World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

This week in history: November 24-30

வரலாற்றில் இந்த வாரம்: நவம்பர் 24-30

24 November 2014

Back to screen version

25 ஆண்டுகளுக்கு முன்னர்: விமானிகள் மற்றும் விமான சேவையாளர்கள் கிழக்கு விமானச் சேவை (Eastern Airlines) வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்

1989 நவம்பர் 24, எட்டரை மாதங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர், கிழக்கு ஏர்லைன்ஸ் விமான சேவையாளர்கள், தங்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வாக்களித்தனர். விமானிகள் வாக்களித்து ஒரு நாளுக்குள் இது இடம்பெற்றது. இந்த நடவடிக்கை, இயந்திரவியலாளர்கள் மற்றும் தரையில் சேவையாற்றுபவர்களுமாக 8,500 பேர் தனிமைப்படுதப்பட்டு, தாங்களே வேலை நிறுத்தத்தை தொடரத் தள்ளப்பட்டனர்.

வேலைநிறுத்தத்தை தூண்டிவிட்டு சில நாட்களுக்கு பின்னர், அத்தியாயம் 11 திவால் மனு தாக்கல் செய்த, கிழக்கு தலைவரான பிராங்க் லாரென்சோவின் தாக்குதலுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இந்த வேலை நிறுத்தத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. கிழக்கு, ஊழியர் ஒருவருக்கு ஆண்டுதோறும் சுமார் 20,000 டாலர் அளவில் 150 மில்லியன் டாலர் சலுகை கோரியது. எந்திரவியலார்களின் சர்வதேச சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட, எந்திரவியலார்களின், பொதி மாற்றம் செய்பவர்கள் மற்றும் தரையில் சேவையாற்றுபவர்களும், லாரென்சோவின் திவால் அச்சுறுத்தலை நிராகரித்து 1989 மார்ச் 4 அன்று வேலைநிறுத்தம் செய்தனர். விமானிகள் மற்றும் விமான சேவையாளர்களும் அடுத்த நாள் வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்டனர்.

வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்னரே, அது ஒரு அரசியல் போராட்டமாக இருந்தது. ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் புதிதாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து அமைச்சர் சாமுவேல் கே ஸ்கின்னர், "பொருளாதாரத்தை பிணைக்கைதியாக வைத்தார்" அரசாங்கம் தொழிலாளர் போராட்டங்களை அனுமதிக்காது என்றும், எச்சரித்தார் வேலை நிறுத்தம் பரவலான இடையூறை ஏற்படுத்தினால், இந்தநாடு இதுபோன்ற ஆபத்தை இனிமேல் எதிர்கொள்ளாது என்பதை உறுதி செய்துகொள்ள அரசாங்கம் அவசர கால நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கும் என்றும் எச்சரித்தார்.

வேலைநிறுத்தம் செய்தவர்கள் முதலாளித்துவ அரசின் ஒவ்வொரு நிறுவனமும் சம்பந்தப்பட்ட ஒரு முழு அரசாங்க தாக்குதலை எதிர்த்துப் போராடினர். வெள்ளை மாளிகை முதல் உச்ச நீதிமன்றம், காங்கிரஸ், தொழிற்சங்க தலைமை, குறிப்பாக AFL-CIO வரை, தொழிலாள வர்க்கத்தின் தீவிர அணிதிரள்வை தடுப்பதற்காக செயற்பட்டன.

கிழக்கு விமான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களும் வேலைநிறுத்தத்தில் கசப்புடன் போராடினர். தமது போராட்டம் இழுபட்ட நிலையில், அவர்கள் நாடு முழுவதும் விமான நிலையங்களில் மறியல்கள் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்துவந்தனர். விமானிகள் சங்கமானது கிழக்கு விமான சேவை கட்டுப்பாட்டில் இருந்து லாரென்சோவை நீக்குவதற்காக நீதிமன்றங்கள், காங்கிரஸ் இறுதியில் புஷ்ஷிடமும் முறையீடுகள் செய்வதில் நம்பிக்கை வைத்தது. அது தோல்வி கண்டபோது, விமானிகளும் வேலைக்கு திரும்ப நவம்பர் 23 அன்று வாக்களித்தனர். அடுத்த நாள் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் விமான சேவையாளர்களும் வேலைக்கு திரும்ப வாக்களித்தனர்.

கிழக்கு விமான சேவையானது அது வேலைக்கமர்த்திய கருங்காலிகளை தொடர்ந்தும் பணியில் அமர்த்திக்கொண்டதோடு விமானிகள் மற்றும் விமான சேவையாளர்களை பட்டியலில் காத்திருக்க பதிவு செய்ய வைப்பதன் மூலம் பதிலளித்தது.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்கா பெல்ஜியன் பாரசூட் துருப்புக்களை போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொங்கோவுக்குள் இறக்கியது

1964 நவம்பர் 24, ஒரு பணையக் கைதிகளை மீட்டல் என்ற பெயரில், அன்மையில் பிரகடனப்படுத்தப்பட்ட "கொங்கோ மக்கள் குடியரசின்" தலைநகர் ஸ்ரான்லிவில் உள் அதன் பாதுகாவலர்களைவிட அதிக எண்ணிக்கையிலான பெல்ஜிய பராசூட் படையினர் குதித்தனர். இவர்களுடன் கியூபா மற்றும் தென் ஆபிரிக்க கூலிப்படையும் இணைந்து, அமெரிக்க விமானப் படையின் 322ம் பிரிவின் ஆதரவுடன் கொண்டுசெல்லப்பட்டு இறக்கப்பட்டனர்.

சிகப்பு நாகம் நடவடிக்கை என பெயரிடப்பட்டிருந்த இந்த தாக்குதல், காலஞ்சென்ற பட்ரிஸ் லுமும்பாவை பின்பற்றுபவர்கள் தலைமையிலான தேசியவாத "சொம்பா கிளர்ச்சியை" நசுக்குவதற்காக ஐரோப்பிய நேட்டோ ஆதரவு நாடுகளுடன் அமெரிக்காவினால் தூண்டிவிடப்பட்டது. நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான லுமும்பா, அமெரிக்க சிஐஏ, பெல்ஜியம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தினதும் உடந்தையுடன் படுகொலை செய்யப்பட்டார். ஏகாதிபத்திய கைக்கூலியான மொய்சே ஷோம்பே அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்க படைகள் நேரடியான இராணுவ ரீதியில் தலையிட்டது இதுவே முதல் தடவையாக இருந்தது.

வெள்ளை கூலிப்படையினர் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த ஷோம்பே படைகளுடன் இணைந்து கொண்ட பாராசூட் துருப்புகள், தெற்கில் இருந்து தரை மார்க்கமாக முன்னேறின. ஆக்கிரமிப்பின் வெற்றியினால் ஊக்குவிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் பெல்ஜியமும், 24 மணி நேரத்தில் வெளியேறுவதாக கொடுத்த முந்தைய உறுதிமொழியை மீறி, தமது செயற்பாடுகள் தொடரும் என அறிவித்தன.

தொடர்ந்தும் தேசியவாதிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த வெள்ளையர்கள் பற்றிய கவலை, தாக்குதலுக்கான ஒரு சாக்குப் போக்காக இருந்தது. இது, தேசியவாத தலைவர் கிறிஸ்தோப் கபென்யே அச்சுறுத்தியதைப் போல், சம்பவங்களில் 24 ஐரோப்பிய மற்றும் அமெரிக்கர்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்தது. தேசியவாதிகள், ஷோம்பே படைகளால் தங்கள் ஆதரவாளர்கள் திட்டமிட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கு பதிலடியாக, நூற்றுக்கணக்கான பணய கைதிகளை பேரம்பேசும் துருப்புச் சீட்டாக எடுத்துக்கொண்டனர்.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: பின்லாந்து மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே மோதல் பெருகிவந்தது

1939 நவம்பர் 26, இரு நாடுகளுக்கும் இடையில் பகைமையை தூண்டுவதற்கு ஸ்ராலினால் அரங்கேற்றப்பட்ட ஒரு சம்பவத்தில், சோவியத்-பின்லாந்து எல்லை அருகே நடத்தப்பட்ட ஆட்டிலறித் தாக்குதலின் விளைவாக, நான்கு செஞ்சேனை சிப்பாய்கள் கொல்லப்பட்டதுடன், ஒன்பது பேர் காயமுற்றனர்.

வெளிநாட்டு அலுவல்களுக்கான சோவியத் ஆனையர் மொல்டோவ், "சோவியத் படைகளை இலக்கு வைத்து பின்லாந்து பிராந்தியத்தில் இருந்து இயக்கப்பட்ட ஆத்திரமூட்டும் பீரங்கித் தாக்குதல்," என இந்த சம்பவத்தை வகைப்படுத்தினார். எல்லையில் இருந்து 20 முதல் 25 கிலோ மீட்டர் மேற்கே விலகிச் செல்வதற்காக ஃபின்லாந்து அரசு உடனடியாக படைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று மொல்டோவ் கோரினார்.

இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே ஏழு வாரங்கள் தீவிரமாக நடந்த பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வந்தது. ஐரோப்பிய போரானது இறுதியில் சோவியத் ஒன்றியத்தை விழுங்கி விடக்கூடிய ஒரு சமயத்தில், சோவியத் ஒன்றியத்தின் இராணுவ பாதுகாப்பிற்காக பிராந்தியத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக பின்லாந்து பிரதிநிதிகளுடன் ஸ்ராலினும் மோலோடோவும் அக்டோபர் மற்றும் நவம்பர் முழுவதும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பின்லாந்துக்கு எதிரான ஸ்ராலினின் சதிச் செயல்கள் டென்மார்க் மற்றும் நோர்வேக்கு எதிரான தவிர்க்க முடியாத ஜேர்மன் நடவடிக்கைகளால் வெடித்தது. அது பால்டிக்கை ஹிட்லரின் கட்டுப்பாட்டில் விட்டு வைக்கவும் லெனின்கிராட்டை தனிமைப்படுத்தவும் மற்றும் தாக்குதலில் பாதிக்கப்படக்கூடியவாறும் ஆக்க வழிவகுத்தது.

ஸ்ராலின் அக்டோபர் ஆரம்பத்தில், பின்லாந்து வளைகுடாவின் தெற்கு கரையில் உள்ள பால்டிக் அரசுகளில் இராணுவத் தளங்களை பாதுகாக்க அச்சுறுத்தல்களை பயன்படுத்தினார். இப்போது ஸ்ராலின் வளைகுடா வடக்கு கரையில், பின்லாந்து நிலப்பகுதியில், அத்துடன் லெனின்கிராட்டை அணுகக் கூடிய பகுதிகளுக்கு அருகே பின்லாந்து தீவுகளிலும் தளங்களை உருவாக்குவதன் மூலம் சாத்தியமான படையெடுப்பாளர்களை தடுக்க வளைகுடாவை மூடுவதற்கு முயன்றார். அவர் சோவியத்-பின்லாந்து எல்லைகளை பீரங்கி தாக்குதல் தூரத்திற்கு வெளியில் வைப்பதற்காக அதை லெனின்கிராட்டில் இருந்து 32 கிலோமீட்டரில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் வைக்க வேண்டும் எனக் கோரினார்.

சில சலுகைகளை வழங்கிய அதே சமயம், பின்லாந்து ஆட்சி பிடிவாதமாக அதன் நடுநிலையை வலியுறுத்தியதுடன் ஸ்ராலினின் எல்லாக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஒரு சுருக்கமான பின்லாந்து சோவியத் குடியரசை ஸ்தாபித்த, பத்தாயிரக்கணக்கான பின்லாந்து தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர், ஜேர்மன் ஆதரவுடன் 1918ல் வலதுசாரி ஆட்சி அங்கு நிறுவப்பட்டுள்ளது. நவம்பர் 28, எல்லை சம்பவத்துக்கு இரண்டு நாட்களின் பின், சோவியத்-பின்லாந்து ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை மொலோடோவ் ஒருதலைப்பட்சமாக நிராகரித்தார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: ரஷ்யாவின் யுத்த இழப்புகள் ஒரு மில்லியனை தாண்டின

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வாரம், உலகப் போரின் முதல் மூன்று மாதங்களில் உயிரிழந்த, காயமடைந்த, காணாமல்போன அல்லது கைதுசெய்யப்பட்ட ரஷ்யர்களின் தொகை சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டது என்று ஐரோப்பிய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டது.

முதலில் வியன்னாவின் Wiener Rundschau வில் வெளியிடப்பட்ட அறிக்கைகள், பின்னர் பல்வேறு ஜேர்மன் செய்தித்தாள்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. ஆஸ்திரிய-ஹங்கேரிய படைகளுடன் மோதிய 420,000 ரஷ்யன் படைகளும் ஜேர்மன் இராணுவத்துடன் பல்வேறு போர்களில் மோதிய 340,000 ரஷ்யன் படைகளும் உயிரிழந்ததாக அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டின. வியன்னா செய்தித்தாளின் இராணுவ வல்லுனர்கள், நோய் பாதிப்பினால் 380,000 மரணங்களை மதிப்பிட்டதுடன், 1914 நவம்பர் 4 வரை 11,50,000 பேர் இறந்ததாக மதிப்பிட்டனர். உயிரிழத்தவர்கள் அல்லது நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் பிரமாண்டமான எண்ணிக்கையானது ஆட்சேர்ப்பின் போது காலரா நோய் பரவியதன் அடிப்படையில் அதிகரித்தது. ஏதாவது முரண்பாடு இருந்தால், ரஷ்யன் இழப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் குறைவாக இருந்திருக்கும் என்று Wiener Rundschau பத்திரிகை கருத்துத் தெரிவித்தது.

ஜார் ஆட்சியின் மற்றும் அதன் பங்காளிகளின் நலன்களின் பேரில் ரஷ்ய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இரத்தம் தோய்ந்த படுகொலையின் அளவு, தனிப்பட்ட மோதல்கள் பற்றிய புள்ளிவிவரங்களில் சுட்டிக் காட்டப்பட்டன. கிழக்கு பிரஷ்யாவின் மசூரியன் ஏரிகளில் நடந்த போரில் 200,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர்; விஸ்துலா வடக்கில் நடந்த போர்களில் 85,000 பேர் இறந்தனர், காயமடைந்தனர் அல்லது கைதுசெய்யப்பட்டனர்; வார்சோவில் இருந்து இவான்கொரோட் வரையான எல்லையின் தென்மேற்கில் நடந்த மோதலில் 60,000 பேர் உயிரிழந்தனர்.

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஒரு முன்னணி பாகமான Frankfurter Zeitung பத்திரிகை, தெரிவித்ததாவது: "இப்போதுவரை ரஷ்ய இராணுவ அலுவலர்கள் அதன் உறுப்பினர்களின் இழப்புக்களை மீண்டும் நிரப்பியுள்ளனர். அதனால் எண்ணிக்கை பிரச்சாரத்தின் தொடக்கத்தில் இருந்ததைப் போன்றே பெரிதாக உள்ளது. ஆனால் படையினர் மத்தியில்... ஏற்கனவே... பெருந்தொகையானவர்கள் முறையாக பயிற்றப்படாதவர்களாகவும் அரைகுறையாக ஆயுபாணியாக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். போர் நோக்கங்களுக்காக குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டும் திறமையானவர்களாக அவர்களை கருத முடியும்.