World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Syria chemical weapons deal—US war postponed, not canceled

சிரிய இரசாயன ஆயுதங்கள் உடன்பாடு—அமெரிக்க போர் ஒத்தி வைக்கப்பட்டள்ளது, இரத்து செய்யப்படவில்லை.

By Bill Van Auken
16 September 2013

Back to screen version

ஜெனிவாவில் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரிக்கும் ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜீ லாவ்ரோவிற்கும் இடையே சிரிய அராசங்கத்தின் இரசாயன ஆயுதக் கிடங்கை அகற்றுவது குறித்து அடையப்பட்ட உடன்பாட்டின் விளைவாக மத்திய கிழக்கில் ஒரு புதிய ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்பவர்களிடையே ஒருவித நிம்மதி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கசப்பான உண்மை என்னவென்றால், போர் என்பது தற்காலிகமாக மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் அமைதியைத் தழுவிவிட்டது என்று நினைப்பவர்கள், அமெரிக்காவின் இராணுவ வாதத்திற்கு உந்துதல் கொடுக்கும் புறநிலையான சமூகப், பொருளாதார, பூகோள-அரசியல் நலன்களை புரிந்து கொள்ளவில்லை. ரஷ்யாவுடன் உடன்பாடு இருந்தபோதிலும், நிர்வாகம் ஒரு தந்திரோபாய பின்வாங்கலை தவிர மேலதிகமாக எதையும் செய்துவிடவில்லை. இது சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு உறுதியைக் கொண்டுள்ளது; அமெரிக்க ஏகாதிபத்தியம் அதை ஈரானுடன் ஒரு இராணுவ மோதலுக்கான தயாரிப்புக்களில் ஒரு இன்றியமையாத பாகமாக காண்கிறது.

ஞாயிறன்று ஏபிசியின் “ஜோர்ஜ் ஸ்டீபனோபோலோசுடன் இவ்வாரம்” என்று ஒளிபரப்பாகிய பேட்டியில் ஒபாமா, “ஈரான் இதில் இருந்து நாங்கள் சிரியாவைத் தாக்கவில்லை எனவே ஈரானைத் தாக்கமாட்டோம் என்ற பாடத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது” என்றார்.

வெறும் ஒரு வார இடைவெளிக்குள்ளாகவே ஒபாமா நிர்வாகம் சிரியாவை ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் விளிம்பில் இருந்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு என்பதற்கு வந்துள்ளது. அமெரிக்க கொள்கையில் இத்தகைய விரைவான மாற்றத்தின் பின்னணியில், போருக்கு மக்கள் எதிர்ப்பின் முன்னோடியில்லாத ஆழ்ந்த தன்மை இருந்தது. அது, ஆகஸ்ட் 29 அன்று பிரித்தானிய பாராளுமன்றம் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் தீர்மானத்தை நிராகரித்து அளித்த வாக்கெடுப்பில் முதலில் வெளிப்பாட்டைக் கண்டது.

ஐ.நா. தீர்மானம் என்னும் அத்தி இலையின் மூலம் சட்டபூர்வ தன்மையை பெற முடியாத நிலையில்—ரஷ்ய, சீன எதிர்ப்பால்—தன் மிக நெருக்கமான நட்பு நாட்டின் ஆதரவைக் கூடப்பெற முடியாத நிலையில், ஒபாமா நிர்வாகம் அமெரிக்கக் காங்கிரசை இராணுவ வலிமை பயன்பாட்டிற்கு ஒப்புதல் என்னும் தீர்மானத்தின் மூலம் சாதிக்க முயன்றது. அத்தகைய ஒப்புதல், போலி நெறித்தன்மையையும் மக்கள் ஆதரவு என்னும் முகப்பையும் ஒருதலைப்பட்ச சர்வதேச ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத செயலுக்குக் கொடுத்திருக்கும்.

இங்கும் நிர்வாகம் தோற்றது. காங்கிரசின் உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் இருந்து 9-1 என்ற கணக்கில் போர் எதிர்ப்புச் செய்திகளைப் பெற்றனர்; குடியரசுத் தலைமையில் இருக்கும் மன்றத்தில் ஒபாமா வாக்குப் பெற முடியாது என்பது தெளிவாயிற்று, ஜனநாயகக் கட்சியின் தலமையில் இருக்கும் செனட்டிலும் அவ்வாறுதான் போகக்கூடும். ஒரு ஜனாதிபதி இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கேட்பதற்கு அத்தகைய நிராகரிப்பு வருவது அமெரிக்க வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருந்திருக்கும் மற்றும் ஒபாமாவின் ஜனாதிபதித் தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கும்.

இச்சூழலில்தான் வெள்ளை மாளிகை, ரஷ்யாவின் திட்டமான சிரியாவுடன் இரசாயன ஆயுதக் களைவு குறித்த உடன்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளும் வகையில் நிலைமை முடிந்தது. அதுதான் அசாத் ஆட்சி ஆகஸ்ட் 21ம் திகதி டமாஸ்கஸ் புறநகர்ப்பகுதியில் இரசாயனத் தாக்குதலுக்கு பொறுப்பு எனப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை போலிக்காரணமாக கூறப்பட்டது. போர், சிரிய இரசாயன ஆயுதங்களை “தடுத்து, தரமிழக்கச் செய்யும்” என்று கூறப்பட்டது.

இவ்வகையில் அது மாஸ்கோவின் கூடுதல் தந்திர உத்திக்கு அடிபணிய நேரிட்டது; ரஷ்யா கெர்ரியின் அவசரக்கூற்றான ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய அரசாங்கம் அதன் இரசாயன ஆயுதங்கள் கிடங்கை முற்றிலும் அழிப்பதின் மூலம்தான் அமெரிக்க இராணுவத் தாக்குதலை தவிர்க்க முடியும் என்றார். அதைச் செய்வதற்கு மாஸ்கோ அசாத்தின் உடன்பாட்டை பெற்றது, ஒபாமா நிர்வாகம் ஒரு தொமஹாக் ஏவுகணை கூட வீசப்பதாத நிலையிலும், மக்களிடையே செல்வாக்கற்ற போரை நடத்துவதற்கு இயலாத நிலைமையில் தன்னைக் கண்டது.

“இராஜதந்திர முறை” எனப்படுவதை தழுவிக்கொண்டுள்ளபோதும், ஒபாமாவும் அவருடைய உதவியாளர்களும் போர் இன்னமும் நிகழ்ச்சி நிரலில் உறுதியாக உள்ளது என்பதை தெளிவாக்க பெரும் முயற்சிகளை எடுத்துள்ளனர். ஒபாமாவே, ஜெனீவாவில் கொள்ளப்பட்ட உடன்பாடு, “அமெரிக்க சக்தி அச்சுறுத்தல் என்பது நம்பகமானது” என்பதின் விளைவில்தான் வந்துள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்; மேலும் “இராஜதந்திர முயற்சி தோல்வியுற்றால், அமெரிக்கா செயலில் இறங்கும்” என்றும் கூறினார்.

தன்னுடைய பங்கிற்கு கெர்ரி தெளிவாக, அசாத் ஆட்சி இரசாயன ஆயுதங்கள் உடன்பாட்டை செயல்படுத்தியுள்ளதா என்பதை அமெரிக்கா தன் சொந்த நிர்ணயத்தில் இருந்து முடிவு எடுக்கும் என்றும் அதையொட்டி இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஐ.நா. ஒப்புதல் இல்லாத நிலையில், அவ்வாறுதான் செயல்பட வேண்டும் என்று நினைத்தால், இராணுவத் தாக்குதல்கள் பற்றி “அமெரிக்க ஜனாதிபதி ஒத்தமனதுடைய நட்பு நாடுகளின் உதவியுடன் முடிவு எடுப்பார்.”

வெள்ளை மாளிகை, காங்கிரசிடம் ஒப்புதலுக்கு இருமுறை செல்லும் தவறை செய்யாது என்பதும் வெளிப்படை. மேரிலாந்தின் ஸ்டீனி ஹோயர், பிரதிநிதிகள் மற்றத்தில் இரண்டாம் உயரிடத்தில் இருக்கும் ஜனாதிபதிக் கட்சி உறுப்பினர், ப்ளூம்பேர்க் தொலைக்காட்சியிடம் வார இறுதியில் மன்றத்தின் சிறுபான்மைத் தலைவர் நான்சி பெலோசியோ, தானோ “ஜனாதிபதி இதையொட்டி காங்கிரசிற்கு வரத் தேவையில்லை, தன் விருப்பப்படி செய்யலாம்” என்றார்.

ஆனால், ரஷ்யாவுடனான உடன்பாடு காங்கிரசில் இசைவிற்கு உதவுப் பயன்படுத்தப்பட முடியும். “மக்கள் கூறுவர், ‘அவர் கூடுதலான முயற்சியை மேற்கொண்டார், மக்கள் வலியறுத்திய இராஜதந்திரப் பாதையை நாடினார். அது வேலை செய்யவில்லை.’ ” “எனவே இச்சூழலில் நமக்கு உள்ள ஒரே விருப்பத்தேர்வு இனியும் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை செயல்படுத்தும் சிரியாவின் முயற்சியை தடைக்கு உட்படுத்துதல், தவிர்த்தல்” என்றார் ஹோயர்.

ஒபாமா நிர்வாகத்தாலும் அரசியல் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிரியாவிற்கு வரலாறு சாதகமாக இல்லை. தங்கள் இரசாயன ஆயுதக் கிடங்குகளை அழிப்பதற்கு வேறு இரு மத்திய கிழக்கு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்—ஈராக்கின் சதாம் ஹுசைன் மற்றும் லிபியாவின் முயம்மர் கடாபி. அவர்களுடைய நாடுகளும், அமெரிக்காவின் ஆட்சி மாற்றப் போருக்கு உட்பட்டன, அவர்கள் இருவரில் ஒருவரும் இன்று உயிருடன் இல்லை.

அமெரிக்க ரஷ்ய உடன்பாடு சிரியாவிடம் தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்துள்ளது. இரசாயன ஆயுத வல்லுனர்களின் கூற்றுப்படி, இவை மிகவும் செயல்படுத்த முடியாதவை. இரசாயன ஆயுதங்கள் உடன்பாடு நாடுகளுக்குத் தங்கள் ஆயுதங்கள் குறித்த முழுத் தகவலை அளிக்க 60 நாட்கள் கொடுத்தாலும் ஜெனீவாவில் அடையப்பட்ட உடன்பாடு டமாஸ்கஸுக்கு ஒரு வார காலம்தான் கொடுத்துள்ளது. அமெரிக்கா அதன் சொந்த இரசாயன ஆயுதங்களை அகற்ற கடந்த 18 ஆண்டுகளை செலவழித்திருக்கையில், இன்னும் இது முற்றிலும் முடிய ஒரு தசாப்தம் ஆகும் என்று கூறுகையில்—சிரியா இதே பணியை, ஒன்பது மாதங்களில் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

இத்தடைகளை கடப்பதில் தோல்வி ஏற்படுவது போருக்கான காணத்தை அளிக்கும்; இதைத்தவிர அல் குவேடா தலைமையிலான “எழுச்சியாளர்கள் மற்றொரு இரசாயன ஆயுதங்கள் ஆத்திரமூட்டலை நடத்தி அசாத் ஆட்சியை குறைகூறும் திறனும் உள்ளது.
இரசாயன ஆயுதங்கள், அமெரிக்காவின் நேரடி இராணுவத் தலையீட்டிற்கான நோக்கம் அல்ல, வெறும் போலிக்காரணம்தான். இத்தகைய போக்கு, பெருநிறுவன செய்தி ஊடகம் போர் பிரச்சார்த்திற்காக பாடுபடுவதின் மூலம் அளிக்கப்படுகிறது, அதாவது வாஷிங்டன் சிரியாவின் உள்நாட்டுப்போரில் வெறுமே பீதியுடன் வெளியே இருந்து பார்க்கும் நிலை, பாதுகாப்பற்ற குடிமக்கள் நலன் பற்றித்தான் அக்கறை கொண்டுள்ளது என்பவை, அபத்தமான பொய்கள் ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போரின் முக்கிய குற்றவாளியாக உள்ளது; அசாத் விரோத எழுச்சியாளர்களுக்கு கால் பில்லியன் டாலர்கள் உதவியை அளித்துள்ளது, இன்னும் அதிக நிதி, ஆயுதங்களை அரபு உலகில் அதன் முக்கிய நட்பு நாடுகளான, பிற்போக்குத்தன சௌதி அரேபிய, கட்டார் சுன்னி முடியரசுகள் மூலம் வழங்கப்பட்டதை ஒருங்கிணைத்தது.

இப்பொழுது CIA, நேரடியாக இஸ்லாமியவாதிகள், குற்றவாளிகள், கூலிப்படைகள் என நாட்டை அழிக்கும் “எழுச்சியாளர்” களுக்கு பயிற்சிகளையும் அளித்து, ஆயுதங்களையும் கொடுக்கிறது. வாஷிங்டனின் பினாமிப் படைகள் தொடர்ச்சியாக பல போர்களில் தோல்வியுற்ற பின், கடந்த ஜூன் மாதம் அல் கசயரில் தொடங்கியதுதான், அமெரிக்கா இராசயன ஆயுதங்கள் என்னும் “சிவப்பக் கோட்டை” நிர்ணயித்து போருக்கு விரையும் நிலையை ஏற்படுத்தியது. சிரிய மக்களின் பரந்த அடுக்குகளின் எதிர்ப்பைச் சம்பாதித்தபின், அதுவும் பிற்போக்குத்தன இஸ்லாமியவாத சிந்தனை மூலம் குறுங்குழுவாத, குருதி கொட்டும் செயல்பாட்டின் பின், சிஐஏ ஆதரவு பெற்ற சக்திகள் தோல்வியின் விளிம்பில் இருந்தன.

இன்னும் அடிப்படையில், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா செயல்படுத்தும் போர் என்பது, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் இன்னும் பரந்த அளவில்  மூலோபாய ரீதியாக முக்கியமான யூரேசிய நிலப்பகுதியின்மீது அதன் மேலாதிக்கத்தை உறுதி செய்யம் வாஷிங்டனின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். ஒபாமா நிர்வாகம் அதன் ஒப்பீட்டளவிலான பொருளாதாரச் சரிவை ஈடுகட்டுவதற்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மேலாதிக்கத்தை, அவரின் முந்தைய ஆட்சியாளர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் கொண்டிருந்த அதே கொள்ளை முறையைத்தான் தொடர்கிறது. சிரியத் தலையீடு, வெறுமனே டமாஸ்கசில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்டது மட்டும் இன்றி, அப்பிராந்தியத்தில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் அதிகாரத்தையும், செல்வாக்கையும் முறிப்பதற்கும்தான்.
அமெரிக்க கடற்படைத் தாக்குதல் படையும், வளர்ந்து வரும் ரஷ்ய கடற்படையும் கிழக்கு மத்தியதரைக் கடலில் ஒன்றை ஒன்று எதிர்கொள்கின்றன.

சிரிய இரசாயன ஆயதங்களில், அமெரிக்க-ரஷ்ய உடன்பாடு ஒரு புதிய சமாதான சகாப்தத்தை கொண்டுவரவில்லை. இது வெறுமனே அதிகரித்து வரும் இராணுவ ஆத்திமூட்டல்கள் மற்றம் போர் அச்சறுத்தல் ஆகியவற்றின் மற்றொரு அத்தியாயம்தான்; அப்படித்தான் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கு முன் வந்தன.

விரிவடைந்துகொண்டு வரும் பிராந்தியப் போர் அச்சறுத்தல் மற்றும் ஒரு புதிய உலகப் போர் பற்றிய அச்சறுத்தல் ஆகியவற்றிற்கான பதிலை, சர்வதேச தொழிலாள வர்க்கம் தன் சுயாதீன பலத்தை அணிதிரட்டி முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம்தான் வழங்க முடியும்.