World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Forbes list of world’s richest people highlights growth of social inequality

போர்பஸ் இன் உலகின் பணக்கார நபர்களின் பட்டியல், சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது

By Ed Hightower 
5 March 2014

Back to screen version

போர்பஸ் இதழ், உலகின் செல்வச்செழிப்புள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் குறித்த அதன் 28 ஆம் வருடாந்த பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டது. அனைத்திலும் போர்பஸ் பில்லியனர்கள் பட்டியலின் ஆராய்ச்சி குழு பிப்ரவரி 12 வரையில் 2013 இலிருந்து 1 ட்ரில்லியன் டாலர்கள் அதிகரிப்புடன் 6.4 ட்ரில்லியன் டாலர்கள் மொத்த சொத்து மதிப்புடன், உலகெங்கிலும் 1,645  பில்லியனர்கள் இருப்பதை கண்டுபிடித்தது. புதிய பில்லியனர்களின் எண்ணிக்கையான 268 என்பது போபர்ஸ் அறிக்கையின் வரலாற்றிலேயே அதிகமானதாகும்.

US Federal Reserve இன் மிகவும் தளர்த்தப்பட்ட பணக்கொள்கையினால் பங்குப்பத்திர சந்தைகளின் எழுச்சி மற்ற எந்த நாட்டினைவிடவும் அதிகமாக அமெரிக்க பில்லியனர்களின் எண்ணிக்கையை 492 ஆக உயர்த்தியது. உலக பொருளாதார தளத்தில், மிகவும் மலிவான உழைப்பு அரங்காக இருக்கும் சீனா, இரண்டாவது இடமாக தன்னிடம் 152 பில்லியனர்கள் உள்ளார்கள் என்று பெருமைப்பட்டுக்கொண்டது. சோவியத் யூனியனை கலைத்து, 1990-91 இல் அதன் சொத்துக்களை கொள்ளையடித்த குறுகிய அடுக்கு தரகுமுதலாளித்துவ அடுக்கால் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்தப்படும் ரஷ்யக் கூட்டமைப்பு 111 பில்லியனர்களுடன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

19 துருக்கியர்கள் உள்ளடங்கிய கிட்டத்தட்ட 100 பேர், பில்லியனர் தகுதியை இழந்துள்ளனர். துருக்கியில் அந்நிய முதலீட்டு உன்பாய்ச்சல் பின்நோக்கி சென்றமை பங்கு வர்த்தக குறியீடுகளையும் நாணயத்தையும் பாதித்தது. இதேபோல உலகெங்கும் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் பெரடல் ரிசேர்வின் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட உலகப் பொருளாதார குழப்பங்களால் இந்தோனேசியாவில் எட்டு தனிநபர்களும் பாதிக்கப்பட்டார்கள். அல்ஜீரியா, லித்துவேனியா, தான்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் உலகின் முதன் முதலாக தங்களை போர்பஸ்  பட்டியலில் கண்டு மகிழ்ந்தன. மேலும் $25 பில்லியன் சொத்துக்களுடன் பட்டியலில் முதல் ஆபிரிக்கரான நைஜீரியாவின் அலிகோ டாங்கோதி (Aliko Dangote) இடம் பெற்றார்.

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் charter school ஆதரவாளருமான பில்கேட்ஸ் மீண்டும் உலகின் மிகப்பெரும் செல்வந்தரானார். சொந்த வருட வருமானம் 9 பில்லியன்களை தாண்டிய நிலையில் அவரது மொத்த சொத்து மதிப்பு 76 பில்லியன் டாலர்களாகும். இது டெட்ராய்ட் நகரின் மாநகராட்சிக்கு இருக்கும் மொத்த கடன் தொகையைவிட நான்கு மடங்கைவிட அதிகமாகும். வேறுவார்த்தைகளில் கூறினால், அமெரிக்காவின் 2.1 மில்லியன் மாணவர்களுக்கு நான்கு வருட கல்லூரி படிப்பை இலவசமாக கொடுக்க முடிகின்ற தொகையாகும்.

சொத்து மதிப்பு 15.2 பில்லியன் டாலர்களிலிருந்து 28.5 பில்லியன் டாலர்களாக கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்திருக்கும் ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சுக்கபேர்க் (Mark Zuckerburg) உள்ளிட்ட, பிற இணையவர்த்தம் தொடர்பான நபர்கள் போபர்ஸ்  பட்டியலில் இடம் பிடித்தார்கள். இவ்வருடத்தில் அதிக டாலர்கள் ஈட்டியவராக இருந்த சுக்கபேர்க் ஃபேஸ்புக்கின் பங்குகளின் மதிப்பு உயர்வினால் இலாபமடைகின்றார். அது கடந்த 12 மாதங்களில் 130 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜெவ் ரோத்ஷில்ட் போன்றே ஃபேஸ்புக்கின் உயர் நிர்வாக அதிகாரியான ஷெரில் சான்ட்பேர்க் உம் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு, உயர் தனியார் பங்கு நிறுவனங்களின் அதிகாரிகள், பாரிய நஷ்ட ஈட்டுத்தொகையையும் மற்றும் பங்கு பெறுமதிகளை பணமாக்கிக் கொண்டும், அவர்களது முதலீட்டார்களுக்கும் மற்றும் தமக்கும் தாராளமான பங்கு இலாபங்களை பரிசளித்துக்கொண்டதை கண்டது. Wall Street இதழில் இந்த வாரத்தின் ஒரு கட்டுரை பெருபணமுதலைகளின் நிறுவன வாங்குதலுக்காக இலாபங்களின் வெடிப்பு -”Blowout Haul for Buyout Tycoons”- என்று தலைப்பிட்டு, அதில் Apollo Global Management LLC, Blackstone Group LP, KKR and Co., மற்றும் Carlyle Group LP ஆகியவற்றின் பொது அறிக்கைகளை ஆராய்ந்திருந்தது. இந்த நிறுவனங்களது ஒன்பது நிறுவனர்கள் 2013 -ல் 2.6 பில்லியன் டாலர்களை மொத்த இலாபமாக ஈட்டினர். இது 100 சதவீதத்திற்கும் அதிகமான வருடாந்த அதிகரிப்பாகும் என்று அக்கட்டுரை தெரிவிக்கிறது. இந்த தொகை, எடுத்துக் கொள்ளப்படும் ஒவ்வொரு உயர்அதிகாரிக்கும் 160 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சராசரியாகிறது. இது நியூயோர்க் நகரில் ஒரு வருடத்திற்கு பொதுத்துறை பள்ளி ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 3,500 பேருக்கு ஆரம்ப சம்பளம் கொடுப்பதற்கு போதுமான தொகையாகும்.

இந்த மேல்மட்ட, ஒட்டுண்ணி கும்பலில், Apollo Global Management இன் இணை நிறுவனரும் தலைமை அதிகாரியுமான லியோன் பிளாக், 546.3 மில்லியன் டாலர்களுடன் உயர்ந்த இடத்திலும், இவருக்கு அடுத்ததாக 465.4 மில்லியன்களுடன் Blackstone Group இன் ஸ்ரெபான் ஸ்வார்ட்ஸ்மான் இருக்கிறார். வாஷிங்டன் DC இல் உள்ள Carlyle Group இன் மூன்று இணை நிறுவனர்கள் கிட்டத்தட்ட 750 மில்லியன் டாலர்களை மொத்தமாக ஈட்டினர். இது 2005 மற்றும் 2008 க்கு இடையில் பொதுப்பள்ளிகளுக்கான மாவட்டத் தலைநகர் செலவுகளை விட அதிக பணமாகும். முந்தைய தசாப்தத்தின் பெருநிறுவன முதலைகள் போல் அல்லாமல், அது குறைந்தபட்சம் இருப்பு பாதைகள் மற்றும் உள்கட்டமைப்புகள், தொழிற்துறை, வாங்கும் நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து பகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அகற்றுவது, அவர்களது தொழிலாளர்களை கணிசமாக குறைப்பது அதன் பின்னர் அவற்றை போட்டி நிறுவனங்களாக இலாபத்தில் விற்பது ஆகியவற்றில் திறமைவாய்ந்த இன்றைய கொள்ளையடிக்கும் பிரபுக்களை வளர்க்கின்ற, அதிக இலாபகரமான தனியார் பங்கு நிதியங்கள் ஆகியவற்றை உருவாக்கியது

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் உலகின் பணக்கார நபர்களின் வெடித்தெழும் செல்வமானது, சமுதாய செலவுகளை குறைத்தல், உண்மையான கூலிகளை குறைத்தல் மற்றும் முன்னொருபோதுமில்லாத அளவுக்கு வேலைநீக்கம் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதலின் விளைவாகும்.

* உலகின் 85 பணக்கார மனிதர்கள், உலக மக்கள் தொகையின் பாதிக்கும் மேற்பட்ட ஏழைகளை விட அதிக செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர். 2.4 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலர்களுக்கும் குறைவான தொகையில் வாழ்கின்றனர்.

* அமெரிக்காவில் 2009 க்கும் 2012 க்கும் இடையில் அனைத்து வருவாய் ஆதாயங்களின் 95 சதவீதமும் மக்கள் தொகையில் செல்வச்செழிப்பான 1 சதவீதத்தினருக்கு சென்றது. இந்த அடுக்கு வைத்திருக்கும் வருமானத்தின் விகிதம் 1980 லிருந்து கிட்டத்தட்ட 150 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, சமத்துவமின்மை மற்றும் சமுதாய துயரங்கள் ஒரு தொடர்ச்சியான அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.

ஒருபக்கம் சமுதாயத்தின் மேல்மட்டத்தில் மகத்தான மற்றும் வளர்ந்துவரும் செழுமையையும், இன்னொருபக்கம் உலகின் பெரும்பாலான மக்கள் தொகையை அதிகரித்துவரும் இழிவான ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைமையுடன் அருகருகே வைப்பது என்பது சோசலிசத்தின் அவசியத்தையே எடுத்துக்காட்டுகின்றது. வெளிப்படையாக சொல்வதென்றால், கடந்த காலத்தின் நிலப்பிரபுத்துவ முடியாட்சியுடன் ஒப்பிடுகையில் அதையே நிதானமானதாக காட்டும் இந்த நிதிய பிரபுத்துவத்தினரை சமுதாயம் ஏற்றுக்கொள்ள முடியாது.