World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Spiegel magazine agitates against the Germansfear of war”

ஜேர்மனியர்களின் "யுத்த பயத்திற்கு" எதிராக Spiegel இதழ் ஆத்திரமூட்டுகிறது

By Peter Schwarz
30 April 2014

Back to screen version

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கிய மிக கவனமாக ஒருங்கிணைக்கப்பட்ட உரைகளில் ஜேர்மன் ஜனாதிபதி ஜொஹாயிம் கௌவ்க், வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி உர்சுலா வொன் டெர் லையெனும், "ஜேர்மன் இராணுவம் மீதிருந்த கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதை" அறிவித்ததில் இருந்து, ஊடகங்களோ பரந்த மக்கள் அடுக்குகளுக்குள் ஆழ்ந்து வேரூன்றியுள்ள யுத்த விரோதத்திற்கு எதிராக எழுதி வருகின்றன. Der Spiegel வாரயிதழின் சமீபத்திய பதிப்பு இந்த நடவடிக்கையின் தற்போதைய மகுடமாக விளங்குகிறது.

ஒவ்வொரு செய்தித்தாள் விற்பனை நிலையத்திலும் காட்சியளிக்கும் அட்டை படமே மிரட்டுவதை அர்த்தப்படுத்துவதாக உள்ளது. உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு போராளிகள் குழுவின் ஒரு அங்கத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்திலான ஒரு வாசகரை பாலாக்ளாவா (முகம் தவிர தலை மற்றும் கழுத்து வரை மூடிய கம்பளி குல்லா) அணிந்த ஒரு துப்பாக்கிதாரி நேராக குறி வைப்பதாக அப்படம் காட்டுகிறது. அதன் கீழே, “ஐரோப்பாவில் யுத்தமா?” என்பது தலைப்பாக உள்ளது.

அந்த தலைப்பு செய்தியே பொய்களின், உள் அர்த்தங்களின் மற்றும் அரைகுறை உண்மைகளின் ஒரு கலவையாக உள்ளது. அது, ஆசிரியர் குழு எழுத்தாளர்களின் சொந்த யுத்த பிரச்சாரத்திற்கு நிலவும் பரந்த நிராகரிப்புக்கு எதிராக அவர்களால் திருப்பி விடப்பட்ட அனைத்து வாதங்களையும் தொகுத்தளிக்கிறது.

Spiegel இதழின் கட்டுரை மிக கவனத்தோடு விவாதிக்கப்பட்டு, விவரிக்கப்பட்டிருந்தது: அது மூன்று பக்க நீளம் கூட இல்லை என்ற போதினும், அது ஒன்பது எழுத்தாளர்களின் பெயர்களைத் தாங்கியுள்ளது. அதில் வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயக கட்சி, SPD) உடனான ஒரு நேர்காணலும் சேர்க்கப்பட்டுள்ளது.

அக்கட்டுரை உத்தியோகபூர்வ பிரச்சாரத்தின் இதயதானத்தில் நிற்கும் இரண்டு பொய்களைச் சுற்றி சுழல்கிறது. முதலாவதாக, உக்ரேனிய நெருக்கடி மேற்கத்திய சக்திகளின் மீது வலிந்து திணிக்கப்பட்டதாகும்; ரஷ்யா தான் வலிந்து சண்டைக்கு வந்துள்ளது என்பது. ஸ்ரைன்மையர் கருத்துப்படி, “பனிப்போர் முடிந்த பின்னர் நாம் எந்தளவிற்கு வேகமாக மிக ஆழ்ந்த நெருக்கடிக்குள் சறுக்கி செல்வோம் என்பதை யாராலும் முன்கணிக்க முடியாது," என்கிறார். ஜேர்மன் மக்களின் "யுத்த பயம்" “புரிந்து கொள்ளக்கூடியதே" என்ற போதினும், அது பயனற்ற விதத்தில் வெகுளித்தனமானதும், அபாயகரமானதும் ஆகும் என்பது இரண்டாவது பொய்யாகும்.

தொடக்கத்தில் இருந்தே, Spiegel இதழ் அது எதை "அச்சமூட்டும் சூழல்" என்று அழைக்கிறதோ அதையே சித்தரித்து வருகிறது: “இதுவரையில் இராஜாங்க நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளன, அத்தோடு பொருளாதார இழப்புகள் குறித்தும் புட்டினுக்கு எந்த பயமும் இல்லை என்பதாக தெரிகிறது? அடுத்தது என்ன? அது முட்டாள்தனமானதாக இருக்கலாம், ஆனால் கடந்த வாரத்திலிருந்து அது சிந்திக்க முடியாததாக இருக்கவில்லையே," என்று எழுதுகிறது.

இந்த ஒரேயொரு வாக்கியம் மட்டுமே பல்வேறு திரித்தல்களைக் கொண்டுள்ளது, இதில் எங்கே இருந்து தொடங்குவதென்று தெரிந்து கொள்வதே கடினமாகும்.

முதலில் "இராஜாங்க நடவடிக்கைகளில்" இருந்து தொடங்குவோம், Spiegelஐ பொறுத்த வரையில் இது "தோல்வி அடைந்துள்ளது". கட்டுரையாளர்கள் இதைக் கொண்டு என்ன அர்த்தப்படுத்துகிறார்கள், ஏப்ரல் 17இல் ஜெனிவாவில், ரஷ்யா, உக்ரேன் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு மந்திரிகளும், அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதியும் கலந்து கொண்ட ஒரு சிறிய கூட்டத்தையா அர்த்தப்படுத்துகிறார்கள்? ஆனால் இதற்கிடையில் உக்ரேனில் ஆயுதமேந்திய அனைத்து போராளிகள் குழுக்களையும் நிராயுதபாணியாக்குவது என்று அங்கே எட்டப்பட்ட உடன்படிக்கை, வெறுமனே ரஷ்யாவிற்கு எதிராக அழுத்தத்தையும், ஆத்திரமூட்டல்களையும் தீவிரப்படுத்த மட்டுமே சேவை செய்தது என்பது தெளிவாக உள்ளது.

பாசிச போராட்டக் குழுக்களை நிராயுதபாணியாக்கும் நோக்கம் கியேவ் ஆட்சியின் கொடூர கனவுகளில் இருக்கவே இல்லை, அது அதிகாரத்திற்கு வருவதிலேயே அவற்றிற்கு அது கடன்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை உத்தியோகபூர்வ பாதுகாப்பு படைகளில் சேர்த்ததில் இருந்து, இராணுவம் மற்றும் இரகசிய சேவைகளின் பாதுகாப்பின் கீழ், ஏனையவை கிழக்கு உக்ரேனிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருவதோடு, தொடர்ந்து சுதந்திரமாக செயல்படுகின்றன. மறுபுறம், கியேவ் ஆட்சியை எதிர்க்கும் குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்ய அரசாங்கம் பொறுப்பாக்கப்படுகிறது, ஆனால் உண்மையில் அவர்களை கிரெம்ளின் தான் கட்டுப்படுத்துகிறது அல்லது அவற்றின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால் இந்த உண்மைகள் நிராகரிக்கப்பட்டாலும் கூட: உண்மையில் Spiegel அதன் வாசகர்களுக்கு, நான்கு வெளியுறவு மந்திரிகளுக்கு இடையிலான ஒரேயொரு கூட்டம் அனைத்து இராஜாங்கரீதியிலான சாத்தியக்கூறுகளையும் நீக்கிவிட்டதென கூற விரும்புகிறதா? Spiegel கட்டுரையாளர்கள் எழுதுவதைப் போல, “ஐரோப்பாவில் ஒரு பெரிய யுத்தம்" நிகழ்வதற்கான "ஒரு சாத்தியக்கூறு மீண்டுமொருமுறை" உண்மையிலேயே இருக்கிறதென்றால், பின் அத்தகைய ஒரு பேரழிவைத் தடுக்க இரவும் பகலும் முயற்சிக்க இராஜாங்க நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வது அவசியமில்லையா? ஆனால் அதுபோல எதுவும் நடந்து வரவில்லை என்பதே வாஷிங்டனும் பேர்லினும் நனவுப்பூர்வமாக உக்ரேனிய நெருக்கடியைத் தூண்டிவிட்டுள்ளன என்பதை நிரூபிக்கிறது.

இந்த உள்ளடக்கத்தில், “பனிப்போர் முடிந்த பின்னர் நாம் எந்தளவிற்கு வேகமாக மிக ஆழ்ந்த நெருக்கடிக்குள் சறுக்கி செல்வோம் என்பதை யாராலும் முன்கணிக்க முடியாது," என்ற வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையரின் வாதம் மிகவும் பட்டவர்த்தனமாக உள்ளது. "அதற்குள் சறுக்கி செல்வது" (slithered into it) என்ற பதம், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் லாய்டு ஜோர்ஜ் உடன் சம்பந்தப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு சொல்லாகும், அவர் 1920இல் அந்நாளின் முன்னணி பிரபலங்களில் எவருமே முதல் உலக யுத்தத்தை விரும்பவில்லை என்று வாதிட்டார். இது ஜேர்மனியில் உற்சாகத்தோடு கைப்பற்றப்பட்டதோடு, எந்தவொரு யுத்த குற்றத்திற்கும் பாவ மன்னிப்பு வழங்க பயன்படுத்தப்பட்டது. இந்த உட்பொருளை வரலாற்றாளர் கிறிஸ்டோபர் கிளார்க், சற்றே மாற்றிய வடிவத்தில்The Sleepwalkers என்று ஏற்றுக் கொண்டதோடு, இது முதல் உலக யுத்தத்திற்கான காரணங்கள் குறித்த அவரது சமீபத்திய புத்தகத்தின் தலைப்பாகவும் இருந்தது. இதற்காகவே, அவர் ஜேர்மன் பத்திரிகைகளால் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டார்.

ஜனவரியின் இறுதியில், ஸ்ரைன்மையர் சற்றே வித்தியாசமாக பேசி வந்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், நெருக்கடி பிராந்தியங்கள் மற்றும் உலக அரசியலின் வெடிப்பு புள்ளிகளில் சம்பந்தப்படாமல் ஒதுங்கி இருப்பது ஜேர்மனிக்கு "மிகவும் முக்கியமானதும், மிகவும் அவசியமானதுமாக" இருக்கலாம். ஆனால் இராணுவ கட்டுப்பாட்டு கொள்கை எந்தளவிற்கு சரியோ அதேயளவிற்கு அதை ஒதுங்கி இருக்கும் கலாச்சாரம் என்று தவறாக புரிந்து கொள்ள அனுமதிக்க கூடாது", என்று அவர் அறிவித்தார்.

உக்ரேனில், இந்த புதிய, ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கை போக்கு நடைமுறையில் முயற்சிக்கப்பட்டது. ஸ்ரைன்மையருக்கு முன்னர் அப்பதவியில் இருந்த கீடோ வெஸ்டர்வெல்லெ ஏற்கனவே கியேவின் ஆர்ப்பாட்டக்காரர்களோடு வேலை செய்து வந்திருந்தார், அவர்களோ அரசு கட்டிடங்களை முற்றுகையிட்டும், ஆயுதமேந்திய பாசிச போராட்ட குழுக்களோடு ஒத்துழைத்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை இராஜினாமா செய்ய கோரி வந்தனர். ஸ்ரைன்மையரே கூட பாசிச தலைவர் ஓலெஹ் தியாஹ்ன்பொக் உட்பட எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் மீண்டும் சந்தித்து வந்தார் என்பதோடு, பெப்ரவரி 22 அன்று இரவு, ஓர் உடன்படிக்கை மீதும் பேரம் பேசினார், அது ஜனாதிபதி யானுகோவிச்க்கு எதிரான பதவி கவிழ்ப்பிற்கு தொடக்க புள்ளியாக இருந்தது.

எது நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவையும் தூக்கி வைத்து கொண்டாடியதோ, பிரதம மந்திரி அர்செனி யாட்சென்யுக்கின் அந்த ஃபாதர்லேண்ட் கட்சி தலைமையிலான மற்றும் முக்கிய அமைச்சகங்களில் ஸ்வோபோடாவின் பாசிசவாதிகள் பதவி வகிக்கும் ஒரு பதவிக் கவிழ்ப்பு ஆட்சி தான், உக்ரேனிய எதிர்ப்பை சந்திக்க உள்ளது. நிர்மூலமாக்குதல் மற்றும் இனப்படுகொலைகளின் நாஜி யுத்தத்தில், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போலாந்தில் பாதிக்கப்பட்ட அளவிற்கு வேறெங்கும் பாதிக்கப்படவில்லை.

இதை யாராலும் முன்கணிக்க முடியவில்லை என்ற ஸ்ரைன்மையரின் வாதம் ஒரு வெட்ககேடான பொய்யாகும். எதார்த்தத்தில், அந்த ஆத்திரமூட்டல் உள்நோக்கத்தோடும், திட்டமிட்டும் செய்யப்பட்டது. ஸ்ரைன்மையர் யாரோடு நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறாரோ அந்த அமெரிக்க வெளியுறவுத்துறை விவகார துணை செயலர் விக்டோரியா நூலாந்து பகிரங்கமாக அறிவித்ததைப் போல, உக்ரேனில் அரசாங்க மாற்றம் கொண்டு வர கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா மட்டுமே உக்ரேனிய எதிர்ப்புகளுக்கு 5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கிறிஸ்துவ ஜனநாயக சங்கத்தின் (CDU) Konrad Adenauer Foundation, பசுமை கட்சியின் Heinrich Böll Foundation, அல்லது SPDஇன் Friedrich Ebert Foundation ஆகியவை முறையே செலுத்திய தொகைகள் குறித்து அங்கே எந்த பதிவும் இல்லை, இவை அனைத்துமே உக்ரேனில் பெரிதும் தீவிரமாக செயல்பட்டுள்ளன.

ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், வெறுமனே மூலப் பொருட்களையும், செழிப்பான பண்ணைகளையும், உக்ரேனின் மலிவு உழைப்பையும் அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி மட்டுமல்ல; அவை ரஷ்யாவை பின்னோக்கி இழுக்கவும், பலவீனப்படுத்தவும் விரும்புகின்றன, ஏனெனில் யுரேஷிய பகுதிகளிலும், மத்திய கிழக்கிலும் அவர்களின் மேலாதிக்கத்திற்கு அவை ரஷ்யாவை ஒரு தடையாக கருதுகின்றன.

ஜேர்மன் அரசாங்கமும் ரஷ்யாவுடன் மோதலை தீவிரப்படுத்தி வருகிறது ஏனெனில் அது ஒரு விதமான "யுத்த அதிச்சியை" கொண்டு இராணுவவாதத்திற்கு இருக்கும் தடைகளை உடைக்க விரும்புகிறது. 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு அமெரிக்க நிர்வாகம் எந்தெந்த வழியில் விடையிறுப்பு காட்டியதோ அதே வழியில் பேர்லின் உக்ரேன் நெருக்கடியைப் பயன்படுத்தி வருகிறது: அதாவது, ஒரு தொடர்ச்சியான யுத்த பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும், மற்றும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசு படைகளைக் கட்டமைப்பதற்கும் ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தி வருகிறது. இதில், அந்த அரசாங்கம் அதீத அபாயகரமானதொரு விளையாட்டை விளையாடி வருவதோடு, ஒரு அணுஆயுத மூன்றாம் உலக யுத்த ஆபத்தையும் ஏற்று கொள்கிறது.

இந்த உட்கரு Der Spiegel கட்டுரை முழுவதிலும் ஒரு சிவப்பு நூலிழையாக ஓடுகிறது. பல சந்தர்ப்பங்களிலும், ஜேர்மனியர்களின் "அமைதிவாதமும்", “அமைதி மீதான விருப்பமும்" மற்றும் "யுத்த பயமும்" விமர்சிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மன், “1945க்கு பின்னரில் இருந்து ஒரு குறிப்பிட்ட விதத்தில் யுத்த பயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தேசமாக" உள்ளது என்று அக்கட்டுரை கூறுகிறது. “ஓர் ஆயுதமேந்திய மோதலுக்கு இடமளிப்பதை விட அதை தவிர்ப்பதே மக்களின் மேலதிக உணர்வாக உள்ளது.” மேலும், “ஜேர்மனியர்களில் மூன்று கால் பகுதியினர் ஒரு நேட்டோ இராணுவ தலையீட்டிற்கு எதிராக உள்ளனர். மூன்றில் ஒரு பங்கினர் கிரிமியாவை புட்டின் இணைத்துக் கொண்டதற்கான விளக்கத்தை ஏற்று கொள்கின்றனர். யுத்த பயம் இந்த புள்ளிவிபரங்களிலும் கூட பிரதிபலிக்கிறது.”

Spiegel கட்டுரையாளர்கள் இந்த மனோபாவத்தை தவறு என்று மட்டும் வர்ணிக்கவில்லை, மாறாக அறநெறிரீதியில் கேள்விக்குரிய ஒன்றாகவும் வர்ணிக்கின்றனர். “ரஷ்யாவால் எரியூட்டப்பட்டு உக்ரேன் ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் சென்று கொண்டிருக்கிறது. மேற்கு பொருளாதார தடைகளைக் கொண்டு விடையிறுப்பு காட்டி வருகிறது, இதுவன்றி வேறொன்றுமில்லை", என்று அவர்கள் எழுதினார்கள். “மேற்கு ஐரோப்பியர்களை பொறுத்த வரையில் அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டிய ஒரு யுத்தத்தில் இதுவொன்றும் அந்தளவிற்கு மோசமானதல்ல, ஏனென்றால் இதில் மற்றவர்கள் தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் அவரது சொந்த கண்டத்தில் கொலை செய்யப்படுவதைப் பார்க்க நேரிடுவது ஒரு தாங்க முடியாத சூழலாகும். அறநெறிரீதியில், ஆயுதத்தை நீங்களே பிரயோகிப்பதை விட இது சிறந்த நிலைமை அல்ல,என்று எழுதுகிறார்கள்.

அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு புள்ளியில், "வீரபிரதாப காலக்கட்ட" (heroic) சமூகங்கள் மற்றும் "வீரபிரதாபத்திற்குப் பிந்தைய காலக்கட்ட" (post-heroic) சமூகங்களை வேறுபடுத்தி காட்டிய அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரட் முன்ங்லெரை (Herfried Münkler) அவர்கள் மேற்கோளிட்டு காட்டுகிறார்கள். “வீரபிரதாபத்திற்குப் பிந்தைய காலக்கட்டம்" செல்வ செழிப்பின் ஒரு வெளிப்பாடாகவும் உள்ளது ... நிறைய வைத்திருப்பவர்கள், அதை அபாயத்திற்கு உட்படுத்த விரும்ப மாட்டார்கள். மறுபுறம், ஏழை சமூகங்களின் மனிதர்கள் அவர்களின் பெருமிதத்தை வீரதீர முன்னோடிகளிடமிருந்து பெறுவார்கள், ஆகவே அவர்களை மிக எளிதாக ஒரு யுத்தத்திற்கு வென்றெடுக்க முடியும், என்று Spiegel முன்ங்லெரின் நிலைப்பாட்டைத் தொகுத்தளிக்கிறது. “வீரபிரதாப" சமூகங்களைக் கொண்டு, ஒரே ஒன்றை மட்டும் தான் செய்ய முடியும்: அதாவது, நாஜிக்களின் வீரதீர மரணத்தைக் குறித்து வேண்டுமானால் பெருமை பேசலாம்.

ஜேர்மனியர்கள் இறுதியாக அவர்களின் "அமைதிவாதத்தை" கைவிட்டு, மீண்டுமொருமுறை யுத்தத்தை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை, ஜேர்மன் பத்திரிகையின் இன்னும் பல தலையங்கங்களிலும், முதன்மை கட்டுரைகளிலும் பிரதிபலிக்கிறது. சான்றாக, ஏப்ரல் 24இல், “ஜேர்மானியர்களே, நீங்கள் மீண்டுமொருமுறை குற்றங்களைத் தடுத்த நிறுத்துவதைப் பயில வேண்டும்!” என்ற தலைப்பில், அமெரிக்க வரலாற்றாளர் Anne Appelbaumஇன் ஒரு தலையங்கத்தை Die Welt பிரசுரித்தது.

அணுஆயுத குற்றங்களைத் தடுப்பதன் மீது ஜேர்மன் அரசியல்வாதிகள் இராஜாங்க நடவடிக்கைகளை ஆதரித்தாலும் கூட, உண்மை வேறு விதமாக இருக்கிறது என்று Appelbaum எழுதுகிறார்: “ஜேர்மனி வன்முறையைக் கைவிட்டாலும் கூட, ரஷ்யாவும் அதையே செய்யுமென்று அர்த்தமாகாது. ஜேர்மனியர்கள் சர்வதேச சட்டத்தை மதிக்கிறார்கள் என்பதால் மட்டும், ரஷ்யர்களும் அதை மதிப்பார்கள் என்றாகாது. ரஷ்யா சர்வதேச சட்டத்தின் மீது ஆர்வம் காட்டவில்லை என்பதோடு மட்டுமல்ல, ரஷ்யா அதை அழிக்கவும் விரும்புகிறது,” என்று அவர் எழுதுகிறார்.

இந்த காரணத்திற்காக தான், இராஜாங்க நடவடிக்கைகள் "இத்தகைய பாரிய தாக்குதல்களுக்கு விடையாக இருக்க முடியாது". என்ன அவசியமானதென்றால், “கிழக்கு எல்லைகளுக்கு நேட்டோவின் துருப்புகளை அனுப்ப, ஐரோப்பா நேட்டோவை பலப்படுத்த வேண்டும்". அதன் "விதிவிலக்கான செல்வச் செழிப்பை" பாதுகாக்க, ஜேர்மனிக்கு "இராஜாங்க நடவடிக்கைகள் மட்டுமின்றி அதற்கு மேலும்" அவசியப்படுகிறது", என்று எழுதுகிறார்.

உக்ரேனில் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்ரைன்மையருடன் மிக நெருக்கமாக வேலை செய்துள்ள போலாந்து வெளியுறவுத்துறை மந்திரி ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கியை 1992இல் Appelbaum மணந்தார் என்பதைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். போலாந்து வாரயிதழ் Nieஇல் (இல்லை) வெளியான ஒரு அறிக்கையின்படி, உக்ரேனிய பாசிச ஆயுத குழு "Right Sector”இன் 86 அங்கத்தவர்களுக்கு கடந்த ஆண்டு போலாந்து பொலிஸ் பயிற்சி மையத்தில் சிகோர்ஸ்கி பயிற்சி அளித்திருந்தார்.

ஸ்டான்போர்டு வரலாற்றாளர் ஐயன் மோரீஸ் (Ian Morris) அதற்கும் ஒருபடி மேலே செல்கிறார். இவர் முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்த படுகொலைகளை நேர்மறையாக மதிப்பிடுகிறார். "நீண்டகால ஓட்டத்தில், யுத்தங்கள் நம்மை பாதுகாப்பாகவும், செழிப்பாகவும் ஆக்குகின்றன" என்ற தலைப்பில், ஏப்ரல் 25இல் வாஷிங்டன் போஸ்டில், அவர் ஒரு கட்டுரை பிரசுரித்தார்.

கற்காலத்தில் மொத்த மக்கள்தொகையில் 10இல் இருந்து 20 சதவீதம் வரையிலான மக்கள் மற்ற மக்களால் கொல்லப்பட்டனர். அதற்கு மறுபுறம், இரண்டு உலக யுத்தங்களிலும் 100 மில்லியன் முதல் 200 மில்லியன் வரையிலான மக்கள் பாதிக்கப்பட்டனர், ஆனால் அந்த நூற்றாண்டின் போக்கில் பூமியில் வாழ்ந்த 10 பில்லியன் மக்களில் அது வெறும் 1இல் இருந்து 2 சதவீதம் வரை மட்டுமே ஆகும் என்று அவர் அக்கட்டுரையில் கணக்கிடுகிறார். “பெரிய மற்றும் அதிக அமைதியான சமூகங்களை உருவாக்க, சிந்திக்கக் கூடியவைகளிலேயே யுத்தம் மிகவும் மோசமான வழியாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே ஒரேயொரு சிறந்த வழியாக உள்ளது என்பதே வருந்தத்தக்க உண்மையாகும்", என்று அவர் முடிக்கிறார்.

ஜேர்மன் பத்திரிகைகளின் தலையங்க கட்டுரைகளில் மனிதகுலத்தை செப்பனிட பாரிய படுகொலைகளை மட்டுமே ஒரே வழியாக கண்ட ஹிட்லரைப் போல திரு. மோரீஸ் அவரது பாசிச எச்சங்களை உமிழ்வதற்கு முடிகிறதென்றால், Spiegelஇன் சமீபத்திய பதிப்பை ஒருவர் பார்த்தால் தெரியும், அது வெறுமனே ஒரு காலகட்டம் சார்ந்த ஒரு விடயமாக மட்டுமே உள்ளது.