NSA வை விசாரிப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. இதனால் அது எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் கொடுக்காது... ஒரு தகவல் பரிமாற்றத்தில் அது இந்த இலக்கை அடையும்.

வெளியுறவு அமைச்சரகம், பிரேசிலிய அராங்கம் NSA நடத்தும் குற்றங்களுக்கு பதில் கொடுக்க அக்கறை கொள்ளவில்லை என்று வலியுறுத்தியுள்ளது. ஒரு அமைச்சரக அதிகாரி, பிரேசிலிய இத்தகைய வெளிநாட்டு இறைமையில் தலையீட்டைச் செய்வதில் அக்கறை கொள்ளவில்லை, அவர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் அவர்களுக்குச் செய்ய மாட்டோம்.என்றார்.

வெளியுறவு அமைச்சரகம் கடந்த ஜூலை மாதம் அது கொடுத்த செய்தியையும் மாற்றிவிட்டது என்று Folha தகவல் கொடுத்துள்ளது. அப்பொழுது மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் எங்காவது தஞ்சம் பெற்றுக்கொள்ளமுடியுமா என்று ஸ்னோவ்டென் நிலைகுலைந்து நின்றார். அப்பொழுது இது பிரேசில் ஸ்னோடெனுடைய வேண்டுகோளுக்கு விடையிறுப்பு கொடுக்காது என்று கூறியது. இப்பொழுது அது அவர் உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கவில்லை என்று கூறுகிறது. அந்த வேண்டுகோள் தொலைநகலில் ஒரு முறையான கையெழுத்து இல்லை என்ற தொழில்நுட்ப அடிப்படையில்.

ரௌசெப் அரசாங்கம் ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் கொடுக்க விரும்பவில்லை என்பதற்கு காரணம், அது அமெரிக்க ஏகாதிபத்தியம் அளிக்கும் கணிசமான அழுத்தத்திற்குப் பணிந்து இருப்பதால் மட்டுமல்ல. ஒபாமா நிர்வாகத்தைப் போலவே, பிரேசிலியாவின் தொழிலாளர் கட்சி அரசாங்கம் செல்வம் படைந்த நிதிய, பெருநிறுவன பிரபுத்துவத்தைக் பாதுகாக்கிறது, சமுக சமத்துவமின்மை அதிர்ச்சிதரும் அளவில் இருக்கையில். இது பிரேசிலிய தொழிலாளர்கள் ஏராளமானவர்களுக்கு எதிராகச் சதி செய்கிறது, ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு எதிராக இருப்பதுபோல். அது சந்தேகத்திற்கு இடமின்றி ஸ்னோவ்டெனுடைய வெளிப்படுத்தல்கள் அதன் சொந்தக் குற்றங்களையும் பொலிஸ் அரசாங்க நடவடிக்கைகளையும் கூறும் என்றும் அஞ்சுகிறது.

ஸ்னோவ்டென் இன்னமும் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதுடன், பாதுகாப்பான தஞ்சத்தை ரஷ்யாவில் பெற்றுவிடவில்லை. ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முன்னாள் NSA ஒப்பந்தக்காரருக்கு தற்காலிக அகதிகள் தங்கு அனுமதிதான் கொடுத்துள்ளார். இது ஆகஸ்ட் 2014 வரை நடைமுறையில் இருக்கும். மாஸ்கோ பலமுறையும் அவர் ரஷ்யாவில் இருக்கும்போது அமெரிக்க நலன்களுக்குஎதிராக செயல்பட அனுமதிக்கப்பட மாட்டார் என வலியுறுத்தியுள்ளது.

ஒபாமா நிர்வாகம் இந்த வாரம் ஸ்னோவ்டெனுக்கு அவர் NSA கோப்புக்கள் குறித்து இனியும் கசியவிடவில்லை என்னும் உத்தரவாதத்திற்கு ஈடாக பொது மன்னிப்பை கொடுக்க வேண்டும் என்னும் கருத்துக்களை நிராகரித்துவிட்டது. எங்கள் பார்வையில் திரு.ஸ்னோவ்டென் இரகசியத் தகவலை கசிய விட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர் இங்கு அமெரிக்காவில் பெருங்குற்றத்தை எதிர்கொள்கிறார்.என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னே கூறினார். அவர் ஸ்னோவ்டனுக்கு முழு விசாரணை முறைகொடுக்கப்படும் எனச் சேர்த்துக் கொண்டார்.  அதாவது அவர் இராணுவக் காவலில் வைக்கப்படுவார், சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார் அல்லது குவான்டனாமோ குடாவில்  அடைக்கப்படுவார் என்ற அச்சங்களை பிரதிபலிக்கின்றது.

அமெரிக்க உளவுத்துறை அமைப்பிற்கு நெருக்கமான நபர்கள் இப்பிரச்சினை குறித்த தங்கள் அணுகுமுறையில் இன்னும் குருதி உறுஞ்சும் தன்மையை காட்டினர். முன்னாள் CIA இயக்குனர் ஜேம்ஸ் வுல்சே மன்னிப்பு பேச்சு மடத்தனமானதுஎன்றார்; மேலும் அவர் நாட்டுத் துரோகத்திற்கு விசாரிக்கப்பட வேண்டும். அவருக்கு பொருத்தமான நடுவர்களால் தண்டிக்கப்பட்டால், இறக்கும் வரை தூக்கிலிடப்பட வேண்டும்.