World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP public meeting on Independent Workers Inquiry into Water Pollution

நீர் மாசடைதல் தொடர்பான சுயாதீன தொழிலாளர் விசாரணை பற்றி இலங்கை சோசக பொதுக் கூட்டம்

14 July 2014

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), வெலிவேரியவில் நீர் மாசடைதல் பற்றிய அதன் சுயாதீன தொழிலாளர் விசாரணை குழுவின் அறிக்கைகள் மற்றும் முடிவுகளை வெளியிட, ஜூலை 20 ஞாயிறு, கம்பஹாவில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது. சோசக வெலிவேரியவில் உள்ள விலா கயா விருந்தினர் மண்டபத்தில் ஜூன் 29 நடத்த திட்டமிட்டிருந்த கூட்டத்தை போலீஸ் குழப்பியதன் பின்னரே கம்பஹா கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி செய்திருந்த முன்பதிவைரத்து செய்யுமாறு போலீஸ் மண்டப உரிமையாளருக்கு சட்டவிரோதமாக உத்தரவிட்டிருந்தது.

வெனிக்ரோஸ் டிப்ட் புரடக்ட்ஸ் நிறுவனத்தினால் வெலிவேரியவில் நிலத்தடி நீர் மாசடைவது பற்றி விசாரணை செய்யவே கடந்த நவம்பரில் சோசலிச சமத்துவக் கட்சி இந்த விசாரணைக் குழுவை நிறுவியது. எங்களது விசாரணையானது தண்ணீர் மாசடைதல் பற்றியும், வெனிக்ரோஸ் ஆலையில் பயங்கரமான தொழில் நிலைமைகள், கடந்த ஆகஸ்ட் 1 அன்று மாசடைவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் மற்றும் நிறுவனத்தை பாதுகாப்பதில் அரசாங்கத்தின் பங்கு பற்றியும் முக்கிய தகவல்களை கண்டறிந்துள்ளது.


தொழிலாளர் விசாரணையானது வெலிவேரிய கிராமவாசிகளையும் வெனிக்ரோஸ் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வுக்குப் போராடுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகும். ஏப்ரலில், துன்னானவில் உள்ள ஹங்வெல்ல ரபர் புரடக்ஸ் நிறுவனத்தினால் நீர் மற்றும் காற்று மாசுபடுத்தப்படுவது பற்றி விசாரிக்க இந்த விசாரணைக் குழு அதன் வேலையை நீட்டிக்க முடிவு செய்தது. இந்த ஆலையும் டிப்ட் புரடக்ட்சுக்கு சொந்தமானதாகும்.

கடந்த மாதங்களிலான அரசியல் அபிவிருத்திகள், இந்த சுயாதீன முயற்சியின் அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டத்தை போலீஸ் குழப்பியமை, டிப்ட் புரடக்ட்ஸ் நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துவதையும் நிறுவனத்தின் இலாப நலன்களை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் விசாரணைக் குழு அம்பலப்படுத்திவிடும் என்று இராஜபக்ஷ அரசாங்கம் கொண்டுள்ள பீதியை கோடிட்டுக் காட்டுகிறது.

தொழிலாளர் விசாரணையின் அறிக்கைகள் மற்றும் முடிவுகளை கலந்துரையாட எமது பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் குறிப்பாக வெலிவேரிய மற்றும் துன்னான பிரதேச கிராமத்தவர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.