World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Behind Syria peace talks proposal, US prepares regional war

சிரியா சமாதான பேச்சுத் திட்டத்தின் பின்புலத்தில், அமெரிக்கா பிராந்தியப் போருக்கு தயாரிப்புக்களைச் செய்கிறது

By Bill Van Auken 
23 May 2013

Back to screen version

ஒரு கூட்டு அமெரிக்க-ரஷ்யத் திட்டமான ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய அரசாங்கத்திற்கும் மேற்குலக ஆதரவுடைய “எழுச்சியாளர்களுக்கும்” இடையே சமாதானப் பேச்சுக்கள் பற்றி மத்திய கிழக்கில் விவாதிப்பதாகக் கூறிக்கொண்டு சுற்றுப் பயணத்தில் இருக்கும் வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி, அமெரிக்க நட்பு நாடுகளை பிராந்தியம் தழுவிய போர் தயாரிப்புக்களுக்காக சந்தித்தார்.

முதலில் ஓமனில் வந்திறங்கிய கெர்ரி ஆளும் சுல்தானுடன் பேச்சுக்களை நடத்தினார். இவர்தான் இஸ்ரேலுடன் சேர்த்து அமெரிக்கச் செல்வாக்கிற்கு மத்திய கிழக்கில் அஸ்திவாரமான முடியாட்சிச் சர்வாதிகாரிகள் தொடர்ச்சியில் ஒருவராவார். அரச செயலரின் வருகை வரம்பிலா முடியாட்சிக்கும் ரேதியோன் நிறுவனத்திற்கும் இடையே நவீன ஆயுத தளபாடங்களான அவெஞ்சர் தீப் பிரிவுகள், ஸ்டிங்கெர் ஏவுகணைகள் மற்றும் நவீன நடுத்தர தூர அளவு ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு ஏவும் ஏவுகணைகள் இவற்றை வழங்கும் 2.1 பில்லியன் டொலர்கள் உடன்பாடு கையெழுத்தான நேரத்தில் வந்தது. ஈரானைச் சுற்றி வாஷங்டன் நிறுவ முற்படும் எஃகு வளையத்தின் ஒரு பகுதியாகும் இது.

அங்கிருந்து அவர் ஜோர்டானின் அம்மானுக்குப் பறந்து சென்று புதனன்று “சிரிய நண்பர்கள்” மற்றும் அமெரிக்கத் தலைமையிலான “விரும்பி வருவோரின் கூட்டணி” இவற்றில் பங்கு பெறச் சென்றார். இவைகள்தான் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போருக்குத் தயாரிப்புக்களை நடத்துகின்றன. இவற்றில் வாஷிங்டன் அதனுடைய ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகள், பிரித்தானியா தலைமையில், துருக்கி, எகிப்து, மற்றும் பல ஷேக் நாடுகள், பேர்சிய வளைகுடாவில் இருக்கும் சுல்தான் நாடுகள் உள்ளன --  அவற்றுள் அசாத் எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆயுதங்கள் வழங்கும் நாடுகளும் அடங்கும், அதாவது சௌதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் என்பன.

புதன் நடைபெற்ற கூட்டத்தில் சிரியாவின் ஜோர்டானிலுள்ள தூதர் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தி அதை “சிரியாவின் எதிரிகளுடைய கூட்டம்” எனக் கண்டித்தார்.

“சிரியாவின் பெரும் துயரிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவோர் சிரியாவில் இருக்கும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு ஆயுதம், பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும். சிரியா மீதான போர் முன்னோடித் தன்மையில்லாதது” என்றார் தூதரான பஹ்ஜத சுலேமான்.

சிரிய தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள், அசாத் எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமெரிக்க வெளியுறவு அலுவலகம் அணிதிரட்டியுள்ளதில் இருப்பவர்கள், கடைசி நிமிடத்தில்தான் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். தங்கள் பிரதிநிதியாக யாரை “எழுச்சியாளர்கள்” ஏற்பர் என்பதில் உடன்பாடு இருக்குமா என்பதில் சந்தேகங்கள் இருந்தன எனத் தெரிகிறது.

முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய டெக்சாசை தளமாகக் கொண்ட வணிகர் காசன் ஹிட்டோவிற்கு இடைக்கால அரசாங்கத்தின் “பிரதமராவதற்கு” ஆதரவை அமெரிக்கா கொடுத்திருக்கிறது; இவர் அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ஆனால் பெருகிய முறையில் தகவல்கள் அவருடைய பங்கு  சிரியாவில் போரிடும் சுன்னி குறும் குழுவாத குடிப்படைகளால் வலுவாக எதிர்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. கூட்டணியின் “இடைக்காலத் தலைவர்” ஜார்ஜ் சப்ரா, ஸ்ராலினிச சிரிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர் “எழுச்சியாளர்களுக்காக” நிற்பார் எனத் தெரிகிறது.

இக்கூட்டத்தில் கெர்ரியின் பங்கு சிரியச் சமாதானப் பேச்சுக்களுக்குத் தயாரித்தல் என்று வெளியுறவு அலுவலகம் கூறினாலும்—இது ஜெனீவா 2 என அழைக்கப்படுகிறது— அதாவது வாஷிங்டனும் மாஸ்கோவும் பகிரங்கமாக இதற்கு ஆதரவைக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளன என்றாலும், ஆக்கிரமிப்பிற்கு உண்மையான செயற்பட்டியலானது அமெரிக்கா அதனுடைய நட்பு நாடுகளுக்கு இப்போரை ஆட்சி மாற்றத்தை எப்படி முடிப்பது என்பதாகும்; அதுவும் சிரிய அரசாங்கம் மேற்குலக ஆதரவுடைய படைகள் மீது மூலோபாய இழப்புக்களை ஏற்படுத்தி வருகையில்.

மேற்கு சிரியாவில் லெபனிய எல்லையில் இருந்து எட்டு மைல்களுக்குள் இருக்கும் குசய்ர் நகரை சிரிய இராணுவம் கைப்பற்றியதற்குப் பின் இந்நிலை தெளிவாக வெளிப்பட்டுள்ளது. மேற்குலக ஆதரவுடைய குடிப்படைகள் வசம் விழுந்த இச்சிறுநகரம், லெபனிய எல்லையைக் கடக்கும் வெளிநாட்டுப் போராட்டக்காரர்கள் மற்றும் ஆயுதங்களைக் கடத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.  சுற்றியுள்ள பிராந்தியத்தை “எழுச்சியாளர்கள்” கட்டுப்பாடு கொண்டிருந்ததும் சிரியத் தலைநகர் டமாஸ்கஸை அலெப்போ மற்றும் சிரியக் கடலோரத்திலிருந்து பிரிக்க பயமுறுத்தப்பட வைத்தது.

அம்மானில் “சிரிய நண்பர்கள்” கூட்டத்தின் ஆரம்பிப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய கெர்ரி, அசாத் ஆட்சி அரசியல் தீர்வைப் பேசித் தீர்க்க முடிக்கவில்லை என்றால், வாஷிங்டன் “தங்கள் நாட்டுச் சுதந்திரத்திற்குத் தொடர்ந்து போராட எதிர்த்தரப்பிற்கு ஆதரவைப் பெருக்குவதைப் பரிசீலிக்கும்” என்றார். அமெரிக்க அதிகாரிகள் அசாத் அகற்றப்படுவது எந்த உடன்பாட்டிற்கும் நிபந்தனை என்று கூறுகையில், திட்டமிடப்பட்டுள்ள பேச்சுக்கள் அமெரிக்கத் தயாரிப்பை விரிவாக்கப் போலிக் காரணமாக மாற்றப்படும் எனத் தோன்றுகிறது.

செனட் வெளியுறவுக் குழு 15-3 என்ற வாக்கெடுப்பில், வாஷிங்டன் நேரடியாக எதிர்தரப்புப் போராட்டக்காரர்களுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை ஒப்புக்கொண்ட மறுதினம் கெர்ரியின் கருத்து வந்துள்ளது. CIA ஏற்கனவே வளைகுடா நாடுகளில் இருந்து வரும் ஆயுதப்பாய்வை ஒருங்கிணைத்து வருகிறது; கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மூன்றாம் தரப்பினர் மூலம் வரும் ஏராளமான ஆயுதங்களையும் முறைப்படுத்துகிறது எனக் கூறப்படுகிறது.

வாஷிங்டனின் கைப்பாவைப் படைகள்அடைந்துள்ள குயுசர் சமரின் தோல்விக்கு கெர்ரி ஹெஸ்புல்லா போராளிகளின் பங்கைக் குறைகூறியுள்ளார்; இது லெபனானைத் தளமாகக் கொண்ட கட்சி, இக்குடிப்படைக் கூட்டம் அசாத் அரசாங்கத்துடனும் மற்றும் ஈரானிய அரசாங்கத்துடனும் இணைந்துள்ளது.

“கடந்த வாரம்தான்,ஹெஸ்புல்லா மிக மிகக் கணிசமாகத் தலையிட்டது” என்றார் கெர்ரி. “பல ஆயிரக்கணக்கான ஹெஸ்புல்லா குடிப்படைகள் சிரியத் தரையில் உள்ளன, இவை இந்த வன்முறைக்கு பங்களிப்பைக் கொடுக்கின்றன; நாம் அதைக் கண்டிக்கிறோம்.”

தன் போராளிகள் சிரியாவில் உள்ளனர் என்பதை ஹெஸ்புல்லா ஒப்புக் கொண்டது; ஆனால் அவர்கள் போரில் முடிவான பங்கைக் கொண்டுள்ளனர் என்பதை மறுத்தது. அவர்கள் சிரிய எல்லை நகரங்களிலிருக்கும் லெபனியர்களுக்கு தற்காப்புப் பயிற்சி கொடுப்பதாக வலியுறுத்துகிறது.

மேற்குலகச் செய்தி ஊடகமும் ஹெஸ்புல்லாவின் பங்கில் குவிப்புக் காட்டியுள்ளது; அதே நேரத்தில் ஏராளமான இஸ்லாமியவாத சுன்னி போராட்டக்காரர்களும் லெபனிய எல்லையைக் கடந்து அசாத் ஆட்சிக்கு எதிராகப் போரிடுகின்றனர் என்னும் உண்மையைப் புறக்கணிக்கின்றன.

இந்தப் போர் பிராந்திய எல்லைகளைக் கடந்து முழு அளவு பிராந்தியப் போராக மாறும் என்னும் அச்சுறுத்தல் அன்றாடம் அதிகரித்துள்ளது. வடக்கு லெபனிய நகரான திரிப்போலியில், குறைந்தது 11 பேராவது இறந்துள்ளனர்,அதில் இரண்டு பேராவது  லெபனிய இராணுவச் சிப்பாய்கள்; சுன்னிப் போராட்டக்காரர்களுக்கும் லெபனிய ஆலவைட் அசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த போரில் இந்த இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இம்மோதல்கள் மோட்டார் குண்டுத் தாக்குதல்கள், ராக்கட் உந்துதல் எறிகுண்டுகள் பறிமாறல்களைச்  செய்தன; பள்ளிகள், வணிகங்கள் பிற நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நின்றன.

சிரியாவில் ஹெஸ்புல்லாவின் பங்கைக் கண்டித்து வெளியுறவு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது; “இது குறுங்குழுவாத அழுத்தங்களை பிராந்தியத்தில் எரியூட்டி, வளர்க்க” உதவுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது. இத்தகைய கண்டனங்கள் இஸ்லாமியவாதப் படைகள் குசயிரைத் தாக்கியபோது வரவில்லை; அவற்றில் கணிசமான அல்வைட் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மை மக்கள், அப்பகுதியில் வாழ்பவர்கள் இழப்பை அடைந்தனர்; ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற நேர்ந்தது.

எதிர்க்கட்சியின் பெரும் திகைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, இடைக்கால தேசியக் கூட்டணியின் தலைவர் சப்ரா அறிக்கை ஒன்றை அம்மான் மாநாட்டிற்கு முன்னதாக வெளியிட்டு, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் “மனிதாபிமான தாழ்வாரத்தை” குசயுரில் திறக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்; வேறுவிதமாகக் கூறினால், சிரிய மண்ணில் மேற்குலக இராணுவத் தலையீடு தொடக்கப்பட வேண்டும் என.

செவ்வாயன்று மாநாட்டில் விடுத்த அழைப்பில் ஒரு மூத்த வெளியுறவு அலுவலக அதிகாரி ஒப்புக்கொண்டார்: “நாளை அம்மான் பேச்சுக்களில் ஒன்று, நாம் பேசப்போவது, தரையில் இராணுவச் சமநிலைக்கு என்ன செய்யவேண்டும் என்பதாகும்.”

தன்னுடைய இராணுவச் செயற்பட்டியலை முன்வைக்கையில் வாஷிங்டன் பிரச்சாரத்தை முடுக்கி, அசாத் எதிர்ப்புப் படைகள் சிரியாவில் தோற்பதற்குக் காரணம் இதேபோல் ஈரான் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஒரு மூத்த வெளியுறவு அலுவலக அதிகாரி வாஷிங்டன் போஸ்ட்டிடம் ஈரானியப் படைகள் சிரியாவில் போரிடுகின்றன, என்று முற்றிலும் ஆதாரமற்ற வகையில் “எழுச்சியாளர்கள்”கூறுவதைத் திருப்பிக் கூறினார்.

போஸ்ட் குறிப்பிட்டுள்ளது போல், “அமெரிக்க அதிகாரியின் குற்றச்சாட்டு உட்குறிப்பாக இரண்டு ஆண்டு காலமாக நடக்கும் சிரிய மோதல் ஒரு பிராந்தியப் போராகிவிட்டது, நடைமுறையில் அமெரிக்க கைப்பாவைகளின் ஈரானுடனான போர்”எனக் காட்டுகிறது.

போஸ்ட்டின் கட்டுரையாளர் டேவிட் இக்நேஷியஸ் அடுத்த மாதம் ஜெனீவாவில் சமாதான மாநாடு குறித்து பகிரங்கப் பேச்சு இருக்கையில், “தரையில் போர் தீவிரமாகிவிட்டது, எதிர்த்தரப்பில் இருந்து கூடுதல் ஆயுதங்களுக்குக் கோரிக்கை அதிகமாகிவிட்டது, நம்பிக்கை குறைந்த நபர் ஜெனிவா மாநாடு நடக்குமா என்றுதான் கேட்பார்” எனக் கூறியுள்ளார்.

மாஸ்கோவுடன் உடன்பாடு என்ற பெயரில் வாஷிங்டன் ஏற்பாடு செய்யும் சமாதானப் பேச்சுக்கள் அப்பிராந்தியத்தில் அதன் மூலோபாய நோக்கங்களை முன்னேற்றுவிக்கும் மற்றொரு தந்திரோபாயம்தான். இது ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா போர்களிலும் இப்பொழுது சிரியப் போரிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. சிரிய குடிமக்கள் இறப்பு குறித்து முதலைக் கண்ணீருக்குப் பின் இதன் புறநிலை நோக்கம் 12 ஆண்டுகளுக்கு முன் வெடித்த அமெரிக்க இராணுவவாதத்தின் தளத்தைத்தான் கொண்டுள்ளது; மூலோபாய எரிசக்தி இருப்புக்களின் மீது அதன் போட்டி நாடுகள் குறிப்பாக சீனா, ரஷ்யா விரும்பும் கட்டுப்பாட்டைத் தான் எடுத்துக்கொள்ளுவதற்கு இராணுவ வலிமையைப் பயன்படுத்துவது என்பதே அது.

சிரியாவில் நடக்கும் பினாமிப் போரின் வளர்ச்சி காட்டுவது போல், இந்த கொள்ளை முறை அமெரிக்கத் தலையீடு நேரடியாக ஒரு பரந்த, பேரழிவு தரும் போரை ஈரானுக்கு மட்டும் அச்சுறுத்தல் என்று இல்லாமல், ரஷ்யா, சீனாவுடன் மோதல் என்பதையும் காட்டுகிறது.