World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Thailand’s judicial coup

தாய்லாந்தில் நீதித்துறையின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி

Peter Symonds
10 May 2014

Back to screen version

இந்த வாரம் தாய்லாந்து பிரதம மந்திரியை நீதித்துறை பதவியில் இருந்து நீக்கியமை, தாய்லாந்தில் மட்டுமல்ல, மாறாக சர்வதேச அளவில், ஆளும் வர்க்கங்கள் ஜனநாயக-விரோத ஆட்சி முறைகளுக்கு திரும்புவது குறித்து தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு கூர்மையான எச்சரிக்கையாகும்.

இங்லக் சினவத்ரா (Yingluck Shinawatra) ஒரு தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இடத்தில் அவரது சொந்த ஆதரவாளரை நியமித்தார் என்ற போலி காரணத்தின் அடித்தளத்தில், ஒரு அப்பட்டமான அரசியல் முடிவாக, அரசியலமைப்பு நீதிமன்றம் அப்பெண்மணியை நீக்க புதனன்று உத்தரவிட்டது. பிரதம மந்திரி அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு நடந்திருந்தார் என்பதில் உடன்பட்ட போதினும், அந்த நீதிமன்றம் அவர் சொந்தக்காரரை நியமித்ததின் மூலமாக "அறநெறி கோட்பாட்டை" அவர் மீறி இருந்ததாக அறிவித்தது.

அரசியலமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பியூ தாய் (Pheu Thai) அரசாங்கத்தை பதவியில் இருந்து இறக்க அரசாங்க விரோத போராட்டங்கள், சட்டரீதியிலான சொற்புரட்டுகள் மற்றும் இராணுவ தலையீடு செய்யப்படுமென்ற மறைமுக அச்சுறுத்தல்கள் என ஓர் ஆறு மாத கால நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்த அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சமீபத்திய நடவடிக்கையாக உள்ளது. எதிர்கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் போராட்டங்களுக்குத் தலைமை வகித்திருந்த மக்கள் ஜனநாயக சீர்திருத்த கமிட்டியின் (PDRC) வெளிப்படையான நோக்கம், நாட்டை நடத்தி செல்ல ஒரு தேர்ந்தெடுக்கப்படாத "மக்கள் கவுன்சிலை" ஸ்தாபிப்பதாகும். இங்லக்கின் பதவிநீக்க உள்ளடக்கத்திற்கு வெளியே, PDRC மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஏற்கனவே ஒட்டுமொத்த அரசாங்கமும் வெளியேற வேண்டி இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தி இருந்தது.

ஒரு ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீது தாய்லாந்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி பதவிநீக்கம் செய்யப்பட்டதை, ஒபாமா நிர்வாகமோ அல்லது அப்பிராந்தியத்தில் உள்ள வேறெந்த அதன் கூட்டாளிகளாலோ எதிர்க்கவில்லை. பகிரங்கமாக பாசிச அமைப்புகளின் வழியாக உக்ரேனில் அதன் நலன்களைப் பின்தொடர்ந்து வருவதைப் போலவே, வாஷிங்டன் தாய்லாந்திலும் இராணுவம், முடியாட்சியாளர்கள் மற்றும் அதிதீவிர வலதுசாரிகளின் பின்னால் மௌனமாக அணிதிரண்டுள்ளது.

தாய் ஆளும் வட்டாரங்களுக்குள் நடந்து வந்த எட்டு ஆண்டுகால அரசியல் உட்பூசலைத் தொடர்ந்து, இந்த வார சட்டத்துறை ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்துள்ளது, அந்த பூசல் இங்லக்கின் சகோதரர் தாக்சின் சினவத்ரா 2006இல் பிரதம மந்திரியாக இருந்தபோது இராணுவத்தால் வெளியேற்றப்பட்டதில் தொடங்கியது. முடியாட்சி, இராணுவம் மற்றும் நீதிமன்றங்கள் உட்பட அரசு அதிகாரத்துவம் ஆகிய பாங்காங்கின் பாரம்பரிய மேற்தட்டுக்கள், தொலைதொடர்பு துறையின் ஒரு பில்லியனரான தாக்சினை 2001இல் நியமிக்க உதவின, ஆனால் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கான அவரின் பொருளாதார கொள்கைகள் மற்றும் வெகுஜன விட்டுகொடுப்புகள் அவற்றின் நலன்களை வெட்டியபோது அவை அவருக்கு எதிராக திரும்பின.

2008இல், அரசியலமைப்பு நீதிமன்றம் இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்சின்-ஆதரவு பிரதம மந்திரிகளை நீக்கியது முதலாவது நபர் தொலைக்காட்சியில் உணவு சமைக்கும் ஒரு நிகழ்ச்சியில் தோன்றியமைக்கு பணம் பெற்றார் என்பதற்காகவும், இரண்டாமவர் தேர்தல் மோசடி செய்தார் என்ற ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் மீதும் நீக்கப்பட்டார்கள். இராணுவ பின்புலத்திலான அந்த ஜனநாயக அரசாங்கம் நியமிக்கப்பட்டமை பரந்த மக்கள் எதிர்ப்பைத் தூண்டிவிட்டது. 2010இல் "சிவப்புச் சட்டை" போராட்டங்கள் இராணுவத்தால் வன்முறையோடு ஒடுக்கப்பட்டன, அதில் 90 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள்.

அந்நாட்டின் பொருளாதார நிலைமை வேகமாக மோசமடைந்து வருகின்ற நிலையில், பியூ தாய் அராசங்கத்தை பதவிநீக்கும் இந்த தற்போதைய நடவடிக்கை எழுந்துள்ளது. அங்கே ஏற்றுமதிகள் மந்தமாகி உள்ளன, அன்னிய முதலீடு வீழ்ச்சி அடைந்துள்ளது, முதலாம் காலாண்டு வளர்ச்சி மீதான மதிப்பீடுகள் எதிர்மறையாக உள்ளன. பாங்காங் வணிகங்களும் அரசியல் மேற்தட்டும், அத்தோடு PDRC போராட்டங்களில் பெருமளவிற்கு உள்ளடங்கி இருந்த மத்தியதட்டு வர்க்கங்களும், அரசாங்கத்தால் உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்படும் வெகு குறைந்த விட்டுகொடுப்புகளையும் கூட பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளன. உண்மையில் PDRCஇன் வலதுசாரி வார்த்தைஜாலங்கள் எல்லாவித விட்டுகொடுப்புகளைக் குறித்தும் பேசுகின்றன, அது விவசாயிகளுக்கான அரிசி விலை நிர்ணயமாகட்டும் அல்லது குறைந்த செலவிலான மருத்துவ பராமரிப்பு ஆகட்டும், அவை ஏற்க முடியாத அளவுக்கு "வாக்கு வாங்குவதற்காக" உள்ளன அல்லது "மோசடியாக" உள்ளன.

பியூ தாய் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் கிராமப்புற மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. திடீர் பதவிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக, இங்லக் வணிக தலைவர்கள் கோரிய சிக்கன வெட்டு முறையீடுகளை நடைமுறைப்படுத்துவதாக அவர்களுக்கு தொடர்ந்து உத்தரவாதம் அளித்து வந்தார். அனைத்திற்கும் மேலாக, அரசாங்கம் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் 2010இல் செய்ததைப் போல அவர்களின் சொந்த வர்க்க கோரிக்கைகளுக்குக் குரல் கொடுக்க தொடங்குவார்கள் என்று அஞ்சி, பெரும்பிரயனத்தோடு அதன் "சிவப்பு சட்டை" ஆதரவாளர்களை கலைத்தது. அது தான் ஒரு "மக்கள் கமிட்டியைக்" கொண்டு பெயரில் இல்லாதபடிக்கு ஒரு இராணுவ பின்புலத்திலான இராணுவ ஆட்சி — அரசாங்கத்தை மாற்றியமைக்கும் பிரச்சாரத்தை ஊக்குவித்தது.

என்ன நடந்து வருகிறதோ அது லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்தின் இன்றியமையா ஆய்வுபொருள்களில் ஒன்றை நிரூபிக்கிறது: தாய்லாந்து போன்ற காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் அழுத்தும் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய முதலாளித்துவத்தின் எந்த பிரிவும் அமைப்புரீதியில் இலாயக்கற்று இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தாய்லாந்து வரலாறு, மக்கள் அதிருப்தியை ஒடுக்கும் நோக்கில் வெற்றிகரமான இராணுவ ஆட்சி சதிகளை உள்ளடக்கி உள்ளது. பெரிதும் பெருமையிட்டு பேசப்படும், 1980களின் பின்பகுதியில் எழுந்த தாய் ஜனநாயகத்தின் இற்றுப்போன குணாம்சம், முன்னர் இராணுவ ஆட்சியின் எதிர்ப்பாளராக காட்டி வந்த ஜனநாயக கட்சி தற்போது அதன் அரசியல் முகவராக செயல்படுகிறது என்ற உண்மையால் அடிக்கோடிடப்படுகிறது.

தாய்லாந்தில் பகிரங்கமாக ஜனநாயக விரோத ஆட்சி வடிவங்கள் திரும்பி இருப்பதானது, 1930களுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் முதலாளித்துவத்தின் மிக மோசமான உடைவு, தொழிலாள வர்க்கத்தின் மீது அதன் சுமைகளை சுமத்த உந்துதல் அளிக்கப்படும் ஒரு சிக்கன நடவடிக்கைகள், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றிற்கு இடையே வருகிறது. சீனாவை அடிபணிய செய்யும் மற்றும் இராணுவரீதியில் சுற்றி வளைப்பதை நோக்கமாக கொண்ட அமெரிக்காவின் "முன்னெடுப்பு", ஆசியாவின் ஒவ்வொரு நாட்டையும் இராணுவவாதம் மற்றும் யுத்த தயாரிப்புகளின் சுழலுக்குள் இழுத்து வருகிறது.

தாய்லாந்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்க வலதுசாரி எதிர்கட்சிகளால் செய்யப்பட்ட அப்பட்டமான நகர்வுகளுக்கு வெளிப்படையாக ஒபாமா நிர்வாகம் கண்டனம் தெரிவிக்கவில்லை, ஆனால் அதற்கு மாறாக இரண்டு தரப்பிற்கும் இடையே சமரசம் செய்வதற்கான தேவை குறித்து வெற்றுரைகளை வழங்கி வருகிறது. திரைக்குப் பின்னால், வெள்ளை மாளிகை அதிகாரிகள் தாய் இராணுவத்துடன் மிக நெருக்கமாக வேலை செய்து வருகின்றனர், அதை வாஷிங்டன் சீனாவிற்கு எதிரான அதன் யுத்த தயாரிப்புகளில் ஒரு முக்கிய பங்காளியாக கருதுகிறது. வியட்நாம் யுத்தத்தின் போது, வடக்கு வியட்நாமிற்கு எதிரான அமெரிக்க குண்டுவீச்சு வேட்டையில் 80 சதவீதம் தாய்லாந்தின் விமானத் தளங்களில் இருந்து பறந்து சென்றன.

தாய்லாந்தில் என்ன நடந்து வருகிறதோ அது அந்த பிராந்தியம் முழுவதிலும் நடந்து வருகின்ற அரசியல் நிகழ்வுபோக்கின் கூர்மையான வெளிப்பாடாக உள்ளது. தென் கொரியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் 1980களின் இறுதியிலும் 1990களிலும் உதித்த ஆசிய ஜனநாயகங்கள் என்றழைக்கப்படுபவை அமெரிக்க பின்புலத்திலான சர்வாதிகாரங்களாக இருந்தவற்றின் வெளி அலங்காரங்கள் என்பதற்கு சற்று மேலதிகம் ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் முந்தைய அரசியல் கூட்டாளிகளை இலகுவாக வெட்டிவிடுகிறது ஏனென்றால் அவற்றின் மோசடி முதலாளித்துவம் (crony capitalism) அமெரிக்க பெருநிறுவன நலன்களுக்கு ஒரு தடையாக மாறிவிட்டது.

இப்போது ஜனநாயக முகமூடி கிழிக்கப்பட்டு வருகின்றது. தென் கொரியாவில், அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரி பார்க் சுங்-ஹீயின் மகளான ஜனாதிபதி பார்க் ஜியூன்-ஹெ, அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை ஒடுக்க அவரது தந்தையின் கம்யூனிச-விரோத வேட்டை முறைகளைப் புதுப்பித்து வருகிறார். இந்தோனேஷியாவில், வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல்கள் சுஹார்டோ-சகாப்த தளபதிகள் மற்றும் அரசியல் கட்சிகளால் மேலாதிக்கம் செலுத்தப்பட உள்ளன. சீனாவிற்கு எதிராக அமெரிக்க யுத்த உந்துதலோடும் மற்றும் உள்நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராக வர்க்க போருக்கும் தயாராக ஆளும் வர்க்கம் கங்கணம் கட்டி நிற்கின்ற நிலையில், அவை ஜனநாயக பொறியைக் கலைத்து வருகின்றன.

ட்ரொட்ஸ்கி அவரது நிரந்தர புரட்சி தத்துவத்தில் விளங்கப்படுத்தியதைப் போல, தொழிலாள வர்க்கம் மட்டுமே அதன் சொந்த சுயாதீனமான வர்க்க நலன்களுக்கான அரசியல் போராட்டத்தின் பாகமாக, அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தகுதியான ஒரே சமூக சக்தியாக விளங்குகிறது.

தற்போது, தாய்லாந்து தொழிலாளர்கள் பெரிதும் பியூ தாய் மற்றும் அதன் தரப்பில் நிற்கும் "சிவப்பு சட்டை" அமைப்பின் தரப்பில் அணிதிரள செய்யப்பட்டுள்ளனர் அல்லது அடிபணிய செய்யப்பட்டுள்ளனர் இந்த நிலைமை பெரும் அபாயங்களை தாங்கி உள்ளது. ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பலத்தை ஒன்று திரட்ட முடியும், அதன் தரப்பில் கிராமப்புற ஏழைகளை வென்றெடுக்க முடியும். அந்த போராட்டம், யுத்தம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு மூலக்காரணமாக விளங்கும் முதலாளித்துவத்தை இல்லாதொழிக்க சோசலிசத்திற்கான மற்றும் சர்வதேச முன்னோக்கிற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில், ஏனைய ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் பக்கம் திரும்புவதை மட்டுமல்ல, பிரதான ஏகாதிபத்திய மையங்களில், குறிப்பாக அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் பக்கம் திரும்புவதையும் அவசியப்படுத்துகிறது.

அனைத்திற்கும் மேலாக, தாய்லாந்திலும் ஆசியா முழுவதிலும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் — அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளாக தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர தலைமைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.