World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Striking Athens subway workers defy court ruling

வேலைநிறுத்தம் செய்யும் ஏதென்ஸ் சுரங்கப்பாதைத் தொழிலாளர்கள் நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்றனர்

By Robert Stevens
24 January 2013

Back to screen version

தென்ஸ் சுரங்கப் பாதைத் தொழிலாளர்களில் வேலைநிறுத்தம் நேற்று ஏழாவது நாளாக தொடர்கின்றது. இது இந்நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலாகும். திங்கள் இரவு கொடுக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு அரசாங்கம் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைஅரச அணிதிரட்டல்மூலம் கட்டாயமாக வேலை செய்ய வைக்க அனுமதிக்கிறது; இது கிட்டத்தட்ட தொழிலாளர்களை ஆயுதப் படைகளில் கட்டாயமாகச் சேர்ப்பது போல் ஆகும்.

முக்கிய மெட்ரோ தொழிலாளர்களின் சங்கமான SELMA அரசுப் பணி ஊதியங்கள் மறுகட்டமைத்தல் என்பதின் ஒரு பகுதியாகச் சுமத்தப்படும் பாரிய ஊதிய வெட்டுக்களுக்கு எதிர்ப்பை காட்ட வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. வெட்டுக்களை செயல்படுத்துவது என்பது முக்கூட்டான ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி நிர்ணயித்த நிபந்தனையாகும். அப்பொழுதுதான் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னும் கடன்களை வாங்க முடியும். புதிய ஜனநாயக கட்சி தலைமையாலான  கூட்டணி அரசாங்கம் மற்ற கிரேக்கத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுடன்  இந்த ஊதியக் குறைப்புக்களையும் சுமத்த உறுதிமொழி கொடுத்துள்ளது.

டிசம்பர் மாதம் கிரேக்கப் பாராளுமன்றம் ஒரு புதிய சிக்கன நடவடிக்கைகள் பொதியை இயற்றியது. இது கிரேக்கத்திற்கு இன்னும் கூடுதலான கடன்களைக் கொடுப்பதற்கு யூரோப் பகுதியின் நிதிமந்திரிகள் விதித்த நிபந்தனை ஆகும்.

மெட்ரோ தொழிலாளர்கள், அரசாங்கம் நடத்தும் Urban Rail Transport உடைய ஊழியர்கள் ஆவர். அந்நிறுவனம்தான் ஏதென்ஸின் மெட்ரோ, டிராம், மற்றும் மின்சார இரயில்வே பணிகளை நிர்வகிக்கிறது. அரசாங்க நடவடிக்கைகள் பொதுத்துறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களின் ஊதியங்களையும் வெட்டுகிறது. இதற்கு DEKO என்று பெயராகும். இது அரசு ஊழியர்களுக்கான ஒரு புதிய ஊதிய முறையுடன் இயைந்துள்ளது. புறநகர் இரயில் போக்குவரத்து வழங்கும் ஊதியம் இதனால் 2012ல் 97.7 மில்லியன் யூரோக்கள் என்பதில் இருந்து இந்த ஆண்டு 74.6 மில்லியன் எனக் குறைக்கப்படும். (25% வெட்டு).  சராசரி மொத்த மாத வருமானம் மேலதிகநேர வேலைக்கும் மெட்ரோவில் ஊதியம் இல்லை என்ற நிலையில் 2,500 யூரோக்களில் இருந்து 2,038 யூரோக்கள் என குறைந்துவிடும்.

Athens Mass Transit System (STASY) இல் வேலையில் இருக்கும் பிற தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாயன்று பஸ், டிராலி மற்றும் டிராம் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் சேர்ந்தனர். இவர்கள் அனைவருமாக நான்கு மற்றும் ஐந்து மணி நேரம் வேலையை நிறுத்தினர். Kifissia-Piraeus மின்சார இரயில் அல்லது டிராமில் நண்பகலில் இருந்து புதன் கிழமை மாலை 4 மணி வரை சேவை ஏதும் வழங்கப்படவில்லை. STASY உடைய கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

திங்கள் நீதிமன்ற தீர்ப்புடன் இணைந்த வகையில், பிரஸ்ஸல்ஸில் நடந்த யூரோப் பகுதி நிதிமந்திரிகளுடைய கூட்டமும் கிரேக்கத்திற்கு 9.2 பில்லியன் யூரோக்கள் மதிப்புடையதை (அமெரிக்க $12.3 பில்லியன்) ஒரு புதிய கடன் தவணைப்பணத்தை கொடுப்பதற்கு ஆதரவைக் கொடுத்தது. இது கடந்த மாதம் ஒப்புக்கள்ளப்பட்ட 34.4 பில்லியன் யூரோக்களைத் தொடர்ந்து வருவதாகும்.

மெட்ரோ இன்னும் பிற அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல் முழுக் கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதி ஆகும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நாஜி ஆக்கிரமிப்பிற்குப் பின் காணப்படாத வறிய நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். இன்னமும் மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகளை எதிர்நோக்கியும் உள்ளனர். இதற்கு மாறாக, வங்கியாளர்களும் கிரேக்கத்திலும் ஐரோப்பாவில் இருக்கும் ஆளும் உயரடுக்கும் தொடர்ந்த பெரும் நிதியங்கள் அவர்கள் மீது திணிக்கப்படுவதை காண்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பெறப்படும் கிரேக்கக் கடன்களின் பெரும்பகுதி உடனடியாக நாட்டின் சர்வதேசக் கடன் கொடுத்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் ஜேர்மனிய, பிரெஞ்சு வங்கிகள் தலைமை தாங்குகின்றன. எஞ்சியிருப்பதில் பெரும்பாலான பணம் கிரேக்கத்தின் சொந்த வங்கித்துறை உயரடுக்கிற்குப்  போய்ச்சேருகிறது.

செவ்வாயன்று SELMA  தவிர பல போக்குவரத்துத் தொழிலாளர்களின் சங்கங்கள் இம்மோதல் பற்றி விவாதிக்க கூடின. இந்தக் கட்டத்தில் தொழிலாளர்களின் சீற்றத்தை அடக்க முடியாத நிலையில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் ஜனவரி 29ம் திகதி நண்பகலில் இருந்து பிற்பகல் 4 மணி வரை அனைத்துவித பொதுப்போக்குவரத்துப் பிரிவுகளில் இருக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்தன. இன்னும் ஒரு 24 மணி நேர வேலைநிறுத்தம் ஜனவரி 31ம் தேதிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலைநிறுத்தத்தை முறியடித்தல் என்பது புதிய ஜனநாயக PASOK- DIMAR (ஜனநாயக இடது) கூட்டணி அரசாங்கத்தின் முன்னுரிமை ஆகும். இக்கூட்டணி ஊதியங்கள், ஓய்வூதியங்களுக்கு ஒரு புதிய அடையாளக் குறியீட்டை நிர்ணயிக்க  உறுதியாக உள்ளது. ஏற்கனவே ஊதியங்கள் 40% மற்றும் இன்னும் அதிகமான பெறுமதியில் குறைந்துவிட்டன.

புதிய ஜனநாயகக் கட்சியை சேர்ந்த போக்குவரத்து மந்திரி கொஸ்ரிஸ் ஹெட்சிடாக்கிஸ் வேலைநிறுத்த ஆரம்பத்தின்போது எத்தகைய தொழிலாளர் குழுவும் ஐக்கியப்பட்ட ஊதியக்கட்டமைப்பில் இருந்து விலக்களிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்தார்.

 “சலுகைகளுக்கான நம்பிக்கை இல்லைஎன்று ஹெட்சிடாக்கிஸ் எச்சரித்தார். அரசாங்கம் இதில் பின்வாங்க வேண்டிய தேவை இல்லை.ஒரு சிவில் அணிதிரள்வு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று அச்சுறுத்திய அவர், வேலைநிறுத்தங்களுக்கு வரம்புகளும், விதிமுறைகளும் உள்ளன; அவை மிதித்துத் தள்ளப்படுகின்றன என நான் உணர்கிறேன்.என்றார்.

வலதுசாரி நாளேடு Kathimerini ஹெட்சிடாக்கிஸ் உடைய தலையீடு குறித்து நடவடிக்கைகள் வெளிநாட்டுக் கடன் கொடுத்தவர்களுக்கு நாட்டின் உறுதிமொழிகளைக் காப்பாற்றுவதின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

புதன் கிழமையன்று அரசாங்கம் வேலைநிறுத்தத்தை முறித்தல் என்னும் அதன் அச்சுறுத்தலை மீண்டும் வலியுறுத்தியது. Radio Vima செய்தித்தொடர்பாளரிடம் பேசுகையில், சிமோஸ் கெடிகோக்லு  கூறினார்: வேலைநிறுத்தத்தைத் தூண்டிவிடுபவர்கள் நீதிமன்றத் தீர்ப்புக்களை நாளைக்குள் ஏற்கவில்லை என்றால், அவர்கள் சட்டபூர்வ விளைவுகளை சந்திக்க நேரிடும். வேலைநிறுத்தங்களுக்கு தலைமை தாங்குவோரை எப்படி நடத்துவது என்று சட்டம் முன்கூட்டியே கண்டுள்ளது.

இத்தகைய தாக்குதல்கள் ஒரு போர்க்குணமிக்க, சீற்றம் கொண்ட மக்கள் மீது ஜனநாயக வழிமுறையில் நடைமுறைப்படுத்த முடியாது என்பது தெரியும். எனவே அது ஒரு அரச அணிதிரட்டு உத்தரவு போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இராணுவத்தை அழைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது.

2008ல் நிதிய நெருக்கடி வெடித்த பின், கிரேக்க ஆளும் வர்க்கம்  பலமுறையும் தொழிலாளர் வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கு இராணுவத்தை நம்பியுள்ளது. 2010ல் ஜனநாயக PASOK யின் தலைமையில் இயங்கிய அரசாங்கம் ஒரு சிவில் அணிதிரள்வு உத்தரவை வெளியிட்டு, வாகன சாரதிகளின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தைக் கொண்டுவந்தது. அதற்கு அடுத்த ஆண்டு இராணுவம் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் தலையிட தயாராக நிறுத்தி வைத்தது.

இச்சூழ்நிலையில், போலி இடதுகள் கிரேக்க ஆளும் வர்க்கத்திற்கு முட்டுக் கொடுக்கும் வகையில் தொழிற்சங்கத்தின் அதிகாரங்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. அரசாங்க தாக்குதல்களை தடுக்க தொழிலாளர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தொழிற்சங்கங்கள் அழித்துவிட்டுள்ளன. அதே நேரத்தில் முதலாளித்துவம் எவ்வழியிலும் சிக்கனத்திட்டதை சுமத்த தீர்மானித்திருப்பதை பற்றி அதிகம் பேசுவதில்லை.

SELMA வின் தலைவரான அன்டோனிஸ் ஸ்டமடோபௌலோஸ், போலி இடது ANTARSYA (கிரேக்க முதலாளித்துவ எதிர்ப்பு இடது முன்னணி) உடைய பிரதிநிதி ஆவார். இக்கூட்டணியில் SEK  எனப்படும் சோசலிச தொழிலாளர் கட்சி போன்ற குழுக்களும் அடங்கியுள்ளன. அவர் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பாலும் தொழிலாள வர்க்கம் வசிக்கும் ஏதென்ஸ் B தொகுதியில் போட்டியிட்டார்.

தொழிலாளர்களுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்கையில், ஸ்டமடோபௌலோஸ் தன் தோள்களைக் குலுக்கிவிட்டுக் கூறினார்: சிவில் அணிதிரள்வு? தேவையானால் அவர்கள் அதைச் செயல்படுத்தட்டும். ஒருவேளை அவர்கள் இங்கு டாங்குகளுடன் வந்து எங்களைக் கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்ப வேண்டும்.

ஹிட்லரின் பாசிசக்கூட்டம் நடத்திய கொடுமைகளைக் கண்டுள்ள நாட்டில், கிரேக்க முதலாளித்துத்தின் பிரிவுகள், தளபதிகளின் ஆட்சிஎன்று 1967க்கும் 1974க்கும் இடையே நடைபெற்ற கூட்டணியுடன் நடத்திய கொடுமைகளுடன், இராணுவத்தைக் கொண்டுவருவதாகக் கூறும் அரசாங்கத்தின் அச்சுறுத்தலை எளிதாக ஒதுக்குவது என்பது அரசியல்ரீதியாக குற்றமாகும். இப்பொழுது தேவைப்படுவது முழுக் கிரேக்கத் தொழிலாள வர்க்கமும் மெட்ரோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக அணிவகுத்து, வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் சிக்கன அரசாங்கத்தை அகற்ற போராட்டம் நடத்துவதுதான்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஒரு தொடர் வேலைநிறுத்தங்களில் சமீபத்தியது ஆகும். இது ஆழ்ந்த சமூக அழுத்தங்களுக்கு சான்றளிக்கிறது. கடந்த வாரம் Hellenic Postbank தொழிலாளர்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமான செயற்பாடுகளை தனியார்மயமாக்கி விற்றலுக்கு எதிர்ப்புக் காட்ட 48 மணி நேரத்திற்கு வேலைநிறுத்தம் செய்தனர். மருத்துவர்களும் பிற மருத்துவ ஊழியர்களும் வேலைநிறுத்த நடவடிக்கையை செய்துள்ளனர்.

செவ்வாயன்று ஆறுமாத காலமாக ஊதியத்தைப் பெறாத எலிப்சினா கப்பல்கட்டும் தொழிலாளர்கள், 25 மணி நேரத் தொடர் வேலைநிறுத்தங்களை தொடங்கினர். தொழிலாளர்கள் 2010ல் இருந்து அவர்களுடைய ஊதியங்களில் ஒரு பகுதி மட்டுமே வழங்கிவரப்படுவதை எதிர்த்தும், மேலும் கப்பல்கட்டும் நிறுவனம் மூன்று அரசாங்கக் கடற்படைக் கப்பல்களைக் கட்டுவதற்கு அது பணம் கொடுக்க முடியாததால் அது மூடப்படும் என்னும் அச்சுறுத்தலை எதிர்த்தும் போராடுகின்றனர்.