World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Mass protests shake Turkish government

வெகுஜன எதிர்ப்புக்கள் துருக்கிய அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்துகின்றன

By Alex Lantier
3 June 2013


Back to screen version

துருக்கி முழுவதும் வெள்ளி, வார இறுதியில், நகரங்களில் நிகழ்ந்த எதிர்ப்புக்கள் பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகன் உடைய இஸ்லாமியவாத அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்தின; அவருடைய உள்நாட்டுக் கொள்கைகள் குறித்த அதிருப்தி மற்றும் அண்டை சிரியாவில் அமெரிக்கத் தலைமையிலான பினாமிப் போருக்கு அவர் கொடுக்கும் ஆதரவும் எதிர்ப்புக்களுக்கு காரணம் ஆகும்.

வெள்ளி காலை இஸ்தான்பூலில் கெஜி பூங்காவிலும் பின்னர் டம்சிம் சதுக்கத்திலும் பொலிஸ் வன்முறை பயன்படுத்தப்பட்டபின் எதிர்ப்புக்கள் அதிகரித்தன. செவ்வாயன்று உள்ளிருப்பு போராட்டம் செவ்வாயன்று சட்டமியற்றுபர்களும் BDP குர்டிஷ் சமாதான, ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் பின்னர், முதலாளித்துவ எதிர்ப்பு குடியரசு மக்கள் கட்சி CHP ஆகியவற்றுடன் இணைந்து எர்கனுடைய திட்டமான டஸ்கிம் சதுக்கத்திற்கு அருகே உள்ள கெஜி பூங்காவை மறுகட்டமைப்பிற்கு உட்படுத்துவது குறித்த எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

எர்டோகன் இப்பகுதியில் ஒரு மசூதி கட்டும் திட்டங்களை கொண்டுள்ளார்; மேலும் 1940 களில் அழிந்துவிட்ட ட்டோமன் பேரரசு சகாப்த கால இராணுவ முகாம்களையும் ஒரு வணிக வளாகமாக கட்டமைக்கவும் திட்டம் கொண்டுள்ளார்; அதே நேரத்தில் அருகில் உள்ள துருக்கிய முதலாளித்துவ தேசியத் தலைவர் கெமா அடாடுர்க் பெயரில் உள்ள கலாச்சார மையத்தையும் அழிக்க விரும்புகிறார்.

டஸ்கிம் சதுக்கத்தின் வரலாற்றுத் தன்மை பொருந்திய தொழிலாள வர்க்க அல்லது பரந்த எதிர்ப்புக்கள் இருக்கையில், மறுகட்டமைப்பு திட்டங்கள் ஆத்திரமூட்டும் தன்மையை கொண்டுள்ளன. அமெரிக்க ஆறாவது கடற்படை நிறுத்துவதை கண்டித்து துருக்கியில் எதிர்த்த ஆர்பாட்டக்காரர்கள் 1969 தீய ஞாயிறுப் படுகொலை செய்யப்பட்டதற்கு அருகில்தான் இது நடைபெற்றது. மே 1, 1977ல் சர்வதேச தொழிலாளர் தின அணிவகுப்பு ஒன்றில் பல டஜன் மக்கள் சதுக்கத்தில் நடந்த அடக்குமுறையில் கொல்லப்பட்டனர்.

வெள்ளியன்று பொலிசார் எதிர்ப்பாளர்களை ஆரம்பத்தில் விரட்டியடித்து அவர்களை டஸ்கிம் சதுக்கப்புறம் தள்ளினர்; பின்னர் மிருகத்தனமாக மீண்டும் தாக்கினர். ஆர்ப்பாட்டம் பெரிய அளவான நிலையில், ஹெலிகாப்டர்களும் பொலிஸ் பிரிவுகளும் நிறைய கண்ணீர்ப்புகை குண்டுக்களை மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்துத்துறையிலும் செலுத்தினர். ஒரு வீடியோ காட்சி பொலிஸ் கவச வாகனம் ஒன்று தடையொன்றை மீறிச் சென்றபோது எதிர்ப்பாளர் ஒருவரை தாக்கியதைக் காட்டுகிறது.

 “பொலிசார் எல்லா இடங்களிலும் உள்ளனர், ஹெலிகாப்டர்கள் எங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கின்றன. நாங்கள் அணிவகுத்துவருவதைப் பொலிஸ் காணும்போதெல்லாம் அவர்கள் விரைந்து வந்து கண்ணீர்ப்புகை குண்டை போடுகின்றனர்.... அப்பொழுது நாங்கள் கலைந்து சென்று பின் மீண்டும் கூடுவோம்” என்று ஒரு எதிர்ப்பாளர் கூறினார்.

இதற்கு ஒற்றுமை தெரிவித்த எதிர்ப்புக்கள் நாடுமுழுவதும் பரவின; ஆயிரக்கணக்கான மக்கள் அங்காராவில் உள்ள குகுலு பூங்காவில் கூடினர், இஜ்மர் கடற்கரையில் 10,000 பேர் கூடியதாக தெரிகிறது.

 “டஸ்கிம் எல்லா இடங்களிலும் உள்ளது”, “இரசாயன எர்டோகன்” என்று எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர்; பிந்தையது பரந்த அளவில் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பற்றிய குறிப்பு ஆகும்; அதே நேரத்தில் எர்டோகன், வாஷிங்டனுக்கு சிரியா மீது நேரடித் தாக்குதல் நடத்த போலிக் காரணத்தைக் கொடுக்கும் இத்தகைய தவறான கூற்றுக்களான சிரிய ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது என்னும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதையும் குறிக்கிறது.

உள்துறை மந்திரி முயம்மர் கூலெர் சனிக்கிழமையன்று கொடுத்த தகவல்படி, 939 பேர் 90 தனித்தனி ஆர்ப்பாட்டங்களில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். மருத்துவர்கள் இஸ்தான்பூலில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கும் மற்றும் தலைநகர் அங்காராவில் பல நூற்றுக்கணக்கான காயமுற்றவர்களுக்கும் சிகிச்சை அளித்தனர். அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இரண்டு எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது.

சனிக்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீண்டும் பொலிசுடன் இஸ்தான்பூல் மற்றும் அங்காராவில் மோதினர். எதிர்ப்பாளர்கள் “பாசிசத்திற்கு எதிராக தோளோடு தோள்”, “அரசாங்கமே ராஜிநாமா செய்” எனக் கோஷமிட்டனர்.

சனிக்கிழமையன்று நாடு முழுவதும் காட்டப்பட்ட தொலைக்காட்சி உரையில், எர்டோகன் பொலிஸ் வன்முறைக்கு இசைவு கொடுத்தார். “டஸ்கிம் சதுக்கம் தீவிர வாதக் குழுக்கள் சுற்றிவரும் இடமாக இருக்கக் கூடாது.” அதே நேரத்தில் “பாதுபாப்புப் பிரிவினர் நடவடிக்கைகள் சிலவற்றில், குறிப்பாக மிளகுவாயுப் பயன்பாடு பிழைதான்” என்பதையும் இழிந்த முறையில் ஒப்புக் கொண்டார்.

எதிர்க்கட்சியிருடன்லந்தாலோசிக்காமலேயே பூங்காவை மறுகட்டமைக்கும் திட்டங்கள் தொடரும், என்று அவர் உறுதியளித்தார்; “அவர்கள் 100,000 பேரைக் கூட்டினால், நான் என் கட்சியில் இருந்து ஒரு மில்லியன் பேரைக் கொண்டுவருவேன்” என்றார்.

அரச அதிகாரிகள், எர்டோகன் எதிர்ப்புக்களை வன்முறையில் அடக்குவதை ஒட்டிய மக்கள் சீற்றத்தை குறைக்கும் வகையில் முயற்சி எடுத்ததால் சனிக்கிழமை பின்னிரவில் பொலிசார் டஸ்கிம் சதுக்கத்தில் இருந்து பின்வாங்கினர். துருக்கிய உள்துறை அமைச்சரகம் கண்ணீர்ப்புகை அதிக அளவில் பயன்படுத்தப்பட்து குறித்து “விசாரணை நடத்தும்” என்று அறிவித்தது; அதேநேரத்தில் துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா குல்லும் அமைதிக்கு அழைப்புவிட்டார்.

நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் துருக்கியின் நான்கு பெரிய நகரங்களான இஸ்தான்பூல், அங்காரா, இஜ்மிர் மற்றும் அடனாவில் எதிர்ப்புக்கள் நடத்தினர். உள்துறை அமைச்சரகம், 1,700 பேர் கைது செய்யப்பட்டனர், 235 எதிர்ப்புக்கள் 67 துருக்கிய நகரங்களில் நடைபெற்ற என அறிவித்துள்ளது.

எர்டோகன் மற்றும் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி (AKP) கட்சிக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள் பெருகியிருப்பது அவருடைய ஆட்சியின் நலிந்த தன்மை மற்றும் செல்வாக்கற்ற நிலையை விரைந்து அம்பலப்படுத்தியுள்ளது; இதுதவிர, சிரியாவில் அமெரிக்கத் தலைமையில் நடக்கும் போரை நியாயப்படுத்தக் கூறப்படும் போலிக்காரணங்களின் பாசாங்குத்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

வாஷிங்டனும் அதன் நட்பு அமைப்புக்களும், சிரிய ஆட்சி மாற்றத்திற்காக பினாமிப்போர் ஒன்றை தொடங்கியதற்கு கோடையில் சிரிய எதிர்ப்புக்கள் 2011ல் அடக்கப்பட்டதை பற்றி எடுத்தனர்; ஆனால் இப்பொழுது அவர்கள் அதிக பிடிப்பில்லாத பெயரளவு குறைகூறல்களைத்தான் எர்டோகனுடைய இஸ்தான்பூலில் குருதி கொட்டும் வன்முறை பற்றிக் கூறுகின்றனர். அமெரிக்க வெளிவிவகாரச் செயலகம் காயமுற்றோர் எண்ணிக்கை குறித்து கவலையை தெரிவித்துள்ளது; அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் “அனைத்து வகை கூடுதல், விகிதமற்ற வலிமை பயன்படுத்தவதை தான் கண்டிப்பதாகக்” கூறியது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்கொண்ட தன்மையில் இருக்கும் அப்பட்டமான முரண்பாடானது சிரியா, துருக்கியில் முக்கி சக்திகளுடைய கொள்கைகள் குறித்த ஏகாதிபத்திய நலன்களின் உந்துதல்கள் உள்ளன. சிரிய ஆட்சியானது, ஏகாதிபத்தியத்தின் உந்துதலான மத்திய கிழக்கை மறுகட்டமைத்தலுக்கு தடை என்று வெளிப்பட்ட நிலையில், அமெரிக்கத் தலைமையிலான எண்ணெய் செழிப்புடைய ஈரானில் ஆட்சி மாற்றத்திற்காக எர்டோகன் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகச் செயல்படுகிறார்.

சிரிய அதிகாரிகள், இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்டி எதிர்ப்புக்களை எர்டோகன் மிருகத்தனமாக அடக்கியபின் அவருடைய ராஜிநாமாவைக் கோரினர். சனிக்கிழமை அன்று சிரியத் தொலைக்காட்சி சிரிய தகவல் மந்திரி ஒம்ரன் ஜோயபியை மேற்கோளிட்டது: “துருக்கிய மக்களுக்கு இந்த வன்முறை கூடாது. எர்டோகன் வன்முறையற்ற வழிவகைகளைத் தொடரமுடியவில்லை என்றால் அவர் இராஜிநாமா செய்யவேண்டும்.” ஜோயபி, எர்டோகன் மிருகத்த எதிர்ப்புக்களை அடக்கும் முறை அவர் “உண்மையில் இருந்து” பிரிந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது என்றார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு மே 16ம் திகதி எர்டோகன் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை வாஷிங்டனில் சந்தித்து வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தின் முக்கிய கருத்து சிரியப் போரும் அமெரிக்க-துருக்கிய பொருளாதார உறவுகளும் என அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிகாரிகள், குருதி கொட்டும் எர்டோகன் ஆட்சியுடன் தங்கள் உடன்பாட்டின் பாசாங்குத்தனம் குறித்துப் பேச மறுக்கின்றனர்; அதே நேரத்தில் சிரியாவில் ஒரு “மனிதாபிமானப் போர்” குறித்த வெளிநாட்டுக் கொள்கையை தொடர்கின்றனராம்.

துருக்கியில் அமெரிக்க தூதரான பிரான்ஸிஸ் ரிக்கியர்டோன் CNN Turk  இடம், “இந்த வருத்தம் தரும் படங்களைக் காண்பது எவருக்கும் களிப்பு இல்லை என்பது உண்மையே. எனக்கும் மகிழ்ச்சி இல்லை. காயமுற்றோர் அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஆனால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி நீங்கள் என்னைக் கேட்டால், கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம், சுதந்திரமாகக் கூடும் உரிமை, அமைதியான எதிர்ப்புக்கள் ஒரு ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என உங்களுக்குத் தெரியும். நான் வேறு ஏதும் கூற விரும்பவில்லை.”

துருக்கிய மக்களின் எதிர்ப்பையும் மீறி எர்டோகன் ஆர்வத்துடன் சிரியப் போருக்கு ஆதரவளிக்கிறார். துருக்கிய மக்களில் கால்வாசிப்பேர்தான் எர்டோகனின் கொள்கையான சிரிய ஆட்சியை எதிர்த்து நிற்கும் எதிர்த்தரப்பு தீவிர இஸ்லாமியவாதிகளுக்கு ஆயுதம் அளிப்பதற்கு ஆதரவைக் கொடுக்கின்றனர் என சமீபத்திய கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன. துருக்கியில் ஆழ்ந்த அமைதியின்மை உள்ளது—குறிப்பாக அலாவி சிறுபான்மையிடத்து; அவர்களில் பலர் எதிர்ப்புக்களில் கலந்து கொண்டனர்—எர்டோகன் சிரியாவில் தீவிர வலது எதிர்ப்பாளர்களுடன் ஒத்துழைப்பதின் விளைவு குறித்து. HP அதிகாரிகள் ஏற்கனவே துருக்கியில் ரேஹன்லி கார்க்குண்டுத் தாக்குதலை, அமெரிக்கா ஆதரிக்கும் சிரிய எதிர்த்தரப்பில் அல்குவேடா பிணைப்புடைய அல் நுஸ்ரா செய்திருக்கும் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். .

போர் ஆபத்தை இன்னும் அதிகரிக்கும் வகையில் எர்டோகன் அரசாங்கம், சிரிய அரசாங்கம்தான் தாக்குதல்களை நடத்தியது என்று குற்றம் சாட்டுகிறது. இக்குற்றச்சாட்டுக்கள் பொய்கள் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன; துருக்கிய தகவல் திருடும் RedHack ஆல் துருக்கிய உளவுத்துறை ஆவணங்கள் வெளியிடப்பட்டதில் காட்டியுள்ளபடி; ரேஹன்லி தொடர்புடைய கார் குண்டுகள் அல் நுஸ்ராவினால் தயாரிக்கப்பட்டுள்ளன.

இக்கசிவிற்குக் காரணமானவர்களை தாக்கும் வகையில் எர்டோகன் ஆட்சி இதை முகங்கொடுத்துள்ளது. துருக்கி உள்துறை அமைச்சகம், கூறப்படும் ஆவணத்தை RedHack இற்கு வழங்கிய காவல்படை உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளது.

துருக்கியில் இருக்கும் எர்டோகனின் அதிகரித்த வலதுசாரி இஸ்லாமிய சட்டம் நாட்டில் அன்றாட வாழ்வைப் பாதிப்பதோடு எதிர்ப்பையும்  தூண்டுகிறது. கடந்த வாரம் பாராளுமன்றம்,  இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை மதுபானங்கள் விற்பனை மற்றும் நுகர்வை தடை செய்யும் சட்டம் ஒன்றிற்கு ஒப்புதல் கொடுத்தது.