World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Svoboda thugs attack head of Ukrainian national television

உக்ரேனிய தேசிய தொலைக்காட்சியின் தலைவரை ஸ்வோபோடா குண்டர்கள் தாக்குகின்றனர்

By Johannes Stern 
20 March 2014

Back to screen version

YouTube இல் ஒரு அதிர்ச்சி தரும் ஒளிப்பதிவுக் காட்சி மேற்கு ஆதரவு கொண்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பாசிச குண்டர்கள் கியேவ் தெருக்களில் கடந்த மாதம் கட்டவிழ்த்துள்ள அச்சுறுத்தும் ஆட்சியைக் காட்டுகிறது.

செவ்வாய் இரவு ஸ்வோபோடா கட்சியின் உறுப்பினர்கள், ஸ்வோபோடா பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் உக்ரேனின் அரசாங்கத் தொலைக் காட்சி நிலையம் NTU இனை முற்றுகையிட்டனர்; இது NTU ரஷ்ய பாராளுமன்றம் கிரிமியா உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை ஒளிபரப்பிய பின் நடைபெற்றது. அவர்கள் NTU தலைவர் அலெக்சாந்தர் பான்டெலிமோனோவின் அலுவலகத்தில் நுழைந்து ஒரு இராஜிநாமா கடிதத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தினர்.

உனது இராஜிநாமாவை எழுது! உட்கார்! உட்கார் என்று உரத்துக்கத்தினர். பான்டெலிய்மோனோவ் மறுக்கையில், அவர்கள் அவரை அறையில் இழுத்து, முகத்தில் அடித்து அச்சுறுத்தி: இதோ காகிதமும், பேனாவும், இப்பொழுது விரைவில் இராஜிநாமாவை எழுது, மிருகமே... ரஷ்ய கழிவின் ஒரு பகுதியே. உன் இராஜிநாமா கடிதத்தை இப்பொழுது எழுது. கேடுகெட்ட மாஸ்கோக்காரனே, இதைச் செய். என்றனர்.

பான்டெலிய்மோனோவ் நான் மாஸ்கோக்காரன் அல்ல. நான் உக்ரேனியன் என்று பதில் கூறுகையில், அவர்கள் அவரை மீண்டும் அடித்துக் கூச்சலிடுகின்றனர். நீ உக்ரேனியனா? நீ கழிவின் ஒரு பகுதி. நீ இழிந்த குப்பை. நீ ஒரு துரோகி. என்றனர்.

இக்கட்டத்தில் வீடியோக் காட்சி முடிவடைகிறது.

இத்தாக்குதல் ஒரு ஸ்வோபோடா பாராளுமன்ற உறுப்பினரும் உக்ரேனிய அரசாங்கத்தின் பேச்சு சுதந்திரத்திற்கான குழுவின் துணைத்தலைவருமான மிரோஷ்னிசெங்கோவின் தலைமையில் நடைபெற்றது.

மிரோஷ்னிசெங்கோ அவருடைய ஆத்திரமூட்டும் யூத எதிர்ப்பினால் இகழ்வுற்றவர். 2012ல் அவர், ஹாலிவுட் நடிகை மிலா குனிசைத் திட்டினார், அவரின் குடும்பத்தினர் உக்ரேன் சித்திரவதை முகாம்களில் பாதிக்கப்பட்டிருந்தனர். அவரை ஜைடோவ்காஅழுக்கடைந்த யூதி (dirty Yid) என திட்டினார்.

இத்தகைய இழிந்தவருடன்தான் பேர்லின் மற்றும் வாஷிங்டன் அரசாங்கங்கள் ஒன்றாக உழைத்து அவர்களை உக்ரேனில் ஜனநாயகத்திற்குப் போராடுபவர்கள் என இழிவார்ந்த முறையில் காட்டுகின்றன. வெளிப்படையாக யூதஎதிர்ப்பு மற்றும் நாஜிக் கட்சி ஆதரவு அமைப்பான ஸ்வோபோடா ஆட்சிசதியில் முக்கிய பங்கை கொண்டிருந்தது. இப்பொழுது தேர்ந்தெடுக்கப்படாத, மேற்கு ஆதரவுடைய அரசாங்கத்தில் ஆறு அமைச்சரகங்களை கட்டுப்பாட்டில் கொண்டு முக்கிய நிலையை வகிக்கின்றது.

மேற்கு அரசியல் வாதிகள் இந்த வன்முறைக் குண்டர்களுடன் ஒத்துழைக்கின்றனர். இவர்களுடைய பெரும் வீரப்பிரதாபி ஸ்டீபன் பண்டேரா ஆவார். இவர் தீவிர உக்ரேனிய தேசியவாதி ஆவார். ஸ்டீபன் பண்டேரா இரண்டாம் உலகப்போரின் போது உக்ரேன் மீது ஜேர்மனிய படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்து, ஆயிரக்கணக்கான யூதர்கள் கொலையில் தொடர்பு கொண்டிருந்தார்.

ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவை அவமானப்படுத்தி அழித்தும் மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் தாக்குதல்களை சுமத்த முற்படுகையில், அவை நாஜி ஜேர்மனி 1940களின் ஆரம்பத்தில் உக்ரேனிய பாசிசவாதிகளுடன் கொண்டிருந்த பிணைப்பை மீண்டும் கொள்கின்றன. 70 ஆண்டுகளுக்கு பின்னர் பெயர்கள் மாறிவிட்டன, ஆனால் குற்ற வழிவகைகள் அப்படியே மாறாதுள்ளன.